Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூன்­ற­ரை­வ­ருட கடல் சிறை

Featured Replies

கடல் அலையில் கால் நனைப்­ப­தற்கே சிலர் பயப்­ப­டு­வ­துண்டு. கடல் பற்­றிய மர்­மங்­களும் நம்மால் ஊகிக்க முடி­யாத அத­னது இயங்­கு­நி­லையும் தொலை­வி­லி­ருந்தே கடலை இரசிப்­ப­தோடு நம்மை நிறுத்தி விடு­கின்­றன. ஆனால் பலரின் வாழ்க்கை கடலை நம்­பித்தான் ஓடிக் கொண்­டி­ருக்­கின்­றது. இவ்­வாறு திரை­க­ட­லோடி திர­வியம் தேடச் சென்ற நிலையில் சோமா­லிய கடற்­கொள்­ளை­யர்­களால் கப்­ப­லோடு சேர்த்து கடத்­தப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த இலங்­கையர் இருவர் உட்­பட 11 பேர் மூன்று வரு­டங்கள் 7 மாதங்கள் கழித்து உயி­ருடன் கடந்த வெள்ளிக்­கி­ழமை மீண்டு வந்­தி­ருக்­கின்­றனர்.
 
moldives.jpg
 
கடற் கொள்­ளை­யர்­களால் பிடிக்­கப்­பட்டு, திக்குத் தெரியாத கடற்­ப­ரப்­பிலும் ஜன­சஞ்­சா­ர­மற்ற காட்­டுப்­பு­றங்­க­ளிலும் தடுத்து வைக்­கப்­ப­டு­வதும் சொல்­லி­மாளா சித்­தி­ர­வ­தை­க­ளுக்கு மத்­தியில் தமது உயிர் பற்­றிய எந்த உத்­த­ர­வா­தங்­க­ளு­மின்றி மூன்­றரை வரு­டங்கள் ஒவ்­வொரு வினா­டி­யையும் அச்சம் -திகில் - கவலை கலந்த மன­நி­லையில் கழித்து அந்த சிறை­யி­லி­ருந்து மீண்டு வரு­வதும் எழுத்தில் எழு­து­வது போல் லேசு­பட்ட காரி­ய­மல்ல. அதனை அனு­ப­வித்­த­வர்­க­ளுக்கே புரியும்.
 
ஆனால், இறை­வனின் உத­வியும் சில சர்­வ­தேச அமைப்­புக்கள் மற்றும் சம்­பந்­தப்­பட்ட குடும்­பத்­தி­னரின் போராட்­டமும் சிறைபி­டிக்­கப்­பட்­ட­வர்­களின் நெஞ்­சு­ரமும் நெடுங்­கா­லத்­திற்குப் பிறகு ஒரு­வி­த­மான விடு­த­லைக்கு வழி­வ­குத்­துள்­ளது. முன்­னொரு காலத்தில் மீன் பிடிக்க வரு­வோ­ரிடம் மாமூல் அற­விடும் நட­வ­டிக்­கை­யாக ஆரம்­பித்து, இன்று கடல்சார் சாம்­ராஜ்யம் ஒன்­றையே ஆட்­டிப்­ப­டைத்துக் கொண்­டி­ருக்கும் சோமா­லிய கடற்­கொள்­ளை­யர்­களின் கப்பல் கடத்தல் தொடர்­பான மிக நீண்ட விவ­கா­ர­மாக கரு­தப்­படும் எம்.வி. அல்­மேடா என்ற இக்­கப்பல் கடத்தல் இழு­பறி முடி­வுக்கு வந்­தி­ருக்­கின்­றது.
 
ஈரானைச் சேர்ந்த நிறு­வ­ன­மொன்­றுக்கு சொந்­த­மா­னதும் மலே­சிய கொடி­யேந்­தி­ய­து­மான எம்.வி. அல்­மேடா கொள்­கலன் கப்பல் சர்­வ­தேச கடற்­பா­தையில் பய­ணித்துக் கொண்­டி­ருந்த போது 2010ஆம் ஆண்டு நவம்பர் மாத நடுப்­ப­கு­தியில் சோமா­லிய கடற்­கொள்­ளை­யர்­களால் கடத்­தப்­பட்­டது. கடத்­தப்­பட்ட போது அதில் 23 பணி­யா­ளர்­கள் இருந்­தனர். இவர்கள் பங்­க­ளாதேஷ்இ இந்­தியாஇ இலங்கைஇ ஈரான்இ பாகிஸ்தான் ஆகிய நாடு­களைச் சேர்ந்தவர்­க­ளாவர். இலங்­கை­யரில் ஒருவர் சகோ­தர இனத்­த­வ­ரான நீர்­கொ­ழும்பில் வசிக்கும் நிரோஷன் பெரேரா ஆவார். வெல்­லம்­பிட்­டியில் வசித்­து­வந்த சேகு­மதார் முகமட் பிஸ்­தாமி என்ற இரண்­டாம்­நிலை பொறி­யி­ய­லா­ள­ராவார்.
 
கப்பல் கடத்­தப்­பட்­டதும் கப்­பலை பட்­டய சேவையில் அமர்த்­தி­யி­ருந்த மலே­சிய நிறு­வ­னத்­துடன் கடற்­கொள்­ளை­யர்கள் பேரம்­பே­சல்­களை ஆரம்­பித்­தனர். ஆரம்­பத்தில் தங்­க­ளுக்கு 10 மில்­லியன் அமெரிக்க டொலரை கப்­ப­மாக தர­வேண்டும் என்று மலே­சிய நிறு­வ­னத்­திற்கு கடத்­தல்­கா­ரர்கள் கூறி­யுள்­ளனர். இத் தொகையை ஒரு மட்­டத்­திற்கு கீழ் குறைப்­ப­தற்கு கொள்­ளை­யர்கள் முன்­வ­ராத நிலையில் கப்பல் கம்­பனி ஒரு கணக்குப் போட்டு பார்த்­தி­ருக்க வேண்டும். அதா­வது - இவ்­வ­ளவு பணத்­தையும் செலுத்­தினால் இக்­கப்­பலை விடு­விப்­பார்­களா என்­பது ஒரு­பு­ற­மி­ருக்கஇ இத்­தனை மில்­லியன் டொலர்­களை செல­வ­ழிப்­பது தமக்கு இலா­ப­க­ர­மா­னதா என்­பதை அவர்­க­ளது வியா­பார மூளை சிந்­தித்­திருக்க இட­முள்­ளது.
 
இந்தப் பின்­ன­ணியில் கடற்­கொள்­ளை­யர்­க­ளு­ட­னான முதலாம் கட்ட பேச்­சு­வார்த்தை தோல்­வி­ய­டைந்­தது. இதனால் ஆத்­தி­ர­முற்ற கொள்­ளை­யர்கள் ஏனைய கப்பல் பணி­யா­ளர்கள் முன்­னிலையில் ஒரு பணி­யா­ளரை துப்­பாக்­கியால் சுட்டு படு­கொலை செய்­தனர். இதனால் ஏனையோர் மிகுந்த அச்­ச­ம­டைந்த அதே­வேளை மலே­சிய கம்­ப­னியும் பேச்­சுக்­களை தொடர்­வது பற்றி மீள் பரி­சீ­லனை செய்­தது. ஆனால் இந்தக் கப்­பலை மீட்க முடி­யா­விட்­டாலும் தமது நிறு­வ­னத்தை நம்பி பணி­பு­ரிந்த ஏனைய கப்பல் பணி­யா­ளர்­களின் உயிர்­களை காக்­க­வா­வது கப்பல் நிறு­வ­னமும் சம்­பந்­தப்­பட்ட அர­சாங்­கங்­களும் உயர்ந்­த­பட்ச சிரத்­தை­யு­டனும் அர்ப்­ப­ணிப்­பு­டனும் நடந்து கொள்­ள­வில்லை என்­ப­துதான் வருத்­த­மான உண்மை.
கடற்­கொள்­ளை­யர்கள் கப்­ப­லையும் பணி­யா­ளர்­க­ளையும் கடத்­திய மறு­நாளே அது­பற்­றிய தகவல் இலங்­கை­யி­லுள்ள பணி­யா­ளர்­களின் குடும்­பத்­திற்கு சொல்­லப்­பட்­டுள்­ளது. வெல்­லம்­பிட்­டியைச் சேர்ந்தவ­ரான பிஸ்­தாமி இரண்­டாம்­நிலை பொறி­யி­ய­லா­ள­ராக இருந்­த­மையால் கப்­பலில் எது எங்­கி­ருக்கும்? எதனை எப்­படிச் செய்­யலாம்? என்­பதை அறிந்து வைத்­தி­ருந்தார். அத­ன­டிப்­ப­டையில் கடத்­தப்­பட்டு இரண்­டாம்நாள் தனது வீட்­டுக்கு தொலை­பேசி அழைப்­பொன்றை மேற்­கொண்ட பிஸ்­தாமி, கடற்­கொள்­ளை­யர்கள் கப்­ப­லுடன் சேர்த்து பணி­யா­ளர்கள் அனை­வ­ரையும் கடத்தி கடலில் வைத்­தி­ருப்­ப­தா­கவும் கடற்­பி­ர­தே­சத்தை சரி­யாக ஊகிக்க முடி­யா­துள்­ள­தா­கவும் கப்பல் நிறு­வ­னத்­துடன் பேசி ஏதா­வது ஏற்­பாடு செய்­யு­மாறும் கோரி­யுள்ளார். அதே­போன்று நீர்­கொ­ழும்பை சேர்ந்தவரான நிரோஷன் பெரே­ராவும் இதனை தனது மனை­விக்கு அறி­வித்­துள்ளார். வீட்­டி­லி­ருந்­த­வர்கள் ஆடிப் போய்­விட்­டனர். எப்­படி இந்த விட­யத்தை கையாள்­வது என்று அவர்­க­ளுக்கு புரிய­வில்லை. இதற்­கி­டையில் இன்னும் சில தினங்கள் கழித்து செய்­மதி தொலை­பேசி ஊடாக பிஸ்­தமி அழைப்­பொன்றை எடுத்தார். நிலைமை மோச­மாக இருக்­கின்­றது. அவர்கள் சுடு­கின்­றனர். சித்­தி­ர­வதை செய்­கின்­றனர். சாப்­பாடு இல்லை. தமது பாது­காப்புக் கருதி இப்­போது கப்பல் தரித்­து­நிற்கும் இடத்தை மாற்­று­வ­தற்கு முனை­கின்­றார்கள். எனவே என்னால் இனி தொடர்­பு­கொள்ள முடி­யாமல் போகலாம் என்று பேசிக் கொண்­டி­ருக்­கும்­போதே தொடர்பு அறுந்து விடு­கின்­றது. அதன்­பி­றகு பிஸ்­தாமி பல மாதங்­க­ளாக அழைப்பை எடுக்­கவே இல்லை என்­கின்றார் அவ­ரது மகள் திரு­மதி. பாத்­திமா பர்­ஹானா.
 
முகம்மட் பிஸ்­தா­மிக்கு 4 பிள்­ளைகள். இதில் மகள் பர்­ஹானா தனது கணவன் பிள்­ளை­க­ளுடன் தற்­போது மாலை­தீவில் வசித்து வரு­கின்றார். ஏனையோர் வெல்­லம்­பிட்­டியில் உள்­ளனர். கப்பல் பணி­யா­ள­ராக வரு­டத்தின் அரை­வாசிக் காலத்தை தமது தந்தை கடலில் கழிப்­பது வழக்கம் என்­றி­ருந்­தாலும் கிட்­டத்­தட்ட 4 வரு­ட­காலம் அவர் கண்­ணுக்குத் தெரியாத ஒரு தேசத்தில் அடைத்து வைக்­கப்­பட்­டி­ருந்­தமை குடும்­பத்­தி­னரை வெகு­வாக பாதித்­தி­ருந்­தது. இருப்­பினும் அவர்கள் தமக்கு முடி­யு­மான அனைத்து வழி­க­ளிலும் முயற்­சி­களை மேற்­கொண்டு வந்­ததை தனிப்­ப ட்ட முறையில் அறிவேன்.
 
ஆரம்­பத்தில் பிஸ்­தாமி குடும்­பத்­தி­ன­ரு­டனும் தொடர்­பு­களைப் பேணி­வந்த மலே­சி­யாவை தள­மாகக் கொண்ட கப்பல் கம்­ப­னியின் ஈரா­னிய உரி­மை­யாளர் மெல்­ல­மெல்ல தம்­மு­ட­னான தொடர்­பு­களை துண்­டித்துக் கொண்­ட­தா­கவும் கடந்த இரண்டு வரு­டங்­க­ளாக எவ்­வ­ளவு முயற்சி செய்தும் தொடர்பு கொள்ள முடி­ய­வில்லை என்றும் பர்­ஹானா தெரிவித்தார். அவ்­வாறே குறித்த கப்­பலை கைவி­டு­வ­தென தீர்­மா­னித்த உரி­மை­யாளர்இ கடற்­கொள்­ளை­யர்­க­ளு­ட­னான பேச்­சு­வார்த்­தை­க­ளையும் முடி­வுக்கு கொண்­டு­வந்தார்.
 
எனவே, தனிப்­பட்ட முயற்சி மற்றும் சர்­வ­தேச அமைப்­புக்­களின் உத­வி­யா­லேயே ஏதா­வது நல்­லது நடக்கும் என்­பது எமக்கு தெரிந்­தி­ருந்­தது என்று மேலும் குறிப்­பிட்டார்.
நாம் இவ்­வி­ட­யத்தை இலங்­கை­யி­லுள்ள அதி­காரம் வாய்ந்த தரப்­பினர் எல்­லோ­ருக்கும் தெரியப்­ப­டுத்­தினோம். வெளிவி­வ­கார அமைச்சு, அரச உய­ர­தி­கா­ரிகள், முஸ்லிம் அமைச்­சர்கள்இ அர­சி­யல்­வா­திகள் என எல்­லோ­ரி­டமும் எமது தந்­தையை மீட்டுத் தரு­மாறு மன்­றாட்­ட­மாக கேட்டுக் கொண்டோம். ஆனால் அங்கு செல்­லுங்கள்இ இங்கு செல்­லுங்கள் என்று அலைக்­க­ழித்­த­னரே தவிர யாருமே காத்­தி­ர­மான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­வில்லை. ஒரே­யொரு அர­சி­யல்­வாதி மட்டும் எனது தாய் சென்ற முச்­சக்­க­ர­வண்­டியின் வாடகைக் கட்­ட­ணத்தை கொடுத்­த­னுப்­பி­யி­ருந்தார் என்றும் பிஸ்­தா­மியின் மகள் கூறு­கின்றார்.
 
மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட இறை­மை­யுள்ள ஒரு அர­சாங்கம் சட்­டத்­திற்கு அப்­பாற்­பட்டு செயற்­படும் சோமா­லிய கடற்­கொள்­ளை­யர்­க­ளுடன் பேசு­வது உர்ஜித்­த­மற்­றது என்று அர­சாங்கம் கரு­தி­யி­ருக்க வேண்டும். அத்­துடன் இது கப்பம் தொடர்­பான ஒரு விடயம் என்­பதால் சட்ட வரன்மு­றை­க­ளுக்குள் தனது முயற்­சி­களை அர­சாங்கம் மட்­டுப்­ப­டுத்திக் கொண்­ட­தாக தெரிகின்­றது. ஏனைய உலக நாடு­களும் தமது நாட்டு பணி­யா­ளர்­களை மீட்க பெரிய­ளவில் முயற்­சி­களை மேற்­கொள்­ள­வில்லை என்றே கூற­வேண்டும்.
 
இந்­நி­லையில்இ பாகிஸ்­தானை சேர்ந்த தன­வந்தர் ஒருவர் 1.2 மில்­லியன் அமெரிக்க டொலரை திரட்டிக் கொடுத்து தமது நாட்­ட­வரை கடற்­கொள்­ளை­ய­ரி­ட­மி­ருந்து விடு­த லை செய்­தி­ருந்தார். இந்த வழி­மு­றையைப் பின்­பற்­றியே அதா­வது கடற்­கொள்­ளை­யர்­க­ளுடன் நேரடித் தொடர்பை பேணு­வதன் மூலம் இலங்­கை­ய­ரான பிஸ்­த­மியை விடு­விக்கும் கடை­சிக்­கட்ட முயற்­சியில் நடு­நிலை வகிப்­பா­ளர்கள் இறங்­கினர். கடந்த வருட பரு­வ­கால மாற்­றத்தின் போது இவர்கள் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த கப்­பலை புயல்­தாக்­கி­யது. இதனால் கப்பல் பணி­யா­ளர்­களும் கடற்­கொள்­ளை­யர்­க­ளு­மாக 10 பேர் கடலில் மூழ்கி இறந்­தனர். இவ்­வாறு நிலை­மைகள் மேலும் மோச­ம­டைந்­ததால் மீட்பு முயற்­சி­களை தீவி­ரப்­ப­டுத்த வேண்­டி­யி­ருந்­தது. அப்­போ­துதான் குடும்­பத்­தி­ன­ ருக்கும் நடு­நிலை வகிக்கும் தரப்­பி­ன­ரு க்கும் கடற்­கொள்­ளை­யர்­களின் தொடர்பு கிடைத்­தது. இது பற்றி மரு­ம­க­னான எஸ்.எம்.எல். பிர்னாஸ் விப­ரிக்­கையில்இ அவ­ரது உயிரைக்காப்­பாற்­று­வ­தற்கு வேறு வழி­யின்றி தவித்துக்கொண்­டி­ருந்தோம்.
 
ஐக்­கிய நாடுகள் சபையும் இந்­தி­யாவை பிராந்­திய தள­மாகக் கொண்­டி­யங்கும் ஆPர்சுP அமைப்பும் எமக்கு தொடர்ந்து பூரண ஒத்­து­ழைப்பை வழங்கி வந்­தன. கடற்­கொள்­ளை­யர்­க­ளுக்கு பணம் தேவை­யாக இருந்­த­மையால் தொலை­பேசி அழைப்பை மேற்­கொண்டுஇ அவரை சித்­தி­ர­வதை செய்து பணம் கேட்கும் வழி­மு­றையை கையாண்டு வந்­தனர். எப்­ப­டியோஇ மேற்­படி இரு அமைப்­புக்­களும் 2 மில்­லியன் அமெரிக்க டொலரை சேக­ரித்து சோமா­லிய கொள்­ளை­யர்­க­ளுக்கு கடந்த சில தினங்­க­ளுக்கு முன்னர் வழங்­கி­யி­ருந்­தன.
 
இருப்­பினும் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளோரை விடு­விக்­காது தொடர்ந்து கப்பம் கோரு­வ­தற்கு கொள்­ளை­யர்கள் தீர்­மா­னித்­துள்­ள­தா­கவும் இத்­தீர்­மா­னத்­திற்கு 4 கொள்­ளை­யர்கள் இணங்­க­வில்லை என்றும் இர­க­சி­ய­மாக அழைப்பை மேற்­கொண்ட எனது மாமனார் பிஸ்­தாமி எமக்கு தெரிவித்தார். அதன் அடிப்­ப­டையில் மீண்டும் சித்­தி­ர­வ­தைகள் ஆரம்­பிக்­கப்­படும் அறி­குறி தெரிகின்­றது. இனிஇ உயிரைப் பணயம் வைத்­தா­வது தப்­பிக்க முனை­வதை தவிர வேறு வழி­யில்லை என்றும் அவர் குறிப்­பிட்­ட­தாக பிர்னாஸ் கூறினார்.
 
இவ்­வா­றான பின்­ன­ணியில் அங்­கி­ருந்து எப்­ப­டி­யேனும் தப்­பிக்க வேண்­டு­மென்ற முடி­வுக்கு பிஸ்­தாமி உள்­ளிட்ட பணி­யா­ளர்கள் வந்­துள்­ளனர். இவர்­க­ளது இந்த முயற்­சிக்கு 2 கடற்­கொள்­ளை­யர்­களும் உத­வி­யுள்­ளனர். அதன்­படி கட­லோ­ர­மாக காட்­டுப்­ப­கு­திக்குள் தாம் தடுத்து வைக்கப்பட்டிருந்த அறையின் ஜன்னல் ஊடாக வெளியேறிய இவர்கள் யாருமற்ற நிலப்பரப்புக்களை ஊடறுத்து சுமார் 10 கிலோமீற்றர் தூரம் உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓடி, ஒரு கிராமப்பகுதிக்கு சேர்ந்துள்ளனர். அங்குள்ள அதிகாரிகள் இவர்கள் 11 பேரையும் ஹேர்பியோ துறைமுகத்திற்கு அழைத்து வந்து அதன்பின்னர் நேற்று முன்தினம் (இலங்கை நேரப்படி) இரவு 9.15 இற்கு கென்ய தலைநகரான நைரோபிக்கு வந்து சேர்ந்துள்ளனர்.
 
நைரோபியில் இருந்து தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட முகம்மட் பிஸ்தாமி மேற்குறித்த தகவல்களை தமது குடும்பத்தினருக்கு கூறியுள்ளார். அப் படிப் பார்த்தால் இது உண்மையில் ஒரு உத்தியோகபூர்வ விடுதலையல்ல. சில கடற்கொள்ளையர்களின் உதவியால் அங் கிருந்து தப்பி வெளியேறியதன் மூலம் அவர்களது அந்த கடல் சிறையிலிருந்து விடுதலை பெற்றுள்ளார்கள் என்றே கூறவே ண்டும்.
 
இப்­போது நைரோ­பி­யி­லுள்ள இலங்கைத் தூத­ர­கத்­திடம் இவர்கள் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளனர். மருத்­துவ பரி­சோ­தனை மற்றும் பயண ஆவண ஏற்­பா­டுகள் முடி­வ­டைந்த பின்னர் இன்னும் ஓரிரு தினங்­க ­ளுக்குள் இலங்­கைக்கு அனுப்­பப்­ப­டுவர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மனி தாபிமானத்தின் பெயரால் இவர்களது விடுதலைக்காக பாடுபட்ட அனைவ ரும் நன்றிக்குரியவர்கள்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.