Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பதுளை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான உதவி வழங்கல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பதுளை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான உதவி வழங்கல்

 

மீரியப்பத்தையில் கைவிடப்பட்ட தேயிலைத்தொழிற்சாலையில் தங்கியிருக்கும் 89குடும்பங்களின் 100பிள்ளைகளுக்கான பாதணிகள் காலுறைகள் நேசக்கரம் அமைப்பினால் 05.12.2014 அன்று வழங்கப்பட்டது.

பதுளை பண்டாரவளை பூனாகலை மககந்தை மீரியப்பத்தை செயலர் பிரிவில் தற்காலிகமாக தங்கியிருக்கும் குடும்பங்களின் வீடுகள் இயற்கை அனர்த்தத்தினால் அழிந்து போயுள்ளமையால் தொடர்ந்தும் பல சிரமங்களை எதிர்கொள்வதோடு சொந்த குடியிருப்புகளுக்கு செல்ல முடியாதுள்ளார்கள்.

மீளவும் குடியேறுவதற்கான வீடுகள் இன்னும் அமைக்கப்படாத நிலமையில் அவலத்தை சுமந்து வாழும் இம்மக்களின் துயர் போக்க வேண்டிய அரசியல் தலைமைகள் இன்னும் மௌனிகளாகவே இருக்கிறார்கள்.

ஏற்கனவே கல்வித்தரத்தில் மிகவும் பின்தங்கிய நிலமையில் இருக்கும் இம்மக்களின் பிள்ளைகளின் கல்வி நடந்து முடிந்த அனர்த்தத்தினால் மேலும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

https://www.youtube.com/watch?v=nMd3d_LZ9L0&feature=youtu.be

தங்கள் பிள்ளைகளின் கல்வி , வாழ்வதற்கான வீடுகள் மற்றும் அடிப்படை வசதிகளைச் செய்து தருமாறு அரசியல் தமைகைளிடம் பலமுறை விண்ணப்பித்திருந்தும் இன்னும் அவர்களது கோரிக்கைகளானது கிடப்பில் போடப்பட்டுள்ளதை விசனத்துடன் தெரிவித்தார்கள்.

3நாள் பயணத்தை மேற்கொண்ட எமது குழுவினர் அம்மக்களுடன் தங்கி அவர்களது நிலமைகளை கேட்டறிந்ததோடு மலையக குழந்தைகளின் கல்வி , சமூக மேம்பாடு ஆற்றுப்படுத்தல்களை செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

பதுளை அனர்த்தத்திற்கான நிவாரண உதவியை வழங்க எம்மால் உதவி கோரியதும் முன்வந்து உதவிய உறவுகளின் உதவியின் ஒரு பகுதியிலிருந்து மேற்படி உதவியானது வழங்கப்பட்டுள்ளது. மீதி உதவியானது 2015இல் ஆரம்பிக்கவுள்ள உளவள கல்வி மேம்பாட்டுக்காக பயன்படுத்தப்படுமென்தனை அறியத்தருகிறோம்.

மொத்தம் 1740.86€(280278.46ரூபா) உதவியானது யாழ் இணையம் கருத்துக்கள நண்பர்களும் மற்றும் யாழ்கள முகநூல் வாசகர்களும் வழங்கியிருந்தார்கள். ஒன்றரை லட்சரூபா பெறுமதியான பொருட்கள் 05.12.2014அன்று வழங்கப்பட்டது. அடுத்த வருடம் எம்மால் ஆரம்பிக்கப்படும் மலையக குழந்தைகளுக்கான கல்வி செயற்பாட்டில் மீதி உதவி பயன்படுத்தப்படும். செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட தொடங்கும் போது இதர விபரங்கள் அறியத்தரப்படும்.உதவிய அனைவருக்கும் எமது நன்றிகள்.

 

DSCN0562-150x150.jpg DSCN0575-150x150.jpg DSCN0585-150x150.jpg

DSCN0586-150x150.jpg DSCN0590-150x150.jpg DSCN0591-150x150.jpg

DSCN0598-150x150.jpg DSCN0604-150x150.jpg DSCN0678-150x150.jpg

DSCN0687-150x150.jpg DSCN0691-150x150.jpg DSCN0704-150x150.jpg

DSCN0737-150x150.jpg

 

 

 

 

 

 

 

http://nesakkaram.org/ta/nesakkaram.3706.html

ஒக்டோபர் 29ம் திகதி நடைபெற்ற கொஸ்லந்தை மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான நிதியை திருகோணமலை மாவட்ட இலங்கை தமிழரசுக் கட்சியினர் வழங்கினர்.

மீரியபெத்த தமிழ் வித்தியாலயம் ஸ்ரீ கணேசா தமிழ் வித்தியாலயம் ஆகிய பாடசலைகளைச் சேர்ந்த 61 மாணவர்களுக்கு 4 இலட்சத்துக்கு மேற்பட்ட நிதி அவர்களது எதிர்கால கல்வித் தேவைகளுக்காக பகிர்ந்து வழங்கப்பட்டது.

கடந்த 8ம் திகதி கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும் திருகோணமலை மாவட்ட தமிழரசுக்கட்சியின் தலைவருமாகிய திரு.சி.தண்டாயுதபாணி, மாகாண சபை உறுப்பினர்கள் திரு.மு.நாகேஸ்வரன், திரு.ஜெ.ஜெனார்த்தனன் ஆகியோரும், தமிழரசுக்கட்சியின் மூதூர் தொகுதித் தலைவர் திரு.க.திருச்செல்வம், சேருவில் தொகுதித் தலைவர் திரு.க.சுந்தரலிங்கம், கட்சியின் செயற்பாட்டாளர் திரு.கைலைவாசன் ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ள மாக்கந்த தேயிலைத் தொழிற்சாலை, பூணாகலை தமிழ் மகாவித்தியாலயம் ஆகியவற்றுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து உரையாடினர். அவரகளுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் பற்றியும் மக்களிடமிருந்து அறிந்து கொண்டனர். மண்சரிவு ஏற்பட்ட மீரியபெத்த தோட்டப்பகுதிகளையும் சென்று பார்வையிட்டனர்.

பின்னர் பூணாகலை தமிழ் மகாவித்தியாலயத்தில் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பங்குபற்றி திருகோணமலை மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட பணத்தை பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்விக்காக வழங்குவதாகத் தெரிவித்தனர். பெற்றோரை இழந்த 6 மாணவர்களுக்கு தலா 30000ரூபாவும் ஏனைய 40 மாணவர்களுக்கு 5000ரூபாவும் மேலும் 15 மாணவரக்ளுக்கு 2000ரூபாவும் பங்கிடப்பட்டு இவர்களுக்கான உதவிப்பணம் கொஸ்லந்தை மக்கள் வங்கியில் இம்மாணவர்களுக்கு தனித்தனி வங்கிச் சேமிப்பு கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டு வைப்பில் இடப்பட்டு சேமிப்புப் புத்தகங்கள் மீரியபெத்த தமிழ் மகாவித்தியாலய அதிபரிடம் வழங்கப்பட்டன.இந்த உதவிக்காக மாணவர்களும் பெற்றோர்களும் தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டனர்.

இந்த சந்திப்புக்களில் ஹல்துமுல்ல பிரதேச சபை உறுப்பினர் திரு.சிறிகாந்த, மீரியபெத்த தமிழ் மகாவித்தியாலய அதிபர் திரு.கருணாநிதி, ஆசிரியர் திரு.கமல்ராஜ், பூணாகலை தமிழ் மகாவித்தியாலய அதிபர் திரு.மோகன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
10417705_1481776122042999_64006675961679

10394779_1481775928709685_21509478599073

1511899_1481776018709676_588615954356104

1507757_1481775795376365_200850406428779

 

- See more at: http://www.canadamirror

 

Edited by Gari

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிவராரணத்திற்கு கிடைக்கப்பெற்ற நிதியுதவியின் மீதியை கிராமிய முன்னேற்ற தொழில்கல்விக்கு பயன்படுத்தவுள்ளோம். 2வருட திட்டுமாக அமைவதால் மேலதிக உதவியை திரட்டும் முயற்சியை மேற்கொண்டு வருகிறோம். திட்டம் நிறைவடைந்ததும் அறியத்தருகிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.