Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாண உள்ளுராட்சி சபையின்அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் நூறு மில்லியன் ரூபா வரையில் சுருட்டப்பட்டுள்ளது-சுரேஸ் பிறேமச்சந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாண உள்ளுராட்சி சபையின்அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் நூறு மில்லியன் ரூபா வரையில் சுருட்டப்பட்டுள்ளது-சுரேஸ் பிறேமச்சந்திரன்

வடமாகாண உள்ளுராட்சி சபையில் ஒப்பந்த அடிப்படையிலான அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் நூறு மில்லியன் ரூபா வரையில் சுருட்டப்பட்டுள்ளதாக யாழ்.ஊடக அமையத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளாா். அவா் அங்கு மேலும் தொிவித்ததாவது.

வடமாகாண உள்ளுராட்சி சபையில் நடந்ததாகக் கூறப்படும் பாரிய ஒப்பந்த மோசடியில் சுமார் நூறு மில்லியன் ரூபா வரையில் அதிகாாிகளால் சுருட்டப்பட்டிருக்கின்றன.

 

வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ் மற்றும் உள்ளுராட்சி ஆணையாளர் எம்.ஜெகூ, யாழ்.மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கொன்ஸ்ரன்ரைன் ஜக்சீல் ஆகியோரே நூறு மில்லியன் ரூபா மோசடியில் பிரதான பங்கு வகித்திருப்பது கண்டறியப்பட்டிருக்கின்றது.

 

உலக வங்கியினால் போா் பாதிப்பிற்குள்ளான வடக்குப் பிரதேசங்களின் உட்கட்டுமான வேலைகளை மேற்கொள்வதற்கென 2010ம் ஆண்டு நெல்சிப் திட்டத்தின் கீழ் 3 ஆயிரத்து 500 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.

வடமாகாண உள்ளுராட்சி சபையின் வீதிகள் உட்கட்டுமான வேலைகள் உள்ளிட்டவற்றை முன்னெடுக்க ஒதுக்கப்பட்ட நிதியில் 120 வேலை திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

இந்த வேலைத் திட்டங்களிற்கான பொறியியலாளராக ஸ்ரெஜிலாதரன் என்பவரை பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ் ஒப்பந்த அடிப்படையில் நியமித்துள்ளார். இந்த நபர் தனது தந்தையாரான சச்சிதானந்தன் மற்றும் நண்பரான தீபரூபன் ஆகியோரினை பங்காளர்களாக்கி ஸ்கலாட் என்ஜினியரிங் எனும் போலி ஒப்பந்த நிறுவனத்தைத் தோற்றுவித்து அதற்கான வேலைகளை ஆரம்பித்து பெரும் பண மோசடிகளைச் செய்துள்ளார்.

 

மேலும் அவருக்கு நெருக்கமான ஜந்து ஒப்பந்த நிறுவனங்களிற்கே வேலைத் திட்டங்களை ஒதுக்கி வழங்கியுமுள்ளார்.

மிகக்குறைந்த காலப்பகுதியினுள் சுமார் 40 மில்லியன் வரை சொத்துச் சேர்த்துள்ள ஸ்ரெஜிலாதரன் இம்மோசடிகளை நடத்திய மையப்புள்ளி என கண்டறியப்பட்டுள்ளது.

 

அதே வேளை இம்மோசடி மூலம் கிடைத்த பணத்தில் உள்ளுராட்சி ஆணையாளர் எம்.ஜெகூவின் வீடு பல மில்லியனில் மீளப் புனரமைக்கப்படுவதாகவும், யாழ்.மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கொன்ஸ்ரன்ரைன் ஜக்சீல் என்பவரிற்கு அரியாலையினில் புதிய பங்களா ஒன்று அமைக்கப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.

 

ஊழல் மோசடிகள் அம்பலமானதையடுத்து ஆளுநர் சந்திரசிறி பொறியியலாளரான ஸ்ரெஜிலாதரனை பதவி நீக்கம்செய்துள்ளார். பிரதம செயலாளர் ஒப்பந்த அடிப்படையில் நியமித்த ஸ்ரெஜிலாதரனை ஆளுநர் பதவி நீக்கம் செய்வது எந்த நடைமுறையில் உள்ளது என்பது தெரியவில்லை.

 

எனினும் தனி ஒரு நபரால் இம்மோசடி நடந்திருக்க முடியாது .கூட்டு மோசடிகளில் ஈடுபட்டவர்களைக் காப்பாற்ற ஸ்ரெஜிலாதரன் வேலையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் நிதி மோசடி நபர்களினைக் காப்பாற்ற ஆளுநர் முற்படுவாரானால் அவரும் இம்மோசடிகளுடன் தொடர்புடையவரென்ற சந்தேகத்தை மேலும் ஏற்படுத்தும்.

 

வெறும் பத்து இலட்சம் மக்கள் வாழும் வடக்கில் நூறு மில்லியன் ரூபா மோசடியென்பது சாதாரணமானதல்ல.அண்மைக் காலங்களில் மக்களிற்கென ஒதுக்கப்பட்ட நிதியில் வடக்கில் நிகழ்ந்துள்ள மிகப்பெரிய மோசடி இதுவாகும்.

 

பக்கச்சார்பற்ற விசாரணைகள் காவல்துறை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மூலமாக முன்னெடுக்கப்பட வேண்டும். அது வரை விசாரணைகளினை குழப்பாத வகையில் பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ் மற்றும் உள்ளுராட்சி ஆணையாளர் எம்.ஜெகூ, யாழ்.மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கொன்ஸ்ரன்ரைன் ஜக்சீல் ஆகியோர் இடைநிறுத்தப்பட வேண்டும்.

 

இதே வேளை உள்ளுராட்சி அமைச்சின் அமைச்சர் என்ற வகையில் முதலமைச்சரும் பக்கச்சார்பின்றி விசாரணைகளை மேற் கொள்ள வேண்டும்

இதனிடையே தனக்குக் கிடைத்த ஆவணங்களின் பிரகாரம் சுருட்டப்பட்டது நூறு மில்லியன் ரூபா எனக் கூறப்படுகின்ற போதும் அத்தொகை இதைவிட அதிகமாகவும் இருக்கலாம் என்றார்.

வடமாகாண உள்ளுராட்சி சபையின் இந்த ஊழல் சம்பந்தமாக இது நம் தேசம் இணையத்தில் அண்மைச் செய்தி வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

https://www.facebook.com/tamilnationalpeoplesfront/posts/380932122069804

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.