Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புவியைப் போன்ற ஒரு கோளுக்கு பயணம் செயய முடிந்தால்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புவியைப் போன்ற ஒரு கோளுக்கு பயணம் செயய முடிந்தால் / லட்சுமி கணபதி

மங்கள்யான் செவ்வாய்க்கு அனுப்பியதால் நமக்கு என்ன லாபம்? இதனால் நமது வாழ்வில் என்ன முன்னேற்றம் நிகழ்ந்து விடப்போகிறது. 30 கோடி பேர் இரவு வேளை உணவின்றித் தூங்கும் இந்த நாட்டில் மங்கள்யானுக்கு 450 கோடி செலவில் அவசியம் ஒரு விண்கலன் தேவையா என ஒரு சாரார் கேட்பதை பார்க்கிறோம்.

இதே நாட்டில் தான் கோடிக்கணக்கில் மக்கள் பணம் ஊழல் செய்யப்படுகிறது கொள்ளை அடிக்கப்படுகிறது அவற்றை தடுக்க தவறிய நமக்கு மங்கள்யாண் மட்டும் செலவாகத் தெரிகிறது

விண்வெளி ஆய்வுக்கு இவ்வளவு பிரயத்தனம் அவசியமானதுதான? என்றால் ஆமாம்!

நமது பூமி தாக்கப்படத்தக்க ஒரு வெளியில் தான் உள்ளது. இதுவரை ஐந்து முறை பேரழிவுகள் ஏற்பட்டு கிட்டத்தட்ட அனைத்து உயிர்களும் அழிந்தன. இதில் மிகவும் கொடிய அழிவு 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது 96 சதவீதம் கடல் உயிரினங்களும் 70 சதவீதம் நில உயிரினங்களும் அழிந்துபோயின இந்த ருத்ரத்தில் இருந்து வெளிவர பூமித் தாய் ஒரு மில்லியன் வருடங்கள் எடுத்துக்கொண்டாள். நிறைய அறிவியலாளர்கள் ஆறாவது பேரழிவை நோக்கிய பயணத்தில் பூமி இருப்பதாக நம்புகின்றனர்.

இந்த நிலையில் புவியின் பிள்ளைகளான நாம் விண்வெளியை பற்றி ஓரளவுக்கு அறிந்து வைத்துள்ளோம். பயணம் செய்யவும் துவங்கிவிட்டோம். நமது மனித குல சந்ததியினரை வேறு ஒரு கூட்டில் பத்திரமாக வைத்து பாதுகாக்கவும் கடமைப்பட்டுள்ளோம். இதற்கு விண் ஆய்வுகள் அத்தியாவசியமானவை.

உயிரியல் பரிணாமத்தின் மிக முக்கியக் கூறுகளில் ஒன்று உயிர் நீடித்திருப்பது அதற்க்கு வேறு வழியே இல்லை வேறு ஒரு பாதுகாப்பான தங்குமிடத்தை தேடிதான் ஆகவேண்டும்.

சரி! இப்போது பூமியை போன்ற ஒரு விண் கோளை நாம் கண்டறிந்து விட்டதாக கொள்வோம் அது நமக்கு அருகில் இருப்பதாகவோ அல்லது நம்மால் பயணம் செய்ய முடியும் என்றோ வைத்துக்கொள்வோம். என்ன நடக்கும் என ஆராயலாம்.

எப்படி இருத்தல் நலம்?

இந்தப் புதிய பூமியில் தண்ணீர் திரவ நிலையில் இருத்தல் அவசியம், இதுவும் “நீரின்றி அமையாது உலகு” விதிக்கு கட்டுப்பட்டு இயங்கும். கடல் நீர் உப்பாக இல்லாது போனால் ஆழி நீரோடைகள் பாதிக்கப்படும்

துருவங்களில் பனிப்பாறைகள் சேர்வதிலும் நிலைத்திருப்பதிலும் பிரச்சனைகள் எழலாம்.

வளி மண்டலம் அவசியம்.(அக்கோளின் ஈர்ப்புவிசை சார்ந்தது) இது இல்லாது போனால் UV கதிர்களால் நமது உடலில் பாதிப்பு உண்டாக்கும். உயிர்வளி நிரம்பிய வளிமண்டலமும் அவசியமானது. ஈர்ப்புவிசை பூமியை போலவே இருப்பதாக கொள்வோம் இல்லாவிடில் எளிதில் மூட்டு வலி வந்துவிடும். சூரியனில் இருந்து சரியானத்தொலைவில் இருத்தலும் முக்கியமான கூறுகளில் ஒன்று.

முதலில் நம் உலகில் கோள் கண்டறியப்பட்ட உடன் அங்கு சென்று கர்சிப் போட்டு இடம் பிடிப்பது அமெரிக்காவாகத்தான் இருக்கும். அவர்களும் ரஷ்யாவாவும் எளிதில் அங்கே செல்ல முடியும். ஐரோப்பிய யூனியனும் இதில் ஆவல் கொள்ளும். ஏன் இந்தியா கூட இருக்கலாம்!?

ஆனால் விண்வெளி அனைத்து மக்களின் சொத்து இல்லையா? இதில் மனிதர்களை பிறந்த எல்லாருக்கும் உரிமை உண்டு இல்லையா என்றெல்லாம் கேள்வி வந்தால் நீயும் என் தோழனே.

மனிதர்களான நமக்கு நமது பூமியிலேயே அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும் போது இன்னொரு பூமியிலும் இது செல்லுபடியாகுமா என்றால் கேள்விக்குறிதான்!

“அது எனக்குத்தான்” என நாடுகள் சமர் புரியலாம் என்றே தோன்றுகிறது. ஒருவேளை புதிய கிரஹ கண்டுபிடிப்பே மூன்றாம் உலக போருக்கு காரணமாகிவிடுமோ?(காலனி ஆதிக்க போட்டி முதல் உலகப்போருக்கு வித்திட்டததை நினைவில் கொள்க)

சரி விண்வெளியில் பெரிய அளவு பிரக்ஞை இல்லாத இயலாத நாடுகள் எப்போதும் போல கண்டனம் தெரிவிக்கும் அல்லது நட்பு ஏற்படுத்தி அங்கே செல்லும் ராகெட்களுக்கு இருக்கை உரைகள் செய்து தரும் ஒப்பந்தத்தில் பத்திரிக்கையாளர் முன் இன்முகத்துடன் கையொப்பமிடும்.

ஒருவேளை எல்லா நாடுகளும் ஒருங்கிணைந்து(!?) ஐக்கிய நாடுகள் போன்ற ஒரு ச(ப்)பை அமைப்பை உண்டாக்கி இந்தக் கோள் குடியேறுவதை சீரக்குகிறோம் என பசப்பலாம். (அப்படி நடந்தால் முதலில் பால் காச்சுவது என்னவோ அமெரிக்கத்தான்). பிற நாடுகளும் தத்தம் நாட்டில் இருந்து சில குடிமக்களை அங்கே அனுப்பலாம். இவர்களில் எந்த விகிதாசாரத்தில் நாடுகளை தேர்ந்தெடுப்பது அப்புறம் இடம் அளிப்பது?

மக்கள் தொகை அடிப்படையிலா?

பரப்பளவின் அடிப்படையிலா?

பொருளாதாரத்தின் அடிப்படையிலா?

கனிம வளங்களின் அடிப்படையிலா?

டென்டர் விட்டா?

இந்த பூமியில் ஒரு நாடு எவ்வளவு இட ஆக்கிரமிப்பு செய்துள்ளதோ அதே அளவுதான் அங்கேயும் என்றால் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் பிரச்னை பிரபஞ்ச மயமாகிவிடும். வாடிக்கணும் நிகராகுவாவும் அங்கெயும் சிறிய நாடு அந்தஸ்தை பெறும். ஆமாம் அப்போ காஷ்மீர்?

மக்களில் யாரை தேர்வு செய்வது?

முதலில் குரங்கு நாய் போன்றவற்றை அனுப்பி சோதனை செய்யலாம் பிறகு. மரணதண்டனை கைதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். எந்த பிரச்சனையும் இல்லாவிடில் TV சீரியல் நடிகர்ககளை வைத்து “பூமிக்கு மிக மிக அருகில் சுமார் 40 ஒளி ஆண்டுகள்தான். யாராலும் தரமுடியாத அதிரடி விலையில தர்றாங்க” என்று விளம்பரம் செய்யலாம்.

மக்களை தேர்வு செய்ய பரிட்சை நடத்தலாமா? தேர்வானவர்கள் மட்டுமே அனுமதி, பொது தமிழ் கட்டாயப்பாடம். (திருக்குறள் ஒப்புவித்தால் 2 மதிப்பெண்கள் கூடுதல்). போட்டித்தேர்வுகளுக்கு தயாராகுங்கள் என புத்தகம் போடவும் வாய்ப்புண்டு)

லாட்டரி நடத்தி மக்களை தேர்தெடுக்கலாம்.

அல்லது FACEBOOK அல்லது TWITTER இலோ அதிக பேர் பின்தொடர்ந்தால் போதுமானது.

இணையத்‌தில் ஒரு தளம் அமைத்து “நீங்கள் ஏன் அந்த பூமிக்குச் செல்ல வேண்டும்?” என கட்டுரை எழுதச் சொல்லலாம்

போரில் தோற்ற நாட்டுடன் நாங்கள் உங்கள் வெளிப் புவி உறவுகளில் தலையிடுவதில்லை என உடன்படிக்கை செய்து கொள்ளலாம்.

கடைசியாக உலகவழக்கமான இறுதியான உறுதியான வழியான “பணம் படைத்தவனை” மட்டும் அனுப்பி வைக்கலாம் அல்லது இவற்றில் எது என்பதை ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கலாம்.

பூமியுடன் எப்படி தொடர்பு கொள்வது?

இப்போது கோள் நாற்பது ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்தால் செய்தி வந்து சேரவும் 40 ஆண்டுகள் ஆகும். உங்கள் குழந்தையின் முதல் பிறந்தநாள் வாழ்த்து அவளின் 41 தாவது பிறந்தநாளில்தான் கிடைக்கும். (புரியும்படி சொல்லவேண்டுமானால் BSNL குறுஞ்செய்தி போல “GOOD MORNING” என அனுப்பினால் மாலைதான் வந்து சேரும்). புதிய படமாக ஒளிப்பரப்பு செய்யப்படும் படங்களில் சிவாஜி இன் தங்கப்பதக்கம்(1974) இப்போது அங்கே ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கும்.

ஆனால் இருக்கவே இருக்கு நமக்கு பரிட்சியமான குமிழி ஓட்டம்(WARP DRIVE). இதில் கடிதங்களை கொடுத்து அனுப்பினால் விரைவில் சென்று சேரலாம்.ஏன் இதில் ஊருக்கு வர தீபாவளிக்கு ஒரு வாரம் முன்னால் கிளம்பினால் கூட போதுமானது. இந்தியா அவசரப்பட்டு தந்தி சேவையை அரசு மூடிவிட்டது!.

WARM HOLE இன் இரு முனைகளில் ஒன்றை புதிய பூமியிலும் இன்னொரு முனையை இங்கே நமது பூமியில் வைத்து கருத்து பரிமாற்றம் செய்யலாம்.

அல்லது குவாண்ட இயலில் ENTANGLEMENT தத்துவப்படி தகவல்களை பரிமாறலாம்.(இதனைப்பற்றி விரிவாக இன்னோர் முறை அலசுவோம்).

உபரிகள்

அந்த சூரியக் குடும்பத்தில் 20 கோள்கள் இருந்தாலும் நாம் 9 மட்டும் தேர்வுசெய்தது ஜாதகத்தைக் கணக்கிடலாம். ராகுகாலத்தின் மணிநேரம் அதேதான், ஒருநாளைக்கு 36 மணிநேரமாக இருந்தாலும் சரி. கிரிகொரியன் முறையே பின்பற்றப் படலாம் வருடத்திற்க்கு 600 நாட்கலாக இருந்தாலும் சரி.

சட்டங்கள் இங்கே இருப்பது போல் தான் பிண்பற்றப்படும் என நம்புவோம்

“NAVADA மாகாணத்தில் தாடியுடன் பெண்ணை முத்தமிடுவது சட்டப்படி குற்றம்” இந்த சட்டம் மறக்காமல் கடைபிடிக்கப்படும்.

மனித குலம் அங்கே வாழ துவங்கி நீண்டகாலம் ஆனபிறகு புதிய பூமியின் மானுடார்கள் அந்த மண்ணின் மைந்தர்களாக உணருவார்கள். “நீங்களும் நாங்களும் வேறு வேறு இது தனிக் கோள் ஆக எங்களை சுதந்திரமாக கோளாக அறிவிக்கிறேன்” என்பார்கள்(அமெரிக்க போல் சுதந்திரப்பிரகடனம் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை)

மக்கள் என்ன பொருட்கள் எடுத்து செல்வார்கள்(சுனிதா வில்லியம்ஸ் போல பிள்ளையார் சிலை?), ஜாதி மத இன வேறு பாடுகள் அங்கேயும் இருக்குமா? மக்கள் என்ன நூல்கள் எடுத்து செல்வார்கள்? என்ன வேலை செய்வார்கள்? என்பவற்றை உங்களின் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.

இன்னொரு வீடு கை வரும் வரையாவது இந்த வீட்டையும் அதன் சுற்றுச் சூழலையும் சற்று பத்திரமாக பாதுகாக்க வேண்டியது நாம் ஒவ்வொருவரின் கடமையாகும்.அதை செய்தாலே இப்போது போதுமானது.

http://malaigal.com/?p=5742

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.