Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். குடா முற்றுகையும் தமிழ் ஊடகங்களின் அரசியலும்

Featured Replies

யாழ். குடா முற்றுகையும் தமிழ் ஊடகங்களின் அரசியலும்

உலகில் மனித நாகரீகங்களின் பரிணாம வளர்ச்சியின் ஒரு கட்டமாய் தொடர்பாடலும் அதன் நிமித்தமாய் செய்தி பரிமாற்றமும் அவசியமாகியது. ஊடகங்கள் தோற்றம் பெற்றன. வளர்ச்சிப் போக்கில் நாகரீகங்களின் பரிணாமத்தின் முதிர்ந்த கட்டமான இன்று ஊடகங்கள் செய்திகளை பரிமாறுகின்றனவோ இல்லையோ அவை சார்ந்த அரசியலை மிகத் தெளிவாகவே முன்வைக்கின்றன. முன்வைக்கின்ற என்ற சொல்லாடலை விட திணிக்கின்றன என்ற சொல்லாடலே பொருத்தமானது என நான் கருதுகிறேன்.

எமது விருப்பங்கள் குறித்த அக்கறைகள் எதுவுமின்றி எமது புலன்களின் வழி உள்ளிறங்கி எமது மனங்களின் மீதான வன்முறையை ஊடகங்கள் நிகழ்த்துகின்றன.

உதாரணத்துக்கு ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஒரு கார் குண்டு வெடிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். (அது இப்போது பாக்தாத்தில் வாடிக்கையான ஒரு நிகழ்வாகிப் போய்விட்டது). அது குறித்த செய்தியை உலகின் முன்னணி செய்து நிறுவனங்களான ரொய்ட்டர்ஸ், ஏ.எஃப்.பி போன்றவை ஊடகங்களுக்கு அனேகமாக பின்வரும் மொழியில்தான் அனுப்புகின்றன.

'இன்று காலை 9 மணியளவில் பாக்தாத்தின் புறநகர்ப் பகுதியில் வர்த்தக மையம் ஒன்றுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரிலிருந்த குண்டு வெடித்ததில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்".

இச்செய்தி உலகின் கடைக்கோடியில் இருக்கும் ஒருவருக்கு அப்படியே போய்க் கிடைக்கிறது என்று நீங்கள் நம்புகிறீர்களா? அப்படி நீங்கள் நம்பினால் உங்களுக்காக பரிதாபப்படுவதை விட வேறு வழியில்லை.

இந்தச் செய்தியை சி.என்.என். போன்ற பெரும்பாலான அமெரிக்க ஊடகங்கள் அல்கைதாவையோ அல்லாத ஈராக்கில் உள்ள தீவிரவாதக் குழுக்களில் ஏதாவது ஒன்றையோ முன்னிறுத்தி மூலச் செய்தியுடன் (ழசபைiயெட வநஒவ) அப்பாவி மக்கள் மீதான இஸ்லாமிய பயங்கரவாதிகளின் திட்டமிடப்பட்ட தாக்குதல் போன்ற வார்த்தை பிரயோகங்களும் மேலதிகமாக உட்செருகப்பட்டு நிஜச் செய்தியுடன் அமெரிக்க சித்தாந்தமும் சேர்த்து திணிக்கப்படுகிறது. இதனு}டாக ஈராக்கில் அமெரிக்க துருப்புகளின் இருப்பையும் உறுதி செய்கின்றன.

இந்த செய்தியை அல்ஜசீரா போன்ற மத்திய கிழக்கு ஊடகங்கள் வெளியிடும் போது அமெரிக்க துருப்புக்கள் மீது இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் போன்ற வார்த்தைகளை ஒத்த இடைச்செருகலுடன் இந்தத் தகவல்கள் குறித்த மாறுபட்ட முரண் தகவல்களையும் வெளியிட்டு இஸ்லாமிய சித்தாந்தத்தை செய்தியுடன் கலந்து விடுகின்றன.

'நடுநிலைமை" என்று தங்களை தாங்களே கூறிக் கொள்ளும் பி.பி.சி. போன்ற ஊடகங்கள் நிஜச்செய்தியுடன் இருதரப்பு செய்திகளையும் கலந்து கட்டி அடித்து ஒரு புூடகமான மொழியில் பார்வையாளனின் முன்வைக்கின்றன.

நிஜத்தைத் தேடி அலைந்து இவையெல்லாவற்றையும் ஒரு சேர கவனிக்கும் ஒருவர் மயக்கமடையாமல் இருப்பதற்கு மிகுந்த மனத்தைரியமும் துணிச்சலும் தேவை. இறுதியில் மாண்டு போனவர்களுடன் சேர்ந்து உண்மையும் மடிந்துவிடுகிறது. ஆனால் இது குறித்த அரசியல் மட்டும் வாய்கிழியும் அளவிற்கு தொடர்ந்து ஊடகங்களில் பேசப்படுகின்றன.

அவரவர்களின் இருப்பு சார்ந்து கொள்கைகள், கோட்பாடுகள், சித்தாந்தங்கள் சார்ந்து செய்திகளின் மிகைப்படுத்தலும் திரிபுகளும் ஊடகங்களால் அரங்கேற்றப்படுகின்றன.

இதனு}டாக எமக்குத் தெரிவதெல்லாம் ஒன்றுதான்... நாம் ஊடகங்களால் வழிநடத்தப்படுகிறோம். எமது விருப்பு வெறுப்புகளுக்கும் அப்பால் அதன் வழியே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டிருக்கிறோம். இன்று உலகை ஊடகங்கள் ஆட்சி செய்கின்றன என்ற கதையாடல் மிகைப்படுத்தப்பட்ட ஒன்றல்ல.

இலங்கைத் தீவு மட்டும் இந்த சூத்திரத்தை விட்டு விலகியா பயணிக்கும்?

யுத்த காலத்தில்- சமாதானம் பற்றியும் சமாதான காலத்தில் யுத்தம் பற்றியும் பேசும் ஊடகங்களின் அரசியல் மேற்குறித்த அவதானிப்புக்குரிய ஒன்றுதான்.

ஆனால் உலகளவில் பரந்து போயிருக்கும் இந்த ஊடக அரசியலை எமது தமிழ் ஊடகங்கள் கவனமாக உள்வாங்கி செயற்படுகின்றனவா? பதில் உவப்பானதாக இல்லை.

இதனை மையப்படுத்தி நான் இங்கு பேச விழைவது எமது தமிழ் ஊடகங்களின் அண்மைய அரசியல் போக்குகள் குறித்து - அதாவது யாழ். குடாவை 'முற்றுகைக்குள்" வைத்திருக்கும் எமது தமிழ் ஊடகங்கள் குறித்து.

அதற்கு முன்பாக ஈழப் போராட்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஊடகங்கள் குறித்து சற்று சுருக்கமாகப் பார்ப்போம்.

1. தமிழ்த் தேசிய ஊடகங்கள் (புலம் சார்ந்த ஊடகங்கள் உட்பட)

2. தமிழ்த் தேசியத்துக்கு விரோதமான தமிழ் ஊடகங்கள்.

3. தென்னிலங்கையை மையமாகக் கொண்ட சிங்கள- ஆங்கில ஊடகங்கள்

4. சர்வதேச ஊடகங்கள்.

தமிழ்த் தேசிய ஊடகங்கள் தவிர்ந்து மற்றவை அனைத்தும் தமது ஈழப் போராட்டம் தொடர்பான நிலைப்பாடு சார்ந்து மிக்க தீவிரமாகவே இயங்குவதை காணக்கூடியதாக இருக்கிறது.

சமாதான காலத்தை எதிர் கொள்ளமுடியாமல் தடுமாறிய தமிழ்த் தேசிய ஊடகங்கள், அண்மையில் உருவாகியிருக்கும் போர்ச் சூழலையும் எதிர்கொள்ள முடியாமல் தடுமாறுகின்றன. ஒரு பலவீனமான ஊடகக் கட்டமைப்பு தமிழ்த் தேசியத்துக்கு வாய்த்திருக்கிறதோ என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

ஏனெனில் நிகழ்வுகளின் கனபரிமாணத்தை தெளிவாகப் புரிந்து கொள்ளாமல் செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகங்களின் அரசியலை என்னவென்று சொல்வது?

சாதாரணமாக ஒருவர் வீதியில் நின்று தனது வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவதை ஒத்த மொழி அண்மையில் தமிழ் ஊடகங்களால் அரங்கேற்றப்பட்டது. போராடும் இனம் ஒன்றின் மேல்நிலைப் பிரதிநிதிகள் என்ற தமது இடத்தை மறந்து தமிழர் தரப்பின் இராஜதந்திர நிகழ்வுகளை கேலிச்சித்திரமாக்கியது தமிழ்த் தேசிய ஊடக உலகம்.

தேங்கிப்போயிருக்கும் சமாதானத்தை முன்னகர்த்தவும் தமது இராணுவ அரசியல் மேதமையை உலகிற்கு மீண்டும் ஒருமுறை உணர்த்தவும் 'மாவிலாறு அணை" என்ற ஒரு குறியீட்டு இராஜதந்திர நகர்வை புலிகள் மேற்கொண்டதை சரியாக உள்வாங்காத தமிழ் ஊடகங்கள் யாழ். குடாவை தமது முற்றுகைக்குள் கொண்டுவந்தன.

இங்கு நாம் பல விடயங்களை நாம் உன்னிப்பாக அவதானிக்க வேண்டும்.

1. புரிந்துணர்வு ஒப்பந்தம் முற்றாக செயலிழந்து விட்டதா?

2. போர் நிறுத்த கண்காணிப்புக்குழுவினர் இலங்கைத் தீவை விட்டு வெளியேறி விட்டனரா? அல்லது தமது பணியைத்தன்னும் முற்றாக இடைநிறுத்திவிட்டார்களா?

3. புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இருதரப்பில ஏதாவது ஒருதரப்பு தாம் அதிலிருந்து வெளியேறுவதாக பகிரங்க அறிவிப்பு செய்துவிட்டதா?

4. நோர்வே அனுசரணையாளர்கள், இணைத் தலைமை நாடுகள், நிலைமையை உன்னிப்பாக கவனித்து வரும் இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற்றை மீறி முழு அளவிலான யுத்தம் என்பது சாத்தியம்தானா?

இப்படி ஏராளமான கேள்விகள் விடை தெரியாமல்- புரியாமல் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கின்றன - இலங்கைத் தீவின் எதிர்காலத்தை போலவும் அதன் புவியியல் அமைவைப் போலவும்.

வடக்கு கிழக்கிலும் அதற்கு அப்பாலும் இனப்பிரச்சினையை மையமாக வைத்து அரங்கேறும் நிகழ்வுகளை கூர்ந்து கவனிக்கும் ஒருவரால் நாளைய நிகழ்வுகளை சரியான முறையில் எதிர்வுகூற முடியுமா? ஆச்சரியம்தான். ஆனால் சில தமிழ் ஊடகங்கள் ஆரூடம் கூற முற்பட்டது அதிர்ச்சியளிக்கிறது.

உண்மையில் இன்றைய அரசியல் கள நிலவரம்தான் என்ன? இதற்கு விடைகாண நாம் சற்று பின்னோக்கிப் போவோம்.

நீண்டகால போராட்டத்துக்குப் பின்னர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் ஆயிரமாயிரம் மாவீரர்களின் தியாகத்தினால் இலங்கைத் தீவில் தமிழர் மற்றும் சிங்களவர் அல்லது சிறுபான்மையினர் மற்றும் பெரும்பான்மையினர் என்ற முரணியக்கத்தினு}டாக தோன்றிய இனச்சிக்கலில் தமிழர்கள் அல்லது சிறுபான்மையினர் சார்ந்து ஒரு வலுச் சமநிலையை தோற்றுவித்தனர் புலிகள். அவ்வலுச் சமநிலையானது சர்வதேசத்தின் முன்பாக தீர்க்காமனதும் தெளிவானதுமான தமிழர்கள் தொடர்பான அரசியல் நிலைப்பாட்டை முன்வைத்தது.

புலிகளை உச்சபட்ச இராணுவ அரசியல் சக்தியாக சர்வதேசம் அடையாளம் கண்டுகொண்ட தருணமும் அதுதான். தமிழர் தரப்பு நகர்வுகளை உன்னிப்பாக கவனிக்கத்தொடங்குகிறது சர்வதேசம்.

இதனூடாக தமிழீழ விடுதலையின் அடுத்த கட்டத்தின் பெரும் பங்கு புலிகளிடமிருந்து ஊடகங்களிடமும் புத்திஜீவிகளிடமும் கைமாறியது. குறிப்பாக இது புலம்பெயர் தளங்களில் அதிகமாகவே எதிர்பார்க்கப்பட்டது.

இவற்றின் உச்ச வினைத்திறனை நம்பித்தான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்கள் புலிகள்.

புலிகள் தமது இராணுவ அரசியல் நிர்வாக கட்டமைப்புக்களை வளர்த்து கட்டியெழுப்பிய அளவிற்கு ஊடகப் பரப்புரை செயற்பாடுகள் மீது அதிக கவனம் செலுத்தவில்லையோ அல்லது உலகெங்கும் பரந்து விரிந்துள்ள தமிழ் ஊடகங்கள் மீது அதீத நம்பிக்கையை (ழஎநச உழகெனைநவெ) வைத்துவிட்டார்களோ என்ற ஐயம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

ஏனெனில் தமிழ்த்தேசியத்தின் தேவையை அறிந்து செயற்படுவதுபோல் புலம்பெயர் தமிழ் ஊடகங்களின் போக்கு இதுவரை அறியப்படவில்லை.

ஆனால் மாறாக இதுவரை இல்லாத எழுச்சி சிங்கள தேசியத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளது. சமாதானம் முலம் தமிழர்கள் ஒரு குறிப்பிடத்தகுந்த அளவிற்கேனும் ஆதிகாரத்தை கைப்பற்றபோகிறார்கள் என்பதை புரிந்து சிங்கள ஊடகங்களும் சிங்கள அறிஞர்களும் மிகத்தீவிரமாக இயங்குவதை வெளிப்படையாகவே காணக்கூடியதாக உள்ளது.

ஆனால் புலத்தில் எமது தமிழ் ஊடககங்களும் புத்திஜீவிகளும் இதை கவனத்தில் கொண்டு செயற்பட்டார்களா என்ற கேள்விக்கு எமக்கு கிடைப்பது வெறும் ஏமாற்றமே.

அவுஸ்திரேலியா தொடக்கம் கனடா வரை பரந்து விரிந்துள்ள எமது ஊடகங்கள் போராடும் வேறு எந்த இனத்திற்கும் மொழிக்கும் இல்லாத அளவிற்கு செறிந்து போயுள்ளன.

இந்த செறிவும் அடாத்தியும் சமாதான காலத்தையொட்டி எழுந்த எந்த நெருக்கடியையும் எதிர்கொள்ள பயன்படவில்லை. மாறாக இவை தமது பலவீனத்தை மறைப்பதற்காக வேறு சில தீவிர 'ஆராய்ச்சி"களில் இறங்கியிருந்தன.

சமாதானம் என்ற போர்வையில் வடக்கு கிழக்கில் 'உட்புறமாகத் தாழிடப்பட்ட மரணங்கள்" (நன்றி: மனுஷ்யபுத்திரன்) நிகழ்ந்து கொண்டிருந்தபோது தீவிர ஆராய்ச்சியின் பயனாக பம்பரம் விடுவதற்கும், ஓம்லெட் போடுவதற்கும் புதுப்புது இடங்களை கண்டடைந்த கோடம்பாக்கத்துக்காரர்கள் வெளித்தள்ளும் கழிவுகளை வாரி அள்ளி புலம்பெயர் தமிழர்கள் மீது விசிறி அடித்தன தமிழ் ஊடகங்கள்.

தமிழ் ஊடகங்;களின் இந்த புண்ணியத்தில் குஷ்பு, சிம்ரனுக்கு பிரசவ வலி எடுத்த போது இங்கேயும் கொஞ்ச பேருக்கு சேர்த்து வலி எடுத்தது. தாயக படுகொலைகளை எண்ணி கண்ணீர் சிந்தினால், பிறகு தமிழ் ஊடகங்கள் வீட்டுக்குள் கொண்டு வருகிற மெகா தொடர்களை பார்த்து சிந்துவதற்கு கண்ணீரை யாரிடம் கடன் வாங்குவது என்ற பெரும் பிரச்சினை புலம்பெயர் தமிழர்களை வாட்டியது.

தமது தவறுகளை மறைப்பதற்காக வியாபார நிர்ப்பந்தம், போட்டி, ஜனரஞ்சகம் போன்ற வார்த்தைப் பிரயோகங்களையும் அவ்வப்போது பயன்படுத்திக் கொண்டது தமிழ்த் தேசிய ஊடக உலகம். வேறு சிலரோ தாம் புத்திசாலித்தனமாக செயற்படுவதாகக எண்ணி மேற்கூறியதை விமர்சனம் செய்துவிட்டு தமிழ்த் தேசியத்துக்குத் தொடர்பில்லாத சர்வதேச விவகாரங்களில் மூழ்கிப் போனார்கள்.

விளைவாக பிரான்சில் கார்கள் எரிந்ததற்காகவும், இத்தாலியில் பெர்லுஸ்கோனி தோல்வியடைந்ததற்காகவும் கவலை கொண்டது தமிழ் மனது. தமிழ்த் தேசியம் கவனிப்பாரற்று புலம்பெயர் தெருக்களில் அனாதையாய் கிடந்தது. விளைவு ஐரோப்பிய தடை, கனடாவில் தடை என்று தமிழ்த் தேசியம் புலத்தில் 'வெற்றிகரமாக" தோல்வியைத் தழுவிக் கொண்டிருக்கிறது.

துரிதகதியில் இந்த நிலை மாற்றப்பட வேண்டும். சொந்த இனத்தின் அவலத்தை மறந்து அதிகாரத்தின் மூலம் கிடைக்கும் ஆதாயங்களையும் அதிகாரத்துக்கான முன் தேவைகளையும் குறியாக கொண்டு இயங்கும் ஒரு கும்பல் சமாதான காலத்தில் தோற்றம் பெற்றுவிட்டது. கிழக்கு நெருக்கடி சர்வதேச தடைகள் எல்லாம் அப்படியான ஒன்றுதான். இதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இத்தகைய புறவயமான நடைமுறை யதார்த்தங்ளின் நடுவேதான் தமிழினம் போராட வேண்டியிருப்பது மிகப் பெரிய அவலம்.

சிங்களப் பேரினவாதம் குரூரமானது, நேர்மையற்றது என்பது உண்மைதான். ஆனால் அதற்காக எல்லாக் குற்றச்சாட்டுக்களையும் நாம் அதன் மீதே சுமத்திவிட முடியாது. அது தனது அதிகாரத்தை முன் நிறுத்தி எல்லா திசைகளிலும் எமது போராட்டத்தை சிதைத்துக் கொண்டுதான் இருக்கும்.

இங்கேதான் ஈழத்தின் கல்விமான்கள் குறித்தான வெற்றிடம் ஒன்று தோற்றம் கொள்கிறது. ஈழத் தமிழ்ச் சமூகத்தின் அறிவுஜீவித்தனம் குறித்து சிலாகித்துப் பேசப்படுகிறது.

ஆனால் விடுதலைக்காக தீவிரமாகப் போராடும் ஒரு மக்கள் கூட்டத்தின் பிரதிநிதிகள் என்ற பிரக்ஞையற்று கிடக்கும் அதன் இயங்கியல்தளம் கவலைக்குரியது.

உலகெங்கும் அடக்குமுறையாளர்களுக்கு எதிராக நடந்த-நடந்து கொண்டிருக்கும் விடுதலைப் போராட்டங்களுடன் ஒத்திசைந்து அசைபவர்களாக மட்டுமில்லாமல் அதன் இயங்குதளமாகவே பல கல்விமான்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். ஈழத்தின் நிலை விமர்சனத்துக்குரியது.

தமிழீழத்திலிருந்து சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறையை முற்றிலுமாக ஒழித்துக் கட்ட வேண்டும் என்று நாம் உண்மையிலேயே விரும்பினால், சர்வதேச ரீதியாக எமது தாயகத்திற்கான அங்கீகாரம் கிடைக்கப்பெற வேண்டுமென்றால் தமிழீழத்திலிருந்து துரோகத்தை அதன் வேரோடு கிள்ளியெறிய வேண்டுமென்றால் போராளிகளுடனும் மக்களுடனும் தமிழ் அறிவுசார் சமூகமும் ஒருமித்து செயலாற்ற வேண்டிய வெளிக்கான களம் ஒன்று திறக்கப்பட வேண்டும்.

சமாதானத்தையொட்டி எழுந்த அனைத்து நெருக்கடிகளினு}டாகவும் நாம் பெறும் படிப்பினை இதுதான்.

இந்தக் களம் தமிழ்த் தேசிய ஊடகங்களின் பலத்திலும் சிந்தனையிலும் செயற்பாட்டிலும்தான் தங்கியுள்ளது.

முகமாலை மோதலை தமிழ் ஊடகங்கள் எதிர்கொண்ட விதம் குறித்தும் அத்தகைய யுத்தகளைமுனை செய்திகளை திரித்து வெளியிடுவதிலுள்ள அபத்தங்கள் பின்னடைவுகள் குறித்தும் அடுத்த வாரம் பார்ப்போம்.

பிரான்சிலிருந்து பரணி கிருஸ்ணரஜனி

(ஆய்வாளர், ஊடகவியலாளர், விமர்சகர்)

தமிழ்நாதம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.