Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா விசாரணைக்கான சாட்சியப் படிவத்துடன் கைதானவர் சட்ட உதவி பெறுவதற்குத் தடை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
ஐ.நா விசாரணைக்கான சாட்சியப் படிவத்துடன் கைதானவர் சட்ட உதவி பெறுவதற்குத் தடை! 
[Tuesday 2014-11-04 09:00]
access-denied-150-news.jpg
போர்க்குற்றங்கள் தொடர்பாக ஜ.நா. மேற்கொள்ளும் விசாரணைக்கு சாட்சியமளிக்கும் படிவங்களைத் வைத்திருந்ததாக குற்றம்சாட்டி பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சி.கிருஸ்ணராசா சட்ட உதவிகள் பெறுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இது அடிப்படை மனித உரிமை மீறல் என்றும், கைது செய்யப்பட்டவருக்கான சட்ட உதவிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வடமாகாண சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான கே.சயந்தன் தெரிவித்துள்ளார்.
   
இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்: ஜ.நா விசாரணைக்காக மக்கள் சாட்சியங்களை வழங்குவதற்கு கடந்த 31 ஆம் திகதி மட்டும் கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சாட்சியங்கள் வழங்குவதற்கான படிவங்களை தம்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கிளிநொச்சி கிராஞ்சியைச் சேர்ந்த சின்னத்தம்பி கிருஸ்ணராசா (வயது 57) என்பவர் இரணைமாதா என்னும் இடத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் உடனடியாக வவுனியாவில் உள்ள பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.
 
அதன் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக அவர் கொழும்பில் உள்ள பயங்கரவாத குற்றத்தடுப்பு தலமைச் செயலகத்திற்கு அழைத்துச் சொல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில் குறித்த நபரை சந்தித்து அவருக்கான சட்ட உதவிகளை வழங்குவதற்காக நான் கடந்த முதலாம் திகதி கொழும்பில் உள்ள பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவுக்குச் சென்றிருந்தேன். அங்கு அவரைச் சந்திப்பதற்கு எனக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனாலும் என்னைச் சந்திப்பதற்கான அனுமதி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட குறித்த நபருக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை.
 
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர் சட்டத்தரணியைச் சந்தித்து சட்ட உதவிகளை பெற்றுக் கொள்வதற்கான உரிமை உள்ளது. இருப்பினும் அவருக்கு அந்த உரிமையை பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸார் வழங்காமல் மறுத்துள்ளனர். இது அடிப்படை மனித உரிமை மீறலாகும். இருப்பினும் குறித்த நபருக்கான சட்ட உதவிகளை வழங்குவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது என்றார்.
 
இதற்கிடையே ஐ.நா விசாரணைகளுக்கான படிவங்களை விண்ணப்பபடிவங்களை விநியோகித்த போது, கைது செய்யப்பட்டவருக்கும் தமக்கும் தொடர்பு இல்லை என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சில ஊடகங்கள் இந்த விடயத்தில் கூட்டமைப்பின் மீது குற்றங்களை சுமத்தியுள்ளன. கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டவருக்கு ஆழ்வாப்பிள்ளை விஜயகுமார் என்பவரே வெற்றுப்பபடிவங்களை வழங்கியதாகவும் குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. எனினும் இந்த விஜயகுமார் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் இல்லை என்று கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
 
விசாரணைக்காக சாட்சியங்களை பெறுவதற்கு தாம் உதவியளிக்கவில்லை என கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. எனினும் பாதிக்கப்பட்ட அனைவரும் ஐக்கிய நாடுகளின் விசாரணைகளில் உரிய முறையில் பங்கேற்க வேண்டும் என்றும் கேட்டுள்ளது.http://www.seithy.com/breifNews.php?newsID=120041&category=TamilNews&language=tamil

ஐ.நா ஒரு சட்டபூர்வ அமைப்பு. அதற்கு சாட்சி சொல்வதற்காக கைது செய்வதே மனித உரிமை மீறல். ஜனநாயக விரோதம். சட்ட உதவியை தடுப்பது அடுத்த ஜனநாயக விரோதம். அதை செய்தது ஶ்ரீலங்கா அரசு என்பதால் அதை அங்கீகரிபதை தவிர வேறு வழி இல்லை. ஏனெனில் தனக்கெதிராக சாட்சி சொல்பவர்களை நாட்டிற்கு ஆப்பு அடிப்பவர் கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரமும் தார்மீக உரிமையும் சிங்கள அரசிற்கு உண்டு என்று என்னுடன் சிலர் சண்டைக்கு வந்து விடுவார்கள். அடிப்படை உரிமைகளை கூட கேட்பது பத்தாம் பசலித்தனம், முட்டாள்த்தனம். பலமான ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக வாதாடுவதே இப்போது லேற்றஸ் பாஷ்ன்.

Edited by tulpen

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.