Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சந்தைக்கு அடிக்கல் நாட்டவிடாமல் முட்டுக்கட்டை போடும் ஈபிடிபி இணக்க அரசியல் பற்றிப் பேசுகிறது! - சரவணபவன் எம்.பி சாட்டை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
சந்தைக்கு அடிக்கல் நாட்டவிடாமல் முட்டுக்கட்டை போடும் ஈபிடிபி இணக்க அரசியல் பற்றிப் பேசுகிறது! - சரவணபவன் எம்.பி சாட்டை photo.png 
[Monday 2014-07-21 10:00]
saravanapavan-mp-speech-200-news.jpg

அபிவிருத்தி நடவடிக்கையில் ஈ.பி.டி.பி கட்சியினர் தடைகளை போட்டு வருவதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். வலி.மேற்குப் பகுதிக்கான புதிய சந்தை கட்டட அடிக்கல் நாட்டு வைபவத்தினை மேற்கொள்ளவிடாது இணக்க அரசியல் பேசி வரும் ஈ.பி.டி.பி கட்சியினர் பல முட்டுக்கட்டைகளை இட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். அராலி திருமகள் விளையாட்டுக்கழக 34-வது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்டப போட்டியின் இறுதிப்போட்டி நேற்று மாலை 3.30 மணிக்கு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

  

கடந்த மாதம் 22 திகதி ஆரம்பமான 32 அணிகளுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில், தெல்லிப்பளை நாமகள் விளையாட்டுக்கழகமும் மாதகல் செந்தோமஸ் யுத் கழகமும் மோதிக்கொண்டன. இதில் போட்டி ஆரம்பம் முதல் ஆதிக்கத்தை செலுத்தி வந்த தெல்லிப்பளை நாமகள் விளையாட்டுக்கழகம் 7 கோள்களையும் மாதகல் செந்தோமஸ் அணி 2 கோள்களையும் பெற்றன. போட்டியில் வெற்றி வாகை சூடிய தெல்லிப்பளை நாமகள் அணிக்கு, பிரதம விருந்தினராக கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் வெற்றிக்கேடயத்தை வழங்கி கௌரவித்தார்.

மேலும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வலி.மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி நா.ஜங்கரனும் வீரர்களுக்கான கேடயங்களை வழங்கி வைத்தார். இந்த போட்டியில் தொடர் ஆட்டநாயகனாக கனிஸ்ரன், சிறந்த விளையாட்டு வீரனாக யசீலன், சிறந்த கோள் காப்பாளராக சரன்ராஜ் ஆகிய தெல்லிப்பளை நாமகள் விளையாட்டுக்கழக வீரர்களே தெரிவாகியுள்ளனர்.

 

araly-sports-event-210714-seithy%20(1).j

 

 

araly-sports-event-210714-seithy%20(2).j

 

 

araly-sports-event-210714-seithy%20(3).j

 

 

araly-sports-event-210714-seithy%20(4).j

 

http://www.seithy.com/breifNews.php?newsID=113506&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.