Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடற்படையினர் அழைத்துச் சென்ற எனது மகனுக்கு இதுவரை என்ன நடந்தது என்பது தெரியாது!

Featured Replies

thevarani%2058564564.jpg

 

"தலைமன்னார் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற எனது மகனைக் கடற்படையினரே அழைத்துச் சென்றனர். காணாமற்போன எனது மகனுக்கு இதுவரை என்ன நடந்தது என்பது தெரியாது." - இவ்வாறு தெரிவித்தார் விடத்தல்தீவைச் சேர்ந்த டொமினிக் செல்வரானி எனும் தாய். இன்று மன்னார் மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு முன்சாட்சியமளிக்கையிலேய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். காணாமற்போன தனது மகன் தொடர்பான முறைப்பாட்டை முன்வைத்து சாட்சியமளிக்கையில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- கடந்த 23.02.2007 ஆம் ஆண்டு எனது மகனும் மேலும் நான்கு பேரும் விடத்தல்தீவிலிருந்து தலைமன்னார் கடலுக்கு படகு ஒன்றில் மீன் பிடிக்கச் சென்றனர். இப்படகு எனது மகனுடன் சென்றவர்களில் ஒருவருடையது. இவர்கள் நாளாந்தம் வழமை போன்று இந்தப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டு வருவது வழக்கம். சம்பவ தினத்தன்று இவர்கள் கரைக்கு திரும்பவில்லை. நாங்கள் விசாரித்த போது கடலில் வைத்து கடற்படையினர் அழைத்துச் சென்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
 
தலைமன்னார் கடற்படையினரே இவர்களை அழைத்துச் சென்றனர் என தலைமன்னார் பகுதி மக்கள் எங்களுக்குத் தகவல் தெரிவித்தனர். இது சம்பந்தமாக தலைமன்னார் கடற்படையினரிடம் விசாரித்த போது அவர்கள் குறித்த சம்பவம் பற்றி தமக்குத்தெரியது என எங்களுக்குத் கூறினர். சுமார் இரண்டு மாதங்களுக்கு பின் இடம்பெயர்ந்து சென்ற போது தலைமன்னார் கடற்படை முகாமில் எனது மகன் இருந்தார் என கண்டவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக ஐ.சி.ஆர்.சியில் நாங்கள் முறைப்பாடு செய்தபோது மகனை தேடிக் கண்டுபிடித்துத் தருவதாக எங்களுக்கு தெரிவித்தனர். இதுவரை மகனுக்கு என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியாது. இதன் பின் குறிப்பிட்ட காலத்தில் தலைமன்னார் கடற்படையினருடன் தொடர்பு கொள்ள முடியாத நிலை காணப்பட்டது. சுமார் இரண்டு மாதங்கள் மட்டுமே மகனை தேடக்கூடிய நிலமை எமக்கு அப்போது இருந்தது. எங்கள் வீட்டிலிருந்து கடற்கரைக்கு 10 நிமிடத்தில் நடந்து செல்லமுடியும். அப்பொழுது கடற்கரைப்பகுதி புலிகளின் கட்டுப்பாட்டியே இருந்தது. இப்பொழுது இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. 2009ஆம் ஆண்டுக்குப் பின்னே புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து இராணுவக் கட்டுப்பாட்டிற்கு வந்தது. 2007ஆம் ஆண்டு புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போது நாங்கள் தேவன்பிட்டி என்ற பகுதிக்கு அகதிகளாக சென்றோம். அங்கு 6 மாதம் தங்கியிருந்தோம். பின் இடம் பெயர்ந்து சுதந்திரபுரம் பகுதிக்கு கால் நடையாகவும், வாகனத்திலும் சென்றோம். நாங்கள் இடம்பெயரும் போது எங்களை எவரும் தடுக்கவில்லை.உயிரை பாதுகாப்பதற்காகவே சென்றோம். அந்த நேரத்தில் இரு தரப்பினரும் சண்டையில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததாலேயே எமது உயிரை பாதுகாக்க எமது இடத்தில் இருந்து இடம் பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது. 2010ஆம் ஆண்டு நாங்கள் திரும்பி எமது விடத்தல்தீவுப் பகுதிக்கு மீண்டும் வந்த போது நாங்கள் தொழில் செய்யும் மீன் வாடியை இராணுவம் இப்பொழுதும் தமது கைவசத்தில் வைத்துள்ளது.
 
2010.12.04 ஆம் திகதி நாங்கள் எமது வீட்டிற்கு வந்தபோது வீடு மட்டும் இருந்தது. பொருள்கள் எவையும் இருக்கவில்லை. அரசு எமக்கு எவ்வித உதவியும் செய்யவில்லை. யு.என்.எச்.சி.ஆர்.மட்டும் 25 ஆயிரம் ரூபாய் மட்டும் தந்து உதவியது. வேறு யாரும் உதவிகள் செய்யவில்லை.நாங்கள் கடன் பட்டு எங்கள் வீட்டை திருத்தி வாழ்ந்து வருகின்றோம். எனது கணவருக்கு வயது 61. எனது மகனும் காணாமற்போய்விட்டார். அதே நேரத்தில் எங்கள் வருமானமும் குடும்பத்திற்கு போதாமல் இருப்பதுடன் எங்கள் சொந்த மீன் வாடியையும் இராணுவம் தங்கள் வசம் வைத்திருப்பதால் நாங்கள் பிறருடைய மீன் வாடியையே குத்தகைக்கு பெற்று எங்கள் தொழிலை மேற்கொண்டு வருகின்றோம். இராணுவம் எங்களுக்கு எவ்வித பிரச்சினையும் கொடுப்பதில்லை. ஆனால் நாங்கள் மீன்பிடித்தொழிலுக்காகப் பயன்படுத்தும் மீன் வாடியை இராணுவம் தொடர்ந்து தங்கள் வசம் வைத்திருப்பதால் எங்கள் தொழிலில் முடக்கம் ஏற்பட்டுள்ளது. மகன் காணமல் போனபோது கடற்பகுதியை கடற்படையினர் கன்காணித்தார்களா என்பது எமக்குத் தெரியாது.- என்று அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்தார்,.
 
 
 
  • தொடங்கியவர்

மகனை பிரிந்து துயரத்துடன் வாழ்கின்றேன்: தாய் சாட்சியம்

 

DSC03824(1).JPG

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மகனையும் பிரிந்து இன்று எவ்வித அடிப்படை வசதிகள் இன்றியும் பல்வேறு துன்ப துயரத்துடன் வாழ்ந்து வருவதாக மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட கருக்காக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சேமாலை மரியை என்ற தாய்  சாட்சியமளித்துள்ளார்.

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரனை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் இன்று வெள்ளிக்கிழமை சாட்சியமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கருக்காக்குளத்தைச் சேர்ந்த சேமாலை மரியை என்ற தாய் தனது முறைப்பாட்டில் மேலும் சாட்சியமளிக்கையில், 

தனது 28 வயதுடைய மகனை காணவில்லை எனவும்,வேலைக்குச் சென்ற போது காணமல் போயுள்ளதாக முறையிட்டுள்ளார்.

தனது மகன் ஆண்டங்குளம் மரக்காலையில் வேலைக்குச் சென்ற பின் மாலை மீண்டும் வீடு திரும்பவில்லை. அந்த நேரம் அப்பகுதி விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலே இருந்து வந்தது.

25-11-2006 ஆம் திகதி அன்று மகன் காணாமல் போனதுடன் இது சம்மந்தமாக அங்கிருந்த விடுதலைப்புலிகளிடம் கேட்ட போது அவர்கள் தமக்குத்தெரியது என தெரிவித்திருந்தனர்.

பின்னர் 2007 ஆம் ஆண்டு மீண்டும் மகன் வீட்டுக்கு வந்தார். அப்பொழுது 10 நாட்களே எங்களுடன் வீட்டில் இருந்தார். அவரை தொடர்ந்து வீட்டில் இருக்கும்படி கேட்ட போது புலிகளின் பயத்தின் காரணமாக மீண்டும் அங்கு சென்று விட்டார்.

06-01-2009 அன்று முல்லலைத்தீவு சுதந்திரபுரத்தில் நான் கண்டேன். ஆனால் அப்பொழுது அவருடன் கதைத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. 2009 மே மாதம் 06 ஆம் திகதி எமது உறவுகள் அவரை மீண்டும் கண்டதாக சொன்னார்கள்.

14-05-2009 அன்று நாங்கள் இடம் பெயர்ந்து வந்த போது இந்த செய்தி எங்களுக்கு உறவுகளினால் கூறப்பட்டது.

நாங்கள் எங்கள் சொந்த இடத்தில் இருந்த போது வீழ்ந்த செல்லின் காரணமாகவே உழவு இயந்திரம் மூலம் பயணித்து ஆத்திமோட்டை, பாலியாறு, வஞ்சரிக்கிராமம், பின் சுதந்திரபுரத்திற்கு அகதிகளாக இடம் பெயர்ந்தோம்.

நாங்கள் இருந்த இடங்களில் இருந்து அகதிகளாக புறப்படும் போது எங்களை எவரும் போக வேண்டாம் என்று தடுக்கவில்லை. பின் சுதந்திர புறத்தில் இருந்து இருட்டு மடுவிற்குச் சென்ற போது அப்பொழுது அது இராணுவ கட்டுப்பாட்டிற்கூறியதாக இருந்தது.

நாங்கள் இருட்டு மடுப்பகுதிக்குச் சென்ற போது இராணுவமே எங்களுக்குப்பாதை காட்டி எங்களை ஒரு காட்டுப்பகுதிக்குள் இருக்குமாறு எங்களைப்பணித்தார்கள்.

பின் இன்னுமோர் காட்டுப்பகுதியைக்காட்டி மயில் வாகன புரம் பகுதிக்கு கூட்டிச் சென்று அங்கு இராணுவம் எங்களை சோதனையிட்டு ஒரு வாகனத்தில் ஏற்றி கிளிநொச்சியில் உள்ள கமநல கேந்திர கட்டட பகுதி ஒன்றில் இறக்கி விட்டார்கள்.

எங்களை மட்டுமல்ல அங்கிருந்த எல்லோரையும் பின் வவுனியாவிற்கு பஸ் மூலம் அனுப்பினார்கள்.

பின் ஓமந்தை சோதனைச்சாவடியில் விசாரனை செய்து செட்டிக்குளம் சித்திவிநாயகர் பாடசாலையில் தங்க வைத்தனர்.

08 மாதம் அங்கிருந்தோம். பின்னர் வேறு ஒரு முகாம் (சோன்-06) இற்கு அனுப்பினார்கள். 21-10-2009 அன்று சொந்த இடத்திற்கு மீண்டும் வந்தோம். வீடுகள் பெரும்பாலும் அழிந்திருந்தது. நேர்ப் திட்டத்தில் எனக்கு வீடு ஒன்று கட்டிக் கொடுக்கப்பட்டது.

விவசாயம் வரட்சியில் பாதீப்படைந்து இருக்கின்ற போதும் வாழ்வாதார பிரச்சினையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்றார்.
DSC03825(1).JPG

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/121268-2014-08-08-14-06-05.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.