Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு மாகாண சபையை இயக்குவதில் அரசு தடையாகவே உள்ளது; ஆஸி. தூதுவரிடம் முதலமைச்சர் எடுத்துரைப்பு

Featured Replies

வடக்கு மாகாண சபையை இயக்குவதில் அரசு தடையாகவே உள்ளது; ஆஸி. தூதுவரிடம் முதலமைச்சர் எடுத்துரைப்பு

 

cm114114.jpg

 

வடக்கு மாகாண சபையைத் தனித்து இயங்க வைப்பதில் பல்வேறு முட்டுக் கட்டைகள் எமக்கு இருக்கின்றன. இதனால் மக்களுக்குத் தேவையான அபிவிருத்தி வேலைகளை முன்னெடுப்பதில் எமக்கு நெருக்கடிகள் உள்ளன. - இவ்வாறு இலங்கைக்கான ஆஸ்திரேலியத் தூதுவர் ரொபின் மூடியிடம் தான் எடுத்துரைத்ததாக வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்த ஆஸ்திரேலியத் தூதுவர் ஆஸ்திரேலிய அரசினால் வடபகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திகள் குறித்து ஆராய்வதற்காக வந்திருந்தினர். இதன்போது வடமாகாண சபை முதலமைச்சர் என்ற வகையில் அவர் என்னையும் சந்தித்திருந்தார். இதன்போது வடமாகாண சபை ஆஸ்திரேலியாவிடமிருந்து ஏதாவது உதவிகளை எதிர்பார்க்கின்றதா? வடமாகாண சபை தனித்து இயங்குவதற்குப் போதுமான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதா? என்ற கேள்விகளை எழுப்பினார். இதற்கு, வடமாகாணத்தில் மிகப் பெரிய பிரச்சினையாக இருப்பது எமது நில, நீர் வளங்களை இராணுவத்தினர் தொடர்ச்சியாகக் கையகப்படுத்தும் நடவடிக்கையாகும். அரசு தமக்குத் தேவையான செயற்றிட்டங்களை செயற்படுத்த முன் வருகிறார்களே தவிர மக்களுக்குத் தேவையான செயற்றிட்டங்களைச் செய்வதற்கு அவர்கள் தயாராக இல்லை. இவ்வாறு வடக்கு, கிழக்குப் பகுதிகளில் அரசால் தமிழ் மக்களுக்கு தொடர்ச்சியாக நெருக்கடிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன என்று நான் சுட்டிக்காட்டினேன். இதன்போது ஆஸ்திரேலிய அரசால் செய்யக்கூடிய உதவிகளை நாம் பரிசீலித்து வழங்கத் தயாராகவுள்ளோம் என மூடி உறுதியளித்தார் என முதலமைச்சர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

malarum.com

 

 

 

DSC_0255(2).JPG
-சொர்ணகுமார் சொரூபன்

இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் றொபின் மூடி, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சர் வாசஸ்தலத்தில் இன்று புதன்கிழமை (28) சந்தித்துக் கலந்துரையாடினார். 

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த இவர், முதலில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்ததைத் தொடர்ந்து முதலமைச்சரைச் சந்தித்தார்.

தொடர்ந்து அவுஸ்திரேலியா நாட்டின் நிதியுதவியில் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் பார்வையிட்டார். 

இதேவேளை, இன்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த உகண்டா நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஷாம் குதேசா, நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்றிருந்ததுடன் தொடர்ந்து யாழ்ப்பாணக் கோட்டை மற்றும் யாழ். பொதுநூலகம் ஆகியவற்றினைப் பார்வையிட்டார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/112210-2014-05-28-09-43-11.html#comments

 

 

Edited by Athavan CH

  • தொடங்கியவர்

index(898).jpgவடமாகாணத்தில் முக்கிய பிரச்சினையாக இராணுவம் தமது நீர் மற்றும் நில வளங்களை கையகப்படுத்தி வைத்துள்ளது என  வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு புதன்கிழமை (28) விஜயம் செய்த  இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் றொபின் மூடியுடனான சந்திப்பின்போதே மேற்கண்டவாறு கூறியதாகவும்  வடமாகாண முதலமைச்சர்  தெரிவித்தார்.

முதலில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை அவரது அலுவலகத்தில் சந்தித்த றொபின் மூடி, இதன்  பின்னர் வடமாகாண முதலமைச்சரை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்தார். 

இச்சந்திப்புக் குறித்து வடமாகாண  முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில், 

'மூடியுடன் அவுஸ்திரேலியா வெளிநாட்டலுவல்கள் வாணிபத் திணைக்கள மேலதிகச் செயலாளர் பிரைஸ் கட்சசன், திணைக்களப் பணிப்பாளர் சூ க்ரேவ்ஸ் ஆகியோரும் வருகை தந்தனர்.  இவர்கள் வடமாகாணத்தில் அவுஸ்திரேலிய நாட்டின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தியை பார்வையிட வந்தனர். 

அத்துடன், வடமாகாணசபை அவுஸ்திரேலியாவிடம் உதவிகளை  எதிர்பார்க்கின்றதா? மற்றும் வடமாகாணசபை தனித்து இயங்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதா? என்பது பற்றி அறியவும்  அவர்கள் இங்கு வருகை தந்தனர்.

இதன்போது, அரசியல் ரீதியாக தனித்து இயங்குவதற்கு பல முட்டுக்கட்டைகள் இருப்பதாக அவர்களுக்கு எடுத்துக் கூறினேன். எவ்வளவுதான் வடமாகாணத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதென ஆளுநர் கூறினாலும், அது நடைமுறைப்படுத்தப்படவில்லையெனக் கூறினேன். 
மேலும்,  முதலமைச்சரின் அனுசரணையில்லாமல் வடமாகாணச் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளதையும் எடுத்துக்கூறினேன்.

அரசாங்கம் தங்களுக்கு தேவையான செயற்றிட்டங்களை செயற்படுத்த முன்வருவார்களே தவிர, மக்களுக்குத் தேவையான செயற்றிட்டங்களை மக்களின் பிரதிநிதிகள் மூலம் அறிந்து செயற்படுத்த முன்வரவில்லையெனத் தெரிவித்தேன்.

ஆற்றல் மேம்பாட்டுத் திட்டங்கள் அவசரமாக எமக்குத் தேவைப்படுவதாக அவர்களுக்கு கூறினேன். போரினால் பாதிக்கப்பட்டவர்கள், விதவைகள், வறியவர்களுக்கு  உதவிகள் தேவைப்படுவதாகவும்  கூறினேன்.

இதற்கு பதிலளித்த அவர்கள், இவை தொடர்பில்  பரிசீலித்து  உதவிகளைச் செய்வதாகக் கூறினர். 

 

tamilmiror

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.