Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் தற்போதைய நெருக்கடிக்கு ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்துவதே ஒரே வழி – சுரேஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கையின் தற்போதைய நெருக்கடிக்கு ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்துவதே ஒரே வழி – சுரேஸ்
22 ஆகஸ்ட் 2014
 

'நாங்கள் எந்த வேட்பாளரையும் ஆதரிப்பது குறித்த நிலைப்பாட்டை எடுக்கவில்லை'

sures1_CI.png

இலங்கையின் தற்போதைய நெருக்கடிக்கு ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்துவதே ஒரே வழி, எனினும் இது குறித்த பேச்சுக்களில் தீவிரத்தன்மை தென்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் பினான்ஸ்சியல் டைம்ஸிற்கு அளித்துள்ள பேட்;டியில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் குறித்து கட்சியின் நிலைப்பாடு பற்றி அந்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளதாவது.

பௌத்த துறவியொருவரால் அனைத்து சமூகங்களினதும் வாக்குகளையும் பெற முடியாது, அவர் எவ்வளவு நேர்மையானவராக இருந்தாலும் தமிழ் முஸ்லீம் மக்கள் அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதே தற்போதைய நிலவரம்.

ஜனாதிபதி தேர்தல் குறித்து அதிகளவில் விவாதிக்கப்படுகின்றது, எனினும் இந்த தேர்தலோ அல்லது பாராளுமன்ற தேர்தலோ எப்போது நடைபெறும் என்பது எவருக்கும் தெரியாது இதனால் எமது கட்;சி இது குறித்து ஆராயவில்லை.

நாங்கள் எந்த வேட்பாளரையும் ஆதரிப்பது குறித்த நிலைப்பாட்டை எடுக்கவில்லை. இதற்காகன நிபந்தனைகள் குறித்தும் சிந்திக்கவில்லை.எனினும் இந்த அரசாங்கத்தால் நீண்ட காலமாக ஒடுக்கப்பட்ட மக்கள் என்ற வகையில் நாங்கள் சில முக்கிய விடயங்களை கருத்திலெடுக்க வேண்டியிருக்கும்.

யுத்தத்திற்கு பின்னர் நாங்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம், எமது முன்னுரிமைக்குரிய விடயங்களுக்கு அவர்கள் தீர்வுகாணவில்லை. குறிப்பிட்ட வேட்பாளர் யாராக இருந்தாலும் அவருடன் இந்த விடயங்கள் குறித்து ஆராயப்படும்,


ஆரம்பகாலத்திலிருந்தே நாங்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை எதிர்த்து வருகிறோம். இது நாட்டிற்கு பல பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது. சர்வாதிகாரத்திற்கு வழிவகுத்ததும் இதுவே. ஆரசாங்கம் 18 வது திருத்தத்தை கொண்டுவந்தது. ஜனாதிபதி தேர்தலில் எத்தனை தடவையும் போட்டியிடலாம் இது சர்வாதிகாரத்திற்கே வழிவகுக்கும். தமிழ் தேசிய கூட்டமைப்பால் இதளை அனுமதிக்க முடியாது.
தனித்தனியாக போட்டியிடுவது சிறந்த தந்திரோபாயமாக இருக்க முடியாது என்பதை எதிர்க்கட்சிகள் உணரவேண்டும். ஜனாதிபதியை தோற்கடிக்க விரும்பினால் அவர்கள் ஒன்றுபடவேண்டும். இதன் காரணமாகவே வலுவான பொதுவேட்பாளரால் மாற்றத்தை ஏற்படுத்த முயலும் நான் கருதுகிறேன், எனினும் துரதிஸ்டவசமாக எதிர்க்கட்சிகள் அதற்கு முழுமையாக தாயாராகவில்லை. முக்கிய எதிhக்கட்சிகள் எவையும ;இது குறித்து தங்களது நிலைப்பாட்டை தெளிவபடுத்தவில்லை.

நாங்கள் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை தோற்கடிக்க விரும்புகிறோம், ஜனாதிபதியும் அரசாங்கமும் மக்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப நாட்டை ஆள தவறிவிட்டனர். வடக்குகிழக்கு மக்களின் துயரங்களை ஒரு பக்கம் வைத்து விட்டு நாட்டின் ஏனைய பகுதிகளை பாருங்கள், எங்கும் சர்வாதிகாரமும், குடும்ப ஆட்சியும் தலை விரித்தாடுகின்றது. யாரும் இந்த நாட்டில் வாழ விரும்பவில்லை. இராணுவமே இந்த நாட்டை ஆளுகின்றது. நாங்கள் இவற்றை தோற்கடிக்க கூடிய உறுதிய வேட்பாளரை விரும்புகின்றோம்.

ரணில் விக்கிரமசிங்கவிறகு ஆதரவளிப்பது குறித்து என்னால் கூற முடியாது, ஆனால் நாங்கள் நிறைவேற்று அதிகார முறையை எதிhக்கின்றோம், அதனை ஒழிப்பதற்கு யார் முன்வந்தாலும் அதனை வரவேற்போம், எனினும் யார் போட்டியிட முன்வந்தாலும் அவர் தேர்தலில் வெல்லகூடியவராக இருக்க வேண்டும். மக்களின் வாக்குகளை அவரால் பெற முடியவேண்டும். நாங்கள் தேர்தலில் வெல்ல வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/110809/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.