Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மணல் அகழ்வு அனுமதிக்காக பருத்தித்துறை பிரதேசசபை பல மில்லியன் இலஞ்சம் பெற்றதா?

Featured Replies

Question%20New_CI.jpg

வடமராட்சி கிழக்கில் மணல் அகழ்வுக்கான அனுமதியினை வழங்குவதற்காக கூட்டமைப்பின் வசமுள்ள பருத்தித்துறை பிரதேச சபை பல மில்லியன் இலஞ்சம் பெற்றிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. 

வடமராட்சி கிழக்கில் அடாத்தாக மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்ததாக குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டிருந்த மகேஸ்வரி நிதியம் வடமாகாணசபை தேர்தலின் பின்னராக கடுமையான தடைகளையும் எதிர்கொண்டிருந்தது.

இந்நிலையில் வடமராட்சி கிழக்கின் நிர்வாகத்தை கொண்டுள்ள பருத்தித்துறை பிரதேசசபையிடம் மணல் அகழ்விற்கான புதிய அனுமதியினை மகேஸ்வரி நிதியம் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அவ்விடயம் தொடர்பில் பல மில்லியன் கைமாறியுள்ளதாக கூட்டமைப்பின் உள்ளக தரப்புக்கள் தெரிவித்துள்;ளன. இந்த நிலையில் தன்னிச்சையாக பருத்தித்துறை பிரதேச சபை செயற்பட்டு பொறியினுள் விழுந்துள்ளதாக வட மாகாணசபையின் வடமராட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் 

வடமராட்சி கிழக்கில் திட்ட மிட்ட வகையில் இடம்பெற்று வருகின்ற மண் அகழ்வானது கவனிப்பாரற்ற நிலையில் மிகவும் மோசமiடைந்துள்ளது. இதனால் வடமராட்சி கிழக்கு அழிவடையும் என்பதில் எந்த மாற்று கருத்துக்கும் இடமில்லை. ஆனால் மக்களின் நலனுக்காக தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் கூட இதில் அக்கறை இல்லாமல் இருப்பது மிக கவலையாக உள்ளது.

எமது  கூட்டமைப்பு மக்கள் பிரநிதிகள் கூட்டங்களில் மட்டுமே கதைக்கிறார்கள். அதற்கு அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

இன்று வடமராட்சியின் பல இடங்களுக்கு இங்கு இருந்துதான் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படுகின்றது. கடல் மட்டத்துக்கு கிழாக மணல் அகழ்வு மேற்கொள்ள படுகின்ற போதும் நன் நீரானது உவர் நீராக மாற்றமடையும் அதேபேல் விவசாய நிலங்கள் பாதிப்படையும் கடல் பெருக்கு எடுக்கும் போது கடல் நீரானது கிராமங்களுக்குள் வந்தால் பின்னர் அது கடலுக்கு திரும்பி செல்ல முடியாது.

இதனால் கிராமங்கள் கடலுக்குள் மூழ்கும் அபயமும் தோன்றியுள்ளது. இது சம்மந்தமாக நான் மாகாண சபையில் தீர்மானம் ஒன்றை எமது சுற்று சூழல் அமைச்சுக்கு கொண்டுவந்தேன்.  அதனை முறியடிக்கும் முகமாக மகேஸ்வரி நிதியத்தினர் சில சூழ்சிகளை மேற்கொண்டார்கள். அதில் ஒன்று   பருத்தித்துறை பிரதேச சபையிடம் அவர்களது பாதையினை பாவிப்பதற்காக வரி தருவதகவும் தெரிவிதுள்ளர்கள.; அதற்கு பிரதேச சபையானது தலைமை பீடத்துடன் கலந்தாலோசிக்காமல் அவர்களது சதி வலையில் விழுந்துள்ளார்கள்.

இதனால் பருத்துறை பிரதேசசபையின் இச் செயற்பாட்டினை நான்   வன்மையாக கண்டிக்கின்றேன். பருத்தித்துறை பிரதேசசபையின் தேர்தல் முடிவடைந்து  மூன்று வருடங்கள் கடந்த நிலையிலும் அவர்கள் இதுவரை மண் அகழ்வு சம்மந்தமாக எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்பது மிகவும் கவலைக்குரிய விடயம்.

மேலும்  பிரதேசசபையினால் வழங்கப்பட்ட  கடிதத்தினை பிரதேச சபையின் அனுமதி என்று அரசியல் செய்வது ஈபிடிபியின் இயலாத தன்மையாகும். கடந்த நான்கு வருடங்களாக பிரதேசசபைக்கு வரி செலுத்தாதவர்கள் தற்போது உடன் படுகிறர்கள் என்றால் அவர்கள் மிகுந்த அழுத்தத்துக்குள் உள்ளார்கள் என்பது தெட்டத் தெளிவாகின்றது. மக்களின் நலனில் அக்கறை என்று வெளிவேஷம் போடும் ஈபிடிபியினர் மிகவும் இரகசியமாக ஒரு பிரதேசத்தினையே தங்களின் பணத்தேவைக்காக அழித்து கொண்டு இருகிறார்கள் என்பதில் மற்றுக்கருத்துக்கு இடமில்லை .

இவர்கள் இதற்கான விலையினை தேர்தல் காலங்களில் உணருவார்கள் என்பது நிச்சயம். நிச்சயமாக ஒன்றை கூறுகின்றேன் கடந்த காலங்களில் விடுதலை புலிகள் குடாநாட்டுக்கு தேவையான மண்ணினை வடமராட்சி கிழக்கில் திட்டமிடு சரியான முறையில் மண் அகழ்வினை மேற்கொண்டார்கள். மேலும் அந்த பணத்தினை வடமாரட்சி கிழக்கின் அபிவிருத்திக்கு செலவிட்டார்கள். ஆனால் மகேஸ்வரி நிதியத்தினர் தினமும் பல இலட்சருபாய்களை சம்பாதிக்கின்றர்கள். தவிர அவர்கள்   வடமாரட்சி கிழக்கினை மேலும் மேலும் மோசமான நிலைக்கே இட்டுச்செல்கின்றர்களே தவிர எந்த விதமான அபிவிருத்தியும் மேற்கொள்ள வில்லை.

இதேவேளை பருத்தித்துறை - மருதங்கேணி வீதி மிகவும் மோசமாக காணபடுகிறது. இவ்வீதி சீரின்மையால் பல விபத்துகள் இடம் பெறுகின்றன. இதனை எவருமே கவனிக்கவில்லை. நான் மாகாண சபை உறுப்பினர் என்பதற்கு அப்பால் வடமராட்சி கிழக்கு கிராமத்தவன் என்ற அடிப்படையில் எனது உயிரினை கொடுத்தாவது இதனை தடுப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்வேன.; ஏனெனில் கடந்த கலங்களில் மண் அகழ்வினை எதிர்த்தவர்கள் ஆயுதமுனையில் இனம் தெரியாதவர்களால்  அச்சுறுத்தப்பட்டர்கள் எனது நண்பன் கேதிஸ்தரன் சுட்டு கொல்லப்பட்டான். மேலும் மணல் விடயம் சம்மந்தமாக மாண்பு மிகு முதலமைச்சர் அவர்களின் கவனத்துக்கு சரியான ஆதாரத்துடன் மக்களின் கையொப்பத்துடன் தெரியபடுத்தவுள்ளேன்.   மேலும் கூட்டமைப்பு மக்கள் பிரதிநிதிகள் தன்னிசையான முடிவுகள் எடுப்பதை தவிர்த்து மக்கள் நலன்  சார்ந்த முடிவுகளையே எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அது வரலாற்று தவறாக மாறும் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தக் குற்றச்சாட்டுக் குறித்து 

1) மகேஸ்வரி நிதியம்

2) ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி

3) பருத்தித்துறை பிரதேச சபை

4) வடமாகாண சபையின் சுற்றுப்புறச்  சூழல் அமைச்சு

5) வடமாகாண சபை முதலமைச்சர்

6) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை

உள்ளிட்டவர்கள் பதில் அளித்தால் முழுமையாக பிரசுரிக்கப்டும்.

ஆ.ர்

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/107986/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.