Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுரேஷ் பிரேமச்சந்திரனின் கேள்விகளுக்கு பசில் ராஜபக்சதான் பதிலளிக்க வேண்டும் - மனோ கணேசன்:-

Featured Replies

அமைச்சர் பசில் ராஜபக்ச, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பின் ஆதரவை கோரியுள்ளார். இது தொடர்பான செய்தி கொழும்பிலிருந்து வெளியாகும் தேசிய தமிழ் தினசரிகளில் கடந்தவாரம் முன்பக்க தலைப்பு செய்தியாக இருந்தது. இங்கே பேசிய கூட்டமைப்பு எம்பி சுரேஷ் பிரேமச்சந்திரன், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள ஆளும் கட்சி மற்றும் எதிரணி பொது வேட்பாளர்களிடம் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். தமது மக்கள் அன்றாடம் முகங்கொடுக்கும், மீனவர், அரசியல் கைதிகள் மற்றும் காணி , சிவில் வாழ்வில் இராணுவ தலையீடு ஆகிய பிரச்சினைகளை தீர்த்துவைக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் தயாரா என அவர் கேட்கிறார்.

உண்மையில் எதிரணி பொது வேட்பாளர், வெற்றி பெற்று நிறைவேற்று அதிகாரத்தை பாராளுமன்றத்துக்கு கையளித்து விட்டு விடைபெறும் ஒரு இடைக்கால ஜனாதிபதியாகவே இருப்பார். நமது அரசு ஜனாதிபதியின் அரசாக இருக்க போவதில்லை. அந்த அரசு அடுத்த பாராளுமன்றத்தில் தான் ஆரம்பமாகும்.

ஆனால், இன்றைய அரசு அப்படியல்ல. இவர்கள் ஒரு இடைக்கால அரசை அமைக்க போவது இல்லை. தொடர்ந்து இதே ஜனாதிபதியுடன் இதே அரசை நீடிக்க விரும்புகின்றார்கள். இப்போதும் இவர்கள்தான் ஆட்சியிலும் இருப்பதால், கூட்டமைப்பின் கேள்விகளுக்கு அரசாங்கம்தான் பதில் கூற வேண்டும். எனவே கூட்டமைப்பின் ஆதரவு வேண்டுமென்றால், சுரேஷ் எம்பியின் கேள்விகளுக்கு அமைச்சர் பசில் ராஜபக்சதான் பதிலளிக்க வேண்டும்.

எதிரணி பொது வேட்பாளர் பற்றி குறிப்பிட்டு விட்டு சுரேஷ் எம்பி என்னை பார்த்து புன்னகைத்தார். அதன் அர்த்தம் என்னவோ தெரியவில்லை. ஆனால், அவரது கேள்விகளை அவர் அரசு தரப்பிடம்தான் முன்வைக்க வேண்டும் என அவருக்கு நான் தோழமையுடன் கூறுகிறேன் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் சிங்கள, தமிழ் மொழிகளில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

சுரேஷ் எம்பி இங்கே 13ம் திருத்தம் பற்றியோ, அதிகார பகிர்வு பற்றியோ பேசவில்லை. இதையெல்லாம் பேசி பயனில்லை என்று நினைக்கிறாரோ தெரியவில்லை. ஆனால், அவர் வடபகுதி மக்களின் அன்றாட பிரச்சினைகள் பற்றி பேசியுள்ளார். மீனவர்களின் கடல்வள அபகரிப்பு, காணி அபகரிப்பு, மக்களின் சிவில் வாழ்வில் இராணுவம் மூக்கை நுழைப்பது, நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் அரசியல் கைதிகள் விவகாரம் ஆகிய பிரச்சினைகள் பற்றிதான் பேசினார்.

இந்த பிரச்சினைகளுக்கு உத்தேச ஜனாதிபதி தேர்தலிலே ஆளும் மற்றும் எதிரணி வேட்பாளர்களின் பதில்கள் என்ன என்று அவர் கேட்கிறார். எனவேதான் நான் சொல்கிறேன். கூட்டமைப்பின் ஆதரவை இன்று கோரியுள்ள, அமைச்சர் பசில் ராஜபக்ச இந்த கேள்விகளுக்கு பதில் கூற வேண்டும். ஏனென்றால் இன்றைய அரசு இந்த ஆட்சியையும் நீடிக்க விரும்புகிறது. அதேபோல் இந்த ஆட்சிமுறைமையையும் நீடிக்க விரும்புகிறது.

இந்த பிரச்சினைகள் தொடர்பாக ஜனநாயக மக்கள் முன்னணியின் நிலைபாடுகளை நாடறியும். எனவே நாங்கள் இது தொடர்பாக பதிலளிக்க அவசரப்பட போவதில்லை. எதிரணி பொது வேலைத்திட்டம் ஒரு இடைகால ஜனாதிபதி நிர்வாகமே. இந்த சர்வதிகார ஆட்சிமுறைமையை முடிவுக்கு கொண்டு வருவதே எம் நோக்கம். அதையடுத்து பாராளுமன்ற அரசு அமையும் போது இந்த கேள்விகளுக்கு நாம் பதில் தேட முடியும்.

எமக்கு முன்னால் மூன்று கட்டங்கள் உள்ளன. ஒன்று, பொது கூட்டணி. இரண்டு, குறைந்தபட்ச பொது வேலைத்திட்டம். மூன்று, பொது வேட்பாளர். இன்று பொது கூட்டணி என்ற வண்டியை தயாரித்துள்ளோம். அடுத்து வண்டியை இழுக்கும் பொது வேலைத்திட்டம் என்ற குதிரையை வண்டியில் கட்டுவோம். இதையடுத்து, இந்த குதிரை வண்டியை ஓட்டி செல்ல தகுதியான, பொது வேட்பாளர் என்ற வண்டியோட்டியை தெரிவு செய்வோம். அனைத்தும் உரிய முறையில் நடக்கின்றன. அவை உரிய வேளையில் வெளியே வரும்.

பொது வேட்பாளர், பொது எதிரணி, பொது வேலைத்திட்டம் பற்றி அரசு தரும் போலி செய்திகளை நம்பி மக்கள் ஏமாற கூடாது. எம்மை விட எம்மை பற்றி இன்று இந்த அரசுக்கு தான் அக்கறை அதிகம். இதை நிறுத்தி விட்டு இன்றைய ஆட்சியை நீடிக்க விரும்பி, அதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை கோரும் இந்த அரசு, கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு பதில் தரவேண்டும்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/113461/language/ta-IN/article.aspx

Edited by துளசி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.