Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூன்று இலட்சம் தமிழ் வாக்காளர்களை வாக்களிக்க விடாது தடுக்க நடவடிக்கை - ரோகணகமகே

Featured Replies

rogana%20gamage_CI.jpg

 ஜனாதிபதி தேர்தலில் 78 முதல் 82 வீதமான தமிழர்கள் மைத்திரிபால சறிசேனவுக்கே வாகக்ளிப்பார்கள் என ஐக்கிய  தேசியக்கட்சியின் வன்னி அமைப்பாளர் ரோகணகமகே தெரிவித்தார். வவுனியா கோவில்குளத்தில் உள்ள விருந்தினர் விடுதியொன்றில் நேற்று (3.12) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பின் போதெ அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நான் கற்ற பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்களும் மாணவர்களுமாக இணைந்து அண்மையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான  ஆய்வொன்றினை மேற்கொண்டிருந்தனர். இதன்போது 90 முதல் 92 வீதமான வடக்கு கிழக்கை சேர்ந்த தமிழர்கள் இம் முறை  வாக்களிப்பார்கள் அதில் 78 முதல் 82 வீதமானவாகள் மைத்திரிக்கு வாக்களிப்பார்கள் என தெரியவந்துள்ளது.

இதன் காரணமாகவும் தற்போதைய அரசாங்கத்தின் திருகுதாளங்களாலும் நடைபெறும் தேர்தல் சுதந்திரமானதாக இடம்பெறுமா  என்பது கேள்வியாகவே உள்ளது. அதன் காரணமாகவே சர்வதேச கண்காணிப்பாளர்கள் அவசியமாக உள்ளனர்.

இந்த நாட்டில் பொலிஸாலோ, அரசாங்கத்தாலோ வேறு எவராலமோ எமக்கு பாதுகாப்பு இல்லை. எமக்கு ஊடகமொன்றே  பாதகாப்பானது. இதனை சொல்ல நான் தயார். இதனால் வரும் பிரச்சனைகளுக்கு முனம்கொடுப்பதற்கும் தயார். சிறையில்  அடைத்தால் அடைக்கட்டும். அதிலும் மனிதர்கள் தானே இருக்க வேண்டும். சிறைகளை கட்டி விட்டு நாய்கள் இருக்க முடியாது.

யுத்தம் முடிந்த பின்னர் நாடு பல அபிவிருத்திகளை கண்டிருக்க வேண்டும். ஆனால் இன்று நாடு மிக மோசமாக சென்று  விட்டது. மக்களின் பொருளாதாரம், பாதுகாப்பு, அ;பிவிருத்தி, நீதித்துறை, மக்கள் கலாசாரம், ஆகியவற்றுக்கு  பாதுகாப்பு வேண்டும். ஆனால் இன்று அது இல்லை.

தற்போது 3000 முன்பள்ளி ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. பின்னர் அவர்களை சந்தித்து நீங்கள் இத் தேர்தலில் வாக்களிக்காது விட்டால் சிறப்பானது எனவும் அ;வ்வாறு செய்தால் சம்பளம் அதிகரிக்கும் எனவும் சொல்லப்பட்டுள்ளது. 

அதேபோல் சமுர்த்தி, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மூலம் பொருட்கள்  வழங்குவதற்கு பெயர்கள் கோரப்பட்டு இந்த தேர்தலில் மக்கள் வாக்களிக்காது விட்டால் அவர்களுக்கு பொருட்கள் வழங்குவதாக பிரசாரம் செய்யப்படுகின்றது.

அத்துடன் கிளிநொச்சியில் உள்ள பண்ணையில் 6000 குடும்பங்கள் உள்ளன. அவர்களை அரசாங்க கட்சிகளை தவிர வேறு  எவரும் சென்று சந்தித்து கலந்துரையாட முடியாத வகையில் பாதுகாப்பு போடப்படடுள்ளது. எனவே இவர்களையும் வாக்களிக்க விடாது  செய்வார்கள். யாழ்ப்பாணத்திலும் மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்ல முடியாதவாறு தடுக்கப்படுவார்கள். 

அண்மையில் காணி வழங்குவதாக மக்களுக்கு ஜனாதிபதி கடிதமொன்றினையே வழங்கினார். இந்த தேர்தலில் அவர்கள்  வாக்களிக்காது விட்டால் அவர்களுக்கு உறுதி தரப்படும் என பிரசாரம் செய்யப்படுகின்றது.

இதன் மூலமாக இந்த அரசாங்கம் 3 இலட்சம் வாக்குகளை தமிழ் மக்கள் மத்தியில் இருந்து இல்லாமல் செய்து தாம் வெல்வதற்கான   நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் இத்தடைகளை தாண்டி மக்கள் மைத்திரிபால சிறிசேனவக்கு வாக்களிப்பார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

ஐக்கிய தேசியக்கட்சியானது இலக்கை மக்களுக்கான இன. மத. மொழிகளை கடந்த கட்சி. இன்று மகிந்த ராஜபக்சவுக்கு ஒரு குடும்பமே  உள்ளது. அது ராஜபக்ச குடும்பம் ஆனால் மைத்தரிக்கு பல குடும்பங்கள் பலமாக உள்ளது. 

இன்று கெல உறுமய அரசை விட்டு வெளியில் வந்து விட்டதால் இனி அவர்களும் புலி என சொல்வாhகள். தற்பாதைய அரசாங்கம்  எதனையும் சொல்லட்டும் ஆனால் மைத்திரியே வெற்றி பொறுவார். ஏனெனில் அவர் ஊழல் அற்றவர். அவரிடம் கெட்ட எண்ணம் இல்லை. அவரது குடும்பத்திறகும் இல்லை. எனவே மகிந்தவை 

வீட்டுக்கு அனுப்பிய பின்னர் இந்த நாட்டில் நல்லாட்சி மலரும். சிறந்த அரசை அமைக்க முடியும். நிறைவேற்று  அதிகாரத்தை அகற்றிய பின்னர் இந்த நாட்டில் தேசிய அரசு உருவாகும் அதனூடாக அனைத்து இனத்தவர்களும் அரவணைத்து  செல்லும் அரசை காண்பீர்கள் என தெரிவித்தார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/114145/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.