Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாண மக்களது குடிநீர் பிரச்சினை:- புத்திஐீவிகள் தோற்றுவிட்டார்களா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிந்தனைக்கூடம் ஆய்வு அபிவிருத்தி நிறுவனத்தின் குழுநிலைக் கலந்துரையாடலின் பின்னரான அறிக்கை. - தொகுப்பு (ஓய்வுநிலைப் பேராசிரியர் இரா. சிவசந்திரன், பணிப்பாளர், சிந்தனைக்கூடம்)

Question%20New_CI.jpg


சிந்தனைக்கூடம் ஆய்வு அபிவிருத்தி நிறுவனத்தின்  குழுநிலைக் கலந்துரையாடலின் பின்னரான அறிக்கை.


தொகுப்பு (ஓய்வுநிலைப் பேராசிரியர் இரா. சிவசந்திரன், பணிப்பாளர், சிந்தனைக்கூடம்)


அண்மைக் காலத்தில் யாழப்பாணத்து மக்களுடைய குடிநீர்ப் பிரச்சினை பற்றிப் பல்வேறு கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இவற்றினை தொகுத்து பின்வரும் முக்கிய விடயங்களை வரிசைப்படுத்தலாம்.


    யாழ்ப்பாணத்தில் நிலத்தடி நீர் பல்வேறு காரணிகளால் குடிநீர் பயன்பாட்டிற்கு உகந்ததற்றதாகி வருகின்றது.


    யாழ்ப்பாணத்தில் நிலத்தடி நீரை மீளப்புதுப்பிப்பதற்குப் பல்பக்க அடிப்படையிலான பல நடவடிக்கைகள் பலவற்றை செயற்படுத்த வேண்டும்.


    ஒரு உடனடி உபாயமாக யாழ்ப்பாணப் பகுதியில் கிடைக்கக் கூடிய மழை நீரை உரிய முறையில் சேகரித்து  நிலத்தடி நீரை மீண்டும் சுத்தமான குடிநீராக மாற்றுவது என முன்மொழியப்பட்டுள்ளது.


    இன்னொரு மாற்று உத்தியாக இரணைமடுக் குளத்தில் இருந்து ஒரு பகுதி நீரை தென்மராட்சி ஊடாக யாழ்ப்பாணத்திற்கும் தீவுப் பகுதிக்கும் கொண்டு செல்வது என்றதிட்டச் செயற்பாடகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேற்கூறப்பட்ட விடயங்கள் தொடர்பாகப் பொதுமக்கள் அறிந்திருக்க வேண்டிய விபரங்கள் போதியளவாக இன்னும் முன்வைக்கப்படவில்லை. யாழ்ப்பாணத்து நிலத்தடி நீர் பெருமளவில் பாதிப்படைவதற்குக் கடல் நீர் உட்புகுதல் , கடல் நீர் தடுப்பு முறைகள் பராமரிக்கப்படாமல் விட்டமை, அதிகளவு விவசாய உர உபயோகம், கட்டுப்பாடற்ற முறையில்  நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்தமை, கட்டுப்பாடற்ற வகையில் கிணறுகளையும் ஆழ்கிணறுகளையும் தோண்டியமை , பாதுகாப்பற்ற மலசலகூட முறைமைகளால் கழிவுகள் நிலத்தடி நீருடன் சேர்கின்றமை, நகர்ப்புறங்களில் மலசலகூடக் கழிவுகள் அகற்றும் முறைமை முறையாக இல்லாமை போன்றவற்றினைக் கூறலாம். இக் காரணிகள் கடந்த 50 வருட காலத்தில் ஒன்று திரட்டிய வகையில் ஏற்படுத்திய தாக்கமே  இன்றைய யாழ்ப்பாணக் குடிநீர்ப் பிரச்சினையாகும். இதை விட சுன்னாகம் மின்பிறப்பாக்கி நிலையத்தில் கழிவு எண்ணைக் கசிவினால் ஏற்பட்ட பாதிப்பின் விஸ்தீரணம் இன்னும் உரிய முறையில் மதிப்பிடப்பட்டு வெளிப்படுத்தப்படவில்லை.


யாழ்ப்பாணக் குடிநீருக்கான ஒரு பாரிய திட்டம் மிகவும் அவசரமானது என்ற விடயம் தற்போதைய நிர்வாக கட்டமைப்பினால் போதியளவிற்கு முன்னிலைப் படுத்தப்படவில்லை. பொதுமக்கள் மத்தியில் ஏனோதானோ என்ற மனப்பான்மையும் இது வேறு யாருடையதோ பிரச்சினை என்ற மாதிரியான எண்ணமும் மிக உயர்வான அளவில் காணப்படுகின்றது. இதற்கு முக்கிய காரணம் தனிப்பட்ட எதிர்கால அரசியலை உள்நோக்காக வைத்து அறிவு பூர்வமான தகவல்களை வேண்டுமென்றே மறைத்து வேண்டாத உணர்ச்சிகளைத் தட்டி எழுப்பி , அதன் வழி கிளிநொச்சி – யாழ்ப்பாணம் குடிநீர்த்திட்டத்தினை முடக்கிவிட நினைக்கும் அரசியல்வாதிகளும் அறிவுபூர்வமான தகவல்கள் இருந்தும் அவற்றினை ஆரோக்கியமான வகையில் பொதுமக்கள் மத்தியில் கொண்டுசெல்வது மக்கள் கருத்துருவாக்கத்திற்கு உதவ முன்வாரத நேர்மையற்ற புத்திஜீவிகளுமே என்பது வெளிபடை காரணமாக இருக்கின்றனர். எல்லா அழிவுகளுக்கும் பின்னர் வழக்கம் போல எமக்கு இது இப்படி என்று தெரியாதே என பொதுமக்கள் அங்கலாய்ப்பர் என்பது திண்ணம்.


பொதுமக்கள் முன் மறைக்கப்பட்டுள்ள சில முக்கியமான விடயங்களை இங்கு குறிப்பிடுகின்றோம். கட்டுப்பாடற்ற விவசாய முறையினால் அதாவது ஆயிரக்கணக்கான நீர் இறைக்கும் இயந்திரங்கள் கொண்டு தொடர்ந்து நீரை ஐம்பது வருட காலங்களுக்கு மேலாக வெளியே இறைத்தமையால் ஆயிரக்கணக்கான வருடங்களாக இயற்கையினால் உருவாக்கப்பட்டடிருந்த நன்னீர் வில்லைகளில்  இருந்த நீரின் தரம் உவர் தன்மையடைய ஆரம்பித்ததோடு நீரின் அளவும் குறையத் தொடங்கியது.

 

கட்டுப்பாடற்ற உர இரசாயனநாசினிகளின் உபயோகத்தின் காரணமாக நைத்திரேற்றுக்களின் அளவு பெருமளவு நிலத்தடி  நீருடன்  கலக்க நேர்ந்ததால் குடாநாட்டில் இன்றுவரை உள்ள நிலத்தடி நீர் நுகர்வுக்குரியதற்றதாக மாறியது. இதன் அளவு பத்து ஆண்டுகளுக்கு முன்னரேயே உலக சுகாதார நிறுவனத்தின் நியமங்களைவிட குறையத்தொடங்கி இருந்தது. அதே போல தரக்கட்டுப்பாடில்லாத மலசல கூடங்களின் பெருக்கம் காரணமாக நிலத்தடிநீருடன் மலக்கழிவுக்கிருமிகள் கலக்க ஆரம்பித்தன. இதன் வேகத்தைக் குறைப்பதற்கு மலசலக் கழிவுகளை அகற்றுவதற்கான வடிகால் அமைப்புத்திட்டம் ஒன்றுகூட குடாநாட்டில் இல்லை. இவற்றின் தாக்கமாக யாழ்குடாநாடு இலங்கையின் புற்றுநோய் உற்பத்தியில் அதிக வளர்ச்சி வீதத்தைக் கொண்டதாகவும் சிறுநீரகப் பாதிப்பை அதிகமாகக் கொண்ட பிரதேசமாகவும் நெருப்புக்காய்ச்சல் நோயாளிகளை உருவாக்குவதில் முதலிடம் வகிக்கும் மாவட்டமாகவும் மாறியுள்ளது.

 

இவை பற்றிய தகவல்கள் அறிவு பூர்வமாக புத்திஜீவிகளால் முன்வைக்கப் படாமையால் யாழ் குடாநாட்டில் கிடைக்கும் குடிநீர் உண்மையில் மாசடையவில்லை இது வெறும் புரளி என்ற கருத்தைக் கூட சிலர் துணிந்து முன்வைக்கின்றார்கள். விவசாயத் துறைக்கு ஈடாக மக்களது பொருளாதார, வாழ்வாதார தேவைகளுக்கு வழிவகைகளை முன்வைக்க வேண்டும் என்பதும் விவசாயத்தின் பேண்தகு அளவு  மட்டத்தினை நிர்ணயித்துக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் என்பதும் இங்கு பேசப்படவேயில்லை. நிலத்தடி நீர் முகாமை பற்றிப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் போதாது.

 

நீர் இறைக்கும் இயந்திரங்களையும், நீர் வெளியேறும் அளவினையும் கட்டுப்படுத்துவதற்கு உபவிதிகளோ, முகாமையாளர்களோ , முறைமைகளோ இல்லை. நீர் இறைக்கும் இயந்திரங்களை விவசாய தேவைக்கு எவ்வளவு உபயோகிப்பது, நிலக்கீழ் நீரை உறிஞ்சுவது தடுக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் ஏதாவது குடாநாட்டில் உண்டா? என்பனபோன்ற ஆய்வுப்பெறுபேறுகளும் வெளியிடப்படவில்லை என எந்த ஒரு பிரதேசமும் வரையறுக்கப்படவில்லை.


யாழ்ப்பாணத் தீபகற்பத்தினுடைய நிலக்கீழ் நீர் அமைப்பு தோன்றி வளர்வதற்கு ஆயிரக்கணக்கான வருடங்கள் எடுத்தன என்பதும் இது  இயற்கைச் சக்திகளினால் உருவாகிய ஒரு சமநிலையில் தங்கியிருந்தது என்பதும் கடந்த நூற்றாண்டில் குறுகிய ஒரு ஐம்பது வருட , அறுபது வருட காலத்தினுள்ளேயே இதற்குப் பாதிப்பு ஏற்பட்டது என்பதும் யதார்த்தமாகும்.

 

நுணுக்கமான இந்த முறையினை இயற்கையாகக் கிடைக்கும் மழையினைக் கொண்டு மீளப்புதுப்பிப்பதற்கு மீண்டும் எத்தனை வருட காலங்கள் தேவைப்படும். நிலக்கீழ் அமைப்புகள் முழுவதும் மழைநீரினால் மீண்டும் கழுவப்பட்டாலேயே இது சாத்தியமாகும். வேறு குறுக்கு வழிகள் இதற்கு இல்லை. இதற்கு ஆகக் குறைந்தது மிகக் கடுமையான கட்டுப்பாட்டு முறைமைகளைக் கொண்டு வந்தாலும் கூட ஐம்பது தொடக்கம் நூறு வருட காலங்களாவது  தேவைப்படும். அது வரை நீரை அடிப்படையாகக் கொண்டு ஏற்படுகின்ற தாக்கங்கள் குறைந்து செல்வதற்கான வாய்ப்புகள் ஏதும் இல்லை.

 

யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் நிலமேற்பரப்பு நீரினைக் கொண்டு வரும் திட்டங்களின் மூலமே குறுகிய காலத்தில் தீர்த்துக் கொள்ள முடியும். இந்த யதார்த்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டே ஆக வேண்டும். இதன் காரணமாகவே பல்வேறு முன் யோசனைகளின் பின்னர் வடமாகாணத்தினுள் மழை மூலம் கிடைக்கின்ற நீரினை புத்தி பூர்வமாகக் குறுகிய காலத்தில் முகாமை செய்து யாழ்ப்பாணக் குடிநீர்ப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.

 

அரசியல் காரணங்களுக்காக வெளிப்படையாகக் கூற முடியாத பிரச்சினைகளும் இதன் மூலம் தவிர்க்கக்கூடியதாக இருக்கும். இரணைமடுவில் இருந்து நீர் எடுக்க முடியாது என்ற எதிர்ப்புக் கோவத்தைக்  கிளப்பியதன் மூலம் அரசாங்கம் மொறகஹகந்த திட்டத்தினை அங்கீகரித்து அதன் மூலம் மகாவலி நீரினைக் கொண்டு வருவதாகத் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. இதன் தார்ப்பரியமும் தாக்கங்களும் மிக இலகுவாக ஊகிக்கக் கூடியனவாகும்.

சர்வதேச நிதி வழங்கல் நிறுவனங்களின் நெருக்கடிகள், மாறிவரும் கொள்கைகள், இலங்கை தன்னை தான் ஒரு நடுத்தர வருமானத்தைப் பெறும் நாடு என பிரகடனம் செய்தமையால் சலுகை அடிப்படையிலான பெறுகைகளுக்குத் தகைமை இழந்தமை, பல்பக்க நிதிநிறுவனங்களின் முன்னுரிமைகள் போன்ற பல்வேறு நெழிவுசுழிவுகள10டாகக் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளின் பிரச்சினைகளுக்குப் பெருமளவில் தீர்வு வழங்குகின்ற அதே நேரம் நீர்ப்பாசன முறைமைகளை அபிவிருத்தி செய்தல், கிளிநொச்சி பூநகரி தீவுப்பகுதி  உட்பட நீண்ட பிரதேசத்திற்குக் குடிநீர் வழங்குதல் மற்றும் யாழ்நகருக்கான திண்ம கழிவகற்றும் வடிகாலமைப்பு முறைமையொன்றை நிறுவுதல் போன்ற பல்வேறு முக்கியமான அம்சங்களையும் ஒன்று திரட்டி மிகப் பெரியதொரு முதலீட்டுத் திட்டத்தினை ஆசிய அபிவிருத்தி வங்கி நிபுணர்கள் வடிவமைத்துத் தந்தார்கள்.

மக்கள் மிகவும் புத்திபூர்வமாக வகுக்கப்பட்ட அத் திட்டத்தினை வெறுமனே உணர்ச்சிகளின் அடிப்படையில் நிராகரித்தால் அது யாழ்ப்பாணத்துப் புத்திஜீவிகளின் தோல்வியாகவே கருதப்படவேண்டிவரும். எனவே தயவு செய்து இத்திட்டத்தினை மாகாணசபை அவசரப்பட்டு நிராகரித்திருந்த போதும் பல்வேறு மட்டங்களுடனும் தொடர்பு கொண்டு உடனடியாக அதனை அமுல்நடாத்துவதற்கு முயற்சிகளைச் செய்யுமாறு எதிர்கால சந்ததியின் சார்பில் கேட்டுக்கொள்ளுகின்றோம்.

 

யாழ்ப்பாணச் சமூகம் பேண்தகு சமூகமாக நீண்ட பாரம்பரிய நாகரிகத்தைத் தொடர்ந்தும் பேணும் சமூகமாக நிலைபெற  நாம் வழிசமைத்துக் கொடுத்தல் வேண்டும்.  மக்களும், சமூக நிறுவன அமைப்புகளும் தொடர்ந்து குரல்கொடுத்து எமது எதிர்காலத்தைக் காப்போமாக.
  

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/108580/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.