Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நாவின் செயற்பாடு தொடர்பில் இலங்கை அரசு கடும் அதிருப்தி; புலி உறுப்பினர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்குகிறதாம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஐ.நாவின் செயற்பாடு தொடர்பில் இலங்கை அரசு கடும் அதிருப்தி; புலி உறுப்பினர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்குகிறதாம் news
37277b211026f10932e793d47fbb0b9c.jpg
ஐ.நாவின் செயற்பாடு தொடர்பில்  இலங்கை அரசு கடும் அதிருப்தி; புலி உறுப்பினர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்குகிறதாம்
 
ஐக்கிய நாடுகள் அமைப்பு விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்குகின்றது என்று குற்றஞ்சாட்டியுள்ள இலங்கை அரசு, ஐ.நா.அமைப்பின் அந்த நடவடிக்கையைக் கடுமையாகக் கண்டித்துமுள்ளது.
 
அண்மையில் மலேசியாவில் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட மூன்று விடுதலைப்புலி  இயக்க உறுப்பினர்கள், அகதிகளுக்கான ஐக்கிய  நாடுகள் ஆணையாளரின் மலேசிய அலுவலகத்தில் அகதிகள் அந்தஸ்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
 
கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட மூவரில் இருவர் ஏற்கனவே அகதிகளாகப் பதிவுசெய்யப்பட்டிருந்தனர் எனவும் மூன்றாமவரின் விண்ணப்பம் பரிசீலனையில் இருந்ததாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
 
இது குறித்து அந்த அதிகாரி மேலும் தெரிவிக்கையில், ""மலேசியாவின் பயங்கரவாதத்துக்கு எதிரான பொலிஸ் பிரிவினரால் கடந்த 15ஆம் திகதி இவர்கள் மூவரும் மலேசியாவின் வெவ்வேறு பகுதிகளில் கைதுசெய்யப்பட்டு 25ஆம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர். 
 
இவர்கள் அகதிகள் அந்தஸ்து கோரி சமர்ப்பித்த விண்ணப்பங்கள் பற்றிய அபிப்பிராயத்தை ஐ.நா. செயலகம் இலங்கை அரசிடம் ஒருபோதும் கேட்கவில்லை. ஐ.நா. அமைப்பு தன்னிச்சையாகவே இவர்களுக்கு அகதிகள் அந்தஸ்தை  வழங்கியிருப்பது சர்வதேச சட்டதிட்டங்களுக்கு முற்றிலும் முரணானது. 
 
இவ்வாறு ஐ.நா.தன்னிச்சையாக வழங்கியுள்ள அகதிகள் அந்தஸ்துடன் நூற்றுக்கணக்கான விடுதலைப்புலி உறுப்பினர்கள் வெளிநாடுகளில் சுதந்திரமாக வாழ்கிறார்கள்.
 
எனவே, ஐ.நா. தொடர்ந்தும் இவ்வாறு இரட்டை வேடம் போடாமல் விடுதலைப்புலி  உறுப்பினர்களின் அகதிகள் அந்தஸ்துக்கான விண்ணப்பங்களை நிராகரிக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.
 
30 மே 2014, வெள்ளி 9:55 மு.ப

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.