Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீரியபெத்தவில் மண்சரிவு ஏற்பட காரணம் என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கொஸ்லந்த மீரியபெத்த பிரதேசத்தில் மூடுபடை தாவரங்களை பயிரிடாமையே பாரிய அனர்த்தத்திற்கு காரணமாக அமைந்துள்ளது என  வன பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது.
 
மண்ணைப் பற்றிப் பிடிக்க கூடிய மரச்செய்கையை ஊக்குவிப்பதனை விடுத்து மரக்கறிவகைகளை பயிர்செய்திருந்தமையும் அப்பிரதேசத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
 
தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான மலையகத்தின் தோட்டப் பகுதிகளின் வளங்களை பாதுகாப்பதற் கான அதிகாரம் எமக்கு இல்லாதபோதும் எதிர்காலத்தில் மேலும் இவ்வாறான அனர்த்தங்கள் இடம்பெறுவதனை தவிர்க்கும் நோக்கில் வனப்பாதுகாப்பு திணைக்களம் தோட்டப் புறத்திலுள்ள தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட விரும்புகிறது.
 
இந்நிறுவனங்கள், விரும்பும்பட்சத்தில் தொழிநுட்ப உதவிகளை பெற்றுக்கொடுக்க தாம் தயார் என வன பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது.
 
மலையகங்களில் மண்சரிவினை தடுப்பதற்காக முன்பு பைன்னஸ் மரங்கள் நடுகை செய்யப்பட்டன. இம்மரத்திலிருந்து விழக்கூடிய ஊசிகளால் மண் பசுமை தன்மையினை இழப்பதுடன் வறட்சியின் போது காட்டுத்தீ ஏற்படக் காரணமாக அமைவதனைக் காரணம் காட்டி மக்கள் பைன்னஸ் மரங்களின் பயிர்ச்செய்கையினை வெறுக்க ஆரம்பித்தனர்.
 
இம்மரங்களால் எவ்வித பயனும் இல்லாததன் காரணத்தினால் அரசாங்கமும் பைன்னஸ் மரநடுகையினை பல வருடங்களாக கைவிட்டுள்ளது.
 
பைன்னஸ் மரங்களுக்கு பதிலாக பல வேறு வகை மரங்களை மூடுபடை தாவரங்களாக பயன்படுத்த முடியும். தோட்ட நிர்வாகத்தினருக்கு மண்ணின் தன்மைக்கேற்ப மரங்களை தெரிவு செய்ய, நாம் உதவ தயாராகவுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=825303608704613910#sthash.R2hR3b2u.dpuf

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.