Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொலிஸாருக்கு எதிரான கருத்துக்களையே ஊடகவியலாளர்கள் கொண்டுள்ளனர்; எஸ்.எஸ்.பி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
 பொலிஸாருக்கு எதிரான கருத்துக்களையே ஊடகவியலாளர்கள் கொண்டுள்ளனர்; எஸ்.எஸ்.பி 
fbcda1207c23936c335db158f4b745f6.jpg
நாங்கள் மக்களின் நலனுக்காக செய்யும் நல்ல விடயங்களை சுட்டிக்காட்டாது எங்களுக்கு எதிராகவே ஊடகவியலாளர்கள் செயற்படுகின்றனர் என யாழ். மாவட்ட சிரேஷ்ட  பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன கவலை வெளியிட்டுள்ளார். 
 
யாழ். பொலிஸ் தலைமைப் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது யாழ்.குடா நாட்டில் நடைபெற்று வருகின்ற பாரிய குற்றங்கள் குறித்தும் பொலிஸாரது செயற்பாடுகள் குறித்தும் ஊடகவியலாளர்கள் எஸ்.எஸ்.பியிடம் கேட்டபோது அவர் மேற்கண்டவாறு கவலை வெளியிட்டார். 
 
அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
யாழ்.குடா நாட்டு மக்களுக்காக நாம் பல நல்ல விடயங்களைச் செய்து வருகின்றோம். ஆனால் அவை எதனையும் ஊடகங்கள் பெரிதுபடுத்துவதில்லை. எப்போதும் எங்களுக்கு எதிராகவே செய்தியை வெளியிடுகின்றதுடன்  கேள்விகளையும் கேட்கின்றனர். 
 
பாடசாலையில் இடம்பெறும் பிழைகள் , வீதி விபத்துக்கள், வாள் வெட்டுக்கள், கைதுகள் என எவை என்றாலும் யாரில் பிழை யாரில் சரி என்று பாராது எங்களையே பிழையாக ஊடகவியலாளர்கள் பார்க்கின்றனர். பிழையாகவே எங்களிடம் கேள்விகள் கேட்கின்றனர் என்றும் அவர் மேலும் கவலை வெளியிட்டுள்ளார். 
 
இதேவேளை, எஸ்.எஸ்.பி யின் குற்றச்சாட்டை மறுத்த ஊடகவியலாளர்கள் பொலிஸாரின் நல்ல பல செயற்பாடுகள் குறித்தும் தாம் செய்திகளையும் புகைப்படங்களையும் வெளியிடுவதாக உதாரணங்களுடன் தெரிவித்தனர். 
 
அத்துடன் கீழ் மட்டங்களில் உள்ள பல பொலிஸார் செய்யும் தீய செயற்பாட்டினால் ஒட்டு மொத்த பொலிஸாரும் சேர்கின்றனர் என்றும் தாங்கள் சட்டத்திற்கு மாறாக செயற்படும் பொலிஸார் தொடர்பில் பேசுவதாகவும் அவர்களுக்கு நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டனர்.
 
மேலும் தாங்களும் மக்களது கருத்துக்களையே தெளிவுபடுத்துவதாகவும் ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர். ஆனாலும் நீங்கள் உங்களது கருத்தை தெளிவுபடுத்துகின்றீர்கள் நாங்கள் எங்களுடைய கருத்தை தெளிவுபடுத்துகின்றோம்  என்றும் அவர் தெரிவித்தார்.
 
எனினும் தங்களுடைய கருத்தில் இருந்து சற்றும் மாறுபடாது பொலிஸார் தொடர்ந்தும் கருத்துக்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

- See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=830133596801321174#sthash.rdyF5tGR.dpuf

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.