Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பருவக்காற்றை கண்டுபிடித்தது தமிழன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பருவக்காற்றை கண்டுபிடித்தது தமிழன்?

- சாமிநாதன் -

தமிழர்கள் கடல் வாணிபத்தில் சிறந்தவர்கள்.இதற்கான சான்றுகள் உலகெங்கிலும் கிடைக்கின்றன. மலேசியாவில் தமிழ்க் கல்வெட்டு, தாய்லாந்தில் சங்க கால நாணயங்கள், கம்போடியக் கல்வெட்டில் தமிழ் மன்னனின் பெயர், சாதவாகன மன்னர் நாணயத்தில் கப்பல் படம், ஜாவாவில் கப்பல் சிற்பம், சங்க இலக்கியத்தில் யவனர் பற்றிய குறிப்புகள், ரோமானிய மன்னர் அகஸ்டஸ் சீசர் அவையில் பாண்டிய மன்னனின் தூதன், தமிழ் நாட்டில் கிடைக்கும் ஆயிரக்கணக்கான ரோமானிய நாணயங்கள், டாலமி, பிளினி போன்ற வெளிநாட்டு யாத்திரிகளின் பயணக் குறிப்புகள், யுவான் சுவாங் பாஹியான் முதலிய சீன யாத்திரிகர் குறிப்புகள், இப்படிச் சான்றுகளின் பட்டியலை நீட்டிக் கொண்டே போகலாம்.

தமிழர்களின் கடல் வணிகத்திற்குப் பெரும் உறுதுணையாக அமைந்தது பருவக் காற்றாகும். ஒரு குறிப்பிட்ட பருவத்தில் ஒரு குறிப்பிட்ட திசையில் வீசும் கடற்காற்றுக்குப் பருவக்காற்று என்று பெயர். டீசலினால் இயங்கும் இராட்சத கப்பல்களும் நீராவியால் ஓடும் பெரிய கப்பல்களும் கண்டு பிடிப்பதற்கு முன்னர் மனிதர்கள் கண்டு பிடித்த கப்பல் காற்றினாலேயே இயங்கின. காற்றின் இரகசியத்தை அறிந்தவர்கள் குறிப்பிட்ட நாளில் புறப்பட்டு குறிப்பிட்ட இடத்தை அடைவது எளிதாக இருந்தது. இதற்காக அவர்கள் பிரமாண்டமான பாய்மரக் கப்பல்களைக் கட்டினர்.

பருவக் காற்றின் இரகசியத்தை அறிந்து வைத்திருந்த யவனர்களும், அராபியர்களும் அதை வெளிநாட்டவர்களுக்குக் கற்றுத் தரவில்லை என்றும் தமிழர்கள் நடத்திய கப்பல் போக்குவரத்து கடற்கரையையொட்டி நடைபெற்ற கப்பல் போக்குவரத்துதான் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

பருவக் காற்றின் சக்தியை முதலில் கண்டு பிடித்தவர் ஹிப்பாலஸ் என்ற கிரேக்க நாட்டு அறிஞரென்றும் கிளாடியஸ் என்ற ரோமானிய மன்னன் காலத்தில் தான் பருவக்காற்றைப் பயன்படுத்திக் கப்பல் விடுவது அதிகரித்ததென்றும், மேலைநாட்டு அறிஞர்கள் எழுதி வைத்துள்ளனர். ஆனால், புறநானூறு முதலிய சங்க கால நூல்களைப் படிப்போர்க்கு இந்தக் கூற்றில் பசையில்லை என்பதும், மேலை நாட்டாரின் வாதம் பொய் என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனியென விளங்கும்.

வெண்ணிக் குயத்தியார் என்ற பெண் புலவர் கரிகால் பெருவளத்தானைப் புகழ்ந்து பாடிய புறநானூற்றுப் பாடல் காற்றின் சக்தியால் தமிழர்கள் கலம் (கப்பல்) செலுத்தியதைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. அந்தப் பாடல் வரிகள் கரிகாலன் ஆண்ட காலத்தைப் பற்றிக் கூடப் பேசவில்லை. அவனுடைய முன்னோர்களின் காலத்தில் காற்றின் விசையால் கப்பல்கள் விடப்பட்டதைப் புகழ்ந்து பேசுகிறது.

"நளியிரு முன்னீர் நாவாய் ஓட்டி

வளிதொழில் கண்ட உரவோன் மருக!

களி இயல் யானைக் கரிகால் வளவ!

(புறநானூறு பாடல் 66)

"வளவனே! உனது முன்னோர்கள் காற்று இயக்கும் திசையை அறிந்தே அதற்கான பொறிமுறைகளைப் பொருத்திக் கப்பல் செல்லுமாறு செய்த அறிவாற்றல் உடையவர்கள். மதயானை மிகுந்த படைகளை உடைய கரிகால் வளவ!" என்று உரையாசிரியர்கள் பொருள் எழுதி வைத்துள்ளனர் இப்பாடல் வரிகளுக்கு.

இப்பொழுது ஒரு கேள்வி எழும் கரிகால் வளவனின் காலம் என்ன? கிரேக்க அறிஞர் ஹிப்பாலஸின் காலம் என்ன? யார் முதலில் வாழ்ந்தவர்?

கிரேக்க அறிஞர் ஹிப்பாலஸ் இன்றைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர். ஆனால், கரிகால் சோழனோ அதற்கு முன்னர் குறைந்தது இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. அதாவது, இன்றைக்கு இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர் (கி.மு. 2 ஆம் நூற்றாண்டு) மேலும் இப்பாடல் கரிகாலன் முன்னோர்களே காற்றின் விசையைப் பயன்படுத்திக் கப்பல் விட்டதாகக் கூறுகிறது.(முக்கியச் சொற்களின் பொருள்:வளி,காற்று,முந்நீர்,கட

பயனுள்ள இணைப்பு , நன்றி.

தமிழன் காற்றையும் வகைப்படுத்தியே வாழ்ந்துள்ளான். நால திசைகளில் வீசும் காற்றையும் பெயரிட்ட விஞ்ஞானம் தமிழனது. அவை ,

கிழக்கில் இருந்து வீசும் காற்று - கொண்டல்

மேற்கில் இருந்து வருவது - மேகம்

வடக்கில் இருந்து வருவது - வாடை

தெற்கில் இருந்து வருவது - தென்றல்

கந்தப்பு தாத்தா சில நேரம் இதை கண்டு பிடித்தது உங்கன்ட தாத்தாவாக இருக்க கூடும் இணைப்புக்கு நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

`கட்டமரான்' (Cஅடமரன்) என்ற சொல்லை மத்திய அமெரிக்க நாடான மெக்ஸிக்கோவில் பயன்படுத்துகின்றனர்.

ஆங்கிலத்திலயும் catamaran என்றுதானே அழைக்கினம் :roll:

While the name came from Tamil, the modern catamaran came from the South Pacific. English visitors applied the Tamil name catamaran to the swift, stable sail and paddle boats made out of two widely separated logs and used by Polynesian natives to get from one island to another

http://en.wikipedia.org/wiki/Catamaran

Translations for: Catamaran

Dansk (Danish)

n. - katamaran

Nederlands (Dutch)

catamaran, feeks

Français (French)

n. - catamaran

Deutsch (German)

n. - (mar.) Katamaran (Doppelrumpf-Segelboot)

Italiano (Italian)

catamarano

Português (Portuguese)

n. - catamarã (m), jangada (f)

Español (Spanish)

n. - catamarán

Svenska (Swedish)

n. - katamaran, ragata (sl.)

http://www.answers.com/catamaran&r=67

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.