Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச நிபுணர்கள் கொழும்பு வந்ததும், போர்க்குற்றங்கள் குறித்த விசாரணை தொடங்கும்! - ஜனாதிபதி ஆணைக்குழு தலைவர் கூறுகிறார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
சர்வதேச நிபுணர்கள் கொழும்பு வந்ததும், போர்க்குற்றங்கள் குறித்த விசாரணை தொடங்கும்! - ஜனாதிபதி ஆணைக்குழு தலைவர் கூறுகிறார் 
[Monday 2014-07-21 07:00]
Maxwell-Parakrama-Paranagama-200-news.jp

2009-ம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்த உள்நாட்டு யுத்தத்தில், இராணுவத்தாலும் விடுதலைப் புலிகளாலும் சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டுள்ளதா என்பது குறித்து தமது ஆணைக்குழு விசாரிக்கவுள்ளதாக காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்தார். தமது ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்கவுள்ள சர்வதேச சட்டநிபுணர்களான சேர். டெஸ்மண்ட் டி சில்வா, பேராசிரியர் ஜெஃப்ரி நைஸ் மற்றும் பேராசிரியர் டேவிட் கிரேண் ஆகியோர் ஓரிரு வாரங்களில் இலங்கை வந்தவுடன் விசாரணைக்கான பணிகள் தொடங்கும் என்றும் அவர் கூறினார்.

  

'உயிரிழப்புகளின் போது இராணுவத்தினர் தங்களின் பணிக்குரிய கடமையை மீறி செயற்பட்டுள்ளார்களா என்றும், விடுதலைப்புலிகளும் இந்த யுத்தத்தின்போது சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு மீறிச் செயற்பட்டனரா என்றும் எங்கள் ஆணைக்குழுவின் விசாரணையில் ஆராயப்படும். எங்கள் ஆணைக்குழு கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மட்டக்களப்பில் இரண்டு தடவைகள், இப்படி மக்கள் மத்தியில் விசாரணை அமர்வுகளை நடத்தியிருந்தது. மக்கள் கொடுத்திருந்த எழுத்துமூல முறைப்பாடுகள் பற்றித்தான் நாங்கள் விசாரித்தோம். அந்த விசாரணைகளின்போது நாங்கள் வெளிப்படையாக செயற்பட்டோம்.

எமது விசாரணை நடவடிக்கைகளில் பொலிஸ் அதிகாரிகள் தொடர்புபடுத்தப்படவில்லை. நாங்கள் அமர்வுகளை நடத்திய தினங்களில் அரசாங்கத்தின் வேறு தரப்பினர் வழமையான மரணச்சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சித் திட்டங்களை நடத்தியிருந்தனர். அதனால் மக்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் எங்களின் ஆணைக்குழு நியமிக்கப்பட முன்னைய காலத்திலிருந்தே சாதாரண சட்டங்களின்படி இயங்கிவந்தவர்கள். எங்களின் ஆணைக்குழுவுக்கு முன்னர் மக்கள் அவர்களிடம் தான் முறைப்பாடுகளை செய்திருந்தனர். அவர்களும் காணாமல்போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.முல்லைத்தீவில் நாங்கள் அமர்வை நடத்தியிருந்த அதே தினத்திலேயே பயங்கரவாத புலனாய்வு பிரிவினரும் காணாமல்போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தியிருந்தனர். எனவே பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் எழுதி, இனிமேல் அப்படி நாங்கள் விசாரணை நடத்தும் நாட்களில் அவர்களின் விசாரணைகளை நிறுத்திவைக்குமாறு கேட்டுக்கொண்டிருக்கின்றோம்.

ஏற்கனவே தமது ஆணைக்குழு நடத்திவந்துள்ள விசாரணையின்படி, காணாமல்போனவர்கள் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் இருந்தால், அவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தி, அந்த முறைப்பாடுகள் தொடர்பில் சாட்சியங்கள் இருந்தால், சட்டமா அதிபர் அலுவலகத்தின் ஊடாக வழக்குத் தொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்ஸ்வெல் பரணகம தமிழோசையிடம் கூறினார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=113497&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.