Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசாரணைக் குழு தொடர்பில் நவிபிள்ளை இன்று அறிவிப்பு

Featured Replies

ஜெனி­வாவில் அமைந்­துள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் 26 ஆவது கூட்டத்தொடர் இன்று செவ்­வாய்க்­கி­ழமை காலை ஆரம்­ப­மா­க­வுள்­ளது. எதிர்­வரும் 27 ஆம் திகதி வரை நடை­பெ­ற­வுள்ள இந்தக் கூட்டத் தொடரில் உலக நாடு­களின் மனித உரிமை நிலை­மைகள் குறித்து ஆரா­யப்­ப­ட­வுள்­ள­துடன் பிரே­ர­ணைகளும் தாக்கல் செய்­யப்­ப­ட­வுள்­ளன. இன்றைய ஆரம்ப அமர்வில்உரை­யாற்­ற­வுள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீதம் பிள்ளை இலங்கை மனித உரிமை விவ­காரம் குறித்து இதன்­போது அறிக்கை ஒன்றை வெளி­யி­ட­வுள்­ள­துடன் மனித உரிமை மீறல் விவ­காரம் குறித்து விசா­ரிப்­ப­தற்கு நிய­மிக்­கப்­பட்­டுள்ள விசா­ரணைக் குழு குறித்தும் அறி­விக்­க­வுள்ளார்.
 
pillay-homophobia.jpg
 
அத்­துடன் ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் விசா­ரணைக் குழு­வுடன் ஒத்­து­ழைப்­புடன் செயற்­ப­டு­மாறு அவர் இலங்­கையை கோர­வுள்ளார் என்றும் விசா­ரணைக் குழுவின் செயற்­பா­டுகள் தொடர்பில் அறி­விப்பார் என்றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
 
இந்­நி­லையில் இலங்­கையின் சார்பில் ஜெனிவா மனித உரிமைப் பேர­வைக்­கான இலங்­கையின் நிரந்­தர வதி­விட பிர­தி­நிதி ரவி­நாத ஆரி­ய­சிங்க தலை­மை­யி­லான அதி­கா­ரிகள் மட்ட குழு­வினர் 26 ஆவது கூட்டத் தொடரில் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர்.
 
இலங்கை சார்பில் அமர்வில் கலந்­து­கொள்­ள­வுள்ள ரவி­நாத தலை­மை­யி­லான குழு­வினர் மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீதம் பிள்­ளையின் விசா­ர­ணைக்­குழு குறித்த அறி­விப்பை உட­ன­டி­யாக நிரா­க­ரித்­து­வி­டு­வார்கள் என்றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.
 
மேலும் பல்­வேறு நாடு­களும் இலங்கை தொடர்பில் கேள்­வி­களை பேரவை அமர்­வு­க­ளின்­போது எழுப்­பலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­ற­மை­யினால் அவற்­றுக்கு ரவி­நாத ஆரி­ய­சிங்க தலை­மை­யி­லான அதி­கா­ரிகள் குழு­வினர் பதி­ல­ளிப்­பார்கள் என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அத்­துடன் சர்­வ­தேச அமைப்­புக்­களும் இலங்கை குறித்து கருத்­துக்­களை வெளி­யி­ட­வுள்­ளன என்றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.
 
இலங்­கைக்கு எதி­ராக கடந்த மார்ச் மாதம் ஜெனிவா மனித உரிமைப் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணைக்கு அமை­வாக மனித உரிமை மீறல் குற்­றச்­சாட்­டுக்கள் குறித்து விசா­ரிப்­ப­தற்­கான விசா­ரணை குழுவை நவ­நீதம் பிள்ளை ஏற்­க­னவே நிய­மித்­து­விட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.
 
 
விசா­ரணை குழுவின் தலை­வ­ராக நியூ­ஸி­லாந்தைச் சேர்ந்த முன்னாள் பெண் நீதி­ப­தி­யான டேம் சில்­வியா கார்ட்ரைட் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் குழுவில் 13 பேர் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் விசா­ரணைக் குழுவின் இணைப்­பா­ள­ராக சண்­டரா பெய்டாஸ் என்­பவர் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.
அந்­த­வ­கையில் இன்­றையக் ஆரம்ப அமர்­வின்­போது ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் விசா­ரணைக் குழு குறித்த அனைத்து விப­ரங்­க­ளையும் வெளி­யி­டலாம் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
 
இதே­வேளை ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் விசா­ரணைக் குழுவை நிரா­க­ரிக்­க­வுள்ள இலங்கை அர­சாங்கம் நவ­நீதம் பிள்ளை விசா­ரணைக் குழுவை அமைத்து வெளி­மட்ட விசா­ர­ணை­களை ஆரம்­பித்தால் அதனை எதிர்­கொள்­வ­தற்கு திட்டம் உள்­ளது என்றும் தெரி­வித்­துள்­ளது.
 
கடந்த மார்ச் மாதம் 27 ஆம் திகதி இலங்­கைக்கு எதி­ரான பிரே­ரணை ஜெனிவா மனித உரிமைப் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்­ட­போது அதனை இலங்கை முற்­றாக நிரா­க­ரித்­தி­ருந்­தது. இவ்­வா­றான பிரே­ரணை ஒன்று தற்­போ­தைய நிலை­மையில் அவ­சி­ய­மில்லை என்றும் இது போன்ற செயற்­பா­டு­க­ளினால் உள்­ளக செயற்­பா­டு­களில் குழப்பம் ஏற்­படும் என்றும் இலங்­கையின் சார்பில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.
நவி பிள்ளை - ரவி­நாத சந்­திப்பு
இது இவ்­வாறு இருக்க ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீதம் பிள்ளை ஜெனி­வாவில் உள்ள மனித உரிமைப் பேர­வைக்­கான இலங்­கையின் வதி­விட பிர­தி­நிதி ரவி­நாத ஆரி­ய­சிங்­கவை கடந்­த­வாரம் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளார்.
இந்த சந்­திப்­பின்­போது மனித உரிமைப் பேர­வையின் விசா­ரணைக் கட்­ட­மைப்பு மற்றும் அதன் செயற்­பா­டுகள் தொடர்பில் ரவி­நாத ஆரி­ய­சிங்­க­வுக்கு நவி­பிள்ளை விளக்­க­ம­ளித்­துள்ளார்.
 
விசா­ரணை குழுவில் சிரேஷ்ட நிபு­ணர்கள் இரு­வரும் மூன்று விசேட அறிக்­கை­யா­ளர்­களும் உள்­ள­டங்­கு­வார்கள் என்றும் ரவி­நாத ஆரி­ய­சிங்­க­வுக்கு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதா­வது நியு­சி­லாந்து பெண் நீதி­பதி தலை­மையில் 13 பேர் கொண்ட குழு­வினர் இந்த விசா­ரணைக் குழுவில் இடம்­பெ­று­வார்கள் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
 
இதே­வேளை கடந்த டிசம்பர் மாதம் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்ட ஐக்­கிய நாடு­களின் இடம்­பெ­யர்ந்த மக்கள் தொடர்­பான விசேட அறிக்­கை­யாளர் சலோகா பெயானி இல்­ங­கையின் மீள்­கு­டி­யேற்றம் குறித்த விசேட அறிக்கை ஒன்றை 12 ஆம் திகதி மனித உரிமை பேரவை அமர்­வின்­போது வெளி­யி­ட­வுள்ளார்.
 
ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீதம் நவ­நீதம் பிள்ளை மனித உரிமை ஆணை­யா­ள­ராக கலந்­து­கொள்ளும் இறுதி கூட்டத் தொட­ராக 26 ஆவது கூட்டத் தொடர் அமையும் என்று கூறப்­ப­டு­கின்­றது.
 
எதிர்­வரும் ஆகஸ்ட் மாதத்­துடன் நவ­நீதம் பிள்ளை மனித உரிமை ஆணை­யாளர் பத­வி­யி­லி­ருந்து ஓய்­வு­பெ­ற­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. நவி­பிள்­ளையின் பத­விக்கு ஜோர்தான் நாட்­டுக்­கான ஐநா வின் நிரந்­தரத் தூதர் செயித் அல் ஹுசைன் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். ஐ.நா பொதுச் செய­லாளர் பான் கீ மூன் அவர்­களின் பரிந்­து­ரைப்­படிஇ இந்த முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ளது. அவர் தனது பரிந்­து­ரையை அண்­மையில் அறி­வித்­துள்ளார் சயித் அல்-­ஹுசைன்இ ஜான்ஸ் ஷாப்கன்ஸ் பல்­க­லைக்­க­ழ­கத்தில் பயின்­றவர். கேம்­பிரிட்ஸ் பல்­க­லைக்­க­ழ­கத்தில் பட்டம் பெற்­றவர்.
 
நல்­லி­ணக்க ஆணைக்­குழு கவனம் செலுத்­திய காலப் பகு­தியில் இலங்­கையில் இரு­த­ரப்­பி­ன­ராலும் இழைக்­கப்­பட்­ட­தாகக் கூறப்­படும் குற்­றங்கள் மற்றும் மோச­மான மனித உரிமை மீறல்கள்இ துஷ்­பி­ர­யோ­கங்கள் தொடர்­பாக ஐக்­கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேர­வையின் விரி­வான சுதந்­தி­ர­மான விசா­ர­ணையை மேற்­கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை முன்­வைக்­கப்­பட்டே இலங்­கைக்கு எதி­ரான பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டது.
 
இலங்­கையில் பொறுப்­புக்­கூ­ற­லையும் நல்­லி­ணக்­கத்­தையும் ஊக்­கு­வித்தல் என்ற தலைப்­பி­லான இந்தப் பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக 23 நாடு­களும் பிரே­ர­ணையை எதிர்த்து 12 நாடு­களும் வாக்­க­ளித்­தன. அத்­துடன் இந்­தியா உள்­ளிட்ட 12 நாடுகள் வாக்­க­ளிப்பில் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
 
 
இலங்கை தொடர்பான பிரேரணை அமுல்படுத்தப்படுவது தொடர்பான வாய்மூல அறிக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைப் பேரவையின் 27 ஆவது கூட்டத் தொடரிலும் பரந்துபட்ட முழுமையான ஆவண அறிக்கை எதிர்வரும் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 28 ஆவது அமர்விலும் சமர்ப்பிக்கப்படவேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2013 ஆம் ஆண்டு மற்றும் 2012 ஆம் ஆண்டிலும் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
 

ஐ.நா. விசாரணைக்குழுவுக்கு சகல வழியிலும் ஒத்துழைப்பு : சாட்சியங்களைத் திரட்டவும் நடவடிக்கை என்கிறார் மாவை எம்.பி.

 

இலங்­கையில் இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசா­ரணை செய்­வ­தற்கு ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணை­யாளர் நாயகம் நவ­நீ­தம்­பிள்ளை விசா­ர­ணைக்­கு­ழுவை நிய­மித்­துள்­ளமை வர­வேற்­கத்­தக்­கது. இந்தக் குழுவின் விசா­ர­ணை­க­ளுக்குத் தேவை­யான சக­ல­வி­த­மான ஒத்­து­ழைப்­புக்­க­ளையும் வழங்­கவும் தயா­ரா­க­வுள்ளோம் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அறி­வித்­துள்­ளது.
 
mavai-senathiraja.jpg
 
விசா­ர­ணைக்குத் தேவை­யான சாட்­சி­யங்களையும் ஆவ­ணங்­க­ளையும் திரட்டும் செயற்­பா­டு­க­ளை நாம் முன்­னெ­டுப்போம். சாட்­சி­யங்
களின் பாது­காப்பு தொடர்­பிலும் நாம் கவனம் செலுத்­துவோம் என்றும் கூட்­ட­மைப்பு தெரி­வித்­தது.
 
இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் செய­லா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராஜா கூறு­கையில்,
 
ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில் கடந்த மார்ச் மாதம் இடம்­பெற்ற கூட்­டத்­தொ­டரில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்­திற்கு அமை­வாக இலங்­கையில் இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்­பாக விசா­ரணை செய்­வ­தற்­கான விசா­ர­ணைக்­கு­ழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது.
 
நியு­சி­லாந்து நாட்டைச் சேர்ந்த முன்னாள் பெண் நீதி­ப­தி­யான டேம் சில்­வியா கார்ட்ரைட் தலை­மை­யி­லான குழு­வி­னரின் விப­ரங்கள் இன்­றைய தினம் மனித உரி­மைகள் ஆணை­யாளர் நாயகம் நவ­நீ­தம்­பிள்­ளை­யினால் வெளி­யி­டப்­ப­ட­வுள்ள நிலையில் குறித்த விசா­ர­ணைக்­குழு நிய­மிக்­கப்­பட்­டி­ருப்­பதை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வர­வேற்­கின்­றது. அத்­துடன் அவ்­வி­சா­ரணைக் குழு­வா­னது முன்­னெ­டுக்­க­வி­ருக்கும் அனைத்து வித­மான நட­வ­டிக்­கை­க­ளுக்கும் ஒத்­து­ழைப்பை வழங்­கு­வ­தற்கு நாம் தயா­ரா­கவே இருக்­கின்றோம்.
 
யுத்தம் நிறை­வ­டைந்து ஐந்­தாண்­டு­களைக் கடந்­துள்ள நிலையில் தற்­போதும் தமிழ் மக்­களின் பூர்­வீகப் பிர­தே­சங்­க­ளான வடக்கு, கிழக்கில் இரா­ணு­வ­ம­ய­மாக்­கப்­பட்ட நெருக்­க­டி­யான நிலை­மை­களே காணப்­ப­டு­கின்­றன. திட்­ட­மிட்ட ரீதியில் தமிழ் மக்­களின் குடிப்­ப­ரம்­பலை மாற்றும் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. காணிச் சுவீ­க­ரிப்பு என்­ற­பெ­யரில் மீள்­கு­டி­யே­று­வ­தற்கு தடை­வி­திக்­கப்­பட்டு பூர்­வீக நிலங்கள் கைய­கப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. காணமல் போன­வர்கள் தொடர்பில் எந்­த­வி­மான தக­வல்­களும் வழங்­கப்­ப­டாது உற­வி­னர்கள் தொடர்ந்தும் அலைக்­க­ழிக்­கப்­பட்டு வரு­கின்­றார்கள். பெண்கள்இ இளைஞர் யுவ­தி­களின் பாது­காப்பு கேள்­விக்­கு­றி­யாக்­கப்­பட்­டுள்­ள­தோடு திடீர் கைது­களும் இடம்­பெ­று­கின்­றன. இவற்­றுக்கு எதி­ராக குரல்­கொ­டுப்­ப­வர்கள் அச்­சு­றுத்­தப்­ப­டு­வ­துடன் ஜன­நா­யக ரீதியில் கவ­ன­யீர்ப்பு போராட்­டங்­களை முன்­னெ­டுக்­கப்­படும் பட்­சத்தில் அவற்றை தடுத்து நிறுத்­து­வ­தற்கு இரா­ணுவஇ புல­னாய்­வா­ளர்கள் முழு வினைத்­தி­ற­னுடன் செயற்­ப­டு­கின்­றார்கள்.
 
இவ்­வா­றான நிலை­மையில் தமிழ் மக்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட அநீ­திகள் தொடர்பில் விசா­ர­ணை­யொன்று நடத்­தப்­பட்டு நீதி கிடைக்க வேண்­டி­யது மிக­மிக அவ­சி­ய­மாகும். இதற்­காக ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேரவை முன்­னெ­டுக்கும் சகல நட­வ­டிக்­கை­க­ளுக்கும் கூட்­ட­மைப்பு ஆத­ரவு வழங்­கு­மென முன்­ன­தா­கவே அறி­வித்­தி­ருந்­தது. அதற்­க­மை­வாக அண்­மைய தினங்­க­ளாக மக்­களை தெளி­வு­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­களை நாம் முன்­னெ­டுத்­தி­ருந்தோம். அடுத்த கட்­ட­மாக முன்­னெ­டுப்­ப­தற்கும் தயா­ராகி வரு­கின்றோம். அதே­போ­னறு விசா­ர­ணை­க­ளுக்கு தேவை­யான சாட்­சி­யங்கள்இ ஆவ­ணங்­களை திரட்டும் செயற்­பா­டு­க­ளையும் முன்­னெ­டுக்­க­வி­ருப்­ப­தோடு மட்­டு­மன்றி சாட்­சி­யங்­களின் பாது­காப்பு தொடர்­பா­கவும் உரிய வேலைத்­திட்­டங்­களை மேற்­கொண்­டு­வ­ரு­கின்றோம்.
 
தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு முற்­று­புள்ளி வைக்கும் வகையில் 13ஆவது திருத்தச் சட்­டத்­திற்கு அப்பால் சென்று அதி­கா­ரப்­ப­ர­வ­லாக்­கத்­து­ட­னான அர்த்­த­முள்ள தீர்­வொன்றை முன்­வைப்­ப­தற்கு இலங்கை அர­சாங்கம் தொடர்ந்தும் பின்­ன­டிப்புச் செய்து வரும் நிலையில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு குறைந்த பட்சம் நியா­ய­மொன்று கிடைக்­க­வேண்டும் என்­பதில் தமிழ் மக்­களின் ஆணை­பெற்ற தமிழ்த்­தே­சியக் கூட்டமைப்பு உறுதியாக உள்ளது என்றார்.
 
இதேவேளை இன்றை தினம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடரின் 26ஆவது அமர்வு ஆரம்பமாகின்றது. இந்நிலையில் எதிர்வரும் 17ஆம் திகதி பாராளுமன்றத்தின் அமர்வுகள் ஆரம்பமாகின்றன. இதன்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கூடும் பாராளுமன்றக் குழுவில் ஐ.நா கூட்டத்தொடர் பற்றிய முக்கிய விடயங்கள் மற்றும் அடுத்த கட்டநடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக மேலும் தெரிவித்தார்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.