Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லையில் 3ஆம் நாள் சாட்சியம்; இராணுவம், விடுதலைப்புலிகள் மீது குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு மாவட்டத்திற்கான சாட்சியப்பதிவுகளின் மூன்றாம் நாளான இன்று விடுதலைப்புலிகள் , இராணுவத்திற்கு எதிரான முறைப்பாடுகளே அதிகமாக முன்வைக்கப்பட்டுள்ளன.

வடக்கு கிழக்கில் யுத்தத்தின் போதும் யுத்த முடிவின் பின்னர் சரணடைந்தும் காணாமல் போனவர்களைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டாம் கட்ட அமர்வின் மூன்றாம் நாள் சாட்சியமளிப்பு இன்று ஒட்டுசுட்டான் பிரதேச செயலக த்தில் நடைபெற்று வருகின்றது.

அதன்படி ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 16 கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கான சாட்சியப்பதிவுகள் நடைபெற்று வருகின்ற நிலையில் இதுவரை சாட்சியமளித்தவர்களின் சாட்சியங்களில் இருந்து இராணுவம் , விடுதலைப்புலிகள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இன்றைய சாட்சியத்திற்கான 67 பேர் ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 45 பேர் வரை ஆணைக்குழு முன்னால் சாட்சியமளித்துள்ளனர்.  இன்று காலை முதல் தற்போது வரை இடம்பெற்ற பதிவுகளில் தமது உறவுகள் காணாமல் போனதற்கு  விடுதலைப்புலிகள் மீதான குற்றச்சாட்டுக்களே அதிகமாக முன் வைக்கப்பட்டன.

விடுதலைப்புலிகளது கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் போது விடுதலைப்புலிகள் பிள்ளைகளை வலுக்கட்டாயமாக தமது அமைப்பில் இணைத்துக் கொண்டனர் என்றும், பிடித்துச் சென்றவர்களை மீண்டும் திரும்பி வர விடவில்லை என்றும், சண்டைக்கு அனுப்பிய வேளை காணாமல் போய்விட்டார் என்றும், இறந்து விட்டதாக அறிவித்தனர் என்றும், இறுதி நேரத்தில் இராணுவ கட்டுப்பாட்டிற்குள் வந்த எங்களை விடுதலைப்புலிகள் கூட்டதில் காயம் ஏற்பட்டது என்றும் பல குற்றச்சாட்டுக்களை ஆணைக்குழு முன் தெரிவித்தனர்.

அதேபோல இராணுவத்தின் கொத்துக் குண்டில் தனது மகன் காயமடைந்தார் என்றும், விடுதலைப்புலிகளில் இருந்தவர்களை சரணடையுமாறு அறிவித்ததையடுத்து வட்டுவாகலில் வைத்து இராணுவத்திடம் சரணடைந்தவர்களுக்கு என்ன ஆனது என்று தெரியாது என்றும், காயப்பட்டவர்களை ஏற்றிச் சென்ற இராணுவம் இதுவரை பிள்ளைகளை விடவில்லை என்றும், எனது கணவர் தடுப்பில் இருப்பதாக புகைப்படம் வீரகேசரி பத்திரிகையில் வெளியாகியது ஆனால் இன்றுவரை வரவில்லை என்றும்,

 

ஓமந்தையில் பிறித்து ஏற்றிய இராணுவம் பிள்ளைகளை இல்லை என்றும் கூறுகின்றது எனவும், வைத்திய சாலைக்கு மருத்துவத்திற்கு கொண்டுவந்த இராணுவம் பின்னர் அவர்களே ஏற்றிக் கொண்டு சென்று விட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் அறிவித்தனர் என்றும், பெயர் இருந்தும் மகனைக் காணவில்லை என்றும் , செஞ்சிலுவை சங்கத்தின் கப்பலில் மாத்தளனில் வைத்து ஏற்றிய எனது மகனை இன்று வரை காணவில்லை என்றும் சாட்சியங்களை ஆணைக்குழுவிற்கு தெரிவித்துள்ளனர்.

எனினும் முல்லை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாளை விட இன்று இராணுவத்தை விட அதிகமான குற்றச்சாட்டுக்கள் விடுதலைப்புலிகள் மீதே சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

photo-1%2821%29.jpg

 

photo-2%2813%29.jpg

 

photo-3%2811%29.jpg

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=681413609004719428#sthash.LdJl4Gh2.dpuf

இது தொடர்பான நேற்றைய செய்தி:

 

http://www.yarl.com/forum3/index.php?/topic/148320-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
கணவரை விலங்கிட்டு வெள்ளைவானில் ஏற்றிச் சென்றனர்; எங்கே எங்கள் உறவுகள் ? 
 
ஆயுதங்களுடன் சிவில் உடையில் வீட்டுக்கு  வந்த ஆறு பேர் எனது கணவருக்கு விலங்கிட்டு இழுத்துச் சென்று வெள்ளை வானில் ஏற்றிச் சென்றனர். நான் கேட்காத இடம் இல்லை போகாத இராணுவ மற்றும் பொலிஸ் நிலையங்கள் இல்லை என கணவரை காணாது தவிக்கும் இளம் பெண்ணொருவர் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சாட்சியமளித்தார்.

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்ற ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வில் பெண்ணொருவர் மேற்கண்டவாறு சாட்சியமளித்தார்.

அவர் மேலும் சாட்சியமளிக்கையில்,

நாங்கள் வவுனியாவில் இருக்கும் போது 2009.05.12 ஆம் திகதி பகல் 2 மணிக்கு வீட்டுக்கு சிவில் உடையில்  ஆயுதங்களுடன் வந்தவர்கள் சிங்களத்திலேயே பேசினார்கள். எனக்கு சிங்களம் தெரியாது அதனால் என்ன பேசினார்கள் என்று எனக்கு தெரியவில்லை.

விலங்கிட்டு இழுத்துக் கொண்டு சென்று வீட்டிற்கு வெளியில் நின்ற வெள்ளை வானில் ஏற்றிக் கொண்டு சென்று விட்டனர். நான் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு சென்று சம்பவத்தைக் கூறினேன். அங்கும் அவர்கள் தங்களுக்குள் சிங்களத்தில் ஏதோ கூறினர்.

பின்னர் தாங்கள் பிடிக்க வில்லை என்று கூறி என்னை அனுப்பி விட்டனர். இதேவேளை எனது கணவருக்கு முன்னர் சுற்றிவளைப்பில் பிடிபட்டவர் என்பது தொடர்பில் வவுனியா நீதிமன்றில் வழக்கு ஒன்று இராணுவத்தினால் போடப்பட்டு இருந்தது.

எனினும் கணவர் 12 ஆம் திகதி பிடித்துச் செல்லப்பட்டார். அவரது வழக்கு 19 ஆம் திகதி நீதிமன்றில் இருந்தது. அதற்கு நாங்கள் சென்றோம் . எனது கணவரை பிணையில் எடுத்தது எனது சிறிய தந்தையார். அப்போது நீதிமன்றில் பிணையாளிக்கு விடுதலை என்றும் வழக்கு முடிவுக்கு கொண்டு வரப்படுகின்றது என்றும் நீதவானால் மன்றில் உத்தரவிடப்பட்டது.

எனினும் கணவர் கடத்தப்பட்டதன் பின்னர் எவ்வாறு வழக்கு முடிவுக்கு வரும்? எனது கணவரான நவரட்ணராசா விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் அவர்களுக்கு மேசன் வேலை, மர வேலைகள் சம்பளத்திற்கு செய்து கொடுக்கின்றது மட்டும்  தான். எல்லா இடமும் தேடிவிட்டேன். ஆனால் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது எனது கணவர் உயிருடன் இருக்கின்றார் என்றும் அவர் மேலும் தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.

இதேவேளை, வன்னியில் இருந்து வவுனியாவிற்குச் சென்றவரை இராணுவம் கைது செய்து சென்றது இதுவரை தகவல் இல்லை என  மேலும்  ஒருவர் ஆணைக்குழு முன் சாட்சியமளித்தார்.

நாங்கள் முல்லைத்தீவில் தான் இருந்த நாங்கள். வீடு கட்டுவதற்கு என பொருட்கள் வாங்குவதற்கு  2008.08.31 ஆம் திகதி வவுனியாவிற்கு போனவர். அங்கு மாமி வீட்டில் தங்கியிருக்கின்றார். பின்னர் இராணுவம் பிடித்துச் சென்றுவிட்டதாக மாமி தகவல் அறிவித்திருந்தார்.ஆனால் இன்று வரை எங்கே என்று தெரியவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் இன்றைய அமர்வில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் இரண்டு படகில் வலைஞர் மடத்தில் இருந்து முள்ளிவாய்க்காலுக்கு கடற்றொழிலுக்கு சென்ற வேளை கடற்படை பிடித்துச் சென்று விட்டது. என சகோதரிகள் மூவர் தங்களுடைய கணவர் மாரைக் காணவில்லை என்று ஆணைக்குழு முன் சாட்சியமளித்தனர்.

தற்போது மிகவும் கஸ்ரப்படுகின்றோம் என்றும் கடற்கரைக்கு சென்று கருவாடு போட்டும் சமைத்துக் கொடுத்தும் தான் வாழ்ந்து வருகின்றோம் என்றும் கண்ணீர் மல்க சாட்சியமளித்தனர்.

விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்த எனது மகன் கமல்ராஜ் மணலாறு சண்டைக்கு போன வேளை காணாமல் போய்விட்டார் . பின்னர்2008.03.01 அன்று இதய வீணை நிகழ்ச்சியில் தான் உயிருடன் இருப்பதாகவும் இராணுவத்திடம் சரணடைந்து விட்டதாகவும் எனது மகன் பேட்டியளித்து இருந்தார்.

அதற்குப் பின்னர் திருகோணமலை வைத்தியசாலையில் இருப்பதாக அறிந்தேன். சென்று பார்க்க விடுதலைப்புலிகள் அனுமதி வழங்கவில்லை. 2009 முகாமிற்கு போன பிறகு தேடினேன் இன்றும் இல்லை என்றும் ஆணைக்குழு முன் சாட்சியமளித்தார். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=872343605404189851#sthash.Sdx29wBq.dpuf

Edited by பிழம்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.