Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெட் எயார்வேய்ஸ் கொழும்பு - மும்பைக்கிடையிலான 2ஆவது விமான சேவையை ஆரம்பித்தது

Featured Replies

தூர கிழக்கு, ஐரோப்பா, அமெரிக்கா, கனடா, சார்க் மற்றும் கல்ஃப் பிராந்திய நாடுகளுக்கும், பிரதான உள்ளக நகரங்களுக்கிடையிலான இணைப்பை ஏற்படுத்தும் வகையில் புதிய விமான சேவை அமைந்துள்ளது.
 
Jet-Airways_0.jpg
 
இந்தியாவின் முன்னணி சர்வதேச விமான சேவை வழங்குநரான ஜெட் எயார்வேய்ஸ், கொழும்பு - மும்பை இடையிலான இரண்டாவது விமான சேவையை அறிமுகம் செய்துள்ளது.
 
அதிகளவான கோரிக்கையை தொடர்ந்து, இம் மாதம் 5ஆம் திகதியிலிருந்து இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக மும்பை நகருக்கும் தூர கிழக்கு, ஐரோப்பா, அமெரிக்கா, கனடா மற்றும் கல்ஃவ் நாடுகளுக்கு இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 
 
போயிங் 737 விமானத்தின் மூலம், ஜெட் எயார்வேய்ஸ் வாடிக்கையாளர்கள் தற்போது, ஒரே நாளில் கொழும்பு - மும்பை நகருக்கிடையில் தமது பயணத்தை மேற்கொள்ளலாம். குறிப்பாக வியாபார நோக்கில் பயணிப்பவர்களுக்கு இந்த சேவை பெரிதும் அனுகூலம் வாய்ந்ததாக காணப்படுகிறது. வாரத்தின் ஏழுநாட்களிலும் இந்த சேவையை பயணிகள் பெற்றுக் கொள்ள முடியும்.
 
ஜெட் எயார்வேய்ஸ் விமான இலக்கம் 9W 251, கொழும்பிலிருந்து தனது பயணத்தை 21:35 மணிக்கு ஆரம்பித்து, மும்பை விமான நிலையத்தை 00:15 மணிக்கு சென்றடையும். மீண்டும் மும்பையிலிருந்து 18:05 மணிக்கு புறப்படும் இந்த விமானம் கொழும்பை 20:35 மணிக்கு வந்தடையும். 
 
இந்த மாலைநேர விமான சேவை என்பது, ஜெட் எயார்வேய்ஸ் கொழும்பிலிருந்து மும்பை நகருக்கு இயக்கும் அதிகாலை நேர விமான சேவைக்கு மேலதிகமானதாக அமைந்துள்ளது. இதன் மூலம் நாளொன்றில் இரு விமான சேவைகளை இந்தியாவுக்கு ஜெட் எயார்வேய்ஸ் முன்னெடுக்கிறது.
 
இந்த புதிய விமான சேவையின் மூலமாக, கொழும்பிலிருந்து பயணிக்கும் பயணிகளுக்கு, மும்பை விமான நிலையத்திலிருந்து டுபாய் மற்றும் அபுதாபி போன்ற நகரங்களுக்கும், பாங்கொக், சிங்கப்ப+ர் மற்றும் ஹொங்கொங் போன்றன தூர கிழக்கு நாடுகளுக்கும், வட அமெரிக்கா, பாரிஸ் மற்றும் லண்டன் ஹீத்ரு போன்ற விமான நிலையங்களுக்கும் நேரடி மற்றும் இணைப்பு விமான சேவைகளை அனுபவிக்க முடியும். 
 
ஜெட் எயார்வேய்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கிறீமர் பெல் கருத்து தெரிவிக்கையில், 
 
ஜெட் எயார்வேய்ஸ் என்பது இந்த மாலை நேர விமான சேவையை அறிமுகம் செய்வதையிட்டு பெரிதும் மகிழ்ச்சியடைகிறது. இந்த நகரங்களுக்கிடையிலான பயணிகளின் கோரிக்கை அதிகரித்ததை தொடர்ந்து, இந்த கோரிக்கையை நிவர்த்தி செய்யும் வகையில், இந்த புதிய சேவை அறிமுகம் அமைந்துள்ளது. 
 
இந்த விமான சேவையின் அறிமுகத்தின் மூலம் தூர கிழக்கு, ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் கல்ஃவ் பிராந்திய நாடுகளுக்கு மும்பையிலிருந்து பயணங்களை மேற்கொள்ள முடியும். நேரடி சேவையின் அறிமுகத்தின் மூலம் எமது வாடிக்கையாளர்கள் மத்தியில் இது பெரிதும் வரவேற்பை பெறும் வகையில் அமைந்திருக்கும் என்றார்.
 
இந்த விமான சேவையானது, உயர் தரம் வாய்ந்த மற்றும் சிக்கனமான சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வகையில் அமைந்துள்ளது. விருதை வென்ற விமான சேவை அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு ஜெட் எயார்வேய்ஸ் வழங்கி வருகிறது.
 
ஜெட் எயார்வேய்ஸ் பற்றி : ஜெட் எயார்வேய்ஸ் என்பது தற்போது, 113 விமானங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இதில் 10 போயிங் 777 - 300 ER ரக விமானங்கள், 8 எயார்பஸ் A330 – 200 ரக விமானங்கள், 73 அடுத்த தலைமுறைக்கான போயிங் 737-700/800/900/900 ER விமானங்கள் மற்றும் 15 ATR 72-500 மற்றும் 3 ATR72- 600 போன்றன உள்ளடங்கியுள்ளன. 
 
74 பிராந்தியங்களுக்கு தனது சேவைகளை முன்னெடுத்து வரும் ஜெட் எயார்வேய்ஸ், இந்தியாவிலும், இந்தியாவுக்கு வெளியே, அபுதாபி, பஹ்ரெய்ன், பாங்கொக், பிரசல்ஸ், கொழும்பு, தம்மாம், டாக்கா, டோஹா, துபாய், ஹொங்கொங், ஜெத்தா, காத்மன்டு, குவைட், லன்டன் (ஹீத்ரு), மஸ்கட், நியுயோர்க், பரிஸ், ரியாத், ஷார்ஜா, சிங்கப்ப+ர் மற்றும் டொரன்டோ ஆகிய நகரங்களுக்கு தனது சேவையை முன்னெடுக்கிறது.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.