Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொஸ்லந்தை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 75 சிறுவர்களையும் அரசு பொறுப்பேற்கிறது - பாராளுமன்றத்தில் அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொஸ்லந்தை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 75 சிறுவர்களையும் அரசு பொறுப்பேற்கிறது - பாராளுமன்றத்தில் அறிவிப்பு

 
D15d15d.jpgகொஸ்லந்தை மீரியபெத்த தோட்டத்தில் இடம்பெற்ற பாரிய மண்சரிவின் காரணமாக ஏற்பட்ட மனிதப் பேரவலம் தொடர்பில் அரசாங்கம் மட்டுமல்லாது முழு நாடுமே சோகத்தில் உறைந்துள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன நேற்று சபையில் தெரிவித்தார். 

அத்துடன் இந்த அவலத்தில் பாதிக்கப்பட்டு அநாதரவாகியுள்ள 75 சிறுவர் சிறிமியரின் பாதுகாப்பு அவர்களது எதிர்காலத்தேவைகள் அனைத்தையும் அரசாங்கம் பொறுப்பேற்பதாகவும் அவர் கூறினார். 

கொஸ்லந்தை சம்பவம் தொடர்பில் அரசாங்கத்தின் விசேட கூற்றினை வெளியிட்டே அமைச்சர் தினேஷ் குணவர்த்தன மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், 

கொஸ்லந்தை சம்பவம் தொடர்பில் அரசாங்கம் மட்டுமல்லாது முழு நாடும் இன்று கவலைக்குள்ளாகியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நலன்புரி வேலைத் திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இங்கு 6 லயன்கள் மண்ணில்  புதையுண்டிருப்பதாகவும் இதில் 57 குடும்பங்களைச் சேர்ந்த 330 பேர் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் 75 சிறுவர்களும் தொழிலுக்கு சென்ற நூறுபேர் மட்டிலானோரும் பாதுகாக்கப்பட்டுள்ளனர். 

இவர்களில் 75 சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களது எதிர்காலம் என்ற சகல விடயங்களையும் அரசாங்கம் பொறுப்பேற்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. ஜனாதிபதி சம்பவ இடத்திற்கு சென்று நிலைமைகளை அவதானித்துள்ளதுடன் பாதுகாக்கப்பட்டவர்களையும் சந்தித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளமாறும் அதிகாரிகளுக்கு பணிபுரை விடுத்துள்ளார். 

மேலும் மரணமானவர்களுக்கான இறுதி சடங்குகளுக்கான பொறுப்புக்களையும் அரசே ஏற்றுள்ளது என்றார். 

http://www.virakesari.lk/articles/2014/10/31/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-75-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 
 அநாதரவான சிறுவர்களை பொறுப்பெடுக்கும் வடக்கு மாகாணசபை 
d1124245f646c7ad5f93858f209b7d4b.jpg

 பதுளையில் நடந்த மண்சரிவு இடரில் பெற்றோரை இழந்து நிராதரவான நிலையில் தவிக்கும் 75 சிறுவர்களை  வடக்கு அரசு பொறுப்பேற்பதற்கு விருப்பம் வெளியிடப்பட்டது.

 
 
நேற்று வடக்கு மாகாணசபையில்; நடைபெற்ற விசேட கூட்டத்தில் இது தொடர்பில் தீவிரமாக ஆராயப்பட்டுள்ளது.
 
அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் உரையாற்றுகையில்,
 
மக்களின் உடனடிப் பாதிப்புக்களுக்கு மேலாக நீண்டகால விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும்
என்று குறிப்பிட்டார்.
 
நிலச்சரிவு இடரால் 75சிறுவர்கள் வரையில் தாய்,தந்தையை இழந்து தவிக்கின்றனர்.அவர்களைப் பொறுப்பேற்பதற்காகக் கொழும்பு அரசு நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தது.
 
குறித்த 75பேரும் தமிழ்ச் சிறுவர்கள் அவர்களை கொழும்பு அரசு பொறுப்பேற்பதன் மூலம்,எதிர்காலத்தில் மொழி ரீதியாக கலாசார ரீதியாக அவர்களை மாற்றக் கூடும் எனவே குறித்த சிறுவர்களை வடக்கு மாகாண சபை பொறுப்பேற்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று பல்வேறு உறுப்பினர்களும் விருப்பம் தெரிவித்தனர்.
 
கொழும்பு இந்துக் கல்லூரியின் விடுதியில் அந்த மாணவர்களைத் தங்க வைத்துப் படிப்பிப்பது தொடர்பில்
கலந்துரையாடினேன்.    இவ்வாறு ஒவ்வொரு பாடசாலைகளிலும் அவர்களை தங்க  வைத்துப் படிப்பிப்பதற்கு ஏற்பாடு செய்ய முடியும்.என்று வடக்கு முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
 

-

http://www.onlineuthayan.com/News_More.php?id=457683598801151652#sthash.6CymGlmm.dpuf

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.