Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்னேஸ்வரனின் கோரிக்கை -தினத்தந்தி ஆசிரியர் தலையங்கம்

Featured Replies

தமிழகத்தில் வட மாகாண  முதல்வர்  சி.வி.  விக்னேஸ்வரன்  தெரிவித்திருக்கும் கருத்துகளின் அடிப்படையில் இந்திய மத்திய அரசும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகத்தின்"தினத்தந்தி' நாளேடு வலியுறுத்தியுள்ளது.

 

 இது தொடர்பாக "விக்னேஸ்வரனின் கோரிக்கை' எனும் தலைப்பில் நேற்று புதன்கிழமை  ஆசிரியர் தலையங்கம் தீட்டியிருக்கும் அப்பத்திரிகை மேலும் தெரிவித்திருப்பதாவது ; தமிழர்கள் எப்போதுமே இலங்கைத் தமிழர்கள் நல்வாழ்வில் அதிக அக்கறை கொண்டவர்கள்.

 

 இலங்கையில் தமிழர்களுக்கு பிரச்சினை ஏற்படும்போதெல்லாம் இங்குள்ள தமிழர்களின் இரத்தம் கொதிக்கும் இலங்கையில் வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடந்து அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கட்சி வெற்றி பெற்றது தமிழர்களுக்கு கிடைத்த வெற்றியாக பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

 

விடுதலைப் புலிகள் இயக்கத்தை 2009 இல் அழிப்பதற்காக இலங்கை இராணுவம்  நடத்திய கொடூரத் தாக்குதல், அத்துமீறல்களின் போது அப்பாவித் தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட போர்க் குற்றங்களை விசாரிக்க சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெறும் நிலையில் இந்தப் பிரச்சினையை உலக அரங்கில் எடுத்துச் செல்ல சட்டநுணுக்கங்கள் தெரிந்த ஒருவர் வேண்டும் என்பதற்காக ஓய்வுபெற்ற இலங்கை உச்ச  நீதிமன்ற நீதிபதியான சி.வி. விக்னேஸ்வரனை முதலமைச்சராக கொண்ட அரசாங்கம் வடக்கு மாகாணத்தில் பொறுப்பேற்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்து, அவரும் பொறுப்பேற்றார். ஆனால் இந்த அரசாங்கத்துக்கு ஒரு மாநில அரசுக்குக் கொடுக்கும் உரிமை எதுவும் வழங்கப்படவில்லை.

 

வடக்கு மாகாணத்தின் தலைமை செயலாளர் முதலமைச்சரின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லாமல் மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழேயே  செயல்படும்படி நடைமுறைகள் மாற்றப்பட்டன. வடக்கு மாகாண அமைச்சரவை ஏதாவது முடிவெடுத்தால் கூட அந்த முடிவு கவர்னர் மற்றும் தலைமை செயலாளரின் அனுமதியுடன் தான் செயல்படுத்த முடியும். இது மட்டுமல்லாமல் எந்த அதிகாரமும் இல்லாமல் ஒரு பொம்மை அரசாங்கமாகவே இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு விக்னேஸ்வரன் அரசாங்கம் ஆளாகியுள்ளது. வட  மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்ற பிறகு விடுதலைப் புலிகள் போரின் போது வைத்த கண்ணிவெடிகளை தேடுகிறோம்  தேடிக்கொண்டேயிருக்கிறோம் என்ற  பெயரில் இராணுவம் குவிக்கப்படுகிறது.

 

மேலும் தமிழர்கள் வாழும் பகுதிகளிலெல்லாம்  இப்போது நிறைய சலுகைகளுடன் சிங்களவர்கள் குடியமர்த்தப்படுகிறார்கள். இது மட்டுமல்லாமல் சமீபகாலங்களாக 92 தமிழ்க் கிராமங்களுக்கு சிங்களப் பெயர்களை சூட்டிவிட்டார்கள். தமிழர்கள் வழிபடும் கோவில்களெல்லாம் புத்த விகாரைகளாக மாற்றப்படுகின்றன. இந்தியாவின் நிதி உதவியோடு கட்டப்பட வேண்டிய மின் உற்பத்தி நிலையம் சிங்களவர்கள் கொலனியாகிவிட்டது. தமிழர்களுக்கு சொந்தமான இடங்களிலெல்லாம்  சிங்களவர்கள் குடியமர்த்தப்படுகிறார்கள் என்பது போன்ற பல புகார்களை இந்த பிரச்சினைகளுக்காக போராடிவரும் சட்டத்தரணி கே.எஸ். ராதாகிருஷ்ணன் கூறிவருகிறார்.  

 

இந்த நிலையில்  இலங்கையின் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் முதல் முறையாக தமிழ்நாட்டுக்கு வந்து இருந்தார். அவர்  கூறிய சில கருத்துகளைப் பார்த்தால் உடனடியாக இந்திய  அரசாங்கமும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டியது போலத்தான் இருக்கிறது. வடக்கு மாகாணத்தில் இராணுவமயமாக்கப்பட்டுள்ள நிலைமையைப் போக்க உடனடியாக மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

உயர் பாதுகாப்பு பகுதி என்று இராணுவம் அறிவித்துள்ள பகுதிகளில் தமிழர்களின் கட்டிடங்கள், வீடுகள், இறைவழிபாட்டு தலங்கள்,  பள்ளிக்கூடங்கள் அனைத்தும் இடித்து தரைமட்டமாக்கப்படுகின்றன.  இந்தியாவுக்கு அகதிகளாக சென்றுவிட்ட தமிழர்களின் வீடுகள்,  நிலங்கள் குடியமர்த்தப்படும் சிங்களவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

 

இந்த நிலையைத் தவிர்க்க இந்தியாவில் வசிக்கும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான இலங்கை அகதிகளை உடனடியாக இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும். அவர்களுக்கு சொந்தமான நிலங்கள் ,  வீடுகளை அவர்களுக்கு திருப்பிக் கொடுக்க  இலங்கை அரசாங்கத்தை வற்புறுத்த வேண்டும் என்று கூறினார். நிச்சயமாக இது மத்திய அரசாங்கம் உடனடியாக நிறைவேற்ற வேண்டிய கோரிக்கையாகும்.

 

வடக்கு மாகாணத்தில் இப்போது தமிழர்கள் ஆட்சி நடக்கிறது. தமிழர்களின் ஆட்சியை வலுப்படுத்தும் வகையில் விக்னேஸ்வரன் கோருவதுபோல தமிழ்நாட்டில் 2 சிறப்பு முகாம்கள் உட்பட 112 அகதிகள் முகாம்களில் உள்ள 67 ஆயிரம் இலங்கை அகதிகள் உட்பட இந்தியா முழுவதும் உள்ள இலங்கைத் தமிழர்களை அவர்கள் சொந்தபூமிக்கு  திரும்ப அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்யலாம். அங்கே அவர்களுடைய சொத்துகள் மீண்டும் அவர்களுக்கு திரும்பக் கிடைப்பதற்கும் தேவையில்லாத இராணுவம் திரும்ப அனுப்பப்படுவதற்கும் இலங்கை அரசாங்கத்திடம் மத்திய அரசாங்கம் உத்தரவாதம் பெறவேண்டும்

 

 

http://www.thinakkural.lk/article.php?article/rrgz7lbkio44161da546f2529336boigi22c1ee710cf7e2f7a3ff0crnsfq#sthash.wUkEYWIs.dpuf

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.