Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் வாழ்வுக்கு விடிவை யார் தருவார்? செட்டிகுளம் கன்னாட்டி கிராம மக்களின் கண்ணீர் கதை!

Featured Replies

chddykulam%2078923.jpg

 

வவுனியா, மன்னார் வீதியில் உள்ள செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராமே கன்னாட்டி கணேசபுரம். இங்குள்ள மக்கள் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து, மீண்டும் மீள்குடியேறியுள்ளனர். இந்தப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் இந்தியா மற்றும் வேறு பகுதிகளில் நெருக்கடிகளுடன் வாழ்ந்துவந்தனர். யுத்தம் முடிவடைந்த பின் 2010 ஆம் ஆண்டு தமது சொந்தக் கிராமத்தில் மீள்குடியேறி அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் சொல்லும் துன்பக்கதைகளையே அந்தக் கிராமத்தின் காட்சிகளும் வெளிப்படுத்துகின்றன. மீளக்குடியமர்ந்திருக்கும் எஸ்.சந்திரகுமாரி தனது குடும்ப நிலைமையை இப்படி விவரிக்கிறார்.
 
chddykulam%2078924.jpg
 
 
"எனக்கு நாலு பிள்ளைகள். சண்டையால இடம்பெயர்ந்து போன நாங்கள் இங்க வந்து மீளக் குடியேறி நாலு வருசம் ஆகிட்டு. குடியேறின கையோட நிறுவனம் ஒன்று தரப்பால் தந்தது. அதில கொட்டில் போட்டு இருந்தம். இன்று வரை அந்த தரப்பால் கொட்டிலுக்க தான் எங்கட வாழ்க்கை. "மீள்குடியேறிய வேறு கிராமங்களைச் சேர்ந்தவங்க நிரந்தர வீடு கேட்டு சண்டை போடுறாங்கள். ஆனா நாங்கள் தற்காலிக வீடு என்றாலும் தாருங்கள் எண்டு சண்டை போட வேண்டி இருக்கு" - என்று குறிப்பிடும் சந்திரகுமாரி கண்ணீர்மல்க தனது வறுமையை காட்சிப்படுத்தினார். தற்காலிக வீடோ, வீட்டுத் திட்டமோ இதுவரை இவர்களுக்கு வழங்கவில்லை. வவுனியா மாவட்டத்திற்கு மேலும் 2000 வீடுகள் வழங்கப்படும் என்று வவுனியா பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அதிலாவது இந்த கிராமமும் கவனிக்கப்படுமா என்பது கேள்வியே!
 
செல்வகுமாரும் இந்த கிராமத்தில குடியிருக்கிறார். அவரும் தரப்பாள் கொட்டகைக்கு சொந்தக்காரனே. அவரது கதை இப்படி தொடர்கிறது. "இந்த கிராமத்தில நாம மீள்குடியேறிய காலம் முதல் அகதி முகாம் வாழ்கைதான் வாழுறம். எங்கட வீடுகள் எல்லாம் காட்டுப் பகுதியுடன் சேர்ந்துதான் இருக்கு. "அடிக்கடி யானைகள் வரும். எங்கட பயிர்களை அழிக்கும். இருக்க வீடில்ல. செய்யிற தொழிலையும் யானைகள் அரைவாசியோட பறிச்சிட்டுபோயிடுதுகள்... யானையோடு போரட்டம் நடத்தித்தான் வாழ்க்கைநடத்துறம்" - என்கிறார். ஒரு காணிக்குள் தரப்பாள் கொட்டில். கிணறு மட்டும் கட்டப்பட்டு இருந்தது. கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த எஸ்.கறுப்பாயி எம்மை கண்டதும் இப்படி கூறுகிறார். "கிணறு கட்டியிருக்கிறாங்க வீட்டை ஏன் கட்டேல என்றுதானே யோசிக்கிறீங்க. இது எங்கட பழைய கிணறு. வீடுதான் இல்லை. அதை கட்டியும் தாறாங்க இல்லை. கூலி வேலையை நம்பி அன்றாட வைத்துப்பிழைப்பை பாத்துக்கொள்ளுறம். "மழை வந்தால் இந்த மண் றோட்டில தண்ணீர் நிறைஞ்சிடும். பிறகு மெயின் றோட்டுக்கு போகவே பெரும்பாடு தான். மழைகாலத்தில வீட்டுக்கையும் தண்ணி, றோட்டிலையும் தண்ணி. போர் முடிந்து மக்கள் நிம்மதியா இருக்கிறாங்க எண்டு சொல்லுறாங்க. இந்க நாங்க படுற பாடு யாருக்கு தெரியப்போகுது?" என்ற பெரிய கேள்வியுடன் நிறுத்தினார் ராமாயி. "நாங்கள் தான் படிக்கல. எங்கட பிள்ளையளும் அவ்வளவு படிக்கல. பேரப்பிள்ளையள படிப்பிப்பம் எண்டாலும் அது கைகூடாதுபோல இருக்கு" என்று ஆதற்கப்படுகிறார் பழனியாண்டி.
 
இந்த கிராமத்தில வயதானவரா இருந்த பழனியாண்டி தன்னுடைய பேரப்பிள்ளைகள் கல்வி கற்கவேண்டும் என்று எண்ணுகிறார். ஆனால் அதற்கான கட்டுமானங்கள் கிராமத்தில் இல்லை. பழனியாண்டியின் ஆசை "குப்பி விளக்கை கொழுத்திவைச்சா அடிக்கிற காத்தில அணைஞ்சிடும். பிள்ளையள் எப்பிடி படிக்கிறது, யானை வந்தா விடியவிடிய நித்திரை முளிப்பு. எப்பிடி பிள்ளையள் படிக்கிறது?" கேள்விகள் தான் விரிகிறது பழனியாண்டியின் கதையில். விடை??? அபிவிருத்தி பற்றி பேசுபவர்களின் வருகைக்காகவும், அடிப்படை வசதிகளுக்காகவும் காத்திருக்கின்றனர் இந்த மக்கள். அவர்களையும் கவனிக்கவேண்டியது கடமையல்லலா?
 
chddykulam%2078921.jpg
 
 
chddykulam%2078925.jpg
 
 
chddykulam%2078922.jpg
 
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.