Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாட்டில் தமிழ், சிங்கள மக்களுக்கு ஒரு சட்டமும் முஸ்லிம்களுக்கு தனிச்சட்டமும் அமுல் : இதுவே முஸ்லிம் தீவிரவாதம் பரப்பப்படுவதற்கு காரணம்

Featured Replies

தமிழ், - சிங்­கள மக்­க­ளுக்கு ஒரு சட்­டமும் முஸ்­லிம்­க­ளுக்கு பிறி­தொரு சட்­டமும் ஒரே நாட்டில் செயற்­ப­டு­வதன் கார­ணத்­தி­னா­லேயே முஸ்லிம் தீவி­ர­வாதம் பரப்­பப்­ப­டு­கின்­றது. தேர்­தலில் வாக்­க­ளிப்­பின்­போது முஸ்­லிம்கள் நிஜாப் அணிய தடை விதிக்­கப்­பட்­டமை எமக்கு கிடைத்த வெற்­றி­யாகும் என்று ஜாதிக ஹெல­உ­று­மய தெரி­வித்தது.
 
JHU_Logo_1.jpg
 
ஜாதிக ஹெல உறு­ம­ய­வினால் நேற்று கொழும்பில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அக்­கட்­சியின் தேசிய செயற்­குழு உறுப்­பி­னரும் மேல் மாகாண சபை உறுப்­பி­ன­ரு­மான நிஷாந்த ஸ்ரீ வர்­ண­சிங்க மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்;
 
இந்த நாட்டில் முஸ்லிம் பெண்­க­ளுக்கு ஒரு சட்­டமும் தமிழ் சிங்­கள பெண் பிள்­ளை­க­ளுக்கு வேறு சட்­டமும் செயற்­ப­டுத்த முடி­யாது. ஆனால் இன்று பாட­சா­லை­க­ளிலும் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளிலும் இவ்­வாறு பிரி­வி­னையே இடம்­பெ­று­கின்­றது. முஸ்லிம் மாண­விகள் தலையை மூடிய வண்ணம் ஹபா­யாக்­களை அணி­வதால் தமிழ்இ சிங்­கள மாண­வர்­க­ளுக்கே பாதிப்பு ஏற்­ப­டு­கின்­றது. கிழக்கு மாகா­ணத்தில் பாட­சா­லை­களில் முஸ்லிம் பெண்கள் ஹபா­யாக்­க­ளுக்குள் விடைத்­தாள்­க­ளையும் ஹிஜாப்­பினுள் தொலை­பே­சி­க­ளையும் வைத்தும் பரீட்சை செய்து சித்­தி­ய­டை­கின்­றனர். இவற்றை கண்­டித்து நட­வ­டிக்கை எடுக்க எவரும் இல்லை.
 
பாட­சா­லை­களில் முஸ்­லிம்­களே பிரி­வி­னை­யினை தூண்­டு­கின்­றனர்
 
பாட­சா­லை­களில் தனித்­துவம் என்ற பெயரில் முஸ்­லிம்கள் பிரி­வி­னை­யினை தூண்டும் வகையில் செயற்­ப­டு­கின்­றனர். பாட­சா­லை­களில் இருந்தே இன்று முஸ்லிம் பிரி­வி­னை­வாதம் தூண்­டப்­ப­டு­கின்­றது. ஹபா­யாக்­க­ளையும் ஹிஜாப்­பி­னையும் அணிந்து செயற்­ப­டு­கின்­றமை தொடர்பில் கடந்த காலங்­களில் பிரச்­சி­னைகள் தோற்­று­விக்­கப்­பட்­டன. இந்த நாட்டின் பாட­சா­லை­களில் அனை­வ­ருக்கும் ஒரு சட்­டம்தான்.
 
வாக்கு நிலை­யத்தில் ஹிஜாப்­பிற்கு தடை
 
அதேபோல் இடம்­பெ­ற­வி­ருக்கும் ஊவா மாகாண சபை தேர்­தலில் முஸ்­லிம்கள் தமது முகத்தை மூடும் வகையில் அணியும் ஹிஜாப் மற்றும் புர்கா உடை­க­ளுக்கு தடை விதிக்­கப்­பட வேண்டும் என நாம் முன்­வைத்த கோரிக்­கையில் வெற்றி பெற்­றுள்ளோம். வாக்கு நிலை­யங்­களில் முஸ்­லிம்கள் கள்ள வாக்­கு­களை போடு­வதும் சட்­ட­வி­ரோத செயல்­களை செய்­வ­தையும் இதன்­மூலம் நாம் தடுத்­துள்ளோம் என்றே கூற வேண்டும். இது எமக்கு மட்­டு­மல்ல முழு சிங்­க­ள­வர்­க­ளுக்கும் கிடைத்­துள்ள வெற்­றி­யாகும். இன்று வாக்கு நிலை­யங்­களில் மட்டும் தடை செய்­யப்­பட்­டதை எதிர்­வரும் காலங்­களில் அனைத்து செயற்­பா­டு­க­ளிலும் மேற்கொள்வோம். முஸ்லிம் தீவி­ர­வாத செயற்­பா­டு­களில் இருந்து இந்த நாட்டை காப்­பாற்ற நாம் போரா­டுவோம்.
 
காஸா தாக்­கு­தலை கண்­டிக்­கின்றோம்
 
மேலும், இன்று சர்­வ­தேச அளவில் முஸ்லிம் தீவி­ர­வாதம் செயற்­பட்­டுக்­கொண்­டு­தா­னி­ருக்­கின்­றது. இதனால் முஸ்­லிம்­களே இன்று அழி­கின்­றனர். இன்று காஸாவில் ஆயி­
ரத்­திற்கும் அதி­க­மான பொது மக்கள் கொல்­லப்­பட்­டுள்­ளனர். இவர்கள் மீதான தாக்­கு­த­லுக்கு நாம் கடு­மை­யான கண்­ட­னத்தை தெரி­விக்­கின்றோம். எனினும் இன்று பாலஸ்
தீன் தாக்­கு­தலை கண்­டித்து இலங்­கையில் கிழக்கில் உள்ள முஸ்­லிம்கள் ஆயி­ரக்­க­ணக்கில் வீதியில் இறங்கி போரா­டு­கின்­றனர். முஸ்­லிம்கள் மீதான தாக்­குதல் என கண்­டிக்­கின்­றனர். ஆனால் இதுவே ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்­பினால் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் தாக்­குதல் போஹோ கராம் அமைப்­பினர் பெண்­களை நடத்­து­கின்­ற­மை­யினை கண்­டித்து ஏன் இவர்கள் வாய் திறக்­க­வில்லை.
 
முஸ்லிம் அமைச்­சர்கள் எங்கே?
 
நாட்டில் முஸ்­லிம்­க­ளுக்­களு எதி­ராக பௌத்த தீவி­ர­வாதம் பர­வு­வ­தாக சர்­வ­தேச அளவில் பேசு­கின்­றனர். இங்­குள்ள முஸ்லிம் அமைச்­சர்கள் சர்­வ­தேச மட்­டத்தில் அறிக்கை வெளி­யி­டு­கின்­றனர். ஆனால் முஸ்லிம் தீவி­ர­வா­திகள் செய்யும் எதையும் ஏன் கண்­டு­கொள்­ள­வில்லை. பெண்­க­ளுக்கு எதி­ராக கலப்பு திரு­ம­ணத்­திற்கு எதி­ராக முஸ்­லிம்கள் போரா­டு­கின்­றனர். ஆனால் முஸ்லிம் தீவி­ர­வா­திகள் மதம் என்ற பெயரில் செய்யும் கொடு­மை­களை ஆத­ரிக்­கின்­றனர்.
 
இலங்கை முஸ்­லிம்­களும் தீவி­ர­வா­தி­களா?
 
மதம் என்ற போர்­வையில் இடம்­பெறும் அடக்கு முறை­க­ளையும் கொலை­க­ளையும் கொடு­மை­யான தண்­ட­னை­க­ளையும் ஆத­ரிக்கும் இலங்கை முஸ்­லிம்கள் இலங்­கை­யிலும் அவற்றை பரப்பி நாட்டில் முஸ்லிம் இராச்­சியம் ஒன்­றினை ஏற்­ப­டுத்த முயற்­சிக்­கின்­றனர். இன்று ஐ.எஸ். அமைப்பின் வரை­ப­டத்தில் இலங்­கை­யையும் உள்­ள­டக்கி ஆள்­வ­தாக கூறப்­ப­டு­கின்­றது. ஆனால் இலங்கை முஸ்­லிம்கள் ஒரு­வ­ரேனும் இதற்கு எதி­ராக வாய் திறக்­க­வில்லை. போஹோ கராம் தீவி­ர­வா­திகள் 200 கிறிஸ்தவ பெண்­களை கடத்தி மதம் மாற்­றி­யுள்­ளனர். இதை ஒரு­வ­ரேனும் கண்­டிக்­க­வில்லை. ஆப்­கானில் முஸ்­லிம்கள் வேற்று மதத்­த­வரை விரும்­பி­ய­மைக்­காக உயிர்களை பறித்து விடுகின்றனர்.
 
இது எவருக்குமே தவறாகத் தெரியவில்லை. ஆனால் அளுத்கமயில்இ பேருவளையில் ஏற்பட்ட சிறிய பிரச்சினையினை குற்றம் கண்டுபிடித்து இனக்கலவரமாக மாற்றி விட்டனர். சர்வதேச அளவில் பரப்பி பௌத்த தீவிரவாதம் என்ற மாயையை உருவாக்கி விட்டனர். இலங்கையில் இன்று பல முஸ்லிம் தீவிரவாதிகள் உள்ளனர். அவர்களை இனம் காண வேண்டிய பொறுப்பு பாதுகாப்பு பிரிவினருக்கே உள்ளது. அவர்கள் அலட்சியமாக இருப்பது நாட்டிற்கே பாதிப்பு.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.