Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களுக்கிடையில் பிரச்சினையை ஏற்படுத்த முனைகின்றனர்: சுரேஸ்

Featured Replies

a1(2225).jpg
- எம்.றொசாந்த்  

யாழ். மாவட்டத்தின் வளலாய் பகுதி  மக்களை அவர்களின் சொந்தக் காணிகளிலிருந்து நடுத் தெருவுக்கு அனுப்பிவிட்டு, வலி. வடக்கு மக்களை கொண்டுவந்து வளலாய் பகுதியில் குடியேற்றுவதன் ஊடாக இந்த இரண்டு தரப்பு தமிழ் மக்களுக்கும் இடையில் பிரச்சினையை ஏற்படுத்தவே அரசாங்கமும் இராணுவமும் முயல்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். 

வளலாய் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றக் கோரியும் வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் வசித்துவரும் மக்களை வளலாய் பகுதியில் குடியமர்த்த எடுக்கப்படும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும்  கோப்பாய் பிரதேச செயலகம் முன்பாக  திங்கட்கிழமை (16) காலை கண்டனப் போராட்டம் நடைபெற்றது. இதன்போது, ஊடகவியலாளர்களுக்கு கருத்துத்  தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். 

இங்கு அவர்  மேலும் தெரிவிக்கையில்,   

'வளலாய் பகுதியிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்த பின்னர், இராணுவம் அக்காணிகளை சுவீகரித்ததாக அறிவித்தது. அது சட்டரீதியாக சுவீகரிக்கப்பட்டு விட்டதா?  இல்லையா? என்ற நிலையில் தற்போது வளலாயிலுள்ள காணிகள் துப்பரவு செய்யப்பட்டு, அங்கு வலி. வடக்கு மக்களை குடியமர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

272 குடும்பங்களை சேர்ந்த 920 பேர் இந்த மண்ணில் மீளக்குடியேற வேண்டியுள்ளது. இந்த 272 குடும்பங்களில் 224 குடும்பங்களுக்கு அந்த மண்ணுக்கு உரித்தான உறுதிகள் இருக்கின்றன. மீதி 48 குடும்பங்களும் அந்த மண்ணுக்கு உரித்தானவர்கள் தான். 

234 ஏக்கர் நிலப்பரப்பு தான் இந்த மக்கள் குடியேற வேண்டும். அவர்களது பொதுநூலகங்கள், கோவில்கள் எல்லாவற்றையும் உள்ளடக்கித்தான் இந்த 234 ஏக்கர் காணிகள் இருக்கின்றன. 

இந்தக் காணிகளில்தான் இந்த மக்கள் குடியேற முடியாத நிலைமை காணப்படுகின்றது. அவர்கள் இடம்பெயர்ந்து 25 வருடங்கள் ஆகின்றன. இந்த நிலையிலும், அவர்கள் தமது காணிகளில் மீளக் குடியேறுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தனர். யுத்தத்திற்கு பிற்பாடு மீளக்குடியேற்றுவோம் என கூறப்பட்டது. ஆனால், இன்றுவரை இவர்கள் யாரும் மீளக்குடியேற்றப்படவில்லை. 

ஆண்டாண்டு காலமாக அவர்கள் வாழ்ந்துவந்த மண்ணுக்கு போனால்தான் அவர்கள் தங்கள் எதிர்காலம் பற்றிச் சிந்திக்க முடியும். அத்துடன், தமது வாழ்வாதாரத்தை அவர்கள் திட்டமிட முடியும். ஆனால், அவற்றுக்கான நிலைமை இங்கு இல்லை. அரசாங்கமும் இராணுவமும் திட்டமிட்ட வகையில் தமிழர்களுக்கு இடையில் பிரச்சினையை ஏற்படுத்த முயல்கின்றன. 

வளலாய் மக்களை அவர்களின் சொந்தக் காணிகளிலிருந்து நடுத்தெருவுக்கு அனுப்பிவிட்டு, வலி. வடக்கு மக்களை கொண்டுவந்து இங்கு குடியேற்றுவதன் ஊடாக இந்த இரண்டு தரப்பு தமிழ் மக்களுக்கும் இடையில் பிரச்சினையை ஏற்படுத்தவே இந்த அரசாங்கமும் இராணுவமும் முயல்கின்றன.  அதற்கு நாம் இடமளிக்க மாட்டோம். 

வலி. வடக்கு மக்கள் அவர்களது சொந்த மண்ணுக்கு போகவேண்டிய மக்கள். ஆகவே அவர்கள் அங்கே  போகவேண்டும். அதேபோல, வளலாய் மக்கள் அவர்கள் சொந்தக் காணிகளுக்கு போக வேண்டியவர்கள். எனவே இடம்பெயர்ந்த அனைத்து மக்களும் மீள்குடியேற்றபட வேண்டும். அது மயிலிட்டி, தையிட்டி, பலாலி, காங்கேசன்துறை என எந்த இடங்களாக இருந்தாலும், அந்த மக்கள் அவர்களது சொந்த இடங்களிலேயே மீளக்குடியேற்றப்பட வேண்டும். இந்த மக்கள் மீளக்குடியேறும் வரையில் இந்த போராட்டங்கள் தொடரத்தான் செய்யும்' என்றார். 

tamilmirror

  • தொடங்கியவர்

வடக்கில் இடம்பெயர்ந்தோர் முகாம் இல்லையென சர்வதேசத்திற்கு காட்ட அரசாங்கம் முயற்சிக்கின்றது : சுரேஷ் பிரேமச்சந்திரன்

 

வடக்கில் இடம்பெயர்ந்தோர்கள் இல்லை என்பதை சர்வதேசத்திற்கு காட்டுவதற்காக முகாம்களில் தங்கியுள்ள வலி.வடக்கு மக்களை வளலாயில் இரண்டு பரப்புக்காணிகளுக்குள் குடியமர்த்த அரசாங்கம் முயற்சிக்கின்றது. வலி.வடக்கு மக்களை வலி.கிழக்கில் குடியமர்த்தி அவர்களிடையே மோதல்களை உருவாக்க இராணுவத்தினரும் அரசாங்கமும் முயற்சிக்கின்றது என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
SP51712BPM.jpg
 
வளலாய் மக்களை அவர்களின் காணிகளில் குடியமர்த்துமாறு கோரி நேற்று கோப்பாய் பிரதேச செயலகத்தின் முன்னால் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
அவர் மேலும் அங்கு உரையாற்றுகையில்,
 
வளலாய்ப் பிரதேசத்தில் 272 குடும்பங்களைச் சேர்ந்த 920 பேரில் மீளக்குடியேற வேண்டியுள்ளது. இவர்களில் 224 குடும்பங்களிடம் காணி உறுதிகள் இருக்கின்றன. 48 குடும்பங்கள் பின்பு இவர்களிலிருந்து வளர்ந்த குடும்பங்களாக உள்ளன. மொத்தத்தில் இந்த 272 குடும்பங்களுக்குமாக வலி.கிழக்கில் 234 ஏக்கர் மட்டுமே இருக்கின்றது. இந்த நிலத்தில் தான் இவர்கள் குடியேற கேட்கின்றார்கள். இந்த 234 ஏக்கர் காணிக்குள்தான் இவர்களின் வீடுகள்,கோயில்கள், பொது இடங்கள் என்பன உள்ளன. இந்தக் காணியில் இந்த மக்கள் குடியேறமுடியாத நிலைமை 25 வருடமாகவுள்ளது.
 
மீன்பிடிக்க முடியவில்லை. விவசாயம் செய்ய நிலம் கிடையாது. தமது காணியில் யுத்தத்தின் பின் மீளக்குடியமர்வோம் என்ற நம்பிக்கையிருந்தது. ஆனால் இன்று யுத்தம் முடிந்து 05 வருடம் கடந்துவிட்ட போதும் மீளக்குடியமர அனுமதிக்கப்படாதது மாத்திரமன்றி இனி மீளக்குடியமர அனுமதிக்கப்படவே மாட்டார்கள் என்ற நிலைமையே இன்று தோன்றியுள்ளது.
 
இந்த இக்கட்டான காலகட்டத்தில் இந்த ஆர்ப்பாடம் நடைபெறுகின்றது. ஆண்டாண்டு காலமாக பரம்பரையாக இருந்த அவர்கள் தங்களின் சொந்தக் காணிகளுக்குப் போனால் மட்டுமே தமது எதிர்காலத்தைத் திட்டமிடமுடியும். தமது வாழ்வாதாரத்தைத் திட்டமிடமுடியும். அவர்கள் எதிர்காலச் சந்ததி வளம் பெற முடியும். ஆனால் அவற்றிற்கான நிலைமை இருக்கின்றதா என்ற கேள்வியுள்ளது. இங்கே அரசாங்கமும் இராணுவமும் திட்டமிட்ட வகையில் தமிழ் மக்களிடத்தில் ஓர் பிரச்சினையை உண்டு பண்ண முயற்சிக்கின்றது. வலி.கிழக்கு வளலாய் மக்களை அவர்களின் சொந்தக் காணியிலிருந்து நிர்க்கதியாக நடுத்தெருவிற்குத் துரத்திவிட்டு பின் வளலாய் மக்களின் காணியில் வலி. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் குடும்பங்களுக்கு இந்த காணிகளில் இரண்டு பரப்பு வீதம் கொடுக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது. மீள்குடியேற்றம் என்ற போர்வையில் முகாமிலுள்ள மக்களை வெறும் இரண்டு பரப்புக் காணிக்குள் குடியமர்த்தி இங்கு வடக்கில் இடம்பெயர்ந்தோர் முகாம் என்று ஒன்று இல்லையென சர்வதேசத்திற்குப் போலியாகக் காட்டுவதற்காக வலி.கிழக்கு வளலாய் மக்களின் காணியை வலி.வடக்கு மக்களுக்குக் கொடுக்க முயற்சிக்கின்றது. வளலாய் மற்றும் வலி.வடக்கு மக்களிடையே பிரச்சினையை உருவாக்க இந்த அரசும் இராணுவத்தினரும் முயற்சி செய்கின்றார்கள். அதற்கு நாம் இடம் கொடுக்கக்கூடாது.
 
வலி.வடக்கு மக்கள் தமது சொந்த மண்ணுக்குப் போக வேண்டியவர்கள். அவர்கள் அங்கு போக அனுமதிக்கப்படவேண்டும். வளலாய் மக்கள் வளலாய்க்குப் போக அனுமதிக்கப்படவேண்டும்.
 
இன்று இவற்றை வலியுறுத்தி வளலாய் மீன்பிடிச் சங்கம், இடம்பெயர்ந்தோர் சங்கம் ஆகியவற்றின் தலைவர்கள் ஒப்பமிட்டு வலி.கிழக்கு பிரதேச செயலாளர் ஊடாக ஜனாதிபதிக்கு ஒரு மகஜரை கையளிக்கின்றனர். தமது மண்ணில் தாம் மீள்குடியேறுவோம். அந்தமண்ணில் தாம் மீளக்குடியேற முடியாதபட்சத்தில் தாம் போராடத் தள்ளப்படுவர் என்பதையும் இது மனித குலத்திற்கு எதிரான விடயம். ஆயிரம் மக்களுக்குச் செய்யும் அநீதி.
 
வளலாய் மக்களுக்கு மாத்திரமல்ல இடம் பெயர்ந்த அனைத்து மக்களும் மீளக்குடியமர்த்தப்படவேண்டும். அவ்வாறு மீளக்குடியமர்த்தப்படும்வரை இவ்வாறான போராட்டங்கள் தொடரும் அரசாங்கம் மக்களின் சொந்த காணிகளை அவர்களிடமே வழங்கவோம். இவர்களின் வாழ்வாதாரமே இதுதான் என்பதை அரசு புரிந்து கொண்டு இவர்களுக்கான மீள்குடியேற்ற அனுமதியைக் கொடுக்கவேண்டும் என்றார்.
 
இந்த ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் இடம்பெயர்ந்தோர் சங்கத் தலைவர் குணபாலசிங்கத்தினால் வலி.கிழக்கு பிரதேச செயலாளர் ஊடாக ஜனாதிபதிக்கான மகஜர் கையளிக்கப்பட்டது.
 
இவ்வார்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுரேஷ் பிரேமச்சந்திரன், சிறிதரன், வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம், வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா, வட மாகாண சபை உறுப்பினர்களான கஜதீபன், அனந்தி சசிதரன், சர்வேஸ்வரன், சுகிர்தன், சிவயோகன், சிவாஜிலிங்கம் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் பாஸ்கரா மற்றும் பிரதேச மக்கள், பிரதேச, நகர சபைத் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
virakesari

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.