Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரிட்டிஷ் விமானப் போக்குவரத்து: இயல்பு நிலை திரும்புகிறது

Featured Replies

131208043422_cn_nats_swanwick_640x360_pa
ஸ்வான்சிக் தேசிய விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையம்-- தொழில் நுட்பப் பிரச்ச்னைகள்
 
 
கணினி பிரச்சனையினால் நேற்று பிரிட்டன் வான்பரப்பில் பாதிப்படைந்த விமானப் போக்குவரத்து இன்று சனிக்கிழமை ஓரளவு இயல்பு நிலைக்குத் திரும்பின.
ஆனால் பிரிட்டனின் முக்கிய சர்வதேச விமான நிலையமான ஹீத்ரோவில் 40 சதவீத விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
 
நேற்று வெள்ளிக்கிழமை தேசிய விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு மையத்தில் ஏற்பட்ட கணினிச் சிக்கல் ஒன்றால் இந்த பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து நாடெங்கிலும் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த நிலைமை ஏற்றுக்கொள்ளப்படமுடியாத ஒன்று என்று பிரிட்டிஷ் போக்குவரத்து அமைச்சர் பேட்ரிக் மக்லாவ்லின் கூறினார்.
 
நேற்று வெள்ளிக்கிழமை ஸ்வான்சிக்கில் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்தில் ஏற்பட்ட இந்தத் தொழில்நுட்பப் பிரச்சனை, நேற்றே சரி செய்யப்பட்டுவிட்டது என்றாலும், அதன் பின் விளைவுகள் இன்னும் நீடிப்பதாகவும், விமானப் பயணிகள் தங்கள் விமானங்கள் புறப்பாடு குறித்த தகவல்களை சரிபார்த்து அதன் பின்னரே பயண ஏற்பாடுகளைச் செய்யுமாறும் ஹீத்ரோ விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
 
பிரிட்டனில் காலை ஜிஎம்டி நேரப்படி 9.30 மணிக்கு முன்னர் வந்து இறங்கவோ அல்லது புறப்படவோ இருந்த 38 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன என்று அதிகாரிகள் கூறினர்.
 
இந்த விமானச் சேவைகளை மாற்றியமைக்கமுடியவில்லை ஏனெனில் விமான நிலையம் அதன் இயங்கும் திறனில் 98 சதவீதமளவுக்கு இயங்கிக்கொண்டிருந்தது என்று அவர்கள் கூறினர்.
 
லண்டனின் பிற இரு விமான நிலையங்களான கேட்விக் மற்றும் லண்டன் நகர விமான நிலையங்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன.
பிரிட்டனில் எடின்பரோ மற்றும் அபெர்டீன் விமான நிலையங்களும் தென் இங்கிலாந்தில் உள்ள பிற விமான நிலையங்களும் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டன.
 
ஹாம்ப்ஷயர் பகுதியில் உள்ள இந்த விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் , ஒரு பகுதி தனியார் மயமாக்கப்பட்டு 2002ல் தொடங்கியதிலிருந்து அங்கு பல தொழில் நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டு அங்கு தொலைபேசிக் கோளாறு காரணமாக இதே போன்ற பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.