Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகள் மீதான தடை வழக்கின் இறுதி விசாரணை - தடையை நீட்டிக்க வேண்டுமாம் தமிழக அரசு வக்கீல் யோகேஷ் கன்னா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

LTTE-Logo%20pathivu.jpg

இந்தியாவில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடையை மத்திய அரசு அவ்வப்போது நீடித்து வருகிறது. இந்த தடை சரியா என்பதை விசாரிக்க நீதிபதி ஜி.பி.மிட்டல் தலைமையிலான சட்டவிரோத செயல்கள் தடுப்பு தீர்ப்பாயத்துக்கு டெல்லி ஐகோர்ட்டு அமர்வு உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பாயத்தின் இறுதிகட்ட விசாரணை நேற்று டெல்லி ஐகோர்ட் வளாகத்தில் நீதிபதி ஜி.பி.மிட்டல் தலைமையில் நடைபெற்றது.

மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்ஜீவ் ஜெயின் தன்னுடைய வாதத்தில், விடுதலைப்புலிகளின் செயல்பாடுகள் இந்தியாவில் இன்னும் தொடர்ந்து வருகின்றன என்று உளவுத்துறையின் தகவல்கள் கிடைத்து வருகின்றன. இது இந்திய இறையாண்மைக்கும், அமைதிக்கும் ஊறு விளைவிப்பதாக அமையும். விடுதலைப்புலிகள் அமைப்பை சட்டவிரோத அமைப்பாக அறிவித்து அந்த அமைப்பின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கூடாது என்றார்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல் யோகேஷ் கன்னா தன்னுடைய வாதத்தில்,

’’விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆதரவாக இந்தியாவில் சில குழுக்கள் செயல்பட்டன. இதனால், அவற்றின் உறுப்பினர்கள் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2012, மே 14 முதல் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிலர் மீது வெடிமருந்து சட்டங்களின்படியும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

விடுதலைப்புலிகளுக்கு சாதகமாகவும், அவர்களின் தனி ஈழம் குறித்த கோரிக்கையை ஆதரித்தும் இணையதளம் மூலம் வெளிநாடுகளில் வாழும் இலங்கை தமிழர்கள் சிலர் பிரசாரம் செய்துவருகின்றனர். அவர்கள், இலங்கையில் விடுதலைப்புலிகளை வீழ்த்த இந்திய அரசே காரணம் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.

இத்தகைய பிரசாரங்களால் இந்தியாவில் உள்ள மிக முக்கிய பிரமுகர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே, பிரிவினையைத் தூண்டும் இதுபோன்ற குழுக்களை ஊக்குவிக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை தொடர்ந்து சட்டவிரோத அமைப்பாக கருதி தடையை நீட்டிக்க வேண்டும்’’ என்று அவர் வாதிட்டார்.

இறுதிகட்ட விசாரணைகள் முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி ஜி.பி.மிட்டல் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார். 

http://www.pathivu.com/news/35141/57//d,article_full.aspx

சீமான் அண்ணன் இருக்குறார் தடைகளை உடைத்து தர என்பது எனது அசையாத நம்பிக்கை பார்ப்போம் டெல்லி வரை போயிட்டம் இது எல்லாம் சிறிய பிரச்சினை அண்ணே  :D

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் அண்ணன் இருக்குறார் தடைகளை உடைத்து தர என்பது எனது அசையாத நம்பிக்கை பார்ப்போம் டெல்லி வரை போயிட்டம் இது எல்லாம் சிறிய பிரச்சினை அண்ணே  :D

கொண்ட கொள்கையில் மனம் மாறதவர் வைக்கோ ஜயா இருக்கும் போது நாம் ஏன் கவலைப் படனும்.........கருணாநிதி கூட சேர்ந்து டொசோ மாநாட்டில் நல்ல முடிவை எடுத்து இந்த தடையை கூடிய விரைவில் நீக்கிவினம்..........கவலை வேண்டாம்............

Edited by பையன்26

வைகோ எங்கு போனார் கருணாநிதியிடம் அம்பி ........

அவருதான் தடைக்கு எதிரா வழக்கு போட்டு வாதிட்டு வருகிறார் ஓ சீமான் அந்தளவுக்கு படிப்பறிவு இருக்கா அக்ஷன் கட் சொல்லும் ஆள் அரசியல் தெரியுமா விடுங்க ...

சீமானுக்கு கிடைத்த முதல் வெற்றி வாழ்த்துக்கள் தொடர்த்து களமாடி அம்மா புகழ் பாடி உங்கள் ஆதரவை கொடுக்கவும் . :icon_idea: 

அன்மையில் வந்த செய்திகள் படிப்பது இல்லை போல.......கருணாநிதியை புகழ் பாடின மானஸ்தன் வைக்கோ ஜயாவுக்கு காவடி எடுக்கும் நீங்கள் எல்லாம் அண்ணன் சீமானை பற்றியும் அவர் செய்யும் அரசியல் பற்றி கதைக்கவும் தகுதி அற்றவர்கள்..........தெரு நாய்க்கு கூட மரியாதை இருக்கு ஆனால் அன்று அண்ணன் சீமானின் பேச்சை கேட்க்காமல் பாஜாக்கவுடன் போன வைக்கோ ஜயா இன்று யாரும் அற்ற அனாதையாக நிக்கிறார்.............சுப்பிரமனிய சுவாமியே சொல்லிட்டார் வைக்கோவை பாஜாகவில் இருந்து வெளியேற்ற சொல்லி............ஈழ தமிழரை அழிக்க துனை போன கருணாநிதியை பற்றி பல இடங்களில் கேவலமாக்க எல்லாம் பேசி விட்டு இன்று கருணாநிதி புகழ் பாடுவது எதுக்கு...........

ஆக பேப்பர் ..இணையம் பார்த்துதான் தாங்கள் அரசியல் கற்றுகொண்டு இருக்கிறியள் அம்பி ...ஓ சீமான் தம்பி ஆகிட்டே சு சாமி யாரு பாஜக தலைவரா அல்லது என்ன பொறுப்பில் உள்ளார் ...

ஜெயலலிதா மட்டும் தடுத்து போரடினவா நீங்க களமாடி கொடுக்க இன்று என்ன செய்தி என்று பார்க்கவில்லை போல ..

அரசியல் மரியாதை ஒன்று இருக்கு நேரில் கண்டால் கும்புடுவது கைகொடுப்பது சின்ன பிள்ளை தனா இருக்கு உங்க வாதம் இன்று மத்தியில் ஒரு ஈழ உணர்வாளன் இல்லை என்பதால் மத்தி என்ன ஆட்டம் போடுது என்று பார்த்தாவது திருந்துங்க எவ்வளவவு முக்கியம் மத்திய அரசில் அங்கம் வகிப்புது என்று .

ஆட்டுக்கை மாட்டை கலக்கிற உங்களோடை விவாதம் செய்து ஒரு பிரோசனமும் இல்லை நன்றி வணக்கம்...............

எனக்கு நடிக்கத்தான் தெரியும் என் கையில் ஒன்னும் இல்லை தம்பி படம் சொல்லும் செய்தி ..

10394495_10202001023106982_4554829486683

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு நடிக்கத்தான் தெரியும் என் கையில் ஒன்னும் இல்லை தம்பி படம் சொல்லும் செய்தி ..

10394495_10202001023106982_4554829486683

நீங்கள் குழப்பத்தை உண்டாக்கவே என்று வந்து நிக்கிறீங்கள்......அந்த மேடையில் பேசின காணொளி இதோ.......அண்ணன் சீமான் எதர்க்காக இப்படி செய்து காட்டினார் என்று கூட தெரியாமல்...கருணாநிதிக்கு காவடி எடுக்கும் நக்கீரன் கோபாலுவின் இணைய தள படத்தை யாழில் கொண்டு வந்து போட்டு மகிழ்கிர உங்க கூட அரசியல் பேசி பிரோசனம் இல்லை.......................

...........................

Edited by பையன்26

"ஒன்று நீ இஸ்லாம் மதத்திற்கு மாற வேண்டும்.இல்லலையேல் சாக வேண்டும்.முடிவு செய்" என்று மொகலாயப் பேரரசர் அவுரங்கசீப் ஒரு வாய்ப்பினைத் தருகிறார்,"மதம் மாறுவதற்குப் பதிலாக,என்னை மாய்த்துக் கொள்வேன்" என்று வாய்ப்பை மறுத்து இறந்து போகிறார்-சீக்கியர்களின் ஒன்பதாவது குருவான குரு தேஜ் பகதூர்.சமய நல்லிணக்கத்தைக் கடைபிடித்த அக்பர் காலத்தில்,எந்த மதத்திற்கும் அச்சுறுத்தலின்றி மக்கள் அமைதியான-நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்தனர்.அக்பருக்கு பின் அரியணையேறிய அவரது வாரிசுகள்-மருந்திற்கும் கூட மத நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கவில்லை.அதிலும் சீக்கியர்களைத் தங்கள் ஜென்ம விரோதிகளாகவேப் பார்க்கத் தொடங்கினர்.சீக்கியக் குருக்களைச் சிறை பிடித்தனர்,கொன்று குவித்தனர்.

தன் தந்தை குரு தேஜ் பகதூர் மொகலாய மன்னர் அவுரங்கசீப்பால்-கொலை செய்யப்பட்ட உடன்-அவரது மகனான குரு கோவிந்த் சிங் என்பவர்,தன் ஒன்பதாவது வயதில் சீக்கியர்களின் பத்தாவது குருவாகப் பதவியேற்கிறார்.இவர் ஆட்சியாளர்களாலும்,பிற மதத்தவராலும் தங்கள் சீக்கிய மதத்திற்கு வரும்-ஆபத்துக்களை,அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள-ஒரு சீக்கிய இராணுவத்தை கட்டமைக்கின்றார்.அதன் பெயர் தான் "கால்சா" படையினர்.இவர்களும் அடிப்படையில் கடும் மத அடிப்படைவாதிகளே.இவர்களின் நோக்கம்-"காலிஸ்தான்" என்ற தனி நாடு.

அதாவது-பஞ்சாப்பை இந்தியாவிலிருந்து பிரித்து,சீக்கியர்களுக்கென்று ஒரு தனி நாட்டை அமைப்பது.இன்னும் கொஞ்சம் புரியும்படியாக,அழுத்தமாகச் சொன்னால்-"சீக்கிய மதத்தவர்களுக்கென்று" ஒரு தனி நாடு.அவர்களின் போராட்டத்தில் நியாயம் இருக்கட்டும்,போராடட்டும்.அது அவர்களின் உரிமை.ஆனால்,இவர்களோடு இணைந்து,இவர்கள் போராட்டத்தை,சீக்கிய 

இனத்தின் போராட்டம் என்று தவறாக ஆதரித்தது-டெல்லியில் களமாடியருக்கின்றார் நடிகர் சீமான்.அவர் தன் ரசிகர் மன்றக் கருத்துக்களை மட்டும் அங்கு பரப்பியிருந்தால்,நாமும் வழக்கம் போலவே அவரைக் கண்டுகொள்ளாமல் விட்டிருக்கலாம்.

ஆனால் கருத்தியல் அடிப்படையில் துளி கூட தொடர்பில்லாத-தமிழீழ விடுதலைப்புலிகளின் தனி நாடு போராட்டத்தை-தொடர்பு படுத்தியதால் நம்மால் எளிதாக விட இயலவில்லை.

நடிகருக்கு நம் கேள்விகள் சில,

1.சீக்கியம் என்பது ஒரு மதம்.சீக்கியர்கள் என்றிலிருந்தது "இனம்" என்ற வரையறைக்குள் வந்தனர்?

2.பஞ்சாபியர்களில் பல இனங்கள் உண்டு,பல மதங்கள் கூட உண்டு.அவர்களில் சீக்கியர்கள் என்ற மதத்தினர் கேட்கும்-காலிஸ்தான் தனி நாடு கோரிக்கையை மட்டும் ஆதரிக்க காரணம் என்ன?

3.தமிழீழ விடுதலைப்புலிகளின் தனிநாட்டிற்கான போராட்டம் என்பது-தமிழ் என்ற மொழி பேசும்,தமிழன் என்ற அடையாளத்தோடு வாழும் மக்களின் நாட்டை,அபகரித்துக் கொண்ட சிங்களவர்களை எதிர்த்து இலங்கையில் நடந்த போராட்டமேயாகும்.இனத்திற்கான புலிகளின் போராட்டத்தை-தங்கள் மதத்தின் அடையாளத்தோடுப் போராடும் சீக்கியர்களின் போராட்டத்தோடு-தொடர்புபடுத்தி கேவலப்படுத்தியது ஏன்?

4.தமிழர்களில் இந்துக்கள் உண்டு,கிறுத்தவர்கள் உண்டு,இஸ்லாமியர்கள் உண்டு,பெளத்தர்கள் உண்டு.மதமேயில்லாத நாத்திகர்கள் கூட உண்டு.சீக்கியர்களில் இப்படியிருக்கின்றார்களா?

5.ஒரு வேளை பஞ்சாபியர்கள் என்ற தேசிய இனத்தின் போராட்டத்தையே ஆதரித்தேன்,என்று சப்பை கட்டு கட்டினாலும்,அந்த பஞ்சாபியர்கள் டர்பனும்,தாடியுமாகத் தங்கள் சீக்கிய மத அடையாளங்களை முன்னிறுத்தித் தானேப் போராடுகின்றனர்? புலிகள் என்றாவது இப்படி செய்ததுண்டா? புலிகள் கழுத்தில் இருந்தது என்ன? சிலுவையா? ருத்திராட்சமா? சயனைடு குப்பியல்லவா கழுத்தில் தொங்கியது!!!இவர்களையும்-சீக்கியர்களையும் ஒரே நேர்க்கோட்டில் நிறுத்தி-அந்தப் போராட்டத்தில் தேசியத்தலைவர் பிரபாகரனின் படத்தைப் பயன்படுத்தியது ஏன்?

6.தங்கள் வழிப்பாட்டுத்தனமான அமிர்தசரஸ் பொற்கோவிலைப் புகலிடமாகப் பயன்படுத்திக் கொண்ட இந்த காலிஸ்தான் இயக்க உறுப்பினர்களை-1984 ல் ஆப்பரசேன் ப்ளூ ஸ்டார் மூலம் அகற்றியதற்காகத்தான்-அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியைக் கொன்றனர் சீக்கியர்கள்.இந்திரா காந்தி புலிகள் இயக்கத்திற்குச் செய்த உதவிகள் எண்ணிலடங்காதவை.இந்திய அமைதிப்படை ஈழத்தில் நடத்திய வெறியாட்டத்தில் முக்கிய பங்கு சீக்கியர்களுடையதே. இப்படியொரு வரலாற்றைக் கொண்டவர்களின்,வரலாற்றுச் சிறப்புமிக்கப் போராட்டத்தில் பங்கு கொள்ள நடிகர் சீமான் சென்னையிலிருந்து புறப்பட்ட பொழுது-அவரை வழியனுப்பி வைத்தவர்களும் சீக்கியர்களே.இவர்களோடு 

நடிகர் சீமான் கரம் கோர்க்க காரணமென்ன?

7.இறுதியாக,மதமாற்றத்தை எதிர்த்து தங்கள் மதத்தைக் காப்பாற்றிக்கொள்ள துவங்கப்பட்ட அமைப்பே கால்சா படை.இவர்களது நோக்கமான தனி நாடு போராட்டத்தில் மட்டும் நியாயமிருப்பதாகத் தோன்றினால்-அதே அடிப்படையில் தங்கள் மதத்தைக் காக்க உருவாக்கப்பட்ட RSS ல் மட்டும் நியாயம் எப்படி இல்லாமல் போகும்?RSS மட்டும் தீவிரவாத இயக்கம் என்பது ஏன்?

பிரிவினைவாத தீவிரவாதிகளுக்கும்-உரிமைப் போராளிகளுக்கும் கூட வித்தியாசம் தெரியாத நடிகர் சீமானுக்கு இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதிலும் தெரியாது.வரவும் வராது.கேள்விகள் புரிந்தாலே அதுவே பெரிய அதிசயம்.எதைச் செய்கிறோம் என்ற அடிப்படைப் புரிதல் கூட இல்லாத இந்த மாதிரி அரைகுறைகளால் தான் புலிகளின் நியாயமான போராட்டம் கூட தீவிரவாத வரையறைக்குள் திணிக்கப்படுகிறது!

நன்றி துரை அண்ணா .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.