Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழ இலக்கியம் ஒடுக்குபவர்களுக்கு எதிரான ஆயுதம்: நியூ டெல்லியில் தீபச்செல்வன்

Featured Replies

Deebachelvan_CI.JPG

இரண்டாயிரம் வருட பாரம்பரியம் உள்ள ஈழத் தமிழ் இலக்கியங்கள் ஈழ தேசத்தின் தனித்துவமான வரலாற்றை பறைசாற்றும் சாட்சியங்கள் என்று தெரிவித்த ஈழ கவிஞர் தீபச்செல்வன் இன எழுச்சி சார்ந்த ஈழ இலக்கியம் எங்களை ஒடுக்குபவர்களுக்கு எதிரான ஆயுதம் என்றும் குறிப்பிட்டார்.

நியூ டெல்லியில் அண்மையில் நடைபெற்ற சமன்வய்: இந்திய தேசிய மொழிகளின் விழாவில் கலந்து கொண்டுபேசும்போதே இவ்வாறு தெரிவித்தார். குறித்த விழாவில் இந்திய மாநிலங்களிலிருந்தும் முக்கிய எழுத்தாளர்கள் கலந்துகொண்டதுடன் ஈழம், பங்களாதேஷ், நேபாளம் உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் கலந்து கொண்டனர். 

Transnation: Poetry and the Idea of Nation என்ற தலைப்பில் இடம்பெற்ற நிறைவுநாள் முதல் அமர்வில் டெல்லியை சேர்ந்த கவிஞர் அசாட் சைடி நேபாளத்தை சேர்ந்த கவிஞர் பெஞ்சு சர்மா ஈழத்தை சேர்ந்த தீபச்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டனர்.  ஈழ தேச ஒடுக்குமுறைக்கு எதிரான இலக்கியங்கள் என்ற தலைப்பில் தீபச்செல்வன் பேசினார்.

தமிழக மக்களும் ஈழ மக்களும் தமிழ்மொழியை தாய் மொழியாக கொண்டுள்ளபோதும் ஈழத் தமிழர்கள் தனித்துவமான தேசிய இனமாக திகழ்வதாக கூறிய அவர் ஈழத்தில் இலக்கிய புலத்திலும் வரலாறுதோறும் தனித்துவம் மிக்க இலக்கியங்கள் தோன்றியிருப்பதாகத் தெரிவித்தார்.  

தமிழில் போர் இலக்கியத்திற்கு நீண்ட பாரம்பரியம் இருப்பதாக குறிப்பிட்ட தீபச்செல்வன் ஈழப் போர் இலக்கியம் போர் சார்ந்த புதிய அனுபவங்களையும் அதனுடன் தொடர்புடைய புதிய அரசியலையும் பதிவாக்கியுள்ளதாகத் தெரிவித்தார். 

இன ஒடுக்குமுறைக்கு எதிரான இலக்கியங்கள் மத்திரமின்றி பெண் எழுச்சி, தீண்டாமைக்கு எதிரான குரல்கள் என சமூக விடுதலை சார்ந்த இலக்கியங்களும் ஈழத்தில் தனித்துவமானதாக திகழ்வதாகவும் குறிப்பிட்டார். 

இதேவேளை புலம்பெயர்ந்த தமிழ் படைப்பாளிகளின் ஆக்கப்படும் இலக்கியங்கள் ஈழ தேச அனுபவங்களை புலம்பெயர் நாடுகளின் மொழிகளிலும் பார்வைகளிலும் பகிரவும் புலம்பெயர் தேச அனுபவங்களை தமிழ்மொழியில் பகிரும் தேசங்களைக் கடக்கும் அனுபவத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

ஈழ தேசத்தை ஸ்ரீலங்கா தேசம் கடுமையாக ஒடுக்கிவரும் நிலையில் எங்கள் தேசம்மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான குரலை பதிவு செய்வது என்பது ஆக்கிரமிக்கப்பட்டுள்ள, இராணுவத்தால் ஆளும் ஒரு தேசத்தில் மிகவும் சவால் நிறைந்த பணி என்றும் அவர் குறிப்பிட்டார். 

ஈழத்தில் உள்ள பல எழுத்தாளர்கள் இந்த சவால் மிக்க பயணத்தை தொடர்வதாக குறிப்பிட்ட தீபச்செல்வன் இன ஒடுக்குதலுக்கு உள்ளாகியுள்ள எங்கள் தேசம் பற்றியும் வாழ்வின்மீது ஈழத்தவர்களுக்கு இருக்கும் கனவு பற்றியதுமான ஈழ இலக்கியங்கள் ஜனநாயக ஆயுதம் என்றும் குறிப்பிட்டார்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/113421/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.