Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோத்தாவை சந்திக்கச் சென்று அவமானப்பட்ட செல்வம் எம்பியும் மன்னார் ஆயரும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கோத்தாவை சந்திக்கச் சென்று அவமானப்பட்ட செல்வம் எம்பியும் மன்னார் ஆயரும்!

 

 

adaikalanathan-mannar-bishop.jpgமுள்ளிக்குளம் நில ஆக்கிரமிப்புத் தொடர்பில் கோரிக்கைவிடுப்பதற்காக கோத்தாபயவை சந்திக்க கொழும்பு சென்ற மன்னார் ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகையும் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலரும் அவமானம் அடைந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

படைத்தரப்பால் மன்னாரில் அபகரிக்கப்பட்டுள்ள முள்ளிக்குளம் கிராமத்தினை மக்களிடம் மீள ஒப்படைக்குமாறு கோருவதற்காக சந்திக்க வாய்ப்பளிக்குமாறு கோரிக்கைவிடுக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய நேற்று பிற்பகல் 4.மணிக்கு சந்திக்கலாம் என்றும் அதற்காக கொழும்பு வருகை தருமாறும் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தாபய தரப்பிலிருந்து பதிலனுப்பப்பட்டிருக்கின்றது.

இதனை அடுத்து மன்னார் மறைமாவட்ட ஆயர் இராஜப்பு யோசப் ஆண்டகை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் டெனீஸ்வரன் ஆகியோர் குறித்த நேரத்துக்கு கோத்தாவின் அலுவலகத்தில் பிரசன்னமாகியிருக்கின்றனர்.

ஒரு மணி நேரத்தின் பின்னர் அவர்களைச் சந்தித்த கோத்தாபய ஐந்தே ஐந்து நிமிடம் மட்டுமே அவர்களுடன் நேரத்தை சிலவழித்ததாக சந்திப்பில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரச தரப்பை சந்திப்பதில்லை என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் அறிக்கைகளை அடுக்கடுக்காக வெளியிட்டுவரும் நிலையில் செல்வம் அடைக்கலநாதன் எம்பியும் டெனீஸ்வரனும் கோத்தாவை சந்திக்கச் சென்றதுடன் மன்னார் ஆயரையும் அழைத்துச் சென்று அவமானப்படுத்தியுள்ளமை தொடர்பில் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

http://tamilleader.com/?p=43274

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.