Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா வாழ் ஈழத் தமிழர்கள் சார்பில் பாரதீய ஜனதாக் கட்சிக்கு வாழ்த்து

Featured Replies

BJP%20L%20Ganeshan%20and%20David.jpg

 

புலம்பெயர்ந்து கனடாவில் வாழும் ஈழத் தமிழர்களின் சார்பில் கனேடிய தமிழ்க் காங்கிரஸின் தேசியப் பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை, பாரதீய ஜனதாக்கட்சியின் தமிழகத் தலைவர்களைச் சந்தித்து, நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சிக்குக் கிடைத்த பெரு வெற்றிக்கும், நரேந்திர மோடி தலைமையில் புதிய அரசு அமைந்தமைக்குமான பாராட்டையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொண்டார். சென்னைக்கு வருகை தந்துள்ள டேவிட் பூபாலபிள்ளை பாரதீய ஜனதாக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களுள் ஒருவரான இல.கணேசன், அக்கட்சியின் தேசிய செயலாளர் கலாநிதி தமிழிசை சௌந்தராஜன் ஆகியோர் உட்படப் பல தலைவர்களையும் நேரில் சந்தித்துப் பேசினார். மேலும் பல தலைவர்களுடன் அவர் தொடர் சந்திப்புக்களை நடத்தி வருகின்றார். இந்திய வருகையை ஒட்டி வெளிநாட்டுச் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு டேவிட் பூபாலபிள்ளை பேட்டியளித்தார். அந்தப் பேட்டியின் விவரம் வருமாறு:-

 

கேள்வி: இந்திய பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவிற்கு இலங்கை அதிபர் ராஜபக்‌ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டமையை ஒட்டி தமிழகத்தில் நடந்தப் போராட்டங்களை எப்படி பார்க்கிறீர்கள் ?

 

பதில்: தமிழக மக்கள் எங்களின் குரலாகவே ஒலித்தனர். ஈழமக்களின் உணர்வுகளை தமிழக மக்கள் மிகப் பெரிய அளவில் உணர்ந்து வெளிப்படுத்தினார்கள் என்பது மிக மகிழ்ச்சியாக இருந்தது. தொடர்ந்து தாய்த் தமிழக மக்கள் எங்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்.

 

கேள்வி: இதையும் மீறி ராஜபக்‌ஷ அழைக்கப்பட்டு அவர் பங்குபற்றியமை குறித்து....?

 

பதில்: அண்டை நாடுகளின் பிரதமர்களையும் அதிபர்களையும் அழைப்பது இந்திய நாட்டின் விருப்பம். அதன் அடிப்படையில் இதைத் தவறென்று கருத முடியாது. அதே சமயம் இது மோடி அவர்களின் ராஜத்தந்திரம் என்று சொல்வது உண்மையானால் மிக்க மகிழ்ச்சி.

 

கேள்வி: மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இலங்கை அதிபர் ராஜபக்‌ஷவின் நண்பராக இருந்து வருகிறார். தற்பொழுது அவருக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கின்றமை பற்றி... ?

 

பதில்: பாரதப் பிரதமர் மோடி அவர்கள் இதற்கு முன்னால் குஜராத்தில் பிரச்சினைகளைக் கையாண்ட விதம் மற்றும் அவர் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் அவர் வெற்றிப் பெற்றிருக்கின்றமையை நாம் கண்டுள்ளோம். அது போல் இதுவும் மோடி அவர்களின் ராஜதந்திரத்தில் ஒன்றாகத்தான் பார்க்க வேண்டும்.

 

கேள்வி: 'முத்து மாலை' நாடுகளை நரேந்திர மோடி அழைத்திருப்பதும் சீனா 'முத்து மாலை' நாடுகளிடம் சுமூகமான உறவுகளை வைத்திருப்பதும் எத்தகைய மாற்றத்தைத் தரும் ?

 

பதில்: பதவியேற்பு நிகழ்வு என்பது விழா சடங்கு போன்றது. அச்சடங்கிற்கு 'முத்துமாலை' நாடுகளை அழைத்தமை நிச்சயம் நல்ல மாற்றத்தைத் தரும். இலங்கையைப் பொறுத்தவரை சீனாவும் பாகிஸ்தானும் வலுவாக காலூன்றி இருக்கின்றன. இது இந்தியப் பேரரசுக்கு ஆபத்து என்ற போக்கில் இந்த அழைப்பு மிகச் சரியானதே. இந்திய அரசு இன்னும் கவனமாக இருக்க வேண்டும்.

 

கேள்வி: கைது செய்யப்பட்ட மீனவர்கள் ராஜபக்‌ஷ அழைப்பை ஒட்டி விடுவிக்கப்படுகின்றமை குறித்து உங்கள் பார்வை ..... ?

 

பதில்: மீனவர்கள் கைது என்பதே மிக கேவலமான செயல். மேற்கத்திய நாடுகளில் மீனவர்கள் கடலில் திசைத் தெரியாமல் வேறு நாட்டின் கரையை அடைவார்கள். அவ்வாறு திசை மாறி வந்த மீனவர்களை மிக வாஞ்சையுடன் கவனித்து அவர்களைப் பத்திரமாக அவர்கள் நாட்டிற்கு அனுப்பி வைப்பது வழக்கம். ஆனால் இங்கு மீனவர்கள் கைது செய்யப்படுவதும், கொலை செய்யப்படுவதும், அழைப்பிற்கு பின் விடுவிக்கப்படுவதும் அருவருக்கத் தக்க செயல். எனினும் அப்படியாவது விடுவிக்கப்பட்டார்களே என்பதும கிழ்ச்சி அடைய வைக்கிறது மறுபுறம்.

 

கேள்வி: இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் எப்படி நடத்தப் படவேண்டும் ?

 

பதில்: மிக அன்பாகவும் வாஞ்சையுடனும் நடத்தப் பட வேண்டும். நான் நேற்று மதுரையிலிருந்து சென்னை வரும் வழியில் விளம்பரப் பதாகைகளைக் கண்டேன். அதில் முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இலங்கை அகதிகளுக்கும் இடம் உண்டு என்று பார்க்கும் போது அவர்களையும் சகத் தமிழர்களாய்த்தான் கருதுகிறார்கள் எனக் கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

 

கேள்வி: தமிழக அரசியல் கட்சிகள் ஈழத் தமிழர்களின் பிரச்சனைகளை எப்படி கையாளுகிறார்கள் ?

 

பதில்: மிக கவனமாக கையாளுகிறார்கள். கட்சிகள் பல்வேறு இருந்தாலும் ஈழத் தமிழர்களின் விடயத்தில் சிந்தனைகளும் நோக்கமும் ஒன்றாகத் தான் இருக்கின்றன. இன்னும் ஒன்றுபட்டு, ஒருமித்தக் குரலில், ஓங்கி ஒலித்தல் வேண்டும். தமிழ்நாட்டை எங்கள் தந்தை நாடாகத்தான் பார்க்கிறோம். எங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் குழந்தைகள் தந்தையிடம் கேட்பது போல் நாங்கள் தமிழ்நாட்டைத்தான் நாடுவோம். குறிப்பாகத் தமிழக சட்டசபையில் ஏற்றப்பட்ட பல்வேறு தீர்மானங்கள் வரவேற்கத்தக்கவை. இத்தகையத் தீர்மானங்கள் எங்களுக்கு மன உறுதியைத் தருகின்றன.

 

கேள்வி: நீங்கள் புலம்பெயர்ந்து இருக்கும் கனடா நாடு ஈழத் தமிழர்களுக்கு எவ்வாறு உதவியா இருக்கிறது ?

 

பதில்: கனடா நாடும் கனேடிய அரசும் ஈழத் தமிழர்களின் பிரதிபலிப்பாகவே இருக்கிறது. இந்த விடயத்தில் உலக நாடுகளுக்கு கனேடிய அரசு ஒரு முன்னுதாரணமாக இருக்கின்றன. நடந்து முடிந்த 'கொமன்வெல்த்' மாநாட்டை எங்கள் கனேடிய பிரதமர் புறக்கணித்தமையே இதற்குச் சிறந்த சான்று. அதேசமயம் அம்மாநாட்டினை அங்கு நடத்துவதற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்த அரசு கனேடிய அரசு. எங்களுக்கு எப்போதும் துணை நிற்கும் அரசாகத்தான் திகழ்கிறது. 

 

malarum.com

 

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.