Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொஸ்லாந்து பேரிடரின் பின்னால் உள்ள அவல வரலாறு! -ரங்கா ஜெயசூரியா

Featured Replies

(உலகளாவிய உழைக்கும் மக்களில் மிகவும் மோசமான முறையில் சுரண்டப்படும் மக்கள் இலங்கைத் தோட்டங்களில் பல நூற்றாண்டுகளாக மாடாய் உழைத்து ஓடாய்ப் போன மலையகத் தமிழ் மக்களே. சொந்த நிலம், வீடு, தரமான பள்ளிக் கூடங்கள், சிறப்பான மருத்துவமனைகள், குடிதண்ணீர் எதுவுமின்றி இந்த மக்கள் முன்னர் அந்நிய வெள்ளைக்கார முதலாளிகளாலும் பின்னர் இன்றைய அரசாலும் சுரண்டப்படுகிறார்கள். மலையக மக்களை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் மலையக அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் இவர்களது அடிப்படை உரிமைகளை வென்றெடுக்கத் தவறிவிட்டன. அறுபதுகளில் தமிழரசுக் கட்சி, இலங்கைத் தொழிலாளர் கழகம் என்ற பெயரில் ஒரு தொழிற் சங்கத்தைத் தொடக்கி மலையகத்தில் இயக்கிக் கொண்டிருந்தது. கொழும்பில் பணியில் இருந்த நான் வார இறுதியில் அட்டன், நாவலப்பிட்டி, கம்பளை போன்ற நகரங்களில் உள்ள தோட்டங்களில் நடக்கும் கூட்டங்களுக்கு அரசாங்க எழுது வினைஞர் சங்கத்தின் சார்பாக போவதுண்டு. என்னைப் போலவே நண்பர்கள் செ.கோடீசுவரன, ஈழவேந்தன் போன்றோரும் போய் வருவார்கள். இதனால் இந்த மக்களோடு நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. அவர்களை ஏழ்மையை நேரில் பார்க்க முடிந்தது. ‘லயன்’ என்று சொல்லப்படுகிற அவர்களது சிறு தகரக் கொட்டகைக்குள் முழுக் குடும்பமே வாழ்ந்தது. சமயல், சாப்பாடு, படுக்கை எல்லாமே இந்த தகரக் கொட்டகைக்குள்த்தான். இறந்தால் உடல் தேயிலைத் தோட்டத்திலேயே புதைக்கப்பட்டது. அவர்கள் அன்போடு கொடுத்த உணவை அவர்கள் உண்ணும் தட்டில் சாப்பிட்டிருக்கிறேன். எங்களைப் பெருமைப்படுத்த மாலைகள் போட்டு ஊர்வலமாக கூட்டம் நடக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்வார்கள். அவர்களது இருண்ட வாழ்க்கை பற்றி ஒரு தமிழர் அல்ல ஒரு சிங்கள எழுத்தாளர் ரங்கா ஜெயசூரியா மிகவும் உணர்வுபூர்வமாக நீண்ட கட்டுரை எழுதியுள்ளார். கொழும்பில் வெளியாகும் டெயிலி மிறர் நாளேட்டில் வெளிவந்தது. இதில் கட்டுரையாளர் கொடுத்துள்ள தரவுகள், புள்ளிவிபரங்கள், வரலாறு வட – கிழக்கு மற்றும் புலம்பெயர் தமிழர்களுக்குப் பெரிதும் தெரியாதவை. இந்தக் கட்டுரையை எல்லோரும் குறிப்பாகத் தமிழ்ச் தேசிய செயற்பாட்டாளர்கள் கட்டாயம் படிக்க வேண்டும். அந்த எண்ணத்தில் அதனை தமிழாக்கம் செய்து தந்துள்ளேன். – நக்கீரன்)

கடந்த வாரம் கொஸ்லந்த தேயிலைத் தோட்டத்தில் ஒரு பயங்கர மண்சரிவு ஏற்பட்டது. அதில் எண்ணிக்கை தெரியாத தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் மண்சரிவில் அகப்பட்டு இறந்து போனார்கள். ஒரு முழுக் கிராமமே அழிக்கப்பட்டுவிட்டது.

சிறிலங்காவில் சுனாமிப் பேரழிவுக்குப் பின்னர் ஏற்பட்ட மோசமான இயற்கைப் பேரிடரில் கிட்டத்தட்ட 100 பேர், பெரும்பாலும் தோட்டத் தொழிலாளர், இறந்துபோனார்கள் என்ற அச்சம் எழுந்துள்ளது. அப்படியிருந்தும் அகவை சென்ற பவுத்த தேரர்கள் மற்றும் வயதான அரசியல்வாதிகள் இறக்கும் போது துக்க நாட்களை அறிவிக்கும் அரசு வறுமையில் வாழ்ந்த இந்த தொழிலாளர்கள் இறந்துபட்ட போது அப்படி எந்த அறிவித்தலையும் செய்யவில்லை. இது சராசரி குடிமக்களின் உயிர்கள் (இந்த இடரில் மிகவும் தாக்குதலுக்கு ஆளாகக்கூடிய மக்கள்) பற்றிய அரசின் மதிப்பீட்டில் எந்தளவு பெறுமதிமிக்கது என்பதற்கான அறிகுறியாகும்.

இந்திய வம்சாவழி தமிழ்த் தோட்டத் தொழிலாளர்கள் நீண்டகாலமாக மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகளின் இயற்கையான வெறுப்புக்குப் பலியாக்கப்பட்டவர்கள். இவர்கள் சுதந்திரத்துக்கு முன்னரான காலத்தில் சிங்கள மற்றும் தமிழ் அரசியல் தலைமைகளால் தாழ்வாகப் பார்க்கப்பட்டவர்கள். சுதந்திர இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ். சேனநாயக்காவால் குடியுரிமையை இழந்தவர்கள். பின்னர் 1977 இல் ஜே.ஆர். ஜெயவர்த்தனா பெரும்பான்மை தோட்டத் தொழிலாளர்களது குடியுரிமையை மீளக் கொடுத்தார். இருந்தும், சுதந்திரத்துக்கு முன்னரான வெறுப்புணர்வு அடுத்த சில சகாப்தங்களில் பொதுவான அக்கறையின்மைக்கு வழிவகுத்தது. மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் தலைமுறை தலைமுறையாக வறுமையில் அமிழ்ந்து மலையகத்தில் இன ஒதுக்கல் வாழ்க்கை வாழ்ந்தார்கள்.

Sri Lankan mainstream politics was taking a racist a caste conscious bent even before independence. Those who drafted the Donoughmore Commission Report, granting universal franchise to the citizens of then Ceylon — the first non-white British colony to have full voting rights — were well aware of those inclinations of the local political elite.

சுதந்திரத்துக்கு முன்னரே சிறிலங்காவின் மைய அரசியல் நீரோட்டத்தில் இனவாத, சாதிவாத உணர்வு தலைதூக்கத் தொடங்கிவிட்டன. டொனமூர் ஆணைக்குழுவின் வரைவு அறிக்கையை வரை

100_4557-600x450.jpg

யும் போது அன்றைய இலங்கையில் வாழ்ந்த எல்லாக் குடிமக்களுக்கும் வாக்குரிமை – முழு வாக்குரிமை வழங்கப்பட்ட முதல் கொலனி நாடு இலங்கைதான் – வழங்கினார்கள். அப்படி வழங்கும் போது உள்ளுர் அரசியல் பிரமுகர்களது மனச்சார்பு டொனமூர் ஆணைக்குழுவுக்கு நன்கு தெரிந்திருந்தது.

ஆணைக்குழுவின் அறிக்கையில் டொனமூர் பிரபு ஐந்து ஆண்டு வதித்தவர்களுக்கு (குறிப்பிட்ட காலத்தில் எட்டு மாதங்களுக்கு மேற்படாமல் தற்காலிகமாக வெளியில் சென்றவர்கள் உட்பட) வாக்குரிமைக்குத் தகுதிவாய்ந்தவர்கள் எனப் பரிந்துரை செய்திருந்தார். “…. இந்த நிபந்தனை இந்திய மக்களைப் பொறுத்தளவில் குறிப்பிடத்தக்க முக்கியம் வாய்ந்தது. இரண்டாவதாக, நாங்கள் வாக்காளர்களைப் பதிவு செய்வது கட்டாயமாகவோ அல்லது தன்னியக்கமாகவோ (automatic ) இருக்கக் கூடாது. மாறாக அது விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டும் வழங்கப்பட வேண்டும்” என ஆணைக்குழு அறிக்கை குறிப்பிட்டது.

இருந்தும் உள்ளுர் பிரமுகர்களது உணர்வை மனதில் வைத்து (சிங்களவரும் யாழ்ப்பாணத் தமிழர் – அவர்களது தலைவர் பொன்னம்பலம் இராமநாதன் – என எல்லோரும் எல்லாக் குடிமக்களுக்கும் வாக்குரிமை வழங்குவதை வெளிப்படையாகக் கண்டித்தார்கள்) தமிழ் தோட்டத் தொழிலாளர்களுக்கு வாக்குரிமை வழங்குவது பற்றிய முடிவை இலங்கைத் தலைவர்களிடம் பிரித்தானியா விட்டு விட்டுச் சென்றது.

அவர்களுக்கு அதிகாரம் கிடைத்த போது முதற் காரியமாக சிங்களப் பிரமுகர்கள் (ஜி.ஜி பொன்னம்பலத்தின் ஆதரவுடன்) பெரும்பான்மையான இந்திய வம்சாவழித் தமிழர்களது வாக்குரிமை மற்றும் குடியுரிமையை இல்லாது செய்தார்கள்.

டி.எஸ். சேனநாயக்கா, என்.எம். பெரேராவின் இடதுசாரி எல்எஸ்எஸ்பி கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள தொழிற்சங்கங்களுக்கு பெருந்தோட்டத் தொழிலாளர் மத்தியில் பெருகும் ஆதரவு கண்டு அச்சம் அடைந்தார். அது தேர்தலில் அரசியலில் அவருக்கு ஓர் அறைகூவலாக இருந்தது. 1948 ஆம் ஆண்டு இலங்கைக் குடியுரிமைச் சட்டம் மற்றும் 1949 ஆம் ஆண்டு இந்திய – பாகிஸ்தான் குடியுரிமைச் சட்டம் ஆகிய சட்டங்கள் மூலம் தோட்டத் தொழிலாளர்களுடைய குடியுரிமை, வாக்குரிமை இரண்டையும் பறித்தார். இந்த சட்டங்களே அடுத்த பல தசாப்தங்களுக்கு தேர்தல் தொடர்பான சூழ்ச்சிகளுக்கும் திருகுதாளங்களுக்கும் முன்னோடியாக இருந்தன. சிறீமா – சாஸ்திரி உடன்படிக்கையின் கீழ் குடியுரிமை இழந்த பெருந்தொகையான (525,000) தமிழர்கள் நாடு கடத்தப்பட்ட பின்னர் எஞ்சியவர்களுக்கு முதல் நிறைவேற்று சனாதிபதியான ஜே.ஆர். ஜெயவர்த்தனா இலங்கையில் தங்க விரும்பியவர்களுக்கு குடியுரிமை வழங்கினார்.

பல தலைமுறைகள் தேயிலைத் தோட்டங்களில் மனிதாபிமானமற்ற சூழ்நிலையில் மாடாய் உழைத்து ஓடாய்த் தேய்ந்து போன தோட்டத் தொழிலாளர்களை நடத்தியமுறை ஏனோதானோ என்றிருந்தது அல்லது இரக்கமற்றதாக இருந்தது. அது தென் அமெரிக்காவில் காணப்பட்ட ஒடுக்குமறையை ஒத்திருந்தது.

இப்போது, பல தசாப்தங்களாக அனுட்டிக்கப்பட்டு வந்த அரச புறக்கணிப்பு தோட்டத் தொழிலாளர்களை தப்ப முடியாத வறுமை வட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 2009 ஆண்டு எடுத்த தரவுகளின் அடிப்படையில் தமிழ்த் தோட்டத் தொழிலாளர் சமூகத்தில் கிட்டத்தட்ட சரிபாதி (46 விழுக்காடு) 25 அகவை அல்லது அதற்கு மேலுள்ளவர்கள் தொடக்க (வகுப்பு 5) பள்ளிக்கே போகவில்லை. அதே வேளை 32 விழுக்காட்டினர் மட்டுமே தொடக்கப் பள்ளிக் கல்வியை முடித்திருந்தார்கள். (Sri Lanka Human Development Report 2012). இந்த புள்ளிவிபரத்தின் படி நாலில் மூன்று பங்கு தமிழ்த் தோட்டத் தொழிலாளர் சமூகம் தொடக்க பள்ளிக்குப் அப்பால் படிக்கவே இல்லை. தேசிய மட்டத்தில் இந்த இரண்டு பிரிவுகளின் அளவு 18 விழுக்காடு (தொடக்கப் பள்ளிக்குக் கீழ்) 25 விழுக்காடு (தொடக்கப்பள்ளி) மட்டும். மேலும் புள்ளிவபரங்களின் அடிப்படையில் தோட்டத் தொழிலாளரில் 3 விழுக்காட்டினரே கல்வி பொதுத் தராதரம் (சாதாரணம்) மற்றும் கல்வி பொதுத் தராதரம் (உயர்) தேர்வில் சித்தியெய்தியுள்ளார்கள். தேசிய மட்டத்தில் இந்த விழுக்காடு முறையே 16 மற்றும் 14 ஆகும்.

இன்னொரு யூனிசெவ் (UNICEF) அறிக்கையின் படி தோட்டப் பிள்ளைகள் தொடக்கப் பள்ளிக்கு (4.4 விழுக்காடு நகரம் 1.6 விழுக்காடு கிராமம்) அனேகமாகப் போவதில்லை. தோட்டப் பிள்ளைகள் பள்ளியை விட்டு விடுவது சராசரி தேசிய விழுக்காட்டை விட அதிகமானது. பத்து விழுக்காடு தோட்டப் பிள்ளைகள் மேல்நிலைப் பள்ளிக்குப் போகு முன்னர் கீழ்நிலைப் பள்ளி மட்டத்தில் பள்ளிப் படிப்பை விட்டு விடுகிறார்கள்.

தோட்டப் பகுதியில் மாணவர்கள் பள்ளியை விட்டு விலகி விடுவதற்குக் காரணம் அங்கு உயர்நிலைப் பள்ளிகள் இல்லாமையே. 2000 ஆம் ஆண்டளவில் தோட்டப் பள்ளிகளில் 68 விழுக்காடு பள்ளிகள் 3 பிரிவாக (Type-3) வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பள்ளிக் கூடங்களில் கீழ்நிலை வகுப்புகள் மட்டுமே இருக்கின்றன. பள்ளிக் கூடங்களில் இருந்து தோட்டப் பிள்ளைகள் மற்றும் வருமானம் குறைந்த குடும்பத்தில் இருந்து வரும் பிள்ளைகள் துரத்தப்படுவதற்கு ஒரு காரணம் வறுமை ஆகும். (எடுத்துக் காட்டாக உலக வங்கி 2007 இல் நடத்திய ஆய்வின் அடிப்படையில் சிறீலங்காவில் உச்ச வருமானம் உள்ள குடும்பங்களில் இருந்து வரும் பிள்ளைகளில் 68 விழுக்காடு உயர் கல்வியைத் தொடர்கின்றன. இந்த விழுக்காடு குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களில் இருந்து வரும் பிள்ளைகளை விட இரண்டு மடங்காகும்).

தோட்டத்துறையில் கல்விக் கட்டுமானம் மற்றும் சுற்றிலும் உள்ள வறுமை இரண்டுமே தோட்டத் தொழிலாளர் சமூகம் மேலே நகரும் தன்மையை (upward mobility முடக்கிவிட்டன. பெருந்தோட்டப் பொருளாதார கட்டுமானம் கடந்த நூற்றாண்டில் பெருமளவு மாறாததும் தோட்டத் தொழிலாளரின் மேல் நகர்வுக்குத் தடையாக இருக்கிறது. பெருந்தோட்டங்கள் மலிவான உழைப்பாளிகளின் உழைப்பில் தங்கியிருக்கிறது. இது தோட்டத் தொழிலாளர்களின் மேல் நகர்வுக்கு மிகவும் குறைந்தளவு வாய்ப்புக்களையே உருவாக்கிறது. பெருந்தோட்டத் தமிழ்த் தொழிலாளர்களது சமூக குறிகாட்டிகளையும் (social indicators) தேசிய புள்ளிவிபரங்களையும் மேலோட்டமாகப் பார்த்தால் இரண்டுக்கும் இடையில் உள்ள ஏற்றத்தாழ்வு தெரியவரும். தோட்டத் தொழிலாளர் நலங்கள் பற்றிய வீரப் பேச்சு வெறும் பேச்சு என்பதும் தெரியவரும்.

07-11.jpg

கூட்டிக் கழித்துப் பார்த்தால் தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களது மோசமான நிலைமைக்கு முழு நாட்டையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும்.

பெருந்தோட்டத் தமிழர்களில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் 66 (ஆண் 79, பெண் 52) விழுக்காடாகும். இது தேசிய சராசரியைவிடக் குறைவானது. (Department of Census and Statistics,1990)

ஐந்து அகவைக்குக் கீழேயுள்ள 44 விழுக்காடுத் தோட்டப் பிள்ளைகளின் சராசரி நிறை குறைவானது. தேசிய சராசரி 27 விழுக்காட்டை விட (2000) மிகவும் அதிகமானது. இந்த விழுக்காடு 2007 இல் 30 விழுக்காடாக குறைந்து விட்டது. ஆன போதிலும் தேசிய சராசரி விழுக்காட்டை விட அதிகமானது.

மேல் உயர் கல்விக்கு (upper secondary education) பெருந்தோட்டப் பகுதியில் இருக்கும் வாய்ப்பில் பாரிய முரண்பாடு காணப்படுகிறது. நகர்ப்புற (86 விழுக்காடு) மற்றும் கிராமப் புறத்தோடு (81 விழுக்காடு) ஒப்பிடும் போது 54 விழுக்காடு தோட்டக்காட்டுப் பிள்ளைகளே மேல் உயர்நிலைப் பள்ளிகளில் சேர்க்கப்படுகிறார்கள்.

இந்தப் புள்ளிவிபரங்கள் ஒரு குழப்பமான உண்மையை பொய்துப் போக வைத்துள்ளது. மத்திய மாகாணத்தில் மொத்த மக்கள் தொகையில் இந்திய வம்சாவழி தமிழர்கள் 56 விழுக்காடு உள்ளனர். ஆனால் அந்த மாகாணத்து மேல் உயர் பள்ளிகளில் 40 விழுக்காட்டினரே சேர்க்கப் பட்டுள்ளார்கள்.

தோட்டக்காட்டு தமிழ்ப் பிள்ளைகள் மொத்த மாணவர் எண்ணிக்கையில் பாதி அளவு இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினரே கல்வி உயர் தர வகுப்புகளில் சேர்க்கப்படுகிறார்கள். இது மத்திய மாகாணத்து கல்வி கட்டுமானத்தில் பாரிய முரண்பாட்டைக் காட்டுகிறது. இது கல்வி வளங்கள் ஒரு தலையாகப் பிரித்து வைக்கப்பட்டிருப்பதைக் காட்டுகிறது.

மேலும், பல புள்ளிவிபரங்கள் நாங்கள் நினைப்பது போல நம்பிக்கை ஊட்டுவதாக இல்லை.

மத்திய வங்கியின் கணக்கின்படி தோட்டத்துறையில் வறுமை 2006 – 2007 இல் 32 விழுக்காட்டிலிருந்து 2009 – 2010 இல் 11.4 விழுக்காடாகக் குறைந்துள்ளது. (1995 – 1996 இல் தோட்டத்துறையில் வறுமை 38.4 விழுக்காடாக இருந்தது). இது தேசியளவில் வறுமை 1990 இல் 26 விழுக்காட்டில் இருந்து இப்போது 4.2 விழுக்காடாகக் குறைந்ததை ஒத்திருக்கிறது. இருந்தும் கடந்த இரண்டு சகாப்தங்களாக வறுமைக் கோட்டில் இருந்து மீட்கப்பட்ட 30 இலட்சம் மக்கள் அரசின் உத்தியோக பூர்வ வறுமைக் கோட்டின் விளிம்பில் வாழ்கிறார்கள்.

வறுமை பற்றிய பகுப்பு மையத்தின் அறிக்கைப்படி உத்தியோக பூர்வமான வறுமைக் கோடு 10 விழுக்காடு கூடினால் 800,000 மக்கள் அதற்குள் விழுந்து விடுவார்கள். அப்படி நடக்கும் போது வறுமை 12 விழுக்காட்டுக்கு மேலாக அதிகரித்துவிடும்.

இந்தப் புள்ளிவிபரங்கள் அடிப்படையில் தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான அரச மட்ட அக்கறையின்மையைக் காட்டுகிறது. மேலும் இந்த மக்களின் பயங்கர அவலத்துக்கு தேசிய அரசியல் தலைமைத்துவத்தை விட உள்ளூர் அரசியல் பிரமுகர்களே குற்றவாளிகள் ஆவர்.

மேலும் இந்தச் சிக்கலுக்கு வேறு எதையும் விட தோட்டத் தொழிலாளர்களது அரசியல் கட்டுமானவே காரணமாகும். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் சிறிய கட்சிகள் உள்ளூர் தமிழ்ப் பிரமுகர்களான ஆறுமுகம் தொண்டமான் போன்றோரது இருப்பைப் பேணுவதற்கே பயன்படுகின்றன.

ஆயினும் ஒரு பொறுப்புள்ள அரசாங்கம் தமிழ்த் தோட்ட சமூகத்தை அகன்ற சிறீலங்கா சமூகத்தில் இருந்து ஒதுக்கப்படுவதை அனுமதிக்கக் கூடாது. நாடு தழுவிய வறுமையைச் சமாளித்து அதனைச் சில நகரப் பகுதிகளுக்குள் முடக்கிவிட்டு அரசாங்கம் இப்போது முன்னைய மோதல் வலையத்தையும் தோட்டத்துறையையும் நீண்டகால அடிப்படையில் சமப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தோட்டத்துறையில் காணப்படும் வறுமையை ஒழிப்பதற்கும் கீழான சமூக மற்றும் கல்வியை மேம்படுத்துவதற்கும் ஒரு வழி தோட்டத் தொழிலாளர்கள் தமது வாழ்வுக்குப் பெருந்தோட்டத்தில் தங்கியிருப்பதை குறைக்க வேண்டும். தோட்ட சமூகத்தில் நிலவும் வறுமைச் சுழற்சியை முறிக்க (break the cycle of poverty) வேண்டும்.

உதவும் மனப்பான்மையுடைய ஒரு சமூகத்தில் அரசு பல்கலை நுழைவுக்கும் பொது சேவைக்கும் பின்தங்கிய சமூகங்களுக்கு பாகுபாடுக்குப் பதில் சிறப்பு இட ஒதுக்கீடு செய்யும் என்றுதான் யாரும் எதிர்பார்ப்பார்கள். அரசு தோட்டத்துறையின் கல்வி உட்கட்டுமானத்தை விரிவாக்கி, தனியார் பல்கலைகளில் படிக்கத் தோட்டச் சிறார்களுக்கு புலமை பரிசில் கொடுக்கலாம். அரசு, சமுர்த்தி போன்ற இப்போதுள்ள துயர்தணிப்புத் திட்டங்களை – அதுவொரு அரசியல் திட்டமாக சீர்கெட்டுப் போய்விட்டது – உதவி தேவைப்படும் சமூகங்கள் பக்கம் திருப்பலாம்.

இறுதி முடிவு என்னவெனில் தோட்டக்காட்டு மக்களின் மோசமான நிலைமை நாட்டுக்கே அவமானம் ஆகும். தேயிலைப் தோட்டங்களில் நூற்றாண்டுகாலமாக உழைத்த மக்களுக்கு சிறீலங்கா பதிலுக்கு ஏதாவது செய்ய வேண்டும். இந்த மக்கள்தான் நாட்டின் பரந்துபட்ட மக்கள் நலத்திட்டங்களுக்கு வேண்டிய அந்நிய செலாவணியைத் திரட்டித் தந்தவர்கள். தேயிலை போகட்டும் இந்திய வம்சாவழித் தமிழரான முரளிதான் எங்களது நாட்டுக்கு உலகளாவிய அளவில் அறிமுகம் தேடித்தந்தவர். கடும் உழைப்புக்குப் பெயர்போன இந்த மக்களை அவர்களால் பல நூற்றாண்டு காலமாக உருவாக்கப்பட்ட இந்த நாடு அவர்களுக்கு எதையும் கைமாறாகக் கொடுக்காமல் ஓரங்கட்டி விட்டது.

நன்றி: டெயிலி மிறர்

ஆங்கிலத்தில் : ரங்கா ஜெயசூரியா

தமிழில் : நக்கீரன்

  • கருத்துக்கள உறவுகள்

 

......

 

இந்திய வம்சாவழி தமிழ்த் தோட்டத் தொழிலாளர்கள் நீண்டகாலமாக மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகளின் இயற்கையான வெறுப்புக்குப் பலியாக்கப்பட்டவர்கள். இவர்கள் சுதந்திரத்துக்கு முன்னரான காலத்தில் சிங்கள மற்றும் தமிழ் அரசியல் தலைமைகளால் தாழ்வாகப் பார்க்கப்பட்டவர்கள். சுதந்திர இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ். சேனநாயக்காவால் குடியுரிமையை இழந்தவர்கள். பின்னர் 1977 இல் ஜே.ஆர். ஜெயவர்த்தனா பெரும்பான்மை தோட்டத் தொழிலாளர்களது குடியுரிமையை மீளக் கொடுத்தார். இருந்தும், சுதந்திரத்துக்கு முன்னரான வெறுப்புணர்வு அடுத்த சில சகாப்தங்களில் பொதுவான அக்கறையின்மைக்கு வழிவகுத்தது. மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் தலைமுறை தலைமுறையாக வறுமையில் அமிழ்ந்து மலையகத்தில் இன ஒதுக்கல் வாழ்க்கை வாழ்ந்தார்கள்....

.... இருந்தும் உள்ளுர் பிரமுகர்களது உணர்வை மனதில் வைத்து (சிங்களவரும் யாழ்ப்பாணத் தமிழர் – அவர்களது தலைவர் பொன்னம்பலம் இராமநாதன் – என எல்லோரும் எல்லாக் குடிமக்களுக்கும் வாக்குரிமை வழங்குவதை வெளிப்படையாகக் கண்டித்தார்கள்) தமிழ் தோட்டத் தொழிலாளர்களுக்கு வாக்குரிமை வழங்குவது பற்றிய முடிவை இலங்கைத் தலைவர்களிடம் பிரித்தானியா விட்டு விட்டுச் சென்றது.

 

அவர்களுக்கு அதிகாரம் கிடைத்த போது முதற் காரியமாக சிங்களப் பிரமுகர்கள் (ஜி.ஜி பொன்னம்பலத்தின் ஆதரவுடன்) பெரும்பான்மையான இந்திய வம்சாவழித் தமிழர்களது வாக்குரிமை மற்றும் குடியுரிமையை இல்லாது செய்தார்கள்....

....

 

ஆங்கிலத்தில் : ரங்கா ஜெயசூரியா

தமிழில் : நக்கீரன்

 

தங்க மனசுக்காரர்கள்..! :(:o

 

வாழியவே! :)

 

  • கருத்துக்கள உறவுகள்

தங்க மனசுக்காரர்கள்..! :(:o

 

வாழியவே! :)

 

இது ஒரு அற்ப விடயம்.
 
"வடக்கத்தையான்" என்ற பெயரோடு அவர்களை ஈழத்தமிழர்கள் படுத்திய பாடு கொஞ்ச நஞ்சமல்ல.
ஈழதமிழனைப்போல்  ஒரு கேடு கெட்ட இனத்தை நான் வேறு எங்கேனும் கண்டதேயில்லை. 
புலிகள் அழிந்துபோனது பற்றி இப்போ இங்கே திரிக்கு திரி கதை அளக்கிறார்கள். அவர்கள் எப்படி 30 வருடம் போராடினார்கள்? என்பதுதான் உண்மையிலேயே  புரியாத புதிர். அப்படி ஒரு கேடு கெட்ட இனமாகவே  எமது இனம்  இருந்தது இருக்கிறது.
 
இன்று கனடா ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்தவர்கள் பெரும்பாலானோர் உணவகங்கள் கொட்டல்களில்தான்  வேலை செய்கிறார்கள். வந்த இடத்தில் மொழி பிரச்சனை குடும்ப பிரச்சனை என்பதனால்  அந்த வேலைகள் சுலபமாகி விட்டது. இங்கே மல சலகூடம் முழுவது கூட்டி பெருக்கிறார்கள்.
இதையே முன்பு யாழில் செய்த மனிதர்களை அவர்கள் சாதியை சொல்லி இவர்கள் செய்த சித்திரவதைகள்  பார்பானின்  கொடுமைகளைவிட கேவலாமனது.
இதில் பகிடி என்னவென்றால்............... மலசல கூடங்களை கழுவிக்கொண்டே .............. சாதியம் பேசுகிறார்கள்.
இந்த உயர்வான சாதி மக்களை பார்த்து. கடவுள் ன்று ஒருவன் இருந்தால் எந்த அளவில் சிரித்து கொண்டிருப்பான்  என்று நான் அடிக்கடி நினைப்பதுண்டு.
 
இப்போ கூட அங்கே போரினால் பதிக்கபட்டவனும் நாட்டுக்காய் தன்னை கொடுத்து போராடியவனும்  அன்றாட  உணவிற்கே  போராடிக்கொண்டு இருக்கிறான். நீங்களே செய்திகளில் படித்திருப்பீர்கள்  மற்ற கூட்டம்  விஜயின் கட்டவுட்டுக்கு பால் ஊத்தி கொண்டு திரிகிறது.
 
நான் பல தடவை இங்கே எழுதி இருக்கிறேன் நீங்கள் வாசித்து இருப்பீர்கள். முள்ளிவாய்க்கால் முடிவு எனக்கு பெருத்த சந்தோசம் போர் நீடித்தால் நல்லவன் எல்லோரும் புலியாகி செத்துக்கொண்டே இருப்பான். துரோகிகளும்   சுயநல பேய்களும் எஞ்சி ஊர்முழுதும் வழிந்து கொண்டே இருந்திருப்பார்கள். இப்போது அதுதான் நிலைமை. இன்னும் கொஞ்சம் நீடித்து இருந்தால் சிந்தித்து பாருங்கள்?? 
 
இவர்கள் இங்கே மெத்தையில் புரள சீமான் அங்கே சிறை செல்லவேண்டும் என்பதுதான் இங்கே பலரினது  எண்ணம். அவர்களுடைய எழுத்துக்களை நீங்களே வாசித்திருப்பீர்கள். இவன்தான் ஈழத்தமிழன். 
  • கருத்துக்கள உறவுகள்

 

இது ஒரு அற்ப விடயம்.
 
"வடக்கத்தையான்" என்ற பெயரோடு அவர்களை ஈழத்தமிழர்கள் படுத்திய பாடு கொஞ்ச நஞ்சமல்ல...
 
....
 
 முள்ளிவாய்க்கால் முடிவு எனக்கு பெருத்த சந்தோசம்.  போர் நீடித்தால் நல்லவன் எல்லோரும் புலியாகி செத்துக்கொண்டே இருப்பான். துரோகிகளும்   சுயநல பேய்களும் எஞ்சி ஊர்முழுதும் வழிந்து கொண்டே இருந்திருப்பார்கள். இப்போது அதுதான் நிலைமை. இன்னும் கொஞ்சம் நீடித்து இருந்தால் சிந்தித்து பாருங்கள்?? 
 
இவர்கள் இங்கே மெத்தையில் புரள சீமான் அங்கே சிறை செல்லவேண்டும் என்பதுதான் இங்கே பலரினது  எண்ணம். அவர்களுடைய எழுத்துக்களை நீங்களே வாசித்திருப்பீர்கள். இவன்தான் ஈழத்தமிழன்.

 

சில விடயங்கள் அரசல்புரசலாக சில மலையக தமிழர்களிடமிருந்து, ஈழத்தமிழர்களின் தலைக்கனம் பற்றி '80களிலேயே அறித்ததுதான்..

இருந்தாலும் இப்படி கொடூரமாக இனம் அழிகையில் மனம் பதைக்கிறது.

 

நன்றி, மருது.

 

  • கருத்துக்கள உறவுகள்

சில விடயங்கள் அரசல்புரசலாக சில மலையக தமிழர்களிடமிருந்து, ஈழத்தமிழர்களின் தலைக்கனம் பற்றி '80களிலேயே அறித்ததுதான்..

இருந்தாலும் இப்படி கொடூரமாக இனம் அழிகையில் மனம் பதைக்கிறது.

 

நன்றி, மருது.

 

அப்பாவை கொன்றபோதாவது ......... உணர்ந்திருக்க வேண்டும்.
 
அம்மா இறந்த போதாவது ........... இன படுகொலை என்பதை புரிந்திருக்க வேண்டும்.
 
அக்கா தங்கை .............. இந்திய படைகளால் துகில் உரிய பட்டபோதாவது அயலவனை புரிந்திருக்க வேண்டும்.
 
மொத்த ஊரே எரிந்த பின்பும்..................... சீமான் தான் முண்டு கொடுக்கவேண்டுமாம்.
 
இவர்கள் எது சரி எது பிழை என்று இணையத்தில் வாந்தி எடுத்து விடுவார்களாம்.
கடவுளுக்கும் மண்டை கழண்டால்தான் இந்த இனத்தை காப்பாற்ற யோசிப்பான். 
  • கருத்துக்கள உறவுகள்

220px-Sir_Ponnambalam_Ramanathan_(1851-1                                                   z_p08-Where-02.jpg

 

   சேர் பொன்னம்பலம் இராமநாதன்                                   ஜி. ஜி. பொன்னம்பலம்

 

 

இந்திய வம்சாவழித்தமிழர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிய தமிழ் புண்ணியவான்களின் திருமுகத்தை பார்த்ததில்லை.. தேடியபோது கண்ட அவர்களின் படங்களும் சிறு குறிப்புகளும் இவர்களின் குணாதியங்களை பிரதிபலிக்கிறது.

 

 

சேர் பொன்னம்பலம் இராமநாதன்:

 

இவர் படித்தது ரோயல் கல்லூரி, கொழும்பு மற்றும் சென்னை பிரெசிடென்சி கல்லூரி, தமிழ் நாடு.

ஆனால் வாழ்க்கையில் இடித்தொழித்தது,  இந்திய வம்சாவழி தமிழர்களின் வாழ்க்கையை!

 

விநோதக் குறிப்பு:

 

1915ம் ஆண்டு இலங்கையில் சிங்கள-முஸ்லிம் இனக்கலவரம் ஒன்று ஏற்பட்டது.  இது சிங்கள அரசியல் தலைவர்களால் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டதாகப் பிரித்தானிய ஆளுநர்கள் அறிந்துக்கொண்டனர். உடனடியாகப் பிரித்தானியா ஆளுநரால் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அத்துடன் அந்த இனக்கலவரத்திற்கு காரணமானவர்களைக் கைது செய்யவும் கட்டளையிட்டது. அந்த இனக்கலவரத்திற்கான பிரதான காரணிகளாக டீ. எஸ் சேனானாயக்கா, டீ. எஸ் விஜேவர்தனா, டொக்டர் நெயிசர் பெரேரா, ஈ. டீ. த சில்வா, ஆர் டயஸ் பண்டாரநாயக்கா, எச் அமரசூரிய. ஏ. எச். மொலமூறே போன்ற இலங்கையின் முன்னனி சிங்கள அரசியல் தலைவர்களே இருந்தனர். இவர்களைக் கைது செய்த பிரித்தானிய அரசு கடும் நடவடிக்கை எடுத்தது. அவர்களைப் பிரித்தானியாவில் சிறையில் அடைத்தது. அத்துடன் இனக்கலவரத்திற்கு முக்கிய காரணமான அனைவருக்கும் மரணத் தண்டனை வழங்கப்பட்டது.

இனக்கலவரத்தை ஏற்படுத்திய குற்றம் பாரிய குற்றம் என்றபோதும், அவர்களுக்கு மரண தண்டனை வழங்குவதை விரும்பாத சேர் பொன்னம்பலம் இராமநாதன், பிரித்தானிய அரசை எதிர்த்து, சிங்கள அரச தலைவர்களின் உயிரைக் காப்பாற்றும் முகமாக மீட்பு போராட்டம் செய்து, அவர்களை மீட்டவர் என்பதும் இலங்கை அரசியல் வரலாற்று நிகழ்வாகும்.

பொன்னம்பலம் இராமநாதன் அவர்களின் போராட்டத்தினால், உயிர் மீண்டு வந்த சிங்கள அரசியலாளர்கள், அவரைத் தங்கள் தோள்களில் சுமந்து, காலிமுகத்திடலில் ஊர்வலம் சென்றமையும் வரலாற்று நிகழ்வாகும். இவ்வாறு பொன்னம்பலம் இரமாநாதன் அவர்கள் சிங்கள அரசியல் தலைவர்களை மீட்டிருக்காவிட்டால் டீ. எஸ் சேனானாயக்கா, ஆர் டயஸ் பண்டாரநாயக்கா போன்ற சிங்கள அரசியல் தலைவர்கள் இலங்கை வரலாற்றில் இடம்பிடித்திருக்கவும் முடியாது என, நன்றி கூறும் தற்கால சிங்கள அரசியலாளர்களும் உளர்.

 

 

ஜி. ஜி. பொன்னம்பலம்:

 

1944, ஆகஸ்ட் 29 இல் இலங்கையில் தமிழர் நலன்களைப் பேணும் நோக்கில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் என்னும் அரசியல் கட்சியை இவர் தொடக்கினார். இக் காலகட்டத்தில் இலங்கையில் அரசியல் சீர்திருத்தங்களுக்காக பிரித்தானிய அரசினால் ஏற்படுத்தப்பட்ட சோல்பரி ஆணைக்குழு முன் சிறுபான்மையினரின் பாதுகாப்புக்காக சமபல பிரதிநிதித்துவ முறை ஏற்படுத்தப்பட வேண்டும் என வாதிட்டார். இதன் மூலம் பொதுவாக இலங்கை அரசியலிலும், சிறப்பாக இலங்கைத் தமிழர் அரசியலிலும் பெரும் செல்வாக்குப் பெற்றார். அக்காலத்தில் ஐம்பதுக்கு ஐம்பது என்று பரவலாக அறியப்பட்ட இச் சமபல பிரதிநிதித்துவக் கொள்கையை அடிப்படையில் 1947 இல் இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத்துக்காக நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட தமிழ்க் காங்கிரஸ் பெரு வெற்றி பெற்றது. இத் தேர்தலில் நல்ல அரசியல் செல்வாக்குக் கொண்டிருந்த அருணாசலம் மகாதேவாவை எதிர்த்து யாழ்ப்பாணத் தொகுதியில் போட்டியிட்ட பொன்னம்பலம் பெருமளவு வாக்குகளால் வெற்றி பெற்றார்.

1948 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியால் அமைக்கப்பட்ட முதலாவது அரசாங்கத்தில் சேர்ந்து கொண்டதும், மலையகத் தமிழரின் குடியுரிமை பற்றிய பிரச்சினைகளில் பொன்னம்பலத்தின் அணுகு முறைகளையும் ஏற்றுக்கொள்ளாத சில தலைவர்கள் காங்கிரசிலிருந்து வெளியேறினர். இதனால் கட்சி பிளவு பட்டது. எனினும் பொன்னம்பலம் ஐக்கிய தேசியக் கட்சி அரசில் தொழில் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். சுமார் ஐந்தாண்டு காலம் அமைச்சராகப் பதவியில் இருந்த இவர், பல பாரிய தொழிற்சாலைகளைத் தமிழர் பகுதிகளில் நிறுவினார்

 

 

Source: விக்கிபீடியா.

Edited by ராசவன்னியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.