Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்ணை மறைக்கும் பேரினவாதத் துளிகள்.. குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தேவ அபிரா

Featured Replies

theva%2006_CI.png

 

அண்மையில் அருளினியன் பக்கங்களில்  சிங்களத் திரைப்பட நெறியாளர் பிரசன்ன விதானகே அவர்களுடனான ஒரு நேர்காணல் வெளியாகி இருந்தது. அதனை வாசித்த பின் என்னுள் எழுந்த உணர்வலைகளைப் பகிரவேண்டும் எனத் தோன்றுகிறது.

நேர்காணல் முழுவதும் மிகவும் முற்போக்கான கருத்துகளைக் கூறிச் செல்கிற பிரசன்ன அவர்களிடம் கீழ்வரும் கேள்வி கேட்கப்படும் போது அதற்கு அவர் கீழ்வருமாறு பதில் அளிக்கிறார்.

இலங்கையில் இனப்படுகொலை  நிகழ்ந்ததை  நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?

இறுதிப் போரின் இறுதி நாட்களில் நடைபெற்றஉயிரிழப்புகள் பற்றிய சரியான தரவுகள் யாரிடமும்இல்லாத நிலையில் இது சம்பந்தமாகக்  கருத்துக் கூறவிரும்பவில்லை.

இந்தக்கேள்வியையும் பதிலையும் முகப்புத்தகத்தில் என் நிலைத்தகவலில் பதிவு செய்தும் இருந்தேன். பல நண்பர்கள் பிரசன்னவின் முற்போக்கு முகம் கலைவதாகப் பதிவிட்டிருந்தனர்.

உண்மையிலும் அக்கேள்வியையும் பதிலையும் நான் பகிர்ந்தமைக்கான காரணங்கள் இரண்டு.

·         மிகவும் நுண்ணியதான புள்ளிகளில் படைப்பாளிகள் தங்களின் எல்லைப்பாடுகளை வெளிக்காட்டி விடுகிறார்கள் என்பதைச் சொல்லுதல்

·         மானுட வாழ்வின் ஒவ்வொரு புள்ளியிலும் படைப்பின் உன்னதங்களைத் தொட விரும்புகிற படைப்பாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய புள்ளிகள் எவை எனத் தேடுதல்.

இப்பதிலை வைத்துக் கொண்டு பிரசன்ன அவர்களின் கலைத்துவம் மீதும் அவரது முற்போக்கான எண்ணங்கள் மீதும் சந்தேகம் கொள்ளத்தேவை இல்லை. ஆனால் இவ்வளவு முற்போக்கான எண்ணங்களைக் கொண்டிருந்தபோதும் இலங்கையில் நிகழ்ந்த இறுதியுத்தத்தில் நிகழ்ந்தது  “இனப்படுகொலை” தான் என்று சொல்ல அவருக்கு  முடியவில்லை.  குறித்த கேள்விக்கு அவரால் இறுதியுத்தத்தில் இனப்படுகொலையே நிகழவில்லை    என ஒரு பதிலைச் சொல்லவும் முடியவில்லை. ஆனால்  அவர் கேள்வியின் தார்ப்பரியத்தை வெறும் தரவுப்பிரச்சனையாகச் சுருக்கி விடுகிறார். இறந்தவர்களின் எண்ணிக்கையை வைத்து ஒரிடத்தில் இனப்படுகொலை நிகழ்ந்ததா இல்லையா எனத் தீர்மானிக்கப்படுவதில்லை. இனப்படுகொலை என்கிற விடையம் தொடர்பாக ஒரு படைப்பாளி என்ன புரிதலைக் கொண்டிருக்கிறார் என்பதே இங்கு முக்கியமானது.  பிரசன்ன அவர்கள் கலைத்துவம் நிறைந்தவர் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. ஆனால் படைப்பாளிகளின் மனம் சறுக்குகிற இடங்களும் உண்டு என்பதற்கு இங்கு அவர் உதாரணமாகி விடுகிறார். இத்தகைய கணங்களில் படைப்பாளியின் உன்னதத்தில் கறை படிந்து விடுகிறது. நேர்காணலின் இன்னுமொரு இடத்தில் ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளேயே பிரச்சனைக்கு தீர்வு காணப்படவேண்டும் எனவும் பிரசன்ன அவர்கள் கூறுகிறார். ஒன்றிணைக்கப்பட்ட இலங்கைக்குள் தீர்வு காணப்படவேண்டும் என்பது அவரது அரசியல் நிலைப்பாடு . அதைப்புரிந்து கொள்ளலாம். ஆனால் தமிழர்கள் பிரிந்து செல்ல விரும்பின் செல்லலாம் எனவோ இலங்கையில் நிகழ்ந்தது இனப்படுகொலை எனவோ சொல்ல அவருக்கு முடியாமல் இருப்பது அவர் இன்னும் தன் மன ஆழத்தில் ஏதோ ஒன்றினால் கட்டுண்டு கிடப்பதை உணர்த்துகிறது.

சிறுபான்மை இனங்களின் தனித்துவத்தையும் சுயாதீனத்தையும் ஆத்மாவின் அடி ஆழத்திலிருந்து அங்கீகரிக்க முடியாதபடி- அக்கோணத்தில் அவர்களின் பிரச்சனையைப்பார்க்க முடியாதபடி, பல பெரும்பான்மையின முற்போக்காளர்களின் கண்களில் பேரினவாத ஆழ ஊற்றின் துளிகள் தெறித்திருக்கின்றன.

சில காலங்களுக்கு முன்பு அவந்த ஆட்டிக்கல அவர்கள் ஒரு கேலிச்சித்திரம் வரைந்திருப்பார் .அது கீழே உள்ளது.

 

(பச்சை, சிவப்பு நிறக் கோடுகள் என்னால் இடப்பட்டவை. படம்: http://www.boondi.lk/article.php?ArtID=3249)

மேலோட்டமாகப்பார்க்கும் போது இனவாதத்தில் இருந்து இலங்கை மக்களைப்பாதுகாக்கும் முற்போக்கான எண்ணத்தை இக்கேலிச் சித்திரம் வெளிப்படுத்தினாலும் இலங்கையின் இனங்களைக் குறிக்கும் முன்று உருவங்களும் சம உயரத்தில் இல்லை என்பதைக்கவனிக்கலாம். இங்கும் கூட எண்ணிக்கை முதன்மைப்பட்டிருப்பதைப்பார்க்கலாம்.

படைப்பாளி தரவுகளின் வழி உலகத்தை பார்ப்பவரோ புரிந்து கொள்பவரோ அல்ல. அவர் உன்னதமான ஆத்மாவின் கண்களினூடாக உலகத்தைப்பார்ப்பவர்; புரிந்து கொள்பவர்.

இப்பகிர்வு தொடர்பான முகப்புத்தக உரையாடல்களில் எனது நண்பர் அ.ரவி அவர்கள் : “ பிரசன்ன அவர்கள் எதனாற் கட்டுண்டு கிடக்கிறார் என்று நீ யோசி” எனக்கேட்டிருந்தார். பிரசன்ன அவர்கள் எதனாற் கட்டுண்டு கிடக்கிறாறோ அதனையொத்த ஒரு உணர்வினால்  நாங்களும் கட்டுண்டு கிடந்திருக்கிறோம் அல்லது கிடக்கிறோம் என்பதையும் என்னால் இக்கணத்தில் நினைத்துப்பார்க்காமல் இருக்க முடியவில்லை.

பிரசன்னவிடம் கேட்கப்பட்டது போன்ற கேள்விகள் எங்களிடமும் கேட்கப்பட்டிருக்கக்கூடிய சம்பவங்கள் எமது விடுதலைப்போராட்ட காலங்களில் நிகழ்ந்துள்ளன. போராளிகளால் சிங்கள முஸ்லீம் மக்கள் கொல்லப்பட்ட போதும் முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்ட போதும் இவற்றையொத்த  கேள்விகள் படைப்பாளிகளின் மனதில் அசரீரிகளால் கேட்கப்பட்டிருக்கும் .

உண்மையிலும் இது பிரசன்னவுடையதோ அவந்த அவர்களுடையதோ தனிப்பட்ட கருத்தியல்கள் பற்றிய பிரச்சனையல்ல. இது ஒட்டு மொத்தமான படைப்பாளிகளின் கருத்தியல் பற்றிய  கேள்வியாக  விரிந்திருக்கிறது.

மிக முக்கியமான தருணங்களில் (in a crucial point)படைப்பாளிகளின் ஆத்மா எப்படி வெளிப்படுகிறது என்பதைப்பொறுத்துத்தான் அவர்களின் முற்போக்கின் ஆழம் தீர்மானிக்கப்படுகிறது.

பிரசன்ன உங்கள் கண்ணில் தெறித்த அந்தப்பேரினவாதத்துளியை துடைத்து விடுங்கள்.

தேவ அபிரா

5-10-2014

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/112299/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.