Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிக்குளம் படை முகாம் அகற்றப்படாது; அடித்துக் கூறினார் கோத்தா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மன்னார் முள்ளிக்குளம் கடற்படை முகாம் அமைந்திருக்கும் பகுதியை தவிர ஏனையவை கடற்றொழிலாளர்களது பாவனைக்கு விடப்படுமே தவிர படை முகாம் அகற்றப்படாது என பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். 
 
பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்சவுக்கும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப், மன்னார் குரு முதல்வர் விக்ரர் சூசை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வடக்கு மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் ஆகியோருக்கும் இடையில் சந்திப்பொன்று நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு பாதுகாப்பு அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது. 
 
குறித்த சந்திப்பு தொடர்பில் வடக்கு மாகாண அமைச்சர் டெனீஸ்வரனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, 
 
பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ச இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் கதிர்னால் மல்கம் ரஞ்சித் அகியோர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மன்னார் முள்ளிக்குளத்திற்கு வருகை தந்து பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தார்.
 
அதில் படைமுகாம்கள் அகற்றப்படும் என்ற வாக்குறுதியும் உள்ளடக்கப்பட்டு இருந்தது. எனினும் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை இன்னும் நிறைவேற்றப்படவில்லை. அதனை சுட்டிக்காட்டும் நோக்குடனும் அவற்றிற்கான பதிலை பெறுவதற்கும் குறித்த கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.
 
அதன்போது தங்களால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்ற விடயத்தை ஆயர் சுட்டிக்காட்டி இருந்தார். 
 
அத்துடன் முள்ளிக்குளம் கடற்படை முகாம் அகற்றப்பட்டு அவற்றில் மக்கள் மீள்குடியமர்வுக்கு அனுமதிக்கப்படும் என்று வாக்குறுதிகள் தங்களால் வழங்கப்பட்டு இருந்தது. எனினும் இதுவரை அவை நிறைவேற்றப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியிருந்தார். 
 
அதன்போது கருத்துத் தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலர் , முள்ளிக்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கடற்படை முகாம் அகற்றப்பட மாட்டாது என்று உறுதியாக தெரிவித்துள்ளார். 
 
இருப்பினும் பிரதான படை முகாமைச் சுற்றியுள்ள ஏனைய பகுதிகள் மக்களின் பயன்பாட்டிற்காக விடுவிக்கப்படும் என்றும் இதனால் கடற்றொழிலை மேற்கொள்பவர்களின் போக்குவரத்து இலகுவாக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
 
அத்துடன் எதிர்வரும் காலங்களில் இராணுவத்தினரால் காணி சுவீகரிப்பு நடைபெற்றால் அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எதிர்வரும் காலங்களில் அவ்வாறு நடைபெறாது என்றும் பாதுகாப்பு செயலர் தெரிவித்துள்ளார்.
 
மேலும் முள்ளிக்குளம் கடற்படை முகாமிற்குள் காணியை இழக்கும் பொதுமக்களுக்கு காணிகள் வழங்கவும் அதற்குள் வீடுகள் கட்டிக் கொடுக்கவும் செயலர் இணக்கம் தெரிவித்துள்ளார் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=664533617307775036#sthash.7R5FgWJA.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.