Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாராளுமன்றத்தில் நான்கு கட்சிகளே உள்ளன ரவூப் ஹக்கீமை கட்சித் தலைவராக ஏற்க முடியாது

Featured Replies

தம்புள்ளைப் பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் கேள்வி ஒன்றை எழுப்புவதற்கு அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கான அனுமதி பாராளுமன்றத்தில் மறுக்கப்பட்ட அதேவேளை அமைச்சர் ரவூப் ஹக்கீமை பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியொன்றின் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்தாலும் சபையில் சிறு சர்ச்சை நிலை ஒன்று உருவானது.
19c618b054cee6f362dd3a203762eebf_XL_0.jp
 
தான் கட்சித் தலைவராகவே செயற்பட்டு வருவதாகவும் அதனடிப்படையிலேயே பாராளுமன்றத்தில் முன்வரிசை ஆசனம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தமது கருத்து வாதத்தை முன்வைத்த போதிலும் பாராளுமன்றத்தை நான்கு கட்சிகளே பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்றும் எனவே ரவூப் ஹக்கீமை கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி ஆகியோர் தெரிவித்தனர்.
 
இதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவுக்கும் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையே கருத்து வாதங்களும் இடம்பெற்றன.
 
எனினும் அமைச்சர் ஹக்கீமின் கோரிக்கையை நிராகரித்த பிரதி சபாநாயகர் சந்திம வீரகொடி உங்களது கோரிக்கையின் பிரகாரம் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23 இன் கீழ் கேள்வி எழுப்புவதானால் நாளை (இன்று புதன்கிழமை) இடம்பெறும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்தாலோசித்தே தீர்மானிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
 
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை அமர்வின் போது எதிர்க்கட்சித் தலைவர்கள் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23 இன் கீழ் 2 இல் கேள்வி ஒன்றை எழுப்பி பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் தொடர்பில் தமது கருத்துக்களை முன்வைத்தார். இதற்கு உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க பதிலளித்தார்.
 
இதன் முடிவில் எழுந்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் தம்புள்ளைப் பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் இன்று (நேற்று) ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
 
எனவே இது தொடர்பில் சில விடயங்களை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23இன் கீழ் 2இல் முன்வைக்க அனுமதி கோருகிறேன் என பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடியிடம் கோரி நின்றார்.
 
சந்திம வீரக்கொடி 
 
எனினும் இதற்குப் பதிலளித்த பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23இன் கீழ் 2இல் கேள்வி ஒன்றை எழுப்பும் அவசியம் தேவைப்படுமிடத்து அது தொடர்பில் முன்னதாகவே அறிவித்திருக்க வேண்டும். ஆகவே உங்களது கேள்வியை நாளைய தினத்தில் கேட்க முடியும் எனத் தெரிவித்தார்.
 
ரவூப் ஹக்கீம்
 
இதற்குப் பதிலளித்த அமைச்சர் ஹக்கீம் பிரதி சபாநாயகரின் தீர்மானத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதற்கு நான் எதிராக நிற்கவில்லை. எனினும் அவசரத் தேவை ஒன்றை கருத்திற் கொண்டு கட்சித் தலைவர் என்ற ரீதியில் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23 இன் கீழ் 2 இல் கேள்வியைத் தொடுக்க முடியும் என்பதையும் நினைவூட்டுகிறேன்.
 
முக்கியத்துவம் வாய்ந்த விடயமொன்றை எந்த சந்தர்ப்பத்திலும் முன்வைப்பதற்கு உரிமை இருக்கிறது எனக்கூறினார்.
 
ரணில்
 
இதன்போது எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க,
 
இந்த பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவது நான்கு கட்சிகளே ஆகும். அவசரத் தேவை நிமித்தம் கேள்வியெழுப்புவதில் பிரச்சினையில்லை. ஆனால், மேற்குறிப்பிட்டதன் பிரகாரம் கேள்வியெழுப்புவது கட்சித் தலைவராலேயே முடியும்.
 
அத்துடன் அமைச்சர் இப்படி ஒரு கேள்வியை எழுப்புவதெனில் அதனை அவர் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அவர் அமைச்சரவையிலேயே தீர்மானித்துக் கொண்டிருக்கலாம் என்றார்.
 
ரவூப் ஹக்கீம்
 
இதன்போது எழுந்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் நான் இந்த பாராளுமன்றத்தில் ஒரு கட்சியின் தலைவராகவே செயற்பட்டு வருகிறேன். அதனால்தான் இந்த சபையில் முன்வரிசையில் ஆசனமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
 
மேலும் ஐக்கிய தேசியக் கட்சியுடனான உடன்படிக்கையிலும் கட்சித் தலைவர் என்றே அங்கீகரிக்கப்பட்டுள்ளேன். நான் அமைச்சரவையிலிருந்து விலகுவேன் என்ற ஆசை ஒன்று எதிர்கட்சித் தலைவருக்கு இருக்கலாம். அதேபோன்று அவருக்கு பல நெருக்கடிகள் இருக்கின்றன. இத்தகைய காரணங்களை வைத்துக் கொண்டு என்னை கட்சித்தலைவர் இல்லை என்று கூறுவது வேடிக்கையானது எனக்கூறினார்.
 
ரணில்
 
இதன்போது எழுந்த எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சர் ரவூப் ஹக்கீமைப் பார்த்து நான் அனுதாபப்படுகிறேன். அமைச்சர் ஹக்கீம் அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதற்கு தயாராகி வருகிறார். இருந்தபோதிலும் அது வேறு விடயம்.
 
எவ்வாறிருப்பினும் இந்த பாராளுமன்றத்தை நான்கு அரசியல் கட்சிகளே பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. அமைச்சர் ஹக்கீம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக இருக்கலாம். ஆனால், அவர் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சியொன்றின் தலைவர் அல்ல. அவ்வாறு அவர் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
 
சந்திம வீரக்கொடி
 
இதன்போது பதிலளித்த பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி அமைச்சரே பாராளுமன்ற சம்பிரதாயம் மற்றும் பாராளுமன்ற நிலையியற் கட்டளை ஆகியவற்றின் பிரகாரமே என்னால் செயற்பட முடியும். எனவே, முன் அறிவித்தல் இல்லாது உங்களது கேள்வியை முன்வைக்க இடமளிக்க முடியாது.
 
இது தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பேசி தீர்மானிக்க முடியும். கட்சித்தலைவர்களின் கூட்டம் (இன்று) இடம்பெறுகின்றது. எனக்கூறி அமைச்சர் ரவூப் ஹக்கீமின் கோரிக்கையை நிராகரித்தார்.
 
பின்னர் சிறிது நேரத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சபையை விட்டு வெளியேறினார். இதேவேளை அமைச்சர் ஹக்கீமுக்கும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் ஏற்பட்ட கருத்து வாதங்களை அவதானித்துக் கொண்டிருந்த ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்த்தன சிரித்துக் கொண்டவாறே அமைதியாக இருந்தார். ஆளும் கட்சியின் ஏனைய உறுப்பினர்களும் அமைதியாகவே இருந்தனர்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.