Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும்: சண்.குகவரதன்

Featured Replies

Kugavarathan.jpg
 
மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய மீனவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி, விடுதலை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது போன்று நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் உபபொதுச் செயலாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான சண்.குகவரதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்வதற்கு அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது என்று கூறிய அவர், தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகின்ற நிலைமைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
 
இது தொடர்பாக சனிக்கிழமை அன்று “கைதிகளும் மனிதர்களே” என்ற தலைப்பில் மனித உரிமை டிப்ளோமா மாணவர்களின் ஓராண்டு நிறைவு நிகழ்வு பம்பலப்பிட்டியில் நடைபெற்றபோது உரையாற்றிய சண்.குகவரதன், இவ்வாறு தெரிவித்தார்.
 
யுத்தம் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் சென்றுவிட்ட பின்னரும் தமிழ் அரசியல் கைதிகள், தென் பகுதி சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கைதிகள் பலருக்கு வழக்குகள் கூட இதுவரை பதிவுசெய்யப்படவில்லை. ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களினால் அவர்கள் சிறைத்தண்டனை அனுபவிக்கின்றனர். எவ்வாறாயினும் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும். 
 
மேலும், வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ள கைதிகளின் வழக்குகளை துரிதமாக விசாரணை செய்து அவர்களை விடுதலை செய்ய வேண்டும். அல்லது பிணையிலாவது விடுதலை செய்ய வேண்டும். தமது விடுதலையை வலியுறுத்தி கைதிகள் பலர் உண்ணாவிரத போராட்டங்களை நடத்தியிருந்தனர்.
 
ஆனாலும் அவர்களின் போராட்டங்கள் கவனத்தில் எடுக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டிய சண்.குகவரதன், விடுதலை செய்வதற்குரிய ஏற்பாடுகளை துரிதமாக மேற்கொள்ளுமாறும் எடுத்துக் கூறினார். இந்திய அரசாங்கம் இவ் மீனவர்களின் விடுதலைக்கான அழுத்தத்தை இலங்கை அரசாங்கத்திற்கு தொடர்ச்சியாக கொடுத்தது போன்று தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்திலும் அதுபோன்ற தொடர்ச்சியான அழுத்தத்தை கொடுக்கவேண்டும் என்றும் கைதிகளின் விடுதலையானது ஓர் அடிப்படை மனித உரிமை செயற்பாடு என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
 
  • தொடங்கியவர்
இந்தியர்கள் மீதான ஜனாதிபதியின் காருண்யம் தமிழ் அரசியல் கைதிகள் பக்கமும் திரும்பட்டும்! 
 
Bhaskara%20Sinnathamby%2074543232.jpg
 
இந்திய மீனவர்கள் மீதான ஜனாதிபதியின் காருண்ய கவனம் நாட்டின் தமிழ் அரசியல் கைதிகள் மீதும் திரும்ப வேண்டும். - இவ்வாறு தெரிவித்தார் ஜனநாயக மக்கள் முன்னணி ஊடகச் செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சி. பாஸ்கரா. இந்திய மீனவர்களுக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்படுவதை வரவேற்று அவர் விடுத்த செய்திக்குறிப்பிலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். இது குறித்து அந்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இலங்கை நீதித்துறையால் வழங்கப்பட்ட மரணதண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய, தமிழ்நாட்டில் பெரும் போராட்டங்கள் நடக்கின்றன. அத்துடன் பல கட்சிகளும் தமது அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றன. இந்நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இந்திய மீனவர்களின் மரண தண்டணையை நீக்குவதற்கு ஆரோசித்துவருவது வரவேற்கத்தக்கது – பாராட்டத்தக்கது. அத்துடன் இந்த மன்னிப்பை கால தாமதமின்றி உடன் நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த மன்னிப்பு இலங்கை - இந்திய உறவின் இடைவெளியை குறைத்து மேம்பட உதவும். இந்திய மீனவர்களின் விடயத்தில் ஜனாதிபதி கவனம் செலுத்துவது போன்று இலங்கையில் யுத்த காலத்திலும் அதற்குப் பின்னரான காலத்திலும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் அவர்களின் ஆதவாளர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். – என்றுள்ளது. -
 
 
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.