Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலையகத்திலும் இன சுத்திகரிப்பு! - திட்டமிட்ட சதி

Featured Replies

sritharan%20jaffna%20tna%20mp.jpg

 

வடக்கில் இடம்பெயர்ந்து செட்டிக்குளம் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்களைப் போன்றே மீரியபெத்தை மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்கள் கஷ்டப்படுகின்றனர் என நாடாளுமன்றில் கவலை வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், மலையக மக்கள் மத்தியிலும் திட்டமிடப்பட்ட இன சுத்திகரிப்பு மேற்கொள்ளப்படுகின்றது என்றும் குற்றஞ்சாட்டினார்.
 
நாடாளுமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசேட தெரிவுக்குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்ட அமைச்சுகள் மீதான வரவு - செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றியபோதே மேற்கண்டவாறு குற்றஞ்சாட்டிய அவர், மேலும் தெரிவித்தவை வருமாறு:-
 
"கொஸ்லந்தை, மீரியபெத்த பகுதியில் அண்மையில் இடம்பெற்ற மண்சரிவு அனர்த்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு எமது இதயபூர்வமான அஞ்சலியையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு எமது அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓரங்கட்டப்பட்ட - வறுமைப்பட்ட மக்களே அனர்த்தத்தால் பாதிக்கப்படுவது பொதுவாகக் காணப்படுகின்றது. இடதுசாரி சங்கங்களை ஆதரிப்போர், தமிழ் மக்கள், இந்திய வம்சாவளியினர் என்ற 3 வழிகளில் மலையகத் தமிழ் மக்கள் ஒடுக்கப்படுகின்றனர்.
 
இப்படியானதொரு நிலைமை மலையக மக்களைத் தவிர உலகில் வேறு எங்கும் கிடையா. இதுமட்டுமல்லாது, இந்த மண்சரிவு அனர்த்தத்தில் எத்தனைபேர் பலியானார்கள், எத்தனைபேர் பாதிக்கப்பட்டனர், பெற்றோரை இழந்த பிள்ளைகளின் எண்ணிக்கை என எந்த விடயம் பற்றியும் இதுவரை சரியான விவரங்கள் கண்டறியப்படவில்லை. மீரியபெத்தை மண்சரிவில் 200இற்கும் அதிகமானோர் பலியாகினர் எனத் தெரிவிக்கப்பட்டதுடன், நூற்றுக்கணக்கானோர் அகதி வாழ்க்கை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
 
இந்த மக்களை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவந்த பிரிட்டிஷ் அரசும் அவர்களை அனுப்ப அனுமதித்த இந்திய அரசும் அதேபோல் இம்மக்களை இன்னும் கூலிகளாக வைத்திருக்கும் இலங்கை அரசும்தான் மலையக மக்களின் இன்றைய இந்த நிலைமைக்கு காரணமாகும். உண்மையில் மலையகத் தமிழ் மக்கள் மத்தியிலும் இனச்சுத்திகரிப்புப் போன்றே நடக்கின்றது. பூனாகலை, கணேச வித்தியாலயத்திலுள்ள முகாமுக்கு நாம் சென்றிருந்தோம்.
 
அங்கு செஞ்சிலுவைச் சங்கத்தின் அனைத்து விவரங்களும் சிங்கள மொழியிலேயே வழங்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது, மலையகத்தில் கட்டாய கருத்தடைகள் செய்யப்படுகின்றன. அந்த மக்களுக்கு நவீன வீடுகள் கிடையாது. போதிய கல்வி வசதி கிடையாது. அந்த வகையில் இன சுத்திகரிப்பு நடவடிக்கையொன்றே அங்கு முன்னெடுக்கப்படுகிறது. மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்கள் 3 தினங்களாக குளிக்காமல் வெளியே சென்றால் அவர்கள் தங்கியிருக்கும் முகாமுக்குள் திரும்பிவர முடியாத நிலையில் இருக்கின்றனர்.
 
வடக்கில் இடம்பெயர்ந்த 3 இலட்சம் மக்களும் இவ்வாறுதான் செட்டிக்குளம் முகாமில் வெளியில் சென்றால் திரும்பிவர முடியாத நிலையில் இருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிகளுக்குக் கூட மக்களைப் பார்வையிட அனுமதிக்கப்படவில்லை. தமிழ் மக்கள் என்ற வகையில் இவர்களுக்கு கெளரவமான பாதுகாப்பு அவசியம். அந்த மக்களுக்கு கெளரவமான வாழ்க்கைச்சூழல் ஏற்படுத்தப்படவேண்டும். இதில் நான் மலையகத் தலைமைகளைக் குறைகூறவில்லை. அவர்கள் தம்மால் முடிந்த முயற்சிகளைச் செய்கின்றனர்" - என்றார். -
 
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.