Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரூ.500 கோடி தந்ததாக அரசு தம்பட்டம்; ஆனால் அரசே அதை வைத்து விளையாடுகிறது! முதலமைச்சர் விக்னேஸ்வரன் விசனம்

Featured Replies

vi%20fgaddd.jpg

 

வடமாகாணத்திற்கு ஐந்நூறு கோடி ரூபாவுக்கு மேற்பட்ட நிதி தந்துவிட்டனர் எனத் தம்பட்டம் அடிக்கிறார்கள். ஆனால் பெரும் பகுதி நிதி தரப்படவில்லை. அதனை அரசாங்கமே வைத்து விளையாடுகின்றது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துர்ள்ளார். வவுனியா, ஓமந்தை, நவ்வி பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை பிரதேச வைத்தியசாலைக்கான அடிக்கல்லை நாட்டிய பின் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:-
 
வடமாகாணம் என்பது சிறிய பிரதேசம் இல்லை. பலவிதமான இடங்கள், தொழில்கள், சூழல்கள், மக்கள் கூட்டங்கள், இயற்கை வளங்கள் என்று பரந்து கிடக்கும் ஐந்து மாவட்டங்களின் சேர்க்கை. சில சந்தர்ப்பங்களில் 40, 50 கிலோமீற்றருக்குள் பலவித வேற்றுமைகளைக் காண்கின்றோம். வவுனியா நகரில் இருந்து 40 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கிராமம் ஒன்றுக்கான வைத்தியசாலைக்கே அடிக்கல் நாட்டியுள்ளோம். இந்த இடங்களில் இருந்து 1996 ஆம் ஆண்டு ஜயசிக்குறு இராணுவ நடவடிக்கையின் போது இடம்பெயர்ந்த நீங்கள், தற்போதுதான் மீள்குடியேறி வருகிறீர்கள் என அறிகின்றேன். காணி சம்பந்தமான பல பிரச்சினைகளை நீங்கள் எதிர்நோக்குகின்றீர்கள் எனக் கேள்விப்பட்டேன். தற்போது இந்த வரட்சியாலும் நீங்கள் பாதிக்கப்பட்டுள்ளீர்கள். 2009 ஆம் ஆண்டுக்கு இறுதி யுத்தத்தின் போது முன்னரங்கப் பகுதி காவலரணில் இப் பிரதேசம் அமைந்திருந்தமையால் பாரிய அழிவுகளை சந்தித்திருந்தது. ஆனாலும் இந்த நவ்விப் பிரதேசமும் அதன் சுற்றுப் புறப் பிரதேசமும் வவுனியா மாவட்டத்தில் மிகவும் தூய்மையான பிரதேசங்கள் அறிகின்றேன்.
 
வண்ணாங்குளத்தில் கண்ணகை அம்மன், குஞ்சுக்குளத்தில் முத்துமாரி அம்மன் ஆலயம் அமைந்துள்ளமை இதற்கு சான்றாகும். கஜபாகு மன்னனுடைய காலத்தில்தான் கண்ணகை அம்மன் வழிபாடு வலுப்பெற்றது என்பது கருத்தாகும். ஆகவே இது தொன்மை மிக்க இடம் என்பதில் சந்தேகமில்லை. சுமார் 400, 500 வருடங்களுக்கு முன்னரே கண்ணகை அம்மன் வழிபாடு இடம் பெற்றுள்ளது என அறிகின்றேன். ஆனால் அம்மனின் ரௌத்திரம் ஏதோ வகையில் இப்பிரதேசத்தைப் பாதித்திருக்கலாம். இனி அப்படி இல்லை. அம்மனின் அருள் கிடைக்கும் என கருதுகிறேன். இங்கு ஆரம்பிக்கப்பட்டுள்ள வைத்தியசாலை ஆரம்பத்தில் வெளிநோயாளர் பிரிவைக் கொண்டதாக அமையவுள்ளது. காலப்போக்கில் நோயாளர் விடுதியையும் கொண்டதாக இது மாறும். இதற்கு வடமாகாண சுகாதரா அமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என நம்புகின்றேன். வைத்தியசாலை அமைப்பதற்கு வட மாகாணத்திற்கு குறித்து ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாவும் சுகாதார சேவையின் பிரித்தொதுக்கப்பட்ட கொடை நிதியில் இருந்து அறுபது லட்சம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு ஆரம்பிக்கப்படும் வேலைத்திட்டங்கள் போன்று மேலும் பல வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதற்கு நிதிப்பற்றாக்குறையே பிரதான காரணமாகவுள்ளது. எமக்கு தந்துவிட்டதாக கூறும் பணத்தின் பெரும் பகுதி எமக்கு தரப்படப்படவில்லை. நாளாந்தம் பத்திரிகையிலும் தொலைக்காட்சியிலும் நிதி தந்துவிட்டனர் எனக் கூறுகின்றார்கள். ஆனால் அவை தரப்படவில்லை.
 
ஐநூறு கோடி ரூபாவுக்கு மேற்பட்ட நிதி தந்துவிட்டனர் எனத் தம்பட்டம் அடித்து கூறுகிறார்கள். அப்படி ஒதுக்கப்படவும் இல்லை; தரப்படவுமில்லை. அதில் சுமார் ஐந்தில் இரண்டு பங்குதான் கிடைத்துள்ளது. மிச்சம் அனைத்தையும் அரசாங்கமே வைத்து விளையாடுகிறது. விளையாடுகிறது என்று நான் ஏன் கூறுகின்றேன் என்றால் என்ன செய்கிறார்கள், எப்படி செய்கிறார்கள், எங்கே செய்கிறார்கள், யாருக்கு செய்கிறார்கள் என்பவை எல்லாம் மர்மமாகவே உள்ளன. வடமாகாணம் முழுவதையும் நோக்கி முதிர்ந்த திட்டத்தின் அடிப்படையில் வேலை இடம்பெறவேண்டுமே ஒழிய, அடுத்த தேர்தலை மையமாக வைத்து அபிவிருத்தியில் ஈடுபடுவது பல பாதிப்புக்களை ஏற்படுத்தும். தேர்தலை முன்னிட்டு திட்டம் இன்றி வேலைகள் கொடுக்கப்பட்டமையால்தான் இன்று தொழிலாளர்கள் பாரிய பிரச்சனைகளுக்குள் அகப்பட்டுத் தவிக்கிறார்கள்.
 
எப்படியாவது வேலை ஒன்று கிடைக்கவேண்டும் என்பதுதான் வேலை தேடும் சகோதரனின் கற்பனை. அது சட்டப்படி கொடுக்கப்படுகின்றதா என்பதை ஆராய்வது வேலை கொடுப்பவரின் கடமை. சட்டத்திற்கு புறம்பாக வேலைகளை கொடுத்துவிட்டு அவர்களை நட்டாற்றில் விடுவது பிழையான செயல். இனியாவது மக்கள் பிரதிநிகளாகிய எங்களுடன் கலந்தாலோசித்து, எங்களையும் இணைத்து, வேலைகளை செய்யுமாறு அரசாங்கத்திடம் கேட்கும் அதேவேளை, மக்களுக்கு தேவையான திட்டங்களை வடமாகாணத்தில் மேற்கொள்வோம் என இந்த இடத்திலே தெரிவிக்கின்றேன். - என்றார். -
 
http://malarum.com/article/tam/2014/08/08/4334/%E0%AE%B0%E0%AF%82-500-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%87-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D.html#sthash.jSjeweFE.dpuf
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.