Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

944380_552746131547678_63609463313669549

 

தாரைதப்பட்டையில், இளையராஜாவின் அசத்தும் புதுமுயற்சி

சினிமா விகடன்

1976 மே 14, பண்ணைபுரம் ராசய்யா இளையராஜாவாக அன்னக்கிளியில் அறிமுகமாகி இன்று ஆயிரமாவது படத்தில் தாரை தப்பட்டையைக் கிழித்துத் தொங்க விட்டிருக்கிறார். இளையராஜாவின் ஆயிரமாவது படம் என்ற பெருமையுடன் பொங்கலன்று திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் பாடல்கள் கிருஸ்துமஸ் பண்டிகை அன்று வெளியானது. கிராமிய மணம் வீசும் வகையில் இதன் பாடல்கள் அமைந்துள்ளன.

பொதுவாக திரைப்படங்களுக்கு பின்னணி இசை அமைப்பது என்பதுதான் நடைமுறையில் இருந்து வருகிற ஒன்று. அதாவது இயக்குனர்கள் முழுப் படத்தையும் எடுத்து இசையமைப்பாளர் கையில் கொடுத்து விடுவார்கள். அதைப் பார்த்து கதையின், காட்சியின் தன்மையை உள்வாங்கிக் கொண்டு இசை அமைப்பாளர்கள் பின்னணி இசை அமைப்பார்கள். 

இப்போது முதன் முறையாக பாலா இயக்கும் தாரை தப்பட்டை படத்துக்கு இளையராஜா முன்னணி இசை அமைத்துக் கொடுத்திருக்கிறார். முழுக்கதையையும், காட்சிகள் பற்றியும், அந்தக் காட்சிகளை பாலா எப்படிப் படமாக்குவார் என்பதைப் பற்றியும் முழுமையாக அறிந்துள்ள இளையராஜா, சில முக்கிய காட்சிகளைக் கற்பனையிலேயே ஓட்டிப்பார்த்து படப்பிடிப்புக்கு முன்பே அதற்கு பின்னணி இசை அமைத்துக் கொடுத்திருக்கிறார்

பாடல்களை ஒலிக்கவிட்டு பாடல் காட்சிகளைப் படமாக்குவதுபோல முக்கியமான காட்சிகளில். பின்னணி இசையை ஒலிக்க விட்டு அந்தக் காட்சியைப் படமாக்கும் புதிய முறை இது. தாரை தப்பட்டை படத்தின் படப்பிடிப்பில் வில்லனால் துன்புறுத்தப்படும் வரலட்சுமி, அவன் கொடுமையின் வலிதாங்காமல் தனிமையில் அமர்ந்து அழுகிற காட்சிக்கு இளையராஜா, முன்னணி இசை அமைத்துக் கொடுத்திருந்தார். அது ஒலிக்கப்பட்டு படமாக்கப்பட்டபோது. வரலட்சுமி மட்டுமல்ல டெக்னீஷியன்களுமே உருகி கண்ணீர் விட்டார்களாம். நடிப்பதற்கும் எளிமையாக இருந்ததாம். 

எந்தப் படப்பிடிப்புத் தளத்திற்கும் இதுவரை நேரில் சென்றிராத இளையராஜா தஞ்சையில் நடந்த தாரை தப்பட்டை படப்பிடிப்புக்கு நேரில் சென்றது. இந்த புதிய முயற்சி எப்படி சாத்தியமாகிறது என்பதை பார்ப்பதற்குத்தானாம். 

இப்படத்திற்காக "பாருருவாய பிறப்பற வேண்டும், பத்திமையும் பெற வேண்டும்..." என்ற திருவாசக வரிகளுக்கு இசையமைத்துள்ள ராஜா "என் உள்ளம் கோயில் அங்கே உண்டு தெய்வம்... அது இந்த கீதம் அல்லவா.." என்ற உருக்கமான பாடலை எழுதி இசையமைத்துள்ளார்.

இளையராஜாவின் ஐநூறாவது படமான அஞ்சலி மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. அதுமட்டுமமில்லாமல் பல விருதுகளை வென்று ஆஸ்கார் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்ட படமாக அமைந்ததற்கு ராஜாவின் இசையும் ஒரு காரணம். அது போலவே தாரை தப்பட்டை படமும் அமையும் வகையில் அருமையான இசையைக் கொடுத்திருக்கிறார். 

"ரேடியோவ கண்டுபுடிச்சது மார்க்கோனி, ஆனா அத கேக்க வச்சது இசைஞானி" என தன் பாடல்களால் எண்பதுகளை ரேடியோவில் ஆண்ட இளையராஜா இன்று ஐ-ட்யுன்சிலும் இளைய தலைமுறைகளை தன் இசையால் ஈர்த்துள்ளார். பல இளம் இசையமைப்பாளர்களின் படங்களுக்கு மத்தியில் வெளிவந்த தாரை தப்பட்டை தொடர்ந்து ஐ-ட்யுன்சில் முன்னிலையில் இருப்பதே இளையராஜாவின் சிறப்பு. 

ஐந்து படங்களிலேயே சரக்கை இழந்து வரும் இளம் இசையமைப்பாளர்களுக்கு இடையே தன் ஆயிரமாவது படத்திற்கும் முதல் படம் போல் இசையமைத்திருக்கும் ராஜா, ராஜா தான் ...

நன்றி திரு தே .சண்முகபாண்டியன்

  • Replies 3.9k
  • Views 330.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

921471_10205736817204071_364530779165749

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:)

6842_516854898473085_1731745117083310073

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2015ம் ஆண்டின் இறுதி வாரம்

262862_514502631916890_1614715013_n.jpg?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

12465984_1079369862125034_75300116966769

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திரும்பிப் பாருங்கள் !
திருத்திக் கொள்ளலாம் !
திருந்தியும் கொள்ளலாம் !
( 2015 வருட நிறைவில் மனதிற்கு பட்ட சிந்தனை....!)

10339582_10153523813819550_7034077091084

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10649949_1100073133366793_65995006358822

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

இந்த உலகில் பிறந்த ஒவ்வோர் உயிருக்கும், சுமைகள் இருக்கவே செய்கின்றன. ......857541_660483524054193_12658078248087959

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Fort McMurray man charged with assaulting flight attendant, forcing flight back to Toronto

Air Canada flight headed for New Delhi turned back to Pearson airport

A Fort McMurray man aboard an Air Canada flight to New Delhi is facing several charges after the plane was forced to turn back to Toronto mid-flight on Wednesday.

Jaskaran Sidhu, 47, allegedly assaulted a flight attendant and has been charged with "two counts of mischief, assault causing bodily harm and endangering safety of aircraft." 

He was set to appear in a Brampton, Ont., court on Wednesday.

Sgt. Rob Lyall said Sidhu was taken into custody after the alleged incident, which occurred around 12:42 a.m. while the plane was over the Atlantic Ocean. He said Sidhu was belligerent at the time, but was arrested without incident when the plane landed.

Air Canada spokesman Peter Fitzpatrick said the attendant "sustained injuries requiring medical treatment."

The flight was initially scheduled to take off earlier Tuesday, but due to poor weather, Air Canada decided to postpone the flight shortly before the plane reached the runway. 

Man arrested on flight

A passenger took a video of a man being arrested on a flight, believed to be the Air Canada flight to New Delhi on Wednesday. (YouTube)

The flight was rescheduled to leave Toronto at noon Wednesday.

http://www.cbc.ca/news/canada/toronto/air-canada-1.3384152

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Multiple suspects sought for two violent Toronto home invasions

Scarborough man robbed twice in his home by same group of four to five men, police say

 

Security camera images of two of the suspects in two violent home invasions.

By: Stephanie Werner Staff Reporter, Published on Wed Dec 30 2015

Toronto Police are seeking four to five men in relation to two violent home invasions targeting the same property.

According to police, the group robbed a man in his home on Nov. 30 around 3:40 a.m. in the area of Ellesmere Rd. and Markham Rd. The same man was then robbed a second time by the same group on Dec. 7 at 2:15 a.m. at the same place.

The victim was assaulted both times. The suspects were wearing masks and one was armed with a knife.

Security camera images of the suspects have been released. Three of the suspects have been described as brown-skinned men, while a fourth suspect has been described as a black man.

Anyone with information is asked to contact police at 416-808-7350, by email toholdupsquad@torontopolice.on.ca , or Crime Stoppers at 416-222-TIPS (8477).

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மலரும் புதிய வருடம் உங்கள் அனைவர்க்கும் மகிழ்வோடு அமைய என் மனம் நிறைந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!!

1934373_1655634898041651_666513603166193

 

12473874_1080769511985069_43277695114965

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பின்பற்றமுடியாத எதையும் தீர்மானமாக எடுக்கக்கூடாது 
தீர்மானித்தபின் எதையும் பின்பற்றாமல் இருக்கக்கூடாது!நிலா பாரதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டின் தொடக்க நாள் என்ன சொல்லலாம்...

பிறந்திருக்கும் புத்தாண்டு அனைத்து மக்களுக்கும் இனிய புத்தாண்டாக அமைய வாழ்த்துக்கள்...

இந்த ஆண்டின் முதல்ப் பக்கம்..... 1000648_10207880628834835_85545720108374

 

காலையில் எழுத,பதிய வந்தது எல்லாம் யாழில் ஒன்றும் செய்ய முடியாதிருந்த காரணத்தினால் பதிவிட முடியாது போய்ட்டு..என்ன எழுத வந்தேன் என்று மறந்தும் போய்ட்டு காலையியே மைன்ட் டிஸ்ஓடர் ஆகிய ஒரு நாள்.

அனேகமான உலக நாடுகளின் புத்தாண்டு கொண்டாட்டம் இவ்வாறு அமைந்திருந்தது.... New Year Celebrations Around the World

Dubai

1935134_10154102250663676_32688536388618 f

France

1914010_10154102249813676_72041936123052

10400860_10154102249843676_7872357441424

184583_10154102249853676_365583383960343

10325368_10154102249928676_5956695391292

10478928_10154102249983676_4834434194936

10400976_10154102249998676_2807669617234

1497392_10154102250038676_89914388471188

1606917_10154102250058676_26067381733170

1000657_10154102250083676_35624398538093

993857_10154102250173676_790754684083587

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நினைவிருக்கிறதா?
 

1935839_1081777205217633_557932439704530

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

1929756_554564644699160_2203221414524062

 

 

இசைஞானி 40 !

இசைஞானி என அன்போடும் மரியாதையோடும் அழைக்கப்படும் மேஸ்ட்ரோ இளையராஜா, இசையமை்பபாளராக 40வது ஆண்டில் அடிவைக்கிறார்.
அவரது இசைச் சாதனைகளை ஒரு கட்டுரைக்குள் அடக்கிவிட முடியாது. பேசி முடியாத பிரமாண்டம் அவர். 1000 படங்களைத் தாண்டி, இன்னமும் இன்னிசையைத் தந்து கொண்டிருக்கிறார். அவரது சமீபத்திய ருத்ரமாதேவி பாடல்களைக் கேட்டவர்கள், அந்த மெலடியில் கிறங்கி நிற்கிறார்கள்.

ராகதேவனின் 40 ஆண்டுகால இசைப் பயணத்தில், சில துளிகளை இங்கே தந்திருக்கிறேன். இதுபோ ல இன்னும் ஆயிரமாயிரம் துளிகளைத் தரமுடியும்…

இப்போது இசைஞானி 40…

1. ஒரு பாடலை உருவாக்க வெளிநாட்டு பயணமோ, அழகான லொகேஷன்களோ, வார அல்லது மாதக்கணக்கில் நேரமோ இளையராஜாவுக்குத்
தேவைப்பட்டதில்லை. ‘தென்றல் வந்து தீண்டும்போது…’ என்ற பாடலை உருவாக்க இசைஞானி எடுத்துக் கொண்டது வெறும் அரை மணி நேரம்தான். அருகிலிருந்து பார்த்த நாசர் பரவசப்பட்டு இளையராஜாவின் கால்களைக் கட்டிக் கொண்டாராம்!

2. இளையராஜா வெறும் அரைநாளில் மொத்த ரீரிகார்டிங்கையும் செய்து முடித்த படம் ”நூறுவாது நாள்”.

3. இளையராஜா பின்னணி இசையில் மிரட்டிய சிகப்பு ரோஜாக்கள் படத்திற்கான ரீரிகார்டிங்கிற்கு ஆன மொத்த செலவு வெறும் பத்தாயிரம்.. மூன்றே நாளில் வெறும் ஐந்தே ஐந்து இசைக்கலைஞர்களைக் கொண்டு அந்த படத்திற்கு இசை சேர்க்கப்பட்டது!

4. எல்லோரும் இசையை வாசித்துதான் காட்டுவார்கள். ஆனால் ராஜா மட்டும்தான் இசையை ‘பக்கா’ நோட்ஸாக இசைக் கலைஞர்களுக்கு எழுதியே கொடுப்பவர். அவர் நோட்ஸ் எழுதும் வேகம் பார்த்து சர்வதேச இசை விற்பன்னர்களே மிரண்டு போனது வரலாறு.

5. வாசித்துப் பார்த்து அந்த இசைக் கருவியின் ஒலி எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்வதில்லை இளையராஜா. மனதுக்குள்ளேயே அந்த இசையை இசைத்துப் பார்த்து அதை நோட்ஸாக எழுதுகிறார். இந்த அற்புதம் படைத்தவனுக்கு மட்டுமே கைவந்த அதிசயம்.

6. அமிர்தவர்ஷினி என்ற மழையை வரவழைப்பதற்கான தனித்துவமுடைய ராகத்தை ஒரு கோடைப்பொழுதின் பிற்பகலில் ‘தூங்காத விழிகள்
ரெண்டு..’ பாடலை அமைத்து மழையையும் வர வழைத்தவர் இசைஞானி.

7. பாடலின் மெட்டும் அதற்கான 100 சதவீத ஆர்கெஸ்ட்ரேஷனையும் ஒருவரே செய்யும்போதுதான் கிடைக்கும் ஒரு பாடலுக்கான முழுமை! அத்தோடு ஒவ்வொரு வாத்தியத்தையும் வித்தியாசமாய் கையாளும் ஆளுமை மற்றும் பாங்கு… இவை அனைத்தையும் எந்த இசையமைப்பாளரிடமும் ஒருங்கே காண முடியாது… இளையராஜாவைத் தவிர!

8. இசைஞானி தான் முதல்மgறையாக ரீதிகௌளை என்ற ராகத்தை சினிமாவில் பயன்படுத்தினார் . ‘கவிக்குயில்’ என்னும் படத்தில் பாலமுரளி கிருஷ்ணா மற்றும் ஜானகி குரல்களில் தனித்தனியாக ஒலிக்கும் ‘சின்ன கண்ணன் அழைக்கிறான்…’ என்ற பாடல்தான் அது.

9. ‘கவுன்ட்டர்பாயின்ட்’ என்ற யுக்தியை சர்வதேச இசையின் நுட்பங்களை இசைஞானி சிட்டுக்குருவி படத்தில் இடம்பெற்ற “என் கண்மணி” என்ற பாடலில் பயன்படுத்தி வெற்றி கண்டவர்.

10. இந்தியத் திரை இசையில் காயத்ரி என்ற படத்தில்தான் முதன் முதலாக இசைஞானி ‘எலெக்ட்ரிக் பியானோ’ உபயோகபடுத்தினார்.

11. இசைஞானி செஞ்சுருட்டி ராகத்தில் இசையமைத்த ஒரே பாடல் ஆட்டுக்குட்டி முட்டையிட்டு.

12. உலகில் வேறு எந்த இசையமைப்பாளரும் முயற்சி செய்திருக்கவே முடியாத, ஏன் கற்பனையும் செய்து பார்த்திராத ஒரு விஷயம் இது. ஓர் இசையமைப்பாளர் ஏற்கனவே இசையமைத்து, பாடல் வரிகள் எழுதப்பட்டு, படமாக்கப்பட்ட ஒரு காட்சிக்கு, அந்த சவுண்ட் ட்ராக்கை அப்படியே நீக்கிவிட்டு, அந்தக் காட்சியை மட்டும் அப்படியே வைத்துக்கொண்டு, உதட்டசைவு, உடலசைவு, காட்சித்தேவை அனைத்துக்கும் பொருத்தமாக புதிய இசையை எழுதி வியப்பின் உச்சிக்கே அழைத்துச் சென்றவர் இசைஞானி ( ஹேராம் )

13. முன்பெல்லாம் பின்னணி இசைச்சேர்ப்பில் ஒரு ரீல் திரையிட்டுக் காண்பித்ததும் இயக்குனரோ மற்றவர்களோ இசையமைப்பாளரிடம் வந்து அமர்ந்து அந்த படத்தில் வந்ததுபோல போடுங்கள், இந்த படத்தில் வந்தது போல போடுங்கள் என்றெல்லாம் சொல்லிப் பின் இசைச் சேர்ப்பு முடிந்து, அது சரியில்லாமல் மறுபடி இசையமைப்பாளரே வேறு மாதிரி இசை சேர்ப்பார். ஆனால் இளையராஜாவிடம் அப்படி இல்லை. ஒரு ரீல் திரையில் பார்த்தால் போதும் உடனே இசைக் குறிப்புகளை எழுத ஆரம்பித்து விடுவார். அதை வாசித்தாலே போதும். இப்படி வேண்டாம், வேறுமாதிரி போடுங்கள் என்று சொல்வதற்கான வாய்ப்பே இருக்காது.

14. இந்தியாவில் அல்ல ஆசியாவிலே முதன் முறையாக சிம்பொனி இசை அமைத்தவர் இசைஞானி. சிம்போனி கம்போஸ் பண்ண குறைந்தது
ஆறு மாதங்களாவது ஆகும். ஆனால் வெறும் 13 நாளில் மற்ற கம்போஸர்களை மிரள செய்தவர் இசைஞானி.

15. இசைஞானி விசிலில் டியூன் அமைத்து அதை ஒலிநாடாவில் பதிவு செய்து பின்பு பாடகரை வைத்து பாடிய பாடல், “காதலின் தீபம் ஒன்று”.

16. படத்தின் கதையைக் கேட்காமல் பாடலுக்கான சூழ்நிலைகளை மட்டும் கேட்டு இசையமைத்த ஒரே படம், ‘கரகாட்டக்காரன்’.

17. வசனமே இல்லாத காட்சியில் கூட, அந்த காட்சியை இசையால், மௌனத்தால் செழுமைபடுத்தி பார்வையாளர்களுக்கு கொண்டு போய்ச் சேர்க்க முடியும் என்பது ராஜாவிற்கு நன்றாக தெரியும். அதில் ராஜா கிரேட். இரண்டு பேர் மௌனமாக இருக்கும் காட்சியாக இருந்தால் கூட, அவர்களின் மன உணர்வுகளைக் கூட புரியாதவர்களுக்கும் புரிய வைத்துவிடுவார் ராஜா. அந்த அற்புதமான ஆற்றல் இளையராஜாவிற்கு உண்டு. இந்திய சினிமாவில் பின்னணி இசையில் நம்பர் ஒன் ஜீனியஸ் இளையராஜாதான்.

18. ராஜா ரீ-ரெக்கார்டிங் செய்வதற்கு முன் ஒரு முறைக்கு இரண்டு முறை படத்தைப் பார்ப்பார், மூன்றாவது முறை படம் திரையில் ஆரம்பிக்கும்போது நோட்ஸ் எழுத ஆரம்பித்துவிடுவார். அவர் ஆரம்பித்து முடிக்கும்போது படம் சரியாக முடிந்திருக்கும். அந்த அளவுக்கு எந்த இசையமைபாளராலும் நோட்ஸ் எழுத முடியாது.

19. இந்தியாவிலேயே பின்னணி இசை கேசட்டாக வந்து ஹிட்டான ஒரே படம் ‘பிள்ளை நிலா’. சவுண்ட்ராக்குகளும் பாடல்களைப் போல ரிக்கார்ட் மற்றும் கேசட்டுகளில் இடம்பெற்றது இளையராஜா இசையமைத்த படங்களில்தான்.

20. பருவமே புதிய பாடல் பாடு என்ற பாடலுக்கு தொடையில் தட்டி தாளத்திற்கு புதிய பரிமாணத்தைக் கொடுத்தவர் இசைஞானி

21. இந்தியாவில் முதல் முறையாக சிறந்த பிண்ணனி இசைக்கான விருதைப் பெற்றவர் இசைஞானி (பழசிராஜா)

22. இசைஞானி முதன் முதலாக ‘ஸ்டீரியோ” முறையில் பாடல்களை பதிவு செய்த படம் ப்ரியா.

23. 137 வாத்தியங்கள் பயன்படுத்தப்பட்ட பாடல் ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’

24. இசைஞானியின் பாடலுக்காக கதை எழுதிய வெற்றிக்கண்ட படங்கள் வைதேகி காத்திருந்தாள், இளமைக் காலங்கள், அரண்மனைக் கிளி.

25. இந்தியாவுக்கு கம்ப்யூட்டர் இசையை அறிமுகப்படுத்தியவர் இசைஞானி (புன்னகை மன்னன்).

26. ‘பஞ்சமுகி’ என்றொரு ராகம் நமது ராகதேவனால் இயற்றப்பட்டுள்ளது.. ஆனால் இதுவரை அவர் இந்த ராகத்தினை எந்த பாடலிலும் பயன்படுத்தாமல் ரகசியமாக வைத்துள்ளார்..

27. பொதுவாக 2 அல்லது 3 நாட்களில் படத்திற்கான இசையமைப்பை முடித்துவிடுவார் ராஜா, ஆனால் அதிகபட்சமாக, அதாவது 24 நாட்கள் பின்னணி இசைக்கோர்ப்புக்காக எடுத்துக்கொண்ட படம் ( காலாபாணி ) தமிழில் ( சிறைச்சாலை).

28. முன்பெல்லாம் கிட்டார், தபேலாக் கலைஞர்கள் உதவியுடன் ஆர்மோனியத்தை இசைத்து டியூன் உருவாக்குவார். அதற்குப் பிறகு ஆர்மோனியத்தில் வாசித்துப் பார்ப்பதில்லை, கண்களை மூடிச் சிந்திப்பார், இசை வடிவங்கள் அவர் மூளையில் இருந்து புறப்படும். அவற்றை அப்படியே இசைக் குறிப்புகளாக எழுதிவிடுவார். ஆர்மோனியம் இல்லாமல் இசை அமைக்கும் இந்த ஆற்றல், இந்திய சினிமா இசை
அமைப்பாளர்களில் இவரிடத்தில் மட்டுமே இருக்கிறது என்பது பிரமிப்பான உண்மை.

29. இசைஞானியின் பின்னணி இசை மற்றும் ட்யூன்களைக் காப்பியடித்து பெரிய இசையமைப்பாளரானவர்கள் ஏராளம். இல்லாதவன் எடுத்துக்கிறான் என்று ஆரம்பத்தில் சும்மா விட்டுவிட்டார் இசைஞானி. இப்போதுதான் அதற்கு ஒரு தீர்வு கண்டிருக்கிறார்.

30. இளையராஜா இதுவரை நான்கு முறை தேசிய விருதுகள் பெற்றிருக்கிறார். பத்மபூஷன் விருதும் அவருக்குக் கிடைத்திருக்கிறது.

31. உலகின் முக்கிய இசை விற்பன்னர் எனப்பட்ட பால் மரியா, பிரான்ஸ் வந்த இசைஞானியைச் சந்திக்க 5 நிமிடங்கள்தான் முதலில் நேரம் ஒதுக்கினார். ஆனால் சந்தித்த பிறகு, ராஜாவின் மேதைமை வியந்து, 3 மணி நேரம் பேசிக் கொண்டே இருந்தாராம்!

32. ரஜினி, கமல் இருவரின் அதிகப் படங்களுக்கு இசை தந்தவர் இளையராஜாதான்.

33. ரஜினியை எப்போதும் சாமி என்றுதான் இளையராஜா அழைப்பார். ரஜினியும் ராஜாவை சாமி என்றுதான் அழைப்பார்.

34. புகைப்படங்கள் எடுப்பதில் நிபுணத்துவம் மிக்கவர் இசைஞானி. இவர் எடுத்த புகைப்படங்களை வைத்து சென்னை மற்றும் கோவையில் ஒரு கண்காட்சி நடத்தப்பட்டது. இவரது 100 சிறந்த புகைப்படங்களைத் தொகுத்து தனி புத்தகமும் வெளியாக உள்ளது. இதில் அவரது படங்களைப் பற்றி பிரபலங்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

35. இளையராஜாவின் பிரபலமான பாடல்கள் பலவற்றுக்கு வரிகள் தந்தவர் அவரது தம்பி கங்கை அமரன். ‘இசைக்குக் கிடைத்த மிகச் சிறந்த வரம் இளையராஜா’ என்பது அவர் கருத்து.

36. திரைப்படங்களுக்கு பாடல்களே எழுதமாட்டேன் என்பதைக் கொள்கையாகவே வைத்திருந்த கவிஞர் சிற்பி, இளையராஜா இசையில் எழுதிய ஒரே பாடல் ‘மலர்களே.. நாதஸ்வரங்கள்…!’ படம்: கிழக்கே போகும் ரயில்.

37. தனது சொந்தப் படங்களின் இசை வெளியீடு, தன் மகன்கள் இசையமைக்கும் படங்களின் இசை வெளியீடுகளுக்குக் கூடப் போகாத இளையராஜா, பாரதிராஜாவின் பொம்மலாட்டம், கமலின் விஸ்வரூபம் படங்களின் இசை வெளியீட்டு நிகழ்வுகளுக்குப் போய்ச் சிறப்பித்தார். இரண்டு படங்களுக்குமே அவர் இசையமைக்கவில்லை. நட்புக்கு அவர் தந்த மரியாதை அது!

38. இளையராஜாவின் திருவாசகம் சிம்பொனி ஆரட்டோரியோவைக் கேட்ட எழுத்தாளர் சுஜாதா, ‘கடவுளைக் கோயில்களில் தேடிக் கொண்டிருக்க வேண்டாம். இளையராஜாவின் திருவாசகத்தைக் கேட்டால் போதும்.. கடவுளைக் காணலாம்!’ என்றார்.

39. தன்னிடம் பணியாற்றிய ஏ ஆர் ரஹ்மான் இரு ஆஸ்கர் விருதுகளுடன் நாடு திரும்பினார். அவருக்கு நடந்த பாராட்டு விழாவில் இளையராஜா பங்கேற்று ரஹ்மானுக்கு தங்கச் சங்கிலி அணிவித்தார். அப்போது ரஹ்மான், ‘எனக்கு விருது கிடைக்கக் காரணம், எனது முகவர்கள் சரியாக என் இசையை ஆஸ்கர் குழுவுக்குக் கொண்டு சென்றதுதான். ராஜா சார் இதைச் செய்திருந்தால் அவரது இசைக்கு எப்போதோ ஆஸ்கர் கிடைத்திருக்கும்,” என்றார்.

40. ராஜா இசை வித்தகர் மட்டுமல்ல… அற்புதமான கவிஞர். காவியக் கவிஞர் வாலிக்கே வெண்பா கற்றுக் கொடுத்தவர். அதனால் ராஜாவை தனது ‘குரு’ என்றும் கூறி மகிழ்ந்தவர் வாலி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

TTC fare hike, early Sunday subway start to take effect

 

he cost to use the Toronto Transit Commission will rise Sunday when previously announced fare increases take effect.

The cash cost of a one-way trip on the TTC will rise by 25 cents from $3.00 to $3.25, and the cost of a trip using a token or a Presto electronic fare card will rise from $2.80 to $2.90.

Metropasses, which have increased in cost by nearly 22 per cent over the last six years, will remain $141.50 per month.

PHOTOS

 
TTC

But service is set to improve as well, with subway service starting at 8 a.m. on Sundays instead of 9 a.m.

The early start is part of a series of service increases promised by Mayor John Tory and TTC Chair Josh Colle, which includes 10 minute or better service frequency on most routes, and more frequent off-peak streetcar and bus service.

The fare increases are needed in part to patch a $58 million hole in the commission’s 2016 budget.

Other fare increases include a $1.50 increase in the cost of a weekly pass and 50 cent increase to the cost of a single day or family pass.

The TTC’s operating budget is projected to be $1.7 billion in 2016.

cp24.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். இந்துக் கல்லூரியில் 30 பேருக்கு 3ஏ! உயிரியல், தொழில்நுட்பப் பாடங்களில் மாவட்ட ரீதியில் முதலிடம்!! 

யாழ். இந்துக் கல்லூரியில் 30 பேருக்கு 3ஏ! உயிரியல், தொழில்நுட்பப் பாடங்களில் மாவட்ட ரீதியில் முதலிடம்!!

ன்று வெளியான க.பொ.த.உயர்தரப் பரீட்சை முடிவுகளில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 30 மாணவர்கள் 3 ஏ பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர். இப்பாடசாலையின் உயிரியல் பிரிவு மாணவனான ஆனந்தராஜா ஹரிசங்கர் 3ஏ பெறுபேற்றைப் பெற்று யாழ். மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். தொழில்நுட்பப் பிரிவிலும் இந்தப் பாடசாலையின் மாணவனே மாவட்ட ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளனர். இதுவரை பாடசாலைக்குக் கிடைக்கப்பெற்ற பரீட்சை முடிவுகளின் பிரகாரம் கணிதப் பிரிவில் 30 மாணவர்களும் உயிரியல் பிரிவில் 6 மாணவர்களுமாக 30 பேர் வரை 3ஏ பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர். இதேவேளை, ஹாட்லிக் கல்லூரி மாணவன் கலாமணி மதனாகரன் 3ஏ பெறுபேற்றைப் பெற்று கணிதப் பிரிவில் யாழ். மாவட்டத்தில் முதல் நிலையைப் பெற்றுள்ளார்.

Read more: http://malarum.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியாகியுள்ள நிலையில் மாவட்ட மட்டத்தில் முதல் இடம் பெற்றுள்ள மாணவர்களின் விவரம் வருமாறு:-

யாழ்.மாவட்டம் உயிரியல் பிரிவில் யாழ். இந்துக் கல்லூரி மாணவன் ஆனந்தராஜா ஹரிசங்கர் 3ஏ சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும் தேசிய மட்டத்தில் 24ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.

 

பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் யாழ்ப்பாண இந்துக் கல்லூரியின் பாலசுப்பிரமணியம் ஞானகீதன் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார்.

கணிதப் பிரிவில் நெல்லியடி மத்திய கல்லூரி மாணவன் கலாமணி மதனாகரன் 3ஏ சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் முதல் இடத்தையும் தேசிய மட்டத்தில் 22ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.

வர்த்தக பிரிவில் கொக்குவில் இந்துக்கல்லூரி மாணவன் மாணிக்கவாசகர் லஜீபன் 3ஏ பெற்று மாவட்ட மட்டத்தில் முதல் இடத்தையும் தேசிய மட்டத்தில் 62 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.

கலைப்பிரிவில் அச்சுவேலி இடைக்காடு மகா வித்தியாலய மாணவி குணபாலசிங்கம் நிதர்சனா 3ஏ சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் முதல் இடத்தையும் தேசிய மட்டத்தில் 46ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டம் கிளிநொச்சி மாவட்டத்தில் விஞ்ஞானப் பிரிவில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி முதலிடத்தைப் பெற்றுள்ளது.

மதுரநாயகம் அஜித் ஜெரோம் ஏ,2பி பெறுபேற்றைப் பெற்று மாவட்ட ரீதியில் முதல் இடம்பெற்றுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டம் முல்லைத்தீவு மாவட்டத்தில் கணிதப் பிரிவில் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி முதலிடத்தைப் பெற்றுள்ளது.

விஸ்வலிங்கம் விஜிந்தன் ஏ,2பி பெறுபேற்றைப் பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

கமலநாதன் பூர்வீகன் 3பி பெறுபேற்றைப் பெற்று மாவட்ட ரீதியில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் கணிதப் பிரிவில் மட்டக்களப்பு வின்சன்ட் தேசிய மகளிர் பாடசாலை மாணவியும் விஞ்ஞானத்தில் புனித மைக்கேல் கல்லூரி மாணவனும் சாதனை படைத்துள்ளனர்.

மட்டக்களப்பு வின்சன்ட் தேசிய மகளிர் பாடசாலை மாணவியான கௌரிகாந்தன் நிஷாங்கனி கணித பிரிவில் மாவட்டத்தில் முதலாம் இடத்தையும் தேசிய ரீதியில் நான்காம் இடத்தையும் பெற்றுள்ளார்.

இதேபோன்று மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி மாணவன் ரா.ரிசோத்மன் விஞ்ஞான பிரிவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் இடத்தையும் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார்.

Read more: http://www.malarum.com

அகில இலங்கை ரீதியில் யாழ். மாணவர்கள் இருவர் சாதனை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

One year old and one year young !!!

12417921_663021477133731_336493539038433

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

#2015 முடிவில் ஒரு பிள்ளை,
# 2016 இன் ஆரம்பத்தில் இன்றொரு பிள்ளை !!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

An extreme cold weather alert issued for the City of Toronto remains in effect this morning after temperatures plummeted overnight.

Toronto’s Chief Medical Officer of Health issued the alert Sunday and the advisory continues today as Toronto braces for more frigid weather. 

A high of -11 C is expected in the city today and Environment Canada says Toronto could see a low of -15 C on Monday night.

PHOTOS

 
cold

During the extreme cold, residents are being warned to bundle up and avoid prolonged exsposure to the elements.

“There are two main things that we are considered about with the cold. . One is hypothermia, where the body’s temperature actually drops below 35 C and then you can also get actual freezing of the body tissue which we call frost bite,” Associate Medical Officer of Health Dr. Howard Shapiro told CP24 on Monday morning. “The main thing is to dress appropriately, to be able to take breaks so you can warm up and also to be aware of the signs or symptoms of frostbite or hypothermia.”

Pat Anderson, manager of Shelter, Support and Housing Administration with the City of Toronto, says that starting this year, the city will keep warming centres open 24 hours in January and February regardless of whether a cold weather alert has been issued.

"In the shoulder seasons, when an alert is called, they are open 24 hours as well," she said. 

Staff at 20 drop-in centres across the city will also distribute tokens during cold weather alerts and additional beds are made available.

The weather should return to more seasonable temperatures on Tuesday.

Environment Canada is calling for a high of -3 C on Tuesday, a high of 0 C on Wednesday and a high of 1 C on Thursday.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்பாணத்தில உதிக்கிற விடியலின் சில கணங்கள்

 

12496455_928199043901118_704666993717562

12493670_928199010567788_839913753082774

12402065_928198940567795_669874840262991

12484730_928198927234463_166143153768027

11063889_928198980567791_737187673943964

12491766_928198947234461_861877129949474

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இசைஞானி இளையராஜாவுடன் சில நிமிடங்கள்...! 
ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!!

இசையை ஏந்தி, மிதந்து வரும் காற்றலைகளில், இவரது நாதம் கட்டாயம் இழையோடும். ஒரு நாளில் 5 நிமிடமாவது, இவரது இசையை நாம் செவிமடுக்காமல் இருக்க முடியாது. இது இசை உலகின் வரலாறு; இயற்கையின் விதி. நம் வாழ்வின் ஆசைகள், நிராசைகள், வலிகள், ஏக்கங்கள், கொண்டாட்டங்கள், மகிழ்ச்சிகள் என அத்தனை அம்சங்களிலும் இவரது இசை, நமக்கு இதம் தரும் ஒத்தடம்.

"ஏட்டுல எழுதவில்ல; எழுதி வைச்சுப் பழக்கமில்ல; இலக்கணம் படிக்கவில்ல. இந்ந நாடோடி பாட்டுக்கு தாய் தந்தை யாரோ ? என்பது போல இந்த இசை மகானின் இசை ஞானம், இயற்கையாகவே இவருக்குள்ளே ஊற்றெடுத்த பிரவாகம். இந்த பிரபஞ்சம் இயங்கும் வரை, இவரது இசை மனிதகுலத்தை தாலாட்டிக்கொண்டே இருக்கும்.

"நேற்று இல்லை, நாளை இல்லை; எப்பவுமே நான் ராஜா; கோட்டையில்லை, கொடியும் இல்லை; அப்பவும் நான் ராஜா- என்ற கவிஞர் வாலியின் வரிகள், இந்த "இசை ராஜாவுக்கு மட்டுமே பொருந்தும். "இசை ஞானி இளையராஜாவை தவிர, யாரையும் இப்படி தமிழ் உலகம் அறிமுகப்படுத்தாது.

தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தில், மிக ஏழ்மையான குடும்பத்தில், ராமசாமி- சின்னத்தாயம்மாள் தம்பதிக்கு 1943 ஜூன் 2ல் பிறந்தவர். வறுமை காரணமாக, வைகை அணை கட்டும் போது மண் சுமந்தவர். இசையே, ரத்தநாளங்களில் பரவிக்கிடந்ததால், வறுமையின் வலிகளை மறந்து, பதினான்கு வயது முதல் ஆர்மோனியம் சுமந்தார். சகோதரர்கள் பாவலர் வரதராஜன், கங்கை அமரனுடன் இணைந்து இந்தியா முழுவதும் கச்சேரி, நாடகங்கள் நடத்தினார். எப்படியாவது சென்னை சென்று, சாதிக்க வேண்டும் என அம்மாவிடம் ஆவலை வெளிப்படுத்த, அவரோ வீட்டில்இருந்த வானொலி பெட்டியை 400 ரூபாய்க்கு விற்று, வழியனுப்பி வைத்தார். அதுதான் இசைச்சகோதரர்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தை உருவாக்கியது. தமிழ் சினிமா உலகிற்கு புது இசை வடிவத்தை தந்தது.

இந்தி இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மனின் பாடல்கள், தமிழகத்தை ஆக்கிரமித்திருந்த நேரம். முதன்முதலில் 1976ல் "அன்னக்கிளி படத்தில் இளையராஜா இசையமைப்பில், ஜானகி பாடி வெளியான "மச்சானைப் பார்த்தீங்களா..., பாடல் பட்டி, தொட்டியெல்லாம் பட்டையைக் கிளப்பியது. நாட்டுப்புற இசைச்சுவையோடு இந்த பாட்டு, "மக்களின் இசையாக மாறி, சாமானியனையும் சங்கீதத்தின் பக்கம் திருப்பியது. தொடர்ந்து "16 வயதினிலே உட்பட இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தியில் 950 படங்களில் 4500 பாடல்களுக்கு இசையமைத்து சாதனை புரிந்துள்ளார்.

லண்டன் பி.பி.சி., 155 நாடுகளில் கருத்துக்கணிப்பு நடத்தியதில், "தளபதி படத்தில் இவரது இசையில் உருவான "ராக்கம்மா கையத்தட்டு...,பாடல், உலகின் சிறந்த 10 பாடல்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டது. லண்டன் "ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிராவில் சிம்பொனிக்கு இசையமைத்த, ஆசிய கண்டத்தின் முதல் இசையமைப்பாளர் (1993) இவர். "மேஸ்ட்ரோ என அழைக்கப்பட இதுவே காரணம். ஓடாத படங்கள் எல்லாம், இவரது இசைக்காகவே ஓடியது. ஹீரோக்களுக்காக படங்கள் வெள்ளி விழா கண்ட நேரத்தில், ஒரு இசை அமைப்பாளருக்காகவே திரைப்படங்கள், தியேட்டர்களை விட்டு அகல மறுத்தன என்றால் அதுவும் இளையராஜாவுக்காகத்தான். கதாநாயகனுக்கு மட்டுமே "கட் அவுட் வைத்து கொண்டாடிய தமிழ் ரசிகர் உலகம், இவருக்கும் "கட் அவுட் வைத்து அழகு பார்த்தது.

"பூவே பூச்சூடவா படத்திற்காக, இவரது இசையமைப்பிற்கு ஒப்புதல் பெற, பிரபல மலையாள இயக்குனர் பாசில், ஓராண்டு காத்திருந்தார் என்பது இன்னும் திரையுலகம் மறக்காத விஷயம். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை, 4 முறை வென்றார். திரைப்பட இசை அல்லாத, "பஞ்சமுகி கர்நாடக செவ்வியலிசை ராகத்தை உருவாக்கினார். மாணிக்கவாசகரின் "திருவாசகத்தை, இசை வடிவில் வெளியிட்டார். "நாதவெளியினிலே, "பால்நிலாப்பாதை, "எனக்கு எதுவோ உனக்கும் அதுவே உட்பட பல்வேறு புத்தகங்களை எழுதியவர்.

அண்மையில் மதுரை வந்த இளையராஜா, நம்மோடு உரையாடியதில் இருந்து...

* பண்ணைப்புரம் ராசய்யா, "மேஸ்ட்ரோ இளையராஜாவாக மாறியதை எப்படி பின்னோக்கி பார்க்கிறீர்கள்?

"மேஸ்ட்ரோவாக இருந்தாலும், பண்ணைப்புரத்து சிறுவனாகத்தான் இப்போதும் என்னைப் பார்க்கிறேன்.

* உங்களையும் பிரமிக்க வைத்த இசையமைப்பாளர்...

கடவுள்தான். அவர் ஒரே தாளத்தில் சூரியன், சந்திரன், சுக்கிரன் என கோள்களை சுற்ற வைத்திருக்கிறார். ஒரு சுற்று "சரிகமபதநி எனில், ஒவ்வொரு கிரகத்தையும், ஒவ்வொரு தாளத்தில் சீராக சுற்ற வைக்கிறார். படைப்புகளில் என்னைப்போல் நீ இல்லை; உன்னைப்போல் நானில்லை. கல்யாணி ராகம் மாதிரி, தோடி ராகம் இல்லை. தோடி மாதிரி, கல்யாணி இல்லை. ஆனால், ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்கிறது. அதனால், இறைவன்தான் எனக்குப் பிடித்த இசையமைப்பாளர்.

* திரைப்படத்தில் நடித்திருக்கலாம் என எண்ணியது உண்டா?

நான் இப்போதும் நடித்துக்கொண்டுதான் இருக்கிறேன் என தெரியவில்லையா (!) உங்களுக்கு?

* உங்கள் இசையில் வார்த்தைகளுக்கும், இசைக்கும் சமவாய்ப்பு கொடுத்தீர்கள். இன்று கணினி இசைக்கருவிகளின் ஆக்கிரமிப்புகளால், வார்த்தைகள் சிதைக்கப்படுவது பற்றி...

யார் சிதைக்கிறார்களோ, யாருடைய இசையில் இது நடந்து கொண்டிருக்கிறதோ, அவர்கள் சொல்ல வேண்டிய பதிலை நான் எப்படி சொல்வது? ஒரு பாடல் வெற்றியடைந்த பின், இம்முறைதான் சரியானது என அவர்கள் கூறினால், என்ன செய்ய முடியும்?

* நீங்கள் இசையமைக்க, அதிக நேரம் எடுத்துக்கொண்ட படம், பாடல்?

ஒரு படத்தின் அனைத்து பாடல்களுக்கும், இசைக் குறிப்பு எழுதி முடிக்க எனக்கு 30 நிமிடம் ஆகும். அதை பதிவு (ரிக்கார்டிங்) செய்யும் முன், இசைக்குறிப்புகளை இசைக்கலைஞர்களுக்கு வினியோகிக்க, ஒத்திகை பார்க்க அதிக நேரம் ஆகும். அதிக நேரம் எடுத்துக்கொள்வதால், ஒரு பாடல் பிரபலமாகும் என கூறமுடியாது. குறைந்த நேரத்தில் பதிவு செய்யப்பட்ட பாடல், வெற்றி பெறாது என சொல்ல முடியாது. மலையாளத்தில் வெளியான "குரு படத்தில், உயர்ந்த கருத்துக்கள் சொல்லப்படாவிட்டாலும்கூட, கதைக்காக அதில் 5 பாடல்களுக்கும், பின்னணி இசைக்கும் அதிகபட்சமாக 25 நாட்கள் எடுத்துக்கொண்டேன்.

* பாடல், இசையமைப்பாளர்களுக்காக படங்கள் ஓடின அன்று; இன்று அந்நிலை இல்லையே?

நல்ல இசை இருக்கும் படத்தைத்தான் பார்க்க வேண்டும் என முடிவு செய்துவிட்டால், இக்கேள்வி எழாது.

* தமிழ் சினிமாவில் முதன்முதலில் "புன்னகை மன்னன், "விக்ரம் படங்களில் கணினி இசையை துவக்கி வைத்தீர்கள். அதுவே இன்று ஆக்கிரமித்து உள்ளது. மண்ணின் மரபு சார்ந்த இசை பின்தள்ளப்பட்டு, மேற்கத்திய இசை ஆக்கிரமித்துள்ளதே...,?

கணினிமயமாக இருந்தால் என்ன, எதுவாக இருந்தால் என்ன? உள்ளுக்குள் இருக்கும் இசையை பாருங்கள். எங்கு சென்றாலும், எந்த உயரத்தில் இருந்தாலும், பறந்தாலும் நம் பாதம் தரையில் பட்டுத்தானே ஆகவேண்டும்.

* இளையராஜாவின் புது "இசை வடிவம் எப்போது?

எந்த நிமிடத்தில், எப்போது எனது இசை புதிதாக இல்லையோ, அப்போது என்னிடம் கேளுங்கள்.

* இசைக்கும் கைகள், எழுதவும் துவங்கி விட்டதே? இது இசையமைப்பாளர்களால் இயலாத விஷயம். இந்த எழுத்து வல்லமை எப்படி வந்தது?

சினிமா பாடல்களில், ஓரிரு வார்த்தைகளை பல்லவியாக கொடுப்பது வழக்கம். இப்படி, என்னுடன் வேலை செய்த கவிஞர்களுக்கு, பல்லவிகளை கொடுத்திருக்கிறேன். "இதயகோயில் படத்தில் "இதயம் ஒரு கோயில்..., பாடலுக்கு மெட்டு ஒத்துவரவில்லை. நானே அந்த பாடலை எழுதினேன். அன்றிலிருந்து எழுத்தில் ஆர்வம் பிறந்தது. பன்னிரு திருமுறை, சங்க இலக்கியம், நாலாயிர திவ்ய பிரபந்தம் படித்துப் பார்த்தபின், அடடா..., என்னமாதிரியான இலக்கியங்கள் இருக்கின்றன என வியந்து கற்றேன்.

ஒரு பாடலை படிக்கும்போது உள்வாங்கும் தன்மை, அதன் ஆழம், விசாலம், எதுகை, மோனை, அழகுணர்ச்சியை இயல்பாக பார்க்கும் தன்மை வாய்த்தால் யாரும் பாடல் எழுதலாம். காட்டு மரம் புல்லாங்குழல் ஆகவில்லையா? குழலாக இருந்தால் அதில் இசை வரவேண்டும். எத்தனையோ பேர், தமிழறிந்து புல்லாங்குழல்களாக இருக்கிறார்கள். புல்லாங்குழலில் காற்றை ஊதும்போது, விரல்களை எந்த நேரத்தில் ஏற்றி இறக்க வேண்டும் என்பதை இயக்க ஒருவன் தேவை. அவன்தான் இறைவன். அவனது விரல்களின் ஏற்ற, இறக்கங்கள் என்னுள் பாடலாக, இசையாக, புத்தகமாக வெளிவருகிறது.

இவ்வாறு மனம் திறந்தார்.

 
இசைபிரம்மா இளையராஜா's photo.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் இன்று முதல் இலவச அவசரகால அம்புலன்ஸ் சேவை - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி:-

 

வடக்கில் இன்று முதல் இலவச அவசரகால அம்புலன்ஸ் சேவை - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி:- 
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-

 

12410560_1712818062289021_2990369240307912439056_1712817965622364_8234636287262712472236_1712818078955686_6276659859550312509569_1712818022289025_8511356830832112400466_1712818065622354_28438464934276

வட மாகாணத்தில் இன்று(06-01-2016) முதல் அவசர மருத்துவ நிலைமைகளின் போது பொது மக்கள் இலவசமாக நோயாளா் காவு வண்டியை பெற்றுக்கொள்ளும் வகையில் அவசர கால அம்புலன்ஸ் சேவை ஆரம்பிக்கபட்டுள்ளது
இன்று பிற்பகல் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில்  வட மகாகண சுகாதார சேவைகள் அமைச்சா் ப.சத்தியலிங்கம்  உத்தியோகபூா்வமாக ஆரம்பித்து வைத்துள்ளாா்.
 
வட மாகாணத்தில் அவசர நிலைகளிலும்,விபத்துகளின் போதும் நோயாளா்களை விரைவாக வைத்தியசாலையில் அனுமதிப்பதன் மூலம் உயிரிழப்புக்களையும் மருத்துவ பின்  விளைவுகளையும் குறைக்கும்  வகையில் இச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
 
யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,முல்லைத்தீவு,வவுனியா,மன்னாா் ஆகிய மாவட்டங்களைில் இச்சேவை  மேற்கொள்ளப்படும்.கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அமைந்துள்ள ஒருங்கிணைப்பு நிலையம் நவீன தொழிநுட்ப வசதிகளுடன்  இச்சேவையை ஒருங்கிணைத்து வழங்கும் எனவும் வட மாகாண  சுகாதார சேவை திணைக்களம் தெரித்துள்ளது.
 
வட மாகாணத்தைச்சோ்ந்து மக்கள் தங்களின் அவசர மருத்துவ நிலைமைகளின் போது 021 222  4444, மற்றும் 021 222 5555 ஆகிய இலக்கங்களுக்கு தொடா்பினை ஏற்படுத்தி மேற்படி அவசரகால அம்புலன்ஸ் சேவையினை பெற்றுக்கொள்ள முடியும்.
 
விபத்துக்கள், அவசர மருத்துவ நிலைகள்,அவசர பிரசவ நிலைகள் போன்ற தேவைகளுக்கு இச்சேவையினை பயன்படுத்த முடியும் எனவும், கிளினிக்காக வைத்தியசாலைக்கு செல்லுதல்,தனியாா் வைத்தியசாலைக்கு செல்லுதல்,அவசரமற்ற மருத்துவ நிலைமைகள் போன்றவற்றுக்குஇச்சேவையினை பயன்படுத்த முடியாது எனவும் வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்களும் அறிவி்த்துள்ளது.
 
இதேவேளை பொது மக்கள் இச் சேவையின் முக்கியத்துவம் உணா்ந்து பொறுப்புடன்  அவசர  தேவைகளுக்க மாத்திரம் உரிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி இச் சேவையினை பெற்றுக்கொள்ளுமாறும், குறித்தச் சேவையினை துஸ்பிரயோகம் செய்யும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் எனவும்  வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் கோரியுள்ளது.
 
இச்சேவையானது அவசர மருத்துவ நிலைமைகளின போது அவசர அழைப்பு எண்களுக்கு தொடா்பினை ஏற்படுத்தும போது அழைப்பை பெறும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் உள்ள ஒருங்கிணைப்பு அலுவலகம்  அழைப்பு விடுத்த இடத்திற்கு அருகில் உள்ள அம்புலன்ஸ் வண்டியை அம்புலன்ஸ் ஜிபிஎஸ் தொழிநுட்ப மூலம் அறிந்து அதன் சாரதிக்கு தகவல் வழங்கும்
 
சாரதி  உரிய இடத்திற்கு சென்று நோயாளியை ஏற்றி நோயாளியின் நிலைமைக்கு ஏற்ப  அதற்கான சிகிசை வழங்க கூடிய அருகிலுள்ள வைத்தியசாலையில் நோயாளியை அனுமதித்துடன் அனுமதித்த நேரத்தையும் வைத்தியசாலையின் பெயரையும் ஒருங்கிணைப்பு நிலைய இயக்குநருக்கு அறிவிக்க வேண்டும்.
 
இவ்வாறு இச்சேவை செயற்படு்த்தப்படும் அந்த  வகையில் யாழை்பபாணத்திற்கு 31 நோயாளா் காவு வண்டியும், கிளிநொச்சிக்கு 18 நோயாளா் காவு வண்டியும்,முல்லைத்தீவு, வுனியாவ,மன்னார் மாவட்டங்களுக்கு தலா  17 நோயாளா் காவு வண்டிகளும் சேவையில் ஈடுப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 இலங்கையில் முதல் முதலாக வட மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள  இச்சேவையின் ஆரம்ப நிகழ்வில் வட மாகாண சுகாதார சேவைகள்  அமைச்சா் மாகாண  சபை உறுப்பினா்கள், மருத்துவ  அதிகாரிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.