Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாகிஸ்தான் எதிர் நியூசிலாந்து தொடர் டுபாயில்

Featured Replies

யூனிஸ் கான், மிஸ்பா சதம்: வலுவான நிலையில் பாக்.,
நவம்பர் 10, 2014.

 

அபுதாபி: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் யூனிஸ் கான், கேப்டன் மிஸ்பா சதம் அடித்து கைகொடுக்க, முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 566 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.           

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,) சென்றுள்ள பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கின்றன. முதல் டெஸ்ட் அபுதாபியில் நடக்கிறது. முதல் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்திருந்தது.                  

 

ஷேசாத் அபாரம்: நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. முதல் இன்னிங்சை தொடர்ந்த பாகிஸ்தான் அணிக்கு அகமது ஷேசாத், அசார் அலி ஜோடி நம்பிக்கை தந்தது. அபாரமாக ஆடிய ஷேசாத், 150 ரன்களை கடந்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த அசார் அலி, 17வது அரைசதம் அடித்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 169 ரன்கள் சேர்த்த போது, கோரி ஆண்டர்சன் ‘பவுன்சரில்’ அகமது ஷேசாத் (176), ‘ஹிட் விக்கெட்’ முறையில் அவுட்டானார். பொறுப்பாக ஆடிய அசார் அலி (87), இஷ் சோதி ‘சுழலில்’ போல்டானார்.     

            

சூப்பர் ஜோடி: பின் இணைந்த யூனிஸ் கான், கேப்டன் மிஸ்பா ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. நியூசிலாந்து பந்துவீச்சை எளிதாக சமாளித்த இவர்கள் இருவரும் அணியின் ஸ்கோரை வலுவாக்கினர். அபாரமாக ஆடிய யூனிஸ் கான், டெஸ்ட் அரங்கில் தனது 28வது சதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் அசத்திய கேப்டன் மிஸ்பா, டெஸ்ட் வரலாற்றில் தனது 8வது சதம் அடித்தார்.           

முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்கு 566 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது.  யூனிஸ் கான் (100), மிஸ்பா (102) அவுட்டாகாமல் இருந்தனர். நியூசிலாந்து சார்பில் கோரி ஆண்டர்சன் 2, இஷ் சோதி ஒரு விக்கெட் வீழ்த்தினர்.      

பின் முதல் இன்னிங்சை துவக்கிய நியூசிலாந்து அணி, இரண்டாம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் எடுத்து, 551 ரன்கள் பின்தங்கி இருந்தது. கேப்டன் பிரண்டன் மெக்கலம் (9), டாம் லதாம் (5) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

ஷேசாத் காயம்           

நேற்று, உணவு இடைவேளைக்கு முந்தைய ஓவரில் நியூசிலாந்தின் கோரி ஆண்டர்சன் வீசிய ‘பவுன்சர்’, பாகிஸ்தான் வீரர் அகமது ஷேசாத்தின் தலையில் தாக்கியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்து போது இவரது பேட், ஸ்டெம்பில் பட, ‘ஹிட் விக்கெட்’ முறையில் அவுட்டானார். உடனடியாக மைதானத்துக்குள் வந்த பாகிஸ்தான் அணியின் ‘பிஸியோதெரபிஸ்ட்’ பிராட் ராபின்சன், ஷேசாத்துக்கு முதலுதவி அளித்து, அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு, ‘சி.டி., ஸ்கேன்’ எடுத்துப் பார்த்ததில், ஷேசாத்தின் கபாலத்தில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.           

 

இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் மேனேஜர் மோயின் கான் கூறுகையில், ‘‘அகமது ஷேசாத்தின் மண்டையோட்டில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இவருக்கு, அடுத்த 48 மணி நேரத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளார்,’’ என்றார்.

 

http://sports.dinamalar.com/2014/11/1415634996/PakistanNewZealandTestCricket.html

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பாகிஸ்தான் பவுலர்கள் அசத்தல்
நவம்பர் 11, 2014.

 

அபுதாபி: முதல் டெஸ்டில் பாகிஸ்தான் அணியின் ரகாத் அலி, பாபர் அசத்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 262 ரன்களுக்கு ஆல்–அவுட்டானது. 

ஐக்கிய அரபு எமிரேட்சில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கிறது. முதல் டெஸ்ட் அபுதாபியில் நடக்கிறது. பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 566/3 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. இரண்டாவது நாள் முடிவில், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் எடுத்திருந்தது.

ரகாத் அசத்தல்:

நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. பாபர் ‘சுழலில்’ பிரண்டன் 18 ரன்களில் சிக்கினார். பின் வந்த ராஸ் டெய்லரும் இவரது பந்தில் டக்–அவுட் ஆனார். ரகாத் அலி ‘வேகத்தில்’ கேன் வில்லியம்சன் (3), கோரி ஆண்டர்சன் (48) வெளியேறினர். நீஷம் (11) நிலைக்கவில்லை. தனி ஆளாக போராடிய லதாம்(103), டெஸ்ட் அரங்கில் முதல் சதம் அடித்தார். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 262 ரன்களுக்கு ஆல்–அவுட்டானது. பாகிஸ்தான் அணி சார்பில் ரகாத் அலி 4, பாபர் 3 விக்கெட் வீழ்த்தினர்.

இரண்டாவது இன்னிங்சை துவக்கிய பாகிஸ்தான் அணி ஆட்ட நேர முடிவில், விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் எடுத்து 319 ரன்கள் முன்னிலை பெற்றது. முகமது ஹபீஸ் (5), அசார் அலி (9) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

http://sports.dinamalar.com/2014/11/1415727518/PakistanleadsTestNewZealand.html

  • தொடங்கியவர்

வெற்றியை நோக்கி பாக்., * நியூசி., மீண்டும் திணறல்
நவம்பர் 12, 2014.

  அபுதாபி: அபுதாபியில் நடக்கும் முதல் டெஸ்டில், பாகிஸ்தான் அணி வெற்றியை நோக்கி முன்னேறுகிறது. பாகிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், இரண்டாவது இன்னிங்சிலும் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறினர்.           

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,) சென்றுள்ள பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கின்றன. முதல் போட்டி அபுதாபியில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 566/3 (டிக்ளேர்), நியூசிலாந்து 262 ரன்கள் எடுத்தன. மூன்றாம் நாள் முடிவில், இரண்டாவது இன்னிங்சில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் எடுத்திருந்தது. முகமது ஹபீஸ் (5), அசார் அலி (9) அவுட்டாகாமல் இருந்தனர்.

                 

ஹபீஸ் சதம்:                 

நேற்று நான்காம் நாள் ஆட்டம் நடந்தது. இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த பாகிஸ்தான் அணிக்கு அசார்லி அலி (23) ஏமாற்றினார். அடுத்து வந்த யூனிஸ் கான் (28) நிலைக்கவில்லை. அபாரமாக ஆடிய ஹபீஸ், டெஸ்ட் அரங்கில் தனது 6வது சதத்தை பதிவு செய்தார்.                 

இரண்டாவது இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. ஹபீஸ் (101), சர்பராஸ் அகமது (13) அவுட்டாகாமல் இருந்தனர். நியூசிலாந்து சார்பில் இஷ் சோதி 2 விக்கெட் வீழ்த்தினார்.  

               

கடின இலக்கு:                 

பின் 480 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய நியூசிலாந்து அணிக்கு டாம் லதாம் (20), கேப்டன் பிரண்டன் மெக்கலம் (39) ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. அடுத்து வந்த ராஸ் டெய்லர் (8), வில்லியம்சன் (23) ஏமாற்றினர். ரஹாத் அலி பந்தில் நீஷாம், வாட்லிங் ‘டக்–அவுட்’ ஆனார்கள். கோரி ஆண்டர்சன் (23), டிம் சவுத்தி (5) சோபிக்கவில்லை.      பின் இணைந்த மார்க் கிரெக், இஷ் சோதி ஜோடியை பிரிக்க பாகிஸ்தான் பவுலர்கள் எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. நான்காம் நாள் முடிவில், இரண்டாவது இன்னிங்சில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்து 306 ரன்கள் பின்தங்கி இருந்தது. தலா 27 ரன்னுடன் மார்க் கிரெக், இஷ் சோதி அவுட்டாகாமல் இருந்தனர். பாகிஸ்தான் சார்பில் ரஹாத் அலி, பாபர், யாஷிர் ஷா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.           

இன்று கடைசி நாள் என்பதால், நியூசிலாந்து அணியின் மீதமுள்ள 2 விக்கெட்டுகளை பாகிஸ்தான் பவுலர்கள் விரைவில் கைப்பற்றும் பட்சத்தில் தொடரை வெற்றியுடன் துவக்கலாம்.      

  

ஐந்தாவது முறை     

அபுதாபி டெஸ்டின் முதலிரண்டு இன்னிங்சிலும் பாகிஸ்தான் அணி ‘டிக்ளேர்’ செய்தது. ஏற்கனவே சமீபத்திய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடர்ச்சியாக மூன்று முறை ‘டிக்ளேர்’ செய்தது. இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் தொடர்ச்சியாக அதிக முறை (5) ‘டிக்ளேர்’ செய்த அணிகள் வரிசையில் 2வது இடம் பிடித்தது. முதலிடத்தில், 2009ல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக தொடர்ச்சியாக 6 முறை ‘டிக்ளேர்’ செய்த இங்கிலாந்து அணி உள்ளது.

 

http://sports.dinamalar.com/2014/11/1415808815/PakistanfirstTestwinNewZealand.html

  • தொடங்கியவர்

நியூசிலாந்தை வீழ்த்தியது பாக்.,
நவம்பர் 12, 2014.

அபுதாபி: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் பாகிஸ்தான் அணி 248 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் அபுதாபியில் நடந்தது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 566/3 (டிக்ளேர்), நியூசிலாந்து 262 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. பின் 480 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய நியூசிலாந்து அணி, நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்து 306 ரன்கள் பின்தங்கி இருந்தது.

 

இன்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த நியூசிலாந்து அணியின் மார்க் கிரேக் (28) ஏமாற்றினார். பொறுப்பாக ஆடிய இஷ் சோதி (63), அசைதம் அடித்தார்.

இரண்டாவது இன்னிங்சில் நியூசிலாந்து அணி 231 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்டாகி’ தோல்வி அடைந்தது. டிரண்ட் பவுல்ட் (19) அவுட்டாகாமல் இருந்தார். பாகிஸ்தான் சார்பில் யாசிர் ஷா 3, ரஹாத் அலி, இம்ரான் கான், பாபர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின்மூலம், மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி 1–0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது டெஸ்ட், வரும் 17ம் தேதி துபாயில் துவங்குகிறது.

 

http://sports.dinamalar.com/2014/11/1415808815/PakistanfirstTestwinNewZealand.html

  • தொடங்கியவர்

அதிக டெஸ்ட்களில் வெற்றி: இம்ரான் சாதனையைக் கடந்த மிஸ்பா; நியூசி. படுதோல்வி
 

 

அபுதாபியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியை பாகிஸ்தான் 248 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அதிக டெஸ்ட் வெற்றிகளைப் பெற்ற பாகிஸ்தான் கேப்டன் ஆனார் மிஸ்பா.

மொத்தம் இதுவரை 33 டெஸ்ட் போட்டிகளில் பாக். கேப்டனாக் இருந்து வரும் மிஸ்பா உல் ஹக் 15 வெற்றிகளுடன் அதிக வெற்றிகள் பெற்ற பாகிஸ்தான் கேப்டன் ஆனார். இம்ரான் கான் 33 டெஸ்ட் போட்டிகளில் 14 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தார்.

174/8 என்று தொடங்கிய நியூசிலாந்து 231 ரன்களுக்கு இன்று சுருண்டது.

முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 566 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. அகமட் ஷேஜாத் 176 ரன்கள் எடுத்து கோரி ஆண்டர்சன் பந்தில் அடிபட்டு இந்தத் தொடரை விட்டே வெளியேறினார்.

 

மிஸ்பா சதம் எடுத்தார். யூனிஸ் கான் தொடர்ச்சியாக 4-வது சதம் கண்டார். தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணியில் லாதம் மட்டுமே போராடி 103 ரன்களை எடுத்தார். நியூசிலாந்து வீரர்களில் குறைந்த வயதில் டெஸ்ட் சதம் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றார் லாதம். நியூசிலாந்து 262 ரன்களுக்குச் சுருண்டது.

ரஹத் அலி 4 விக்கெட்டுகளையும் சுல்பிகர் பாபர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஃபாலோ ஆன் கொடுக்கவில்லை. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் ஹபீஸ் சதத்துடன் 175/2 என்று டிக்ளேர் செய்தது.

480 ரன்கள் இலக்கை எதிர்த்து விளையாடிய நியூசிலாந்து 2-வது இன்னிங்ஸில் 231 ரன்களுக்கு இன்று சுருண்டனர்.

ஆட்ட நாயகனாக ரஹத் அலி தேர்வு செய்யப்பட்டார். 3 டெஸ்ட்கள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் 1-0 என்று முன்னிலை பெற்றது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/article6594693.ece

  • தொடங்கியவர்

பாக்.நியூசி. டெஸ்ட்: லதாம் மீண்டும் சதம்
 

 

பாகிஸ்தான் –நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதல் நாளன்று நியூசிலாந்து அணி, 3 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்திருந்தது.

அபுதாபியில் பாகிஸ்தான் –நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வென்றது. நேற்று துபாயில் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆரம்பமானது. டாஸ் ஜெயித்த நியூசிலாந்து அணி, பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது.

 

முதல் டெஸ்ட்டில் மோசமாகத் தோற்றதால் இந்தமுறை கவனமாக ஆடினார்கள் நியூசிலாந்து வீரர்கள். முதல் டெஸ்ட்டில் சதம் அடித்த தொடக்க ஆட்டக்காரர் லதாம், இந்த டெஸ்ட்டிலும் சதம் அடித்தார். மெக்குல்லம் 43 ரன்கள் எடுத்தார். முதல் நாள் ஆட்ட நேர இறுதியில், நியூசிலாந்து 243 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. லதாம் 137 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருக்கிறார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/article6609183.ece

  • தொடங்கியவர்

நியூசிலாந்து அணி ரன் குவிப்பு
நவம்பர் 18, 2014.

 

அபுதாபி: பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 403 ரன்கள் குவித்தது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,) வந்துள்ள பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வென்ற பாகிஸ்தான் அணி 1–0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது டெஸ்ட் துபாயில் நடக்கிறது. முதல் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுக்கு 243 ரன்கள் எடுத்திருந்தது.

 

நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. ஆண்டர்சன் (9), லதாம் (137) வந்தவுடன் வெளியேறினர். நீஷம் (17) நிலைக்கவில்லை. வாட்லிங் 39 ரன்கள் எடுத்தார். பாபர் ‘சுழலில்’ கிரெய்க் (43), சவுத்தி (17) சிக்கினர். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 403 ரன்களுக்கு ஆல்–அவுட்டானது. பாகிஸ்தான் அணியின் ஜுல்பிகர் பாபர் 4 விக்கெட் வீழ்த்தினார்.

முதல் இன்னிங்சை துவக்கிய பாகிஸ்தான் அணிக்கு ஷான் மசூத் (13), தபிக் (16) ஏமாற்றினர். இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 34 ரன்கள் எடுத்து, 369 ரன்கள் பின்தங்கி இருந்தது. அசார் அலி (4), யூனிஸ் கான் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

http://sports.dinamalar.com/2014/11/1416330588/PakistanTestNewZealand.html

 

  • தொடங்கியவர்

யூனிஸ், அசார் அரைசதம்
நவம்பர் 19, 2014.

துபாய்: நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில், பாகிஸ்தானின் யூனிஸ் கான், அசார் அலி அரைசதம் அடித்து கைகொடுத்தனர்.     

பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் துபாயில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 403 ரன்கள் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுக்கு 34 ரன்கள் எடுத்திருந்தது. அசார் அலி (4), யூனிஸ் கான் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.     

நேற்று மூன்றாம் நாள் ஆட்டம் நடந்தது. முதல் இன்னிங்சை தொடர்ந்த பாகிஸ்தான் அணிக்கு அசார் அலி, யூனிஸ் கான் ஜோடி கைகொடுத்தது. பொறுப்பாக ஆடிய யூனிஸ் கான், டெஸ்ட் அரங்கில் தனது 29வது அரைசதம் அடித்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்த போது, ஜேம்ஸ் நீஷாம்  பந்தில் யூனிஸ் கான் (72) அவுட்டானார்.     

கேப்டன் மிஸ்பா (28) பெரிய அளவில் சோபிக்கவில்லை. மறுமுனையில் அசத்திய அசார் அலி, டெஸ்ட் அரங்கில் தனது 18வது அரைசதத்தை பதிவு செய்தார். இவர், 75 ரன்கள் எடுத்த போது இஷ் சோதி ‘சுழலில்’ சிக்கினார். அடுத்து வந்த ஆசாத் ஷபிக் (44) அரைசத வாய்ப்பை இழந்தார்.     

மூன்றாம் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்கு 281 ரன்கள் எடுத்து, 122 ரன்கள் பின்தங்கி இருந்தது. சர்பிராஸ் அகமது (28), யாசிர் ஷா (1) அவுட்டாகாமல் இருந்தனர். நியூசிலாந்து சார்பில் இஷ் சோதி 2 விக்கெட் கைப்பற்றினார்.

 

http://sports.dinamalar.com/2014/11/1416414772/PakistanNewZealandTestDubaiAzarAli.html

  • தொடங்கியவர்

சர்ஃப்ராஸ் சதம்; யாசிர், பாபர் அபாரம்: வலுவான நிலையில் பாகிஸ்தான்
 

 

நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வலுவான நிலையை எட்டியுள்ளது. முதல் இன்னிங்ஸில் 10 ரன்கள் முன்னிலை பெற்ற நியூஸிலாந்து, தனது 2-வது இன்னிங்ஸில் 167 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்ததால் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.

துபாயில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 156 ஓவர்களில் 403 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 109 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்திருந்தது. சர்ஃப்ராஸ் அஹமது 28, யாசிர் ஷா ஒரு ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

 

4-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான், 3-வது ஓவரிலேயே யாசிர் ஷாவின் விக்கெட்டை இழந்தது. அவர் 2 ரன்னுடன் வெளியேற, பின்னர் வந்த இஷான் அடில் ரன் ஏதுமின்றியும், ஜல்பிகர் பாபர் 5 ரன்களிலும் வெளியேற, 119 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்திருந்தது பாகிஸ்தான்.

 

சர்ஃப்ராஸ் சதம்

இதையடுத்து ரஹட் அலி களம்புகுந்தார். ரஹட் அலி ஒருபுறம் நிதானமாக ஆட, மறுமுனையில அசத்தலாக ஆடிய சர்ஃப்ராஸ் 153 பந்துகளில் சதமடித்தார். இதன்மூலம் ஒரே ஆண்டில் 3 சதமடித்த முதல் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

பந்துவீச்சாளர்களை கடுப்பேற்றிய பாகிஸ்தான் ஜோடியை மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு பிரித்தார் நியூஸிலாந்து கேப்டன் பிரென்டன் மெக்கல்லம். அவர் தனது 2-வது ஓவரில் சர்ப்ராஸை வீழ்த்தி, பாகிஸ்தானின் முதல் இன்னிங்ஸை 147 ஓவர்களில் 393 ரன்களுக்கு முடிவுக்கு கொண்டு வந்தார். இதன்மூலம் தனது 89-வது போட்டியில் முதல் விக்கெட்டை கைப்பற்றியிருக்கிறார் மெக்கல்லம்.

 

சர்ஃப்ராஸ் 195 பந்துகளில் 16 பவுண்டரிகளுடன் 112 ரன்கள் எடுத்தார். ரஹட் அலி 49 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 16 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சர்ஃப்ராஸ்-ரஹட் அலி ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. நியூஸிலாந்து தரப்பில் டிம் சவுதி 3 விக்கெட்டுகளையும், டிரென்ட் போல்ட், சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

 

நியூஸிலாந்து தடுமாற்றம்

முதல் இன்னிங்ஸில் 10 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-வது இன்னிங்ஸை ஆடிய நியூஸிலாந்து, பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சரிவுக்குள்ளானது. தொடக்க ஆட்டக்காரர் லேத்தம் 9, பின்னர் வந்த வில்லியம்சன் 11, கேப்டன் மெக்கல்லம் 45, ஆண்டர்சன் 0, ஜேம்ஸ் நீஷம் 11, வாட்லிங் 11 என அடுத்தடுத்து வெளியேறினர்.

 

எனினும் மறுமுனையில் ராஸ் டெய்லர் அசத்தலாக ஆடி ரன் சேர்த்ததால் அந்த அணி மோசமான சரிவிலிருந்து மீண்டது. 4-வது நாள் ஆட்டநேர முடிவில் நியூஸிலாந்து 48.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்துள்ளது. டெய்லர் 77 ரன்களுடனும், கிரேக் ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர்.

பாகிஸ்தான் தரப்பில் ஜல்பிகர் பாபர், யாசிர் ஷா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தற்போதைய நிலையில் நியூஸிலாந்து 177 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. இன்று காலையில் நியூஸிலாந்தின் எஞ்சிய 4 விக்கெட்டுகளையும் விரைவாக வீழ்த்தும்பட்சத்தில் இந்தப் போட்டியிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்றுவிடும்.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/article6620558.ece

  • தொடங்கியவர்

ராஸ் டெயர்லர் சதம்: டிரா செய்தது பாக்.,
நவம்பர் 21, 2014.

 

துபாய்: நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை பாகிஸ்தான் அணி ‘டிரா’ செய்தது.

பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் துபாயில் நடந்தது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 403, பாகிஸ்தான் 393 ரன்கள் எடுத்தன. நான்காம் நாள் முடிவில், 2வது இன்னிங்சில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்திருந்தது. ராஸ் டெய்லர் (77) அவுட்டாகாமல் இருந்தார்.

 

டெய்லர் சதம்:

நேற்று ஐந்தாம் நாள் ஆட்டம் நடந்தது. இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த நியூசிலாந்து அணியின் ராஸ் டெய்லர், டெஸ்ட் அரங்கில் தனது 12வது சதத்தை பதிவு செய்தார். மார்க் கிரேக் (34), டிம் சவுத்தி (20) கைகொடுக்க, இரண்டாவது இன்னிங்சில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுக்கு 250 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. பாகிஸ்தான் சார்பில் யாசிர் ஷா 5, பாபர் 4 விக்கெட் வீழ்த்தினர்.

 

யூனிஸ் ஆறுதல்:

பின், 261 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு 2வது இன்னிங்சை துவக்கிய பாகிஸ்தான் அணிக்கு டபீக் உமர் (4) ஏமாற்றினார். ஷான் மசோத் (40), அசார் அலி (24), யூனிஸ் கான் (44) ஆறுதல் தந்தனர். கேப்டன் மிஸ்பா (0) சொதப்பினார். ஆசாத் ஷபிக் (41*), சர்பராஸ் அகமது (24*) இணைந்து பொறுப்பாக ஆடினர்.

இரண்டாவது இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்கு 196 ரன்கள் எடுத்திருந்த போது, இரு அணி கேப்டன்களும் போட்டியை ‘டிரா’ செய்ய சம்மதித்தனர்.

இப்போட்டி ‘டிரா’வில் முடிந்த போதும், பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1–0 என தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் மோதும் 3வது டெஸ்ட், சார்ஜாவில் வரும் 26ம் தேதி துவங்குகிறது.

 

http://sports.dinamalar.com/2014/11/1416589118/rosstaylorcricket.html

 

  • தொடங்கியவர்

ஹபீஸ் சதம்: பாக்., ரன்குவிப்பு
நவம்பர் 26, 2014.

 

சார்ஜா: நியூசிலாந்துக்கு எதிரான சார்ஜா டெஸ்டில், முகமது ஹபீஸ் சதம் அடித்து கைகொடுக்க, பாகிஸ்தான் அணி வலுவான இலக்கை நோக்கி முன்னேறுகிறது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றுள்ள நியூசிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்ட் முடிவில், 1–0 என, பாகிஸ்தான் அணி முன்னிலையில் உள்ளது.

இரு அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட், சார்ஜாவில் நேற்று துவங்கியது. ‘டாஸ்’ வென்று களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு, துவக்கத்தில் மசூத் (12), அசார் அலி (39) அதிர்ச்சி கொடுத்தனர்.

 

‘அனுபவ’ யூனிஸ் கான் 5 ரன்னில், வெட்டோரியின் சுழலில் சிக்கிய போதும், முகமது ஹபீஸ் டெஸ்ட் அரங்கில் 7வது சதம் கடந்தார்.

முதல் நாள் ஆட்ட முடிவில், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 281 ரன்கள் எடுத்திருந்தது. ஹபீஸ் (178), கேப்டன் மிஸ்பா உல் ஹக் (38) அவுட்டாகாமல் இருந்தனர்

 

http://sports.dinamalar.com/2014/11/1417021733/MohammadHafeezpakistan.html

  • தொடங்கியவர்

பாகிஸ்தானுக்கு மெக்கல்லம் பதிலடி: 78 பந்துகளில் அதிவேக சதம்
 

 

பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3-வது நாள் ஆட்டநேர முடிவில் நியூஸிலாந்து 45 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் கேப்டன் மெக்கல்லம் 145 பந்துகளில் 8 சிக்ஸர், 17 பவுண்டரிகளுடன் 153 ரன்கள் குவித்து களத்தில் உள்ளார்.

சார்ஜாவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் 2-வது நாள் ஆட்டம் பிலிப் ஹியூஸுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ரத்து செய்யப்பட்ட நிலையில், 3-வது நாளான நேற்று முதல் இன்னிங்ஸை தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 125.4 ஓவர்களில் 351 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முகமது ஹபீஸ் 197 ரன்கள் குவித்தார். நியூஸிலாந்து தரப்பில் கிரேக் 94 ரன்களைக் கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

 

இதையடுத்து பேட் செய்த நியூஸிலாந்து அணியில் லேத்தம் 13 ரன்களில் வெளியேற, வில்லியம்சன் களம்புகுந்தார். அவர் நிதானமாக ஆட, மறுமுனையில் வெளுத்து வாங்கிய மெக்கல்லம், 78 பந்துகளில் சதமடித்தார். இதன்மூலம் அதிவேக சதமடித்த நியூஸிலாந்து வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

3-வது நாள் ஆட்டநேர முடிவில் நியூஸிலாந்து 45 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்துள்ளது. மெக்கல்லம் 153, வில்லியம்சன் 76 ரன்களுடன் களத்தில் உள்ளனர். பாகிஸ்தானின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்டுவதற்கு நியூஸிலாந்து இன்னும் 102 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF-78-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/article6644272.ece

  • தொடங்கியவர்

4-வது அதிவேக இரட்டைச் சதம்: பிரெண்டன் மெக்கல்லம் சாதனை

 

பாகிஸ்தானுக்கு எதிரகா ஷார்ஜாவில் நடைபெறும் 3-வது டெஸ்ட் போட்டியில் 186 பந்துகளில் 202 ரன்கள் எடுத்து டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 4-வது அதிவேக இரட்டைச் சத சாதனையை நிகழ்த்தியுள்ளார் பிரெண்டன் மெக்கல்லம்.

முன்னதாக 78 பந்துகளில் சதம் கண்டு ராஸ் டெய்லர் வைத்திருந்த 81 பந்துகள் சத சாதனையை முறியடித்த பிரெண்டன் மெக்கல்லம், 3-ஆம் நாளான இன்று தொடர்ந்து அதிரடியாக விளையாடி 186 பந்துகளில் இரட்டை சதம் கண்டார்.

 

யாசிர் ஷா என்ற லெக்ஸ்பின்னர் வீசிய பந்தை மேலேறி வந்து 196 ரன்களிலிருந்து தனது 11-வது சிக்சர் மூலம் 202 ரன்களுக்குச் சென்றார் மெக்கல்லம். 188 பந்துகளில் 21 பவுண்டரி 11 சிக்சர்களுடன் அவர் 202ரன்கள் எடுத்து காய்ச்சியது போதும் என்று யாசிர் ஷா பந்தில் பவுல்டு ஆனார்.

151 பந்துகளில் நேதன் ஆஸ்ட்ல் இங்கிலாந்துக்கு எதிராக எடுத்த இரட்டை சதமே இன்றும் உலக சாதனையாக இருந்து வருகிறது.

நியூசி. அணியில் 4 இரட்டைச் சதங்கள் எடுத்த ஒரே வீரர் என்ற சாதனையையும் அவர் நிகழ்த்தினார். மேலும் ஒரே ஆண்டில் 3 இரட்டைச் சதம் எடுக்கும் 4-வது டெஸ்ட் வீரரானார் மெக்கல்லம். டான் பிராட்மேன், ரிக்கி பாண்டிங், மைக்கேல் கிளார்க் மற்ற மூவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கேன் வில்லியம்சனுடன் இணைந்து 2-வது விக்கெடுக்காக 297 ரன்கள் சேர்க்கப்பட்டது. தற்போது கேன் வில்லியம்சன் 181 ரன்களுடனும் ராஸ் டெய்லர் 46 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

 

நியூசிலாந்து அணி 90 ஓவர்கள் முடியும் தறுவாயில் 456/2 என்று உள்ளது. ஓவருக்கு 5 ரன்கள் என்ற விகிதத்தில் ரன்கள் நொறுக்கப்பட்டு வருகிறது. டெய்லரும், வில்லியம்சனும் இணைந்து இதுவரை 3-வது விக்கெட்டுக்காக 109 ரன்கள் சேர்த்து ஆடிவருகின்றனர்.

பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்சில் 351 ரன்களுக்குச் சுருண்டது. ஸ்பின்னர் கிரெய்க் 94 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

 

http://tamil.thehindu.com/sports/4%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/article6646484.ece

  • தொடங்கியவர்

டெஸ்ட் இன்னிங்ஸில் அதிக சிக்சர் விளாசல்: ஆஸி. சாதனையை உடைத்த நியூசிலாந்து
 

 

பாகிஸ்தானுக்கு எதிராக ஷார்ஜாவில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி தன் முதல் இன்னிங்ஸில் மொத்தம் 19 சிக்சர்களை அடித்து புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது.

இதற்கு முன்பாக ஜிம்பாவே அணிக்கு எதிராக 2003-ஆம் ஆண்டு பெர்த் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 17 சிக்சர்களை ஆஸ்திரேலிய அணி அடித்திருந்ததே சாதனையாக இருந்தது.

 

இந்த இன்னிங்ஸில் நியூசி. அடித்த 19 சிக்சர்களில் 11 சிக்சர்கள் பிரெண்டன் மெக்கல்லம் அடித்தது. ராஸ் டெய்லர், கோரி ஆண்டர்சன், டிம் சவுதீ ஆகியோர் தலா 2 சிக்சர்கள் அடித்தனர். வில்லியம்சன், கிரெய்க் ஆகியோர் தலா 1 சிக்சர் அடிக்க மொத்தம் 19 சிக்சர்கள் விளாசப்பட்டது.

இந்திய அணி மும்பையில் 2009-ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 15 சிக்சர்களை ஒரு இன்னிங்ஸில் அடித்து 4-ஆம் இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு எதிராக 2002ஆம் ஆண்டு லாகூர் டெஸ்ட் போட்டியில் 15 சிக்சர்களை அடித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/article6646728.ece

  • தொடங்கியவர்

பாகிஸ்தான் இன்னிங்ஸ் தோல்வி: டெஸ்ட் தொடர் சமன்
நவம்பர் 29, 2014.

சார்ஜா: நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில், சொதப்பிய பாகிஸ்தான் அணி, இன்னிங்ஸ் மற்றும் 80 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதன்மூலம் தொடர் 1–1 என சமனில் முடிந்தது.                 

பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதின. முதல் டெஸ்டில் பாகிஸ்தான் வென்றது. இரண்டாவது டெஸ்ட் ‘டிரா’ ஆனது. சார்ஜாவில் மூன்றாவது டெஸ்ட் நடந்தது. இதில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 351 ரன்கள் எடுத்தது. மூன்றாம் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 637 ரன்கள் எடுத்தது.   

   

நேற்று நான்காம் நாள் ஆட்டம் நடந்தது. மார்க் கிரேக்(65) அரைசதம் கடக்க, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 690 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது.                        

ஆசாத் ஆறுதல்: பின், 339 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை துவக்கிய பாகிஸ்தான் அணிக்கு மசோத் (4), அசார் அலி (6), யூனிஸ் கான் (0), முகமது ஹபீஸ் (24), கேப்டன் மிஸ்பா (12) ஏமாற்றினர். சர்பராஸ் அகமது (37), யாசிர் ஷா (10) நிலைக்கவில்லை. ஆசாத் ஷபிக்(137), சதம் கடந்து ஆறுதல் தந்தார்.     

இரண்டாவது இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 259 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, படுதோல்வி அடைந்தது.      

 

‘சுழலில்’ அசத்தி மொத்தம் 10 விக்கெட்(7+3) கைப்பற்றிய நியூசிலாந்தின் மார்க் கிரேக் ஆட்டநாயகன் விருதை வென்றார். தொடர் நாயகன் விருதை, பாகிஸ்தானின் ஹபீஸ் தட்டிச் சென்றார்.           

உடைந்து போனோம்

நியூசிலாந்து அணி கேப்டன் பிரண்டன் மெக்கலம் கூறுகையில்,‘‘ ஆஸ்திரேலியாவின் ஹியுஸ் இறந்த செய்தி கேட்டு எங்கள் அணியினர் உடைந்து போனோம். பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் விளையாடினாலும், சிந்தனை முழுவதும் ஹியுசையை எண்ணியே இருந்தது,’’ என்றார்.

 

http://sports.dinamalar.com/2014/11/1417280394/BrendonMcCullumcricket.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.