Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவின் பாதுகாப்பு நலனுக்கு விரோதமாக செயற்படமாட்டோம் – சிறிலங்கா நாடாளுமன்றில் பீரிஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

G.L.peries-2014.jpg

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு நலனுக்கு ஊறு விளைவிக்கும் காரியம் எதையும் சிறிலங்கா செய்யாது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பிரிஸ் தெரிவித்துள்ளார். 

சிறிலங்கா நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

திருகோணமலையில், 40 மில்லியன் டொலர் செலவில், விமானப் பராமரிப்பு நிலையத்தை அமைக்க சீனாவின் வான்பொறியியல் ஏற்றுமதி இறக்குமதிக் கூட்டுத் தாபனத்துக்கு, அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், இது இந்தியாவின் தேசிய பாதுகாப்பு நலன்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்ட ரணில் விக்கிரமசிங்க, இதுபற்றி சிறிலங்கா அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

இதற்குப் பதிலளித்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், 

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு நலன்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எந்தக் கட்டுமானத்துக்கும், சிறிலங்கா அனுமதி வழங்காது. 

விமானப் பராமரிப்பு நிலையம் ஒன்றை அமைப்பதற்கு மட்டுமே, சிறிலங்கா அரசாங்கம் சீனாவுடன் இணங்கியுள்ளது. 

ஆனால், இந்த திட்டத்துக்கான இடம் குறித்து இன்னமும் எந்த இணக்கப்பாடும் ஏற்படவில்லை. 

விமானங்களைப் பழுதுபார்த்தல், பராமரிப்பு மற்றும் சேவைகள் செலவுமிக்கவை. 

அதற்காக நாம் பெருமளவு பணத்தை வெளிநாடுகளுக்கு கொடுக்கிறோம். 

இந்த திட்டத்தினால், பெருமளவு நிதியை சேமிக்கலாம், உள்ளூர் பொறியாளர்கள் பயிற்சி பெறும் வாய்ப்பும் கிடைக்கும். 

விமானப் பராமரிப்புத் தளத்தை அமைக்கும் திட்டம், முன்னெடுக்கப்படுகின்ற போதும், அதனைத் திருகோணமலையில் அமைப்பதற்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. 

விமானங்களைப் பராமரிப்பதற்காக அந்நியச் செலவாணி வெளிநாட்டுக்குச் செல்வதைத் தடுப்பதற்கு, இத்தகைய விமானப் பராமரிப்பு நிலைய வசதி எந்தவொரு நாட்டுக்கும் அவசியமானது. 

விமானப் பராமரிப்பு நிலையம் ஒன்றை அமைப்பது மற்றும் அதற்குரிய வாய்ப்புகள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் ஆலோசித்து வருகிறது. 

அதற்கெனப் பரிந்துரைக்கப்பட்டுள்ள இடங்களில் ஒன்று தான் திருகோணமலை. 

ஜெட் விமானங்களைப் பராமரிப்புச் சேவை செய்வதற்கு ஏற்ற இடங்களை சிறிலங்கா அரசாங்கம் ஆய்வு செய்தது. 

ஜெட் விமானங்களை கட்டுநாயக்க, மத்தால, திருகோணமலை ஆகிய தளங்களிலேயே தரையிறக்க முடியும். 

இவற்றில் பொருத்தமான இடத்தை சிறிலங்கா அரசாங்கமே தெரிவு செய்யும். 

இது இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் பிரச்சினைக்குரிய விவகாரமாக எழவில்லை. 

இந்த திட்டம் பற்றி விபரங்களை, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் என்னிடம் கேட்டார். 

சீனாவுடனான இந்த உடன்பாட்டுக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் எதிர்ப்புத் தெரிவித்ததாக கூறப்படுவது அடிப்படையற்றது. 

அவர் இது குறித்து சாதாரணமாகத் தான் கேட்டார். அதற்கு அவர் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. 

இந்தியாவில் மிகப்பெரியளவிலான முதலீடுகளை சீனா செய்துள்ளது. 

ஒன்றுமில்லாததை வைத்து எதிர்க்கட்சி பிரச்சினையை உருவாக்க முனைகிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

“எம்மிடம் 44 சீன விமானங்கள் தான் உள்ளன. அவையும் மிகவும் பழைய விமானங்கள். சீனாகூட அவற்றை இனி உற்பத்தி செய்யப் போவதில்லை. 

உள்ளூர் பொறியாளர்களைக் கொண்டு அவற்றைப் பராமரித்தால் என்ன? 

அவற்றைப் பராமரிப்பதற்கு ஆண்டு தோறும் ஒரு மில்லியன் ரூபாவே செலவாகிறது. 

இதற்காக ஏன் விமானப் பராமரிப்பு நிலையத்தை அமைப்பதற்காக 5 பில்லியன் ரூபா கடன் வாங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியிருந்தார். 

அதேவேளை, சிறிலங்காவில் கட்டுநாயக்க, திருகோணமலை, மத்தால ஆகிய இடங்களில் தான், ஜெட் விமானங்களைத் தரையிறக்க முடியும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் கூறிய போது, இடைமறித்த ரணில் விக்கிரமசிங்க, 

“அதற்குச் சாத்தியமான நான்கு இடங்கள் உள்ளன, ஹிங்குராக்கொடவை மறந்து விட்டீர்கள்” என்று நினைவுபடுத்தியிருந்தார்.

 

http://www.puthinappalakai.com/view.php?20140723110936

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.