Jump to content

இசைஞானி : Counterpoint மூலம் Count பண்ணி சர்வதேச இசையின் நுட்பங்களை தேடவைத்த இசை அறிவாளி (பகுதி 1 & 2)


Recommended Posts

அது சிட்­னியில் கொஞ்சம் குளி­ரான கால­நிலை. கோடை­காலம் முடிந்து அடுத்த பரு­வத்­துக்குள் சிட்னி காலடி எடுத்­து­வைக்கும் காலம் ஆரம்­ப­மா­கி­விட்­ட­தற்­கான அறி­கு­றி­யாக லேசான கால­நிலை மாற்­றங்கள். வெளியில் போவ­தற்கு மனம் இடம்­த­ர­வில்லை. எனவே வீட்டில்  ஓய்­வாக கிடைத்த இடை­வெ­ளியில் நடிகர் மோக­னுக்­காக இசை­ஞானி இசை­ய­மைத்து எஸ்.பி.பால­சுப்­ர­ம­ணியம் பாடிய பாடல்­களைக் கேட்­க­வேண்டும் போன்­ற­தொரு உணர்வு.
 
சீடி­களை எடுக்கும் போதே கவரில் இருந்த மோகன் , இசை­ஞானி, எஸ்.பி.பாலு ஆகி­யோரின் இளமைப் படங்­களும் , அந்­தப்­பாட்­டுக்­களை இவர்­களின் கூட்­ட­ணி­யில்தான் உரு­வாக்க வேண்டும் என்று ஒற்­றை­காலில் நின்று,  இசை­ஞானி, காலத்தால் அழி­யாத மெல­டி­களை உரு­வாக்க உந்­து­தலைக் கொடுத்த தயா­ரிப்­பாளர் மதர்லேண்ட் பிக்சர்ஸ் கோவைத்­தம்­பியின் படமும் மற்றும் அந்­நா­ளைய பிர­பல நடி­கர்­களின் படங்­களும் ஆயிரம் பசுமை நினை­வு­களைத் தரு­வித்­தன.
 
12_ilayaraja24.jpg
ஒவ்­வொரு சி.டியின் மேலுறை களையும் பார்த்­த­படி வந்­த­போது உத­ய­கீதப் பாட்­டுக்கள் இருக்கும் செல­க் ஷனில் கண் நின்­று­விட்­டது. கை தானா­கவே அதற்குள் இருக்கும் சிடியை பொக்­கி­ஷத்தை எடுப்­ப­தைப்­போல எடுத்து பக்­கு­வ­மாக சிடி பிளே­ய­ருக்குள் போட்டு அதை இயக்க பாடல் ஆரம்­பித்­தது. 
 
இளை­ய­ராஜா என்னும் எங்­களின் ராசா, 80 களில் போட்ட மெட்­டுக்­களில் மெய்­ம­றந்து போயி­ருந்தேன். அந்தப் பாட்­டுக்கள் எல்­லாமே போட்டி போட்­டுக்­கொண்டு இனி­மையைப் பொழிந்­தன. சங்­கீத மேகம்.. தேன் சிந்தும் நேரம்..., பாடு­நி­லாவே தேன் கவிதை...,  மானே தேனே கட்­டிப்­புடி, உத­ய­கீதம் பாடுவேன்.. ., தேனே தென்­பாண்டி மீனே...என எல்­லாமே அற்­பு­த­மான மெல­டிகள். மானே தேனே என்ற துள்ளல் பாட்டில் கூட மெல­டியைக் கொண்­டு­வந்­தி­ருந்த ராஜா தன் சாணக்­கி­யத்தைக் காட்­டினார்.
 
ஆனால், இவை­களில் சங்­கீத மேகம் தேன் சிந்தும் நேரம்.. என்ற பாட்டில் இருக்கும் ஒரு விசேஷத் தன்­மை­யை ராஜாவின் இசை ராஜாங்­கத்தைப் பற்றி நீண்ட நாட்­க­ளாக எனக்குள் இருந்த விடயம் ஒன்று மீண்டும் தலை தூக்­கி­யது.
 
12ilayaraja-sangeetha-megam.jpg
படத்தில் இந்தப் பாட்டின் எடிட்­டிங்கும் (Editing ) மிகப் பிர­மா­த­மாக இருக்கும். பாடலின் தொடக்­கத்தில் வெளி­நா­டொன்­றி­லி­ருந்து மீனம்­பாக்கம் வந்­தி­றங்கும் ரேவதி, மோகனின் இசை நிகழ்ச்­சி­யொன்­றுக்கு செல்­கிறார். பாட்டின் Prelude எனப்­படும் ஆரம்ப இசையை ட்றம் ( Drum ) தொடக்கி வைக்கும் போது விமான நிலை­யத்தில் காரில் ஏறு­கிறார் ரேவதி.
 
அதைத் தொடர்ந்து அவரின் கார்ப்­ப­ய­ணத்­துடன் செல்லும் இசை,  அவர் இசை நிகழ்ச்சி நடை­பெறும் மண்­ட­பத்­துக்­குள்ளே சென்று அமரும் வரை பின்­தொ­டர்ந்து, மேடை விளக்­குகள் போடப்­பட்டு பாட்டுத் தொடங்கும் போது கன கச்­சி­த­மாக முடிந்து பாட்டின் மீது மிகுந்த எதிர்­பார்ப்பை ஏற்­ப­டுத்தி வழி விடு­கி­றது..
 
இதில் இசைக்­கேற்­றாற்­போல, காட்­சியை நகர்த்­திச்­செல்லும் எடிட்­டரை குறிப்­பிட்டே ஆக­வேண்டும். இந்தப் பாட்டை ஒவ்­வொரு முறை பார்க்­கும்­போதும் இந்தப் பாட்டின் எடிட்­டரை மன­துக்குள் பாராட்­டாமல் நான் இருந்­த­தில்லை.
 
80 களின் நடுப்­ப­கு­தியில் இந்தப் பாட்டு வெளி­வந்து யாழ்ப்­பா­ணத்தில் மிகப் பிர­ப­ல­மா­கி­யது. ஒரு முறை யாழ். நகர் நோக்கி மினிபஸ் ஒன்றில் பய­ணித்துக் கொண்­டி­ருக்கும் போது இவற்றை முதன் முதல் கேட்­டது நல்ல நினைவு. நகரை சென்­ற­டைந்­த­துமே நேரே நியூ­விக்ரேர்ஸ் ( New Victors ) என்ற பிர­ப­ல­மான கடைக்குச் சென்று, 20 ரூபா கொடுத்து உத­ய­கீதப் பாட்­டுக்­களை வாங்­கினேன். அந்த நாட்­களில், மெல்­லிய நீல நிறத்­தி­லான maxell cassette tape இல் புதிய பாட்­டுக்­களை 20 ரூபாக்­க­ளுக்கு நியூ­விக்­ரேர்சைத் தவிர யாழ்ப்­பா­ணத்தில் வேறு எங்­குமே வாங்க முடி­யாது.
 
கசற்­றுடன் வீட்­டுக்கு ஓடோடி வந்து எங்­களின் வீட்டில் இருந்த சின்ன நெசனல் ரேப் ரெக்­கோ­டரில் போட்டுக் கேட்ட போது பேரு­வ­கை­யாக இருந்­தது. குறிப்­பாக சங்­கீத மேகம்.. தேன் சிந்தும் நேரம்.. என்ற பாட்டை கேட்க கேட்க இனிமை கூடிக் கொண்­டே­யி­ருந்­தது. அலுப்­புத்­தட்­ட­வில்லை. அதற்குப் பின் உத­ய­கீதம் படம் வெளி­யாகி அந்தப் பாட்டை காட்­சி­க­ளுடன் பார்த்­த­போது, முக்­கி­ய­மாக Prelude, முத­லா­வது இடை­யிசை,  (Interlude)   இரண்­டா­வது இடை­யிசை (Interlude) எல்­லாமே புது­மை­யாக இருந்­தது.
 
 
ராஜாவின் அநே­க­மான பாட்­டுக்கள் என்னை மிக மிக கவர்ந்­துள்­ளன. ஆனால், இது அதையும் தாண்டி என்­னவோ மாதி­ரி­யி­ருக்­கி­ற­தே ஏன் ? புரி­ய­வில்லை எனக்கு..  கேட்டு அறி­வ­தற்கும் இசை­நு­ணுக்­கங்கள் பெரி­த­ள­வுக்குத் தெரிந்த ஒரு­வ­ரையும் எனக்குத் தெரி­யாது. இசை தெரிந்­த­வர்­க­ளுக்குக் கூட ராஜாவின் இசைச் சூட்­சுமம் தெரிந்­தி­ருக்க வாய்ப்­பி­ருந்­தி­ருக்­காது.
 
 
 எனவே, யாழ்ப்­பா­ணத்தின் நடுத்­த­ர­வர்க்க இளை­ஞர்கள் எல்­லோரும் செய்­வதைப் போல சங்­கீத மேகம் என்ற பாட்டில் ஏதோ இருக்­கி­றதே அது என்ன  என்ற ஒரு விடை­தெ­ரியாக் கேள்­வியை மன­துக்குள் அடித்து அமர்த்தி விட்ட என்­பாடு, தன் பாட்­டுக்கு போய்க் கொண்­டி­ருந்­தது.
 
அதற்குப் பின் பல மாற்­றங்கள், யாழ்ப்­பா­ணத்தில் இருந்த நான் இப்போ சிட்­னியில். ஆனால் ஒவ்­வொரு தட­வையும் அந்தப் பாட்டை எங்கே, எப்­போது கேட்­டாலும்,  நான் 1985 களுக்கு போவதும், மன­துக்குள் இருக்கும் கேள்வி எட்­டிப்­பார்த்­து­விட்டு மறை­வ­து­மாக வாழ்க்கை ஓடிக்­கொண்­டி­ருந்­தது.
 
சமீ­பத்தில், கொஞ்சம் இசை நிகழ்ச்­சிகள் சம்­பந்­த­மான டீ.வீ.டி.க்கள் வாங்­கி­வந்தேன். அவற்றுள், சில வரு­டங்­க­ளுக்கு முன்பு எஸ்.பி.பாலு, ஜெயா ரீவியில் தொகுத்து வழங்­கிய என்­னோடு பாட்டுப் பாடுங்கள் என்ற நிகழ்ச்­சியும்,  அதன் பின்பு கலைஞர் ரீவியில் தொகுத்து வழங்­கிய வானம்­பாடி, என்ற பாட்டுப் போட்டி நிகழ்ச்­சி­களும் அடங்­கி­யி­ருந்­தன. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவற்றைப் பார்ப்­பதும் அவற்றில் பாலுவின் அனு­ப­வங்­களைக் கேட்டுப் புள­காங்­கிதம் அடை­வதும் வழக்கம். 
 
அதில் ஒரு டீவி­டியைப் பார்த்துக் கொண்­டி­ருந்த போது, அதில் பங்­கு­பற்­றிய ஒரு போட்­டி­யாளர் எனது மன­துக்குள் விடை­தெ­ரி­யாத வினாக்­க­ளுடன் அடக்­கி­வைக்கப் பட்­டி­ருக்கும் அதே பாட்டை..' சங்­கீத மேகம் தேன் சிந்தும் நேரம்' என்ற பாட்டைப் பாடத்­தொ­டங்­கினார்.
 
 
 
போட்­டி­யாளர் பாடலைத் தொடங்­கிய சிறிது நேரத்­தி­லேயே பாட்டை நிறுத்தச் சொன்னார் பாலு. ஏன் நிறுத்தச் சொல்கிறார் என்ற கேள்விகளுடன் நிமிர்ந்து உட்கார்ந்தேன்.
 
 
 பாலு கூறத் தொடங்கினார்.. . அந்தப் பாட்டின் உள்ளே இருக்கும் சூட்சுமம் என்ன ? இசைஞானி எப்படி விசேட விதமாக இந்தப் பாட்டை கொம்போஸ் பண்ணியிருக்கிறார் என்பதை சிலாகித்துக் கூறினார். நான் மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப்போய் அமர்ந்திருந்தேன்.  இந்தப் பாட்டின் விசேட தன்மை பற்றி பாலு கூறிய விடயம் என்ன என்பதை    அடுத்தவாரம் இப்பக்கத்தில் பார்க்கலாம்.
 
சங்கீத மேகம் பாடல் வீடியோ
 
 
metronews
Link to comment
Share on other sites

இசைஞானி : Counterpoint மூலம் Count பண்ணி சர்வதேச இசையின் நுட்பங்களை தேடவைத்த இசை அறிவாளி (பகுதி 2)

 

அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் போட்டியாளர் 'சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்' என்ற பாடலைத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே பாட்டை நிறுத்தச் சொன்ன எஸ்.பி. பாலசுப்ரமணியம்.  அந்தப் பாட்டின் உள்ளே இருக்கும் சூட்சுமம் என்ன ,  இசைஞானி எப்படி விசேட விதமாக இந்தப் பாட்டை கொம்போஸ் பண்ணியிருக்கிறார் என்பதை சிலாகித்துக் கூறினார். அந்தப் பாட்டின் விசேட தன்மை பற்றி பாலு கூறிய விடயம் இதுதான்:-

13spb.jpg

 
"அனேகமான பாட்டுக்களில் சந்தத்துக்கு ஜால்ரா போட்டபடி அதனுடன் கூடவே பின்னணி இசை பயணிக்கும் ஆனால் இந்தப்பாட்டின் ஆரம்ப இசையிலேயே மூன்று நான்கு வாத்தியங்கள் வெவ்வேறு இசை ராஜாங்கங்களைச் செய்கின்றன. பின்பு அவை எல்லாம் ஒன்றாகி ரிதத்துடன் போகின்றன. ஆனால் தங்களின் ஆரம்பத் தனித்தன்மையில் மாற்றமில்லாமல் போகின்றன. இருந்த போதிலும் அவை நான்கையும் ஒன்றாக கேட்கும் போது வேற்றுமையில் ஒற்றுமையாக ஒரு இனிய இசை அனுபவத்தைக் கொடுக்கின்றன.. ."
 
இப்படி சாரல் படக் கூறிவிட்டு  'அந்தப் பாட்டின் முதல் இசையில் வாசிக்கப் பட்ட ஒவ்வொரு இசைக்கருவிகளையும் தனியாக வாசிக்கச் சொன்னார் பாலு. அதன் பிறகு அவை எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் வாசிக்கச் சொன்னார்.
 
அடடா.. அவை எல்லாம் சேர்ந்து ஒன்றாக வெளிவந்த போது 'சங்கீத மேகத்தின்' பிறீலூட்டாக (Prelude)) கனகச்சிதமாக இருந்தன. "இதுதான் ராஜா" என்றார் பாலு.
 
அதன் பின் போட்டியாளர் பாடத்தொடங்கி நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. ராஜாவின் அந்த இசைக்கு என்ன பெயர் போன்ற விளக்கங்களை பாலு தந்ததாக நினைவு இல்லை. ஆனால் எனக்குள்ளே இது என்ன மெஜிக் என்பதைக் கண்டுபிடித்தே ஆகவேண்டும் என்ற ஆவல்.. ஏன் வெறியே ஏற்பட்டது. தேடினேன். தேடினேன்.. தேடிக்கொண்டே இருந்தேன்.
 
இசையில் பாண்டித்தியம் இல்லாத என்னால் ஊகத்தின் அடிப்படையில் கண்டுபிடித்துப் படிப்பது கடினமாக இருந்தது. ஆனால் 1970 களில் இசைஞானி கொடுத்த பேட்டியொன்றை அதிர்ஷ்ட வசமாக சமீபத்தில் பத்திரிகையில் படித்தேன். என்னுடைய பல வருடக் கேள்விக்கு விடை கிடைத்த மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப்போனேன்.
 
அந்தப் பேட்டியில் :
'மேற்கத்தைய இசை நுணுக்கம் ஒன்றை தான் தமிழிசையில் பயன்படுத்த முயல்வதாகவும், பல வாத்தியங்களின் வேற்றுமையில் இனிமையைக் கொண்டுவரும் உத்தியான  Counterpoint எனும் அந்த நுணுக்கத்தைப் பற்றி பல வாத்தியக் காரர்களுக்கும் இயக்குனர்களுக்கும் விளக்கமில்லாமல் இருப்பதாகவும். இப்படியானவற்றை அறிமுகப் படுத்த திறமையான இயக்குனர்களை எதிர்நோக்கிக் காத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
 
அப்படியிருந்தும் தனது இரண்டாவது படமான பாலூட்டி வளர்த்த கிளியில் இடம்பெற்ற 'நான்..பேச வந்தேன் சொல்லத்தா..ன் ஓர் வார்த்தயில்லை..' என்ர பாட்டில் ஹம்மிங்கிலும் ஆரம்ப இசையிலும் அதைப் பரீட்சித்துப்பார்த்துள்ளதாகவும் கூறியிருந்ததைப் படித்தபோது..ஆஹா சந்தோஷம்... அப்பாடா புரிந்து கொண்டேன்.
 
1985 களில் எனக்குள் ஏற்பட்ட கேள்விக்கு விடை என்னவென்று புரிந்து கொண்டு அதற்கான விளக்கத்தை பெறுவதற்காக  Counterpoint இனைப் பற்றித் தேடித் தேடிப் படிக்கத் தொடங்கினேன். ஓரளவுக்கு அந்த இசை நுணுக்கத்தைப் பற்றித் தெரிந்து கொண்டேன்.
 
Counterpoint   என்றால் என்ன. ?? அதன் பிதாமகன் என்றால் யாரைக் குறிப்பிடலாம்??
The word counterpoint comes from the Latin punctus contra punctum, which means "note against note". That's actually a pretty nice short definition of counterpoint; a longer way of saying it is that it is the combination of individual melodic voices with each other to form a harmonious whole. In other words, counterpoint is the art of putting together different lines of music in a way that sounds good.
 
13lilayaraja-17-01-2013.jpg
 
ஒன்றுக்கு மேற்பட்ட வேறு வேறு பல இசைக் கருவிகளில் இருந்து இசைகளை ஒரே நேரத்தில் இசைக்கப்படுவதுதான் அது. அதில் 'ஹார்மோனி' என்ற அம்சம் உள்ளடங்கி இருக்கவேண்டும். வேற்றுமையில் ஒற்றுமையாக, இனிமையாக இருக்க வேண்டும்.
 
மேற்கத்தைய இசையின் சூட்சுமங்களில் ஒன்றான இந்தக் Counterpoint இல் ஜீனியஸ் என்று பலர் இருந்திருந்தாலும் ..இருந்தாலும்,ஜேர்மனியில் பிறந்த Johann Sebastian Bach   என்பவர் தன்னுடையை இசையிலும், இசைக் கோப்புக்களிலும் மிகப் புத்திசாலித்தனமாக இதைப் பாவித்துள்ளார் என அறியக் கூடியதாக இருக்கின்றது.
 
இப்போது சங்கீத மேகத்தைக் கேட்டுப் பாருங்கள். மேற்கத்தைய இசையின் நுணுக்கத்தை எமக்கு ஏற்றமாதிரி தமிழ் சினிமாப் பாட்டில் 1985 இலேயே,  கம்பியூட்டர் காலத்துக்கு முதலேயே என்னமாய் இசைஞானி என்ற இசை அறிவாளி தந்துள்ளார் என்பதைப் புரிந்து சிலிர்த்துப் போவீர்கள்.
 
சங்கீத மேகம் பாடல் வீடியோ
 
முதலில் பேஸ்கிட்டாரும் கிட்டாரும் ஆரம்பிக்கின்றன.
 
சில செக்கனில் ட்றம் தன்னுடைய அதிரடியைத் தொடங்குகிறது.
 
கீபோர்ட் லல..லல்லல..என்று போய்க்கொண்டிருக்கிறது
 
பேஸ்கிட்டார் சிவனே என்று எங்கோ போவதைப் போல பாசாங்கு செய்கின்றது.
 
ட்றம் இன் அதிரடியுடன் எல்லாமே நிறுத்திக் கொள்கின்றன.
 
பின்பு ட்றம்பட் புறப்பட்டு தனது கட்டைக் குரலுடன் போகிறது.
 
கீபோர்ட் முதல் வாசித்த நோட்சையே அட்சய பிசிறில்லாமல் அப்படியே வாசிக்கிறது.
 
ட்றம்மும் தன் பாட்டுக்கு அடிச்சு அல்லிக் கொண்டு போகிறது..
பேஸ்கிட்டார் பின்னாலே முனகுகிறது..
 
இவையெல்லாம், இந்த நான்கு வாத்தியங்களும் தனித்தனி நோட்சை வாசிக்கின்றன ஆனால் அவற்றை எல்லாம் சேர்த்து ஒரே நேரத்தில் கேட்கும் போது (Harmony  அளவுகடந்த உற்சாகமும் இனிமையும் கிடைக்கிறதல்லவா.. அதுதான் Counterpoint .... அங்குதான் எங்கள் இசைஞானியின் நோட்ஸ்..கைவண்ணம்.. மேதாவித்தனம்.. இசையைப் பற்றிய ஆளுமை,... இன்னும் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள்... எல்லாமே இருக்கிறது. இதே போலவே இந்தப் பாட்டின் இடையிசையையும் கொம்போஸ் பண்ணியிருக்கிறார்.
 
இதேபோன்ற பல பாடல்களை இசைஞானி உருவாக்கியுள்ளார் என்பது இப்போ புரிகிறது.. பல பாடல்களில் சில இடங்களில் மட்டும் பாவித்துள்ளார்.
 
'தளபதியின் சுந்தரி..கண்ணால் ஒரு சேதி' யைக் கேட்டுப்பாருங்கள்.. இசையின் வேறொரு பரிமாணத்தைப் புரிந்து கொள்வீர்கள்.. 'புத்தம் புதுக் காலை..பொன்னிற வேளை..என்ற அலைகள் ஓய்வதில்லைப் பாட்டின் ஆரம்ப இசையைக் கேட்டுப் பாருங்கள் புரியும் ...இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
 
இவற்றையெல்லாம் பார்த்துப் படித்த பிறகு, இசைஞானி மேல் இருந்த மரியாதை இன்னும் இன்னும் எங்கோ போய்விட்டது. அவரின் ஒவ்வொரு பாட்டிலும் இப்படியான நுணுக்கங்களை எங்கெல்லாம் உள்நுழைத்துள்ளார் என்பது விளங்கி ரசிக்கும் போது அந்த இசை கொடுக்கும் ஆத்ம திருப்தி பன்மடங்கு பெரியது.
 
metronews
 

 

Link to comment
Share on other sites

இவர்கள் சொல்வது ஹார்மனி (Harmony). Counterpoint அல்ல. சுரத்தின் மீது இன்னொரு சுரத்தை படர விடுவது ஹார்மனி. அதுதான் சங்கீத மேகம் போன்ற பாடல்களில் உள்ளது. இது எல்லா பாடல்களிலும் அநேகமாக இருக்கும். அவை இனிமையை கொண்டு வருகின்றனவா என்பதில்தான் இளையராஜா தனித்து தெரிகிறார்.

 

Counterpoint என்றால் என்ன என்பதை இங்கே இசைஞானி விளக்குகிறார். 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.