Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக செஸ் சாம்பியன் பட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிரம்னிக் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றார்

-----------------------------------------------------------------

14 அக்டோபர் 2006

ரஷ்யாவின் எலிஸ்டாவில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் போட்டிகளில் ரஷ்ய வீரர் விளாடிமிர் கிரம்னிக் (Vladimir Kramnik), பல்கேரியாவின் வாசலின் டோபலோவை (Vasline Topolov) டைபிரேக்கர் முறையில் வீழ்த்தி சாம்பியன் ஆனார்.

இதன் மூலம் கடந்த 1993ம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாக அங்கீகரிக்கப்பட்ட சாம்பியனாக கிரம்னிக் வெற்றிபெற்றுள்ளார்.

tiebreaks12.jpg

கிராம்னிக் தனது சிப்பாய் ஒருவரை முன்னகர்த்திய பின் (10. e4 )

இறுதி நாளன்று மிகவும் சீக்கிரமாக (rapid games) நடைபெற்ற, குறிப்பிட்ட நேரத்திலான ஆட்டத்தில் கிரம்னிக் 8.5 - 7.5 என்ற ஸ்கோருடன் இந்த வெற்றியை அவர் பெற்றார்.

tiebreaks11.jpg

இந்த வெற்றியின் மூலம் 5 லட்சம் டாலர்களை கிரம்னிக் பெற்றார். உலக செஸ் சம்மேளனத்தில் இருந்து கேரி கேஸ்பரோவ் விலகியதைத் தொடர்ந்து கிரம்னிக் இந்த வெற்றியை பெற முடிந்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:arrow: [url=http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D]செஸ் CHESS

----------------------------

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

Staunton_chess_set.jpg

A typical Staunton-design set and clock

அரசர்களின் விளையாட்டு என வர்ணிக்கப்படும் செஸ் (Chess), இருவர் விளையாடும் ஒரு பலகை விளையாட்டு ஆகும். ஒரு பக்கத்துக்கு 16 காய்கள் வீதம், 32 காய்கள் இவ் விளையாட்டில் பயன்படுகின்றன. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாக இரண்டு நிறங்களில் காய்கள் அமைந்திருப்பது வழக்கம். விளையாடும் பலகை, 8 வரிசைகளிலும், 8 நிரல்களிலும் (8 x 8 ) அமைந்த கட்டங்களைக் கொண்ட சதுர வடிவமானது. பொதுவாகக் கறுப்பு வெள்ளை நிறங்களில் மாறி மாறி அமைந்திருக்கும். செஸ் அதிட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு விளையாட்டு அல்ல. மதியூகமும், தந்திரமும் இவ் விளையாட்டுக்கு முக்கியமானதாகும்.

செஸ் மனித இனத்தின் பிரபல விளையாட்டுக்களில் ஒன்றாகும். இது ஒரு விளையாட்டாக மட்டுமன்றி, ஒரு கலையாகவும் அறிவியலாகவும் கூட வர்ணிக்கப்படுவதுண்டு. இது சில சமயம் ஒரு abstract போர் விளையாட்டாகவும், "மூளை சார்ந்த போர்க்கலை"யாகவும் பார்க்கப்படுவதுண்டு. செஸ் பொழுதுபோக்காகவும், போட்டியாகவும், கழகங்களிலும், சுற்றுப்போட்டிகளிலும், இணையத்திலும், தபால் மூலமும்கூட விளையாடப்படுகின்றது. பல விதமான செஸ் விளையாட்டும், அதனுடன் தொடர்புடைய விளையாட்டுக்களும் உலகமெங்கிலும் விளையாடப்படுகின்றன. சீனாவின் ஷியாங்கி, ஜப்பானின் ஷோகி, நேபாளத்தின் புத்தி சல் என்பன இவற்றுள் புகழ் வாய்ந்தவை.

அறிமுகம்

செஸ்ஸின் தோற்றம் பற்றிப் பல்வேறு கருத்துக்கள் நிலவினாலும், ஏழாம் நூற்றாண்டு அளவில் இந்தியாவில் விளையாடப்பட்டு வந்த சதுரங்கம் என்னும் விளையாட்டிலிருந்தே இது வளர்ச்சியடைந்தது என்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்து. இங்கிருந்து மேற்கே ஐரோப்பாவுக்கும், கிழக்கே கொரியா வரையும் பல வேறுபாடுகளுடன் பரவியது. இது மங்கோலியா வழியாக ரஷ்யாவுக்குப் பரவியது. அங்கே ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் விளையாடப்பட்டதாகத் தெரிகிறது. இந்தியாவிலிருந்து பாரசீகத்துக்குப் பரவிய இவ்விளையாட்டு, பாரசீகத்தை இஸ்லாமியர்கள் கைப்பற்றிய பின்னர் இஸ்லாமிய நாடுகள் பலவற்றிலும் பரவியது. முஸ்லிம்களால் பத்தாம் நூற்றாண்டு அளவில் இது ஸ்பெயினில் அறிமுகப்படுத்தப்பட்டது. 13 ஆம் நூற்றாண்டில், காஸ்ட்டில்லின் அல்போன்சோ X-இன் ஆதரவில், செஸ், பாக்கம்மொன், டைஸ் என்னும் விளையாட்டுக்கள் தொடர்பான நூலொன்று எழுதப்பட்டுள்ளது. 11 ஆம் நூற்றாண்டில் செஸ் இங்கிலாந்தை எட்டியது. அங்கே அது கூரியர் முதலிய வேறுபட்ட வடிவங்களாக உருவெடுத்தது.

15 ஆம் நூற்றாண்டின் இறுதியில் செஸ் காய்களின் நகர்த்தல்களுக்கான வரைமுறைகள் இத்தாலியில் பயன்பாட்டுக்கு வந்தன. "போன்"கள் (வீரர்) முதல் நகர்த்தலின்போது இரண்டு கட்டங்கள் முன் நகரலாம் என்ற விதி ஏற்பட்டது, "பிஷப்" திறந்த கட்டங்களின் மூலைவிட்டம் வழியாக எவ்வளவு தூரமும் செல்லலாம் என்ற விதியும் புழக்கத்துக்கு வந்தது. முன்னர் இவை மூலைவிட்டம் வழியாக இரண்டு கட்டங்கள் மட்டுமே நகர அனுமதிக்கப்பட்டது. ஆனால் கட்டங்களைப் பாய்ந்து செல்ல இவற்றுக்கிருந்த அனுமதி நீக்கப்பட்டது. மூலை விட்டம் வழியாக ஒருகட்டம் மட்டுமே நகரலாம் என "இராணி"க்கிருந்த சக்தி கூட்டப்பட்டு திறந்த கட்டங்களினூடாக எத்திசையிலும், எவ்வளவு தூரமும் நகரலாம் என அனுமதிக்கப்பட்டு "இராணி" ஒரு மிகச் சக்திவாய்ந்த காயாக ஆக்கப்பட்டது.

மேற்படி மாற்றங்கள் செஸ்ஸை கூடுதலாகப் பகுப்பாய்வு செய்வதற்கு வழிவகுத்ததின் மூலம், பல ஈடுபாடுள்ள செஸ் ஆர்வலர்களை உருவாக்கியது. அக்காலம் தொட்டு ஐரோப்பாவில் செஸ் அதிகம் மாற்றமில்லாது இன்று விளையாடப்படுவது போலவே இருந்துவருகிறது. சமநிலைக்கான நிபந்தனைகள் தவிர்ந்த ஏனைய, தற்போது புழக்கத்திலுள்ள வரைமுறைகள் யாவும் 19 ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் முடிவு செய்யப்பட்டன.

"ஸ்டவுண்டன்" தொகுதி எனப்படும் மிகப் பிரபலமான காய் வடிவமைப்பு நத்தானியேல் குக் என்பவரால் 1849ல் வடிவமைக்கப்பட்டு, அக்காலத்தில் முன்னணிச் செஸ் விளையாட்டு வீரரான ஹோவார்ட் ஸ்டவுண்டன் என்பவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டபின், 1924ல் FIDE ஆல் உத்தியோக பூர்வமாகப் புழங்க விடப்பட்டது.

ஒரு காலத்தில் செஸ் விளையாட்டுக்கள் விபரிப்பு செஸ் குறியீடுகள் (descriptive chess notation) மூலம் பதிவு செய்யப்பட்டன. இது இன்னும் சில விளையாட்டாளர்களால் பயன்படுத்தப்பட்டுவரினும், புதிய, சுருக்கமான அட்சரகணித செஸ் குறியீடுகளால் இவை படிப்படியாக மாற்றீடு செய்யப்பட்டு வருகின்றன. காவத்தக்க விளையாட்டுக் குறியீடு (Portable Game Notation - PGN) முறையே கணிணிப் பயன்பாட்டு வடிவில் அமைந்த மிகப் பொதுவான குறியீட்டு ஒழுங்கு ஆகும்.

மனித மூளைக்கு மட்டுமே உரித்துடையதாகக் கருதப்பட்ட செஸ் விளையாட்டை இப்பொழுது, மனிதர்கள் மட்டுமன்றி இயந்திரங்களும் விளையாடத் தொடங்கிவிட்டன. ஆரம்பகாலங்களில் வெறும் ஆர்வம் காரணமாகப் பயன்பட்டுவந்த ஒன்றாக இருந்த போதிலும், செஸ் விளையாடும் கணினிகள் வளர்ந்து திறமையான மனிதர்களுக்கே சவால்விடக்கூடிய, சிலசமயம் தோற்கடிக்கக்கூடிய அளவுக்குச் சக்தி மிக்கவையாகிவிட்டன.

அக்காலத்தில் செஸ் விளையாட்டில் உலகில் முதல் நிலையிலிருந்த காரி காஸ்பரோவ், 1996ல், 6 விளையாட்டுகள் கொண்ட செஸ் ஆட்டத்தை ஐபிஎம்-இனுடைய செஸ் கணினியான டீப் புளூ (ஆழ் நீலம்) வுக்கு எதிராக விளையாடினார். முதல் விளையாட்டில் (டீப் புளூ- காஸ்பரோவ், 1996, விளையாட்டு 1) காஸ்பரோவை வென்றது லம் கணினி உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனாலும் 3 விளையாட்டுக்களை வென்றது மூலமும், ஏனைய இரண்டிலும் சமநிலையை அடைந்தது மூலமும் காஸ்பரோவ் வெற்றிபெற்றார்.

1997ல் மறுபடியும் நடைபெற்ற 6 விளையாட்டுகள் கொண்ட ஆட்டத்தில் கணினி வெற்றிபெற்றது. அக்டோபர் 2002ல் விளாமிடிர் கிராம்னிக் எட்டு விளையாட்டுகள் கொண்ட ஆட்டத்தில் டீப் பிரிட்ஸ் என்னும் கணினி program உடன் சமநிலை பெற்றார். 2003 பெப்ரவரியில், டீப் ஜூனியர் எனும் கணினி program உடன் விளையாடிய 6 விளையாட்டு ஆட்டத்திலும், பின்னர் நவம்பரில் X3D பிரிட்ஸ் உடன் விளையாடிய 4 விளையாட்டு ஆட்டத்திலும் காஸ்பரோவ் சமநிலையையே பெற்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல இணைப்பு நண்பரே! செஸ் என்பதை தமிழிலேயே சதுரங்கம் என்று தலைப்பிட்டிருக்கலாம். ஏன் என்றால் அதன் அடையாளமே இந்தியாவில் இருந்து போனது தானே!

இருந்தாலும் இந்தியாவில் மன்னர்கள் விளையாடுகின்றபோது, அது ஒழுங்கான வடிவத்தில் இருந்திருக்கவில்லை என்று சொல்கின்றார்கள். தங்களுக்கு ஏற்றவித்தில் விதிமுறைகளை ஒவ்வொருவரும் வகுத்துக் கொண்டனர். ஒழுங்கான விதி என்பதை மேற்குலகம் சென்ற பிறகு தான் வந்தது .

இது குறித்தான சுரதாவின் இணைப்பு ஒன்று, எவ்வாறு சதுரங்கம் விளையாடுவது குறித்து என்பது. ஒளிப்பட வடிவில். வேறு யாரும் தமிழில் இது பற்றிய விளக்கம் எழுதியிருக்கின்றார்களோ தெரியவில்லை.

http://www.jaffnalibrary.de/tools/chess1.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி தூயவன்

நானும் அதைப்பற்றி சிந்தித்தேன், அனால் ஒரு பிரச்சினை: சதுரஙம் என்று ஒரு விளையாட்டு உண்டு.

சதுரங்கம் பண்டைய இந்தியாவில் விளையாடப்பட்ட ஒரு பலகை விளையாட்டு. இதுவே தற்காலத்தில் உலகம் முழுதும் பிரபலமாக விளையாடப்பட்டுவரும் "செஸ்" விளையாட்டின் முன்னோடியாகக் கருதப்படுகின்றது.

சதுரங்கமும் தற்காலத்து செஸ் யை போன்று நிறம் தீட்டப்படாத 8x8 சதுரப் பலகயில் விளையாடப்படுகிறது. இன்னும் அது விளையாடப் படுகின்றதா என்று நிச்சயமாகத் தெரியாது

மேலதிக தவல்களுக்கு:

:arrow: [url=http://en.wikipedia.org/wiki/Chaturanga]Chathurangka

இதப்பற்றி சுரதாவின் இனப்புகளுக்கு நன்றி. தமிழர்களிடத்தே இந்த அரும் பெரும் விளையாட்டை எல்லொருக்கும் அறிமுகப்படுத்தி மேன்மை படுத்த எடுக்கும் உங்கள் முயற்ச்சிகளுக்கு நன்றி, வாழ்த்துக்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.