Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் பேராசிரியர் ராமு மணிவண்ணன் எழுதிய “SriLanka Hiding The Elephant” நூல் அறிமுகவிழா

Featured Replies

கனடாவில் பேராசிரியர் ராமு மணிவண்ணன் எழுதிய “SriLanka Hiding The Elephant” நூல் அறிமுகவிழா 

 

சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் பொது நிர்வாகத் துறையின் பேராசிரியரும் தலைவருமான ராமு மணிவண்ணன், ஈழத் தமிழர் படுகொலைக்கான ஆதாரங்களை ‘SRI LANKA: HIDING THE ELEPHANT’ என்ற நூலில் விரிவாக எழுதியுள்ளார்.

குறித்த நூலின் அறிமுகவிழா 13.12.2014 சனிக்கிழமை மாலை 3.30 மணியளவில் கனடாவின் ரொறன்ரோவில் 7600 Kennedy Road, Markham, ON L3R 9S5 என்கிற முகவரியில் உள்ள Milliken Mills Community Centre இல் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கு சென்னையில் இருந்து வருகை தந்த நூலாசிரியர் பேராசிரியர் ராமு மணிவண்ணன் நேரடியாகப் பங்கேற்கிறார்.

ஈழத்தமிழர் ஆதரவாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், கல்வியலாளர்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் அனைவரையும் பங்கேற்குமாறு அழைக்கின்றார்கள் ஏற்பாட்டாளர்கள்.

இந்நூல் வெளியீட்டு விழாவினை கனடியத் தமிழ்ப் படைப்பாளிகள் கழகமும், நாடு கடந்த தமிழீழ அரசும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த மூன்று வருடங்களாக இலங்கை தொடர்பான ஐ.நா. அமர்வுக்குச் சென்று வரும் ராமு மணிவண்ணன் இலங்கைத் தமிழர் பிரச்சினையை உன்னிப்பாக அவதானித்து வருகின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நூல் வெளியீட்டு விழா தொடர்பிலான மேலதிக விபரங்களுக்கு, 416 648-3373 & 416 281-1165

 

ramu%2520manivannan.jpg

 

ramu%2520manivannan1.jpg

 

20140325_125142.jpg

 

டொரொண்டோ உறவுகள் முடிந்தவரை இந்த நிகழ்வில் பங்கு பற்ற முயலுங்கள்.

 

நல்ல மரம் ஆளில்லா நடுக்காட்டில் பழுத்தாலும், நிறையவுண்டு ஜீவராஜிகள் இன்புறும். நச்சு மரம் தெருவோரம் நின்றாலும் நிழலுக்குமாகாது.  இறைவனின் கொடையாக, சரஸ்வதியின் கடாச்சமாக வருணிக்கப்படும் அறிவு சேரும் இடத்தில் சேர்ந்திருந்தால் கானல் நிலத்து ஆலமரநிழல் போலவிருக்கும்., தீயினால் சுட்ட புண்ணையும் ஆற்றும்.   ஈவான் கை தேட்டமாக விளங்கும். 

 

அந்த வகையில் சேர வேண்டிய இடத்தில் சேர்ந்த அறிவுதான் பேராசியர் மணிவண்ணன். இந்த செந்தமிழாளனுக்கு தமிழிலும் ஆங்கிலத்திலும், வேறு இந்திய மொழிகளிலும் ஆதரவாளர்களின் மனநிலைக்கு ஏற்ப பல அறிவு வளர்ச்சிப் புத்தகங்கள் எழுதி பணம் ஈட்ட முடியும். தன்னை அரசியல் மேதையாக காட்டி நல்ல இடத்தில் பெரிய கதிரையில் உட்கார்ந்திருந்திருக்க முடியும். ஆனால் தமிழீழத்துக்கு சில ஆராச்சிகளுக்கு வந்து, தலைவரின் தமிழ் ஆர்வத்தால் ஈழத்தமிழரின் நலங்களை தெரிந்து அவற்றை மேம்படுத்த இரவு பகலாக உழைக்கும் ஒருவராக மாறியிருக்கிறார் பேராசிரியர் மணிவண்ணன். பேராசிரியரின் தமிழீழ விடுதலைப்போராட்டத்துக்கான பங்களிப்பு, போராட்டத்தில் முன்னால் நிற்கும் மிக சில முன்னோடிகளுடன் கூட ஒப்பிடுவதற்கும் பெரியது எனபது தமிழர் பலரும் அறிந்தது.

 

இந்த நூல் இன்றைய காலகட்டத்தில், ஈழம், இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், புலம் பெயர் நாடுகள் என்று பேதமில்லாமல் ஒவ்வொரு தமிழன் கையிலும் இருக்க வேண்டிய  ஆவணம். ஈழத்தமிழர் பயங்கரவாதிகளாக வர்ணிக்கப்படுகின்ற போது   அதை மறுத்து,  ஆயுதம் தாங்கியோ, தாங்காமலோ  தமிழர் தங்கள் எதிரிகளை எதிர்த்து போராடுவது, சர்வதேச நியமங்களுக்கு அமைவதும், காலத்தின் தேவை என்பதையும் எடுத்து சொல்ல ஒர் உசாத்துணை கைவசம் வேண்டும் என்று நீங்கள் ஏங்கிய போதெல்லாம் அவற்றை கேட்டு இரங்கியவராக பேராசிரியர் மணிவண்ணன் இந்த ஆவணத்தை தொகுத்திருக்கிறார். அழுத பிள்ளை பால் குடிக்கும் என்பது உண்மையானல் நாம் இந்த புத்தகத்தை வாங்கிக்கொள்வதால் மட்டும்தான் எம்மை நாம் தயார்ப் படுத்த முடியும். 

 

இது நமக்கு ஒரு உசாத்துணை. அயல் நாட்டு பொதுமக்களுக்கு, தமிழருக்கு நடந்தவைகளை சொல்லும் புத்தம் புதிய செய்தி. கல்லூரி மாணவர்களுக்கு, ஆசியர்களுக்கு ஒரு அறிவுத்தடாகம்.  வாசிக சாலைகளுக்கு தவிர்க்க முடியாத கையேடு.  எனவே நீங்கள்  மட்டும் வாங்கி வாசிப்பதோடு நின்றுவிடாமல், வாங்கி வாசிக சாலைகள், அரசியல்வாதிகள் என்று பரிசளிப்பு செய்யலாம். இதனால்தான் தமிழரின் தவிப்பை, பேராசிரியரின் உறக்கமில்லாத இரவு பகல் உழைப்பை, உரிய இடத்தில் இட்டுவைக்க முடியும்.  

 

யாரையும் தனிப்பட பெயர் சொல்ல விரும்பவில்லை. பண்பாக இருக்காது. ஆனாலும் காலத்தின் தேவை கருதி டொரெண்டோ உறவுகளை தங்கள் நண்பர்களுக்கும் தெரிவித்து தங்கள் பங்களிப்பையும் செய்யும் வண்ணம் கேட்டுக்கொள்கிறேன். 

 

இதற்கு சென்று வர முடிந்தவர்கள் வந்து உங்கள் கைகணக்கையும் எழுதிவிடுங்கள். 

  • தொடங்கியவர்

கனடாவில் சிறப்பாக இடம்பெற்ற சென்னை பல்கலை பேராசிரியர் ராமு மணிவண்ணனின் ‘SRI LANKA: HIDING THE ELEPHANT’ நூல் அறிமுகவிழா (Photos)

 

 

சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் பொது நிர்வாகத் துறையின் பேராசிரியரும் தலைவருமான ராமு மணிவண்ணன் எழுதிய ‘SRI LANKA: HIDING THE ELEPHANT’ என்ற நூலின் அறிமுகவிழா கனடியத் தமிழ்ப் படைப்பாளிகள் கழகத்தின் தலைவர் நக்கீரன் தலைமையில் இடம்பெற்றது.

கடந்த 13.12.2014 சனிக்கிழமை மாலை 3.30 மணியளவில் கனடாவின் ரொறன்ரோவில் 7600 Kennedy Road, Markham, ON L3R 9S5 என்கிற முகவரியில் உள்ள Milliken Mills Community Centre இல் பெருந்திரளான வாசகப்பெருமக்களுக்கு நடுவே இடம்பெற்றது.

சென்னையில் இருந்து வருகை தந்த நூலாசிரியர் பேராசிரியர் ராமு மணிவண்ணன் இந்நிகழ்வில் பங்கேற்று வாசகர்களுக்கு புத்தகங்களை வழங்கி வைத்ததோடு சிறப்புரையும் ஆற்றி இருந்தார்.

ஈழத்தமிழர் ஆதரவாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், கல்வியலாளர்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் என்று ஏராளமானோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர். இதில் பலரும் நூலாசிரியர், புத்தகம் குறித்து உரையாற்றினார்கள்.

இந்நூல் வெளியீட்டு விழாவினை குறுகிய காலத்தில் கனடியத் தமிழ்ப் படைப்பாளிகள் கழகமும், நாடு கடந்த தமிழீழ அரசும் இணைந்து சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Ramu-Manivannan-Book-Release-1-610x406.j

 

 

Ramu-Manivannan-Book-Release-27-610x406.

இதழ் இதழாக ஆயிரம் பக்கங்கள் வரை பிரளும் தமிழரின் பாரதம். 

 

 

Ramu-Manivannan-Book-Release-36-610x406.

 

 

Ramu-Manivannan-Book-Release-44-610x406.

 

 

Ramu-Manivannan-Book-Release-0-610x406.j

 

Ramu-Manivannan-Book-Release-45-610x406.

 

 

Ramu-Manivannan-Book-Release-51-610x406.

 

 

Ramu-Manivannan-Book-Release-50-610x406.

 

நிதானமாக கேள்விகளை வாங்கி ஆக்க பூர்வமாக பதில் அளிக்கும், பேராசிரியர் ராமு மணிவண்ணன். 

 

 

http://www.tamilcnnlk.com/canada/news/140294.html

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு விடயம்

பங்கு பற்றி  சிறப்பித்த அனைவருக்கும்  நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி மல்லை !

பங்கு பற்றிய அணைவருக்கும் வாழ்த்துக்கள்...!

  • தொடங்கியவர்

வருகை தந்த உறவுகளுக்கு நன்றி. 

 

"ஒன்றுபட்டால் தமிழருக்குமுண்டு வாழ்வு" 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.