Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா அதிபர் தேர்தல் 2015 – தமிழ் சிவில் சமூக அமையம் அறிக்கை

Featured Replies

தமிழ் சிவில் சமூகஅமையம் - சனாதிபதித் தேர்தல் 2015

Thinking_CI.jpg

 

எதிர்வரும் ஜனவரி 8, 2015 அன்றுநடை பெறவிருக்கும் சனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வகிபாகம் தொடர்பில் எமதுநிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தும் பொருட்டு  இவ்வறிக்கை வெளியிடப்படுகிறது.

இத்தேர்தலில் பிரதான வேட்பாளர்கள் இருவர் களத்தில் உள்ளனர். ஒருவர் தற்போது பதவியிலிருக்கும் திரு. மகிந்த ராஜபக்ச. மற்றையவர் அண்மைக் காலம் வரை தற்போதைய சனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் அமைச்சரவையில் ஏறத்தாள 10 வருடங்கள் முன்ணணி அமைச்சர்களில் ஒருவராகவிருந்து இப்போது எதிரணியின் வேட்பாளராகத் தேர்தலில் போட்டியிடும்; திரு. மைத்ரிபாலசிறிசேன.

தற்போதைய சனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் மூலம் சொல்லொணாத் துன்பங்கள் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது என்பது விவாதத்திற்கு அப்பாற்பட்டது. இவரது ஆட்சியின் கீழேயே தமிழ் மக்களுக்கெதிரான நீண்டகால இனப்படுn காலைச் செயன் முறையின் மிகமோசமான, மிகவும் துன்பகரமான அத்தியாயம் அரங்கேற்றப்பட்டது. யுத்தம் முடிவடைந்த பின்னரும் பல்வேறு வழிகளில் தமிழர்களது கூட்டு இருப்பை இல்லாதொழிக்கும் இனப் படுகொலைச் செயற்திட்டங்கள் பலவற்றை இந்த அரசாங்கம் தொடர்ந்து மூர்க்கமாக முன்னெடுத்து வருகிறது. நுpல அபகரிப்பு, சிங்கள பௌத்தமயமாக்கல், இராணுவ மயமாக்கல், முன்னாள் போராளிகளுக் கெதிரான வன்முறை, சட்டத்திற்கு முரணான கைதுகள், என்றுபல்வேறு வழிகளில் மக்கள் துன்புறுத்தப் படுகின்றனர்;. எனவே பதவியில் இருக்கும் சனாதிபதிக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பது என்பது ஒருபோதும் ஒருதெரிவாக இருக்க முடியாது.

அதேவேளை ஆட்சிமாற்றம் ஏற்படுவதன் மூலமாக தமிழர்களுக்கு நன்மை ஏற்படும் என்ற எதிர்பார்ப்பானது வரலாற்று ரீதியாகப் பொய்யானது என எண்பிக்கப்பட்டுள்ளது. தெற்கின் இரு பிரதான அரசியல் கட்சிகளும் சிங்கள பௌத்த பேரினவாத தமிழர் விரோத அரசியலைத் தமது கருத்தியல்; மற்றும் தொழிற்பாட்டு அரசியலாக வரித்துக் கொண்டவர்கள். அவர்களிடம் தமிழர்களின் பிரச்சனை தொடர்பில் ஒரு குறைந்த பட்ச நியாயமான நிலைப்பாடு தானும் இல்லை. ஊதாரணமாக சிங்கள தேசத்தின் இரு பிரதான கட்சியினருமே ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கு அப்பாலான தீர்வொன்றைப் பற்றி இன்றுவரை கலந்துரையாடக் கூட தயாரில்லாதவர்கள் ,சர்வதேச விசாரணைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள். சிங்கள பௌத்தகட்சிகளின் இந்த வேறுபாடில்லாத் தன்மையை நாம் காலம் காலமாக தெற்குச் சிங்கள பௌத்த அரசியலின் பொதுவான குணாம்சமாக அனுபவவாயிலாக அறிந்ததே. பொது எதிரணியின் வேட்பாளரும் கூட அரசியற்தீர்வு, தமிழர்களுக்கெதிராக நடாத்தப்பட்ட குற்றங்களுக்கான பொறுப்புக் கூறல் என்ற இரண்டு விடயங்கள் தொடர்பிலும் தமக்கும் பதவியிலிருக்கும் சனாதிபதிக்குமிடையே எந்தகருத்து வேறுப்பாடும் இல்லை என்பதைப் பல்வேறு தடவைகள் பல்வேறுவழிகளில் உறுதிப்படுத்தி வருகின்றார்.

எதிரணியின் பொதுவேட்பாளர் நிறைவேற்று சனாதிபதி முறையை ஒழிப்பது என்ற பிரதான நிகழ்ச்சிநிரலின் அடிப்படையிலேயே போட்டியிடுவதாகக் கூறுகிறார் இந்;தக் கோசம் அல்லது நிகழ்ச்சி நிரல்தான் தற்போது அனைவரதும் கவனத்திற்குமுரியதாக முன்னிலையில் உள்ளது.

நிறைவேற்று அதிகாரசனாதிபதி தலைமையிலான அரசாங்க முறைமை அதிகாரங்களை ஒருநபரிடம் அளவுக்கு மிஞ்சி குவிக்கும் தன்மையானது, சனநாயக விரோதமானது என்பது உண்மையே. குறிப்பாக இலங்கையின் 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பு முன்னிலைப்படுத்தும் நிறைவேற்று அதிகார சனாதிபதி முறைமை உலகிலுள்ள ஏனைய சனாதிபதி முறைமைகளோடு ஒப்பிடும் போது பெருமளவு சனநாயக விரோதப் பண்புகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக எதிரணியின் பொதுவேட்பாளரும் ஆதரவளித்து 2010 இல் நிறைவேற்றப்பட்ட 18ஆவது திருத்தமானது, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை படுமோசமான ஒரு அதிகார மையமாக மாற்றியுள்ளது. இம் முறைமையை ஒழிப்பதென்பது எழுந்தமானமாக, தனித்த வொருவிடயமாகப் பார்க்குமிடத்து சனநாயக மறுசீரமைப்பு என்ற நிகழ்ச்சித் திட்டத்திற்கு முக்கியமானதே.

ஆயினும் தூரநோக்கில் தமிழ் மக்களதுநலன்கள் மற்றும் நிலைத்துநிற்கக் கூடிய சனநாயக மயப்படுத்தல் என்றபார்வையில், பின்வரும் விடயங்களைநாம் பதிவு செய்ய விரும்புகிறோம்:

அ. 1978 அரசியலமைப்பிற்கு முந்தைய பாராளுமன்ற முறைமை ஆட்சியின் கீழ் வந்த அரசாங்கங்களாலும் தமிழர்களுக்கு எதிராக, எங்களது இருப்புக்கெதிராக பல அநீதிகள்  நிகழ்த்தப்பட்டுள்ளன. 1956ன் தனிச் சிங்களச் சட்டம் நிறைவேற்றப்பட்ட போது இருந்ததும் ஒருபாராளுமன்ற முறை அரசாங்கமே. இந்த உண்மை ஒன்றே எந்த அரசாங்க முறைமையை சிங்கள பௌத்த அரசியல் தலைமைகள் தெரிவு செய்கிறார்கள் என்பது தமிழர்களைப் பொறுத்தவரையில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியதில்லை, ஏற்படுத்தப் போவதில்லை என்பதைக் கோடிட்டுக்காட்டப் போதுமானது. இலங்கையின் சனநாயக அரசியலானது பேரினவாத பெரும்பான்மை அணுகுமுறையால் வழி நடாத்தப்படுகின்ற கலாசாரம் மாறாதவரை தமிழர்களுக்கு அரசாங்க முறைமையை மாற்றுவதால் நன்மைகள் ஏதும் ஏற்படப் போவதில்லை.

ஆ. இன்றுவரை தமிழ்த் தரப்பானது இலங்கையின் அரசியல் யாப்புக்கள் எவற்றினதும் உருவாக்கத்தில் பங்காளிகளாகச் சேர்க்கப்பட்டதில்லை. முற்றிலும் தமிழர்களுக்கு விரோதமாகவுள்ள ஒரு அரசியலமைப்பின் ஒருபகுதிக்கு மட்டும் செய்யப்படும் சீர்திருத்தம் தமிழருக்கு அவர்களது நீண்டகால, சமகால இருப்புப் பிரச்னைகளுக்குத் தீர்வைத் தராது.

இ. சனாதிபதிமுறை ஆட்சியை ஒழிப்பதன் மூலம் சட்டத்தின் ஆட்சி, நல்லாட்சி, நீதித்துறையின் சுதந்திரம் ஆகியன சீர்படவாய்ப்புள்ளது. அதனைக் காரணமாகக் காட்டியே தமது அடிப்படைப் பிரச்சனைகள் தீர்க்கப்படா விட்டாலும் தமிழர்கள் பொது வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்றவாதம் முன் வைக்கப்படுகின்றது. இது எம்மைப் பொறுத்தவரையில் ஒரு குறைந்தபட் சவாதமாகவே உள்ளது. எக்காலத்திலும் (கடந்த 66 வருடங்களில்) எந்த ஒரு ஆட்சி முறைமையிலும் தமிழர்கள் மீதான சனநாயகமறுப்புகள், இன ஒடுக்குமுறைகள், அழிப்பு முயற்சிகள் அகன்றதில்லை, ஓய்ந்ததில்லை. மூர்க்கம் மட்டுமே கூடிக் குறைந்தது என்பதைநாம் மறக்கமுடியாது. சட்டத்தின் ஆட்சிசெவ்வனே இருந்ததாக சொல்லப்பட்ட 1950களில் கூட சட்டத்தின் ஆட்சிதமிழர்களைப் பொறுத்தவரையில் மௌனமாய் இருந்தமை 1958 கலவரத்தின் மூலம்  அறியப்படும். சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்டுகிறோம் என்ற ஆணையோடு ஆட்சிக்கு வந்தபல அரசாங்கங்கள் ஆட்சிக்கு வந்து சில வருடங்களிலேயே தமிழ் விவகாரங்கள் தொடர்பில் செயற்பட்டவிதமும் நாம் அறிந்தவையே. கடந்த 30 வருடங்களாக நீதியை வழங்குவதற்கென்ற பெயரில் நியமிக்கப்பட்ட பல ஆணைக்குழுக்களாலும் எவ்விதபயனும் ஏற்பட்டதில்லை. தமிழர்களைப் பொறுத்தவரையில் இலங்கையில் நீதித்துறையின் சுதந்திரம் ஒரு போதும் இருந்ததில்லை. மலையகத் தமிழ் மக்களின் வாக்குரிமை 1948 இல் பறிக்கப்பட்டபோது அதைத் தடுத்து நிறுத்தாத அப்போதைய நீதித்துறை, 'சுதந்திரமானநீதித்துறை”-யாகவே கருதப்பட்டது. எனவே சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துகிறோம், நீதித் துறைச் சுதந்திரத்தை நிலை நாட்டுகிறோம் என்ற முன்வைப்புகள்  மட்டுமே தமிழ் வாக்குகளை பெறுவதற்கு போதுமானதல்ல.

சிங்கள மக்களின் பிரச்சனைகளில் எமக்கு அக்கறையில்லாமல் இல்லை. உண்மையில் இன்று சிங்கள மக்களும் எதிர்கொள்ளும் சனநாயக மறுதலிப்பானது, காலம்காலமாக தொடர்ந்து வந்த அரசுகளின் தமிழின விரோத அரசியலின் ஒன்றுதிரண்ட வெளிப்பாடே. தமிழ் மக்களுக்கெதிரான சகல ஒடுக்குமுறைகளுக்கும் மௌனசாட்சிகளாக மட்டுமன்றி அங்கீகாரம் வழங்குபவர்களாகவும் சிங்கள தேசம் இருந்து வந்ததன், வருவதன் பக்கவிளைவே இன்று அவர்கள் எதிர் கொள்ளும் இந்தச் சனநாயக மறுப்பாகும்;. எம்மைப் பொறுத்தவரையில் தெற்கிலும் முழு இலங்கைத் தீவிலும் உண்மையான சனநாயகம் தோன்றுவதற்கான வாய்ப்புதேசியப் பிரச்சனை தொடர்பில் ஒருநேர்மையான நிலைப்பாட்டை முன் வைப்பதன் மூலம் திறக்கப்படக் கூடிய உரையாடலின் ஊடாகமட்டுமே உருவாகமுடியும்;. சனநாயகத்திற்கு வேறு மாற்று வழிகளும் இல்லை. குறுக்கு வழிகளும்; இல்லை என்பதைச் சிங்கள அரசியல் தலைவர்களும் குறிப்பாக சிங்கள மக்களும் உணரவேண்டும்.

ஈ. பொது எதிரணி வேட்பாளர் உண்மையில் நிறைவேற்று அதிகார சனாதிபதி முறையை ஒழித்தல் என்ற ஒற்றை நிகழ்ச்சி நிரலுக்குரியவரா என்பது கூடஅவர் ஜாதிகஹெலஉறுமயவோடு செய்திருக்கும் ஒப்பந்தத்தின் மூலம் சந்தேத்துக்துக்கு உரியதாகின்றது.

நிறைவேற்று அதிகார சனாதிபதி முறையை ஒழித்தல் என்ற பிரதான நிகழ்ச்சி நிரலையும் தாண்டி ஒற்றையாட்சி முறையை தக்கவைப் பேன், சர்வதேச விசாரணைக்கு இடமளியேன் போன்றவற்றை உள்ளடக்கி அவர் ஜாதிக ஹெல உறுமயவோடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறார். (இவற்றைத் தனதுதேர்தல் விஞ்ஞாபனத்திலும் உறுதிப்படுத்தியுள்ளார்) வெறுமனே சிங்களவாக்குகளைப் பெறுவதற்கான உத்தியாகவும் இந்த ஒப்பந்தத்தைப் பார்க்கமுடியாது. மேல திகமாக தமிழ் வாக்குகளைப் பெறுவதில் பொது எதிரணி வேட்பாளரது உதாசீனமான எண்ணப் பாங்கையும் இது வெளிப்படுத்துகின்றது.

தமிழர் விடயத்தில் நீதியாக நடந்து கொள்வேன் என்றநிலைப்பாடுதேர்தற் காலத்தில் சிங்களவாக்குகளைப் பெறுவதற்குதடையாக இருக்குமென்றால் இவர்கள் ஆட்சிக்குவந்ததன் பின் சிங்கள மக்களுடைய ஆதரவைத்தமிழர் நலன் சார் விடயங்களில் எப்படிபெற்றுக் கொள்வார்கள் என்றஐயம் ஏற்படுகிறது. தமிழர் நலன்கள் தொடர்பில் சரியான நிலைப்பாடு ஒன்றைத் தேர்தற் காலத்தில் எடுக்கமுடியாதுஎன்று கூறும் சிங்களத் தலைவர் ஒருவர் ஆட்சிக்குவந்ததன் பின்னர் அப்படியான நிலைப்பாட்டை எவ்வாறுஎ டுப்பார் என்ற நியாயமான கேள்வியும் எழுகின்றது. இத் தேர்தலானது சிங்கள மக்களைமாத்திரம் பிரதானப்படுத்திய, அவர்களது எதிர்காலம் தொடர்பான ஒருதேர்தல் மாத்திரம் என்பதையே இரண்டு பிரதான வேட்பாளர்களும் முன்னிலைப் படுத்துகின்றார்கள். 

இரு பிரதான வேட்பாளர்களும் தமிழ் மக்களது பிரச்சனைகள் தொடர்பாக நிலைப்பாடெடுத்து அவர்களது வாக்குகளைக் கோரி நிற்கவில்லை. மாறாகத் தமிழர்களுக்கு தனித்துவமான பிரச்சனைகள் இருப்பதனை மறுதலிக்கின்றனர். தமிழர் நலனுக்கு முரணான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். எனவே இத்தேர்தல் தொடர்பில் ஓர் கூட்டுநிலைப்பாடொன்றை எடுக்க வேண்டிய தேவை தமிழ் மக்களுக்கில்லை. புpரதான வேட்பாளர் எவருக்கும் வெளிப்படையாக வாக்களிக்க எடுக்கும் முடிவானது ஒற்றையாட்சி அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டதாகவும் சர்வதேசவிசாரணையை மறுத்ததாகவும் அர்த்தம் கொள்ளப்படும். 

இன்றைய நிலையில் தமிழ் மக்கள் தமக்கென, தமது அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் ஒரு அரசியல் வேலைத் திட்டத்தை உருவாக்குவதும் அதற்காக மக்கள் அணி திரள்வதும், அணிதிரட்டப்படுவது மேமுக்கியமானவை. அத்தகைய வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தெற்கில் யார் ஆட்சிக்குவந்தாலும் நாங்களும் எமது அரசியல் தலைவர்களும் பிரிக்க முடியாத தமிழர் தாயகம், மறுக்கமுடியாத தமிழ்த் தேசிய அடையாளம், அதன்வழிவந்த எமக்கான சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை முன்னிறுத்தி, இன்றைய உலக ஒழுங்கை மேற் சொன்ன வரையறைக்குள் எமக்கு சாதகமாக்கி எமது அரசியலை முன்னகர்த்த முயற்சிப்பதே முக்கியமானது.

மேற்சொன்னவற்றைக் கருத்திற் கொண்டு, எதிர்வரும் சனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும்; தமது மனச்சாட்சிக்கும், நீண்டகால நோக்கில் தமிழ்ச் சமூகத்திற்கும், பொருத்தமான முடிவு எது என்பதைத் தனிப்பட்டரீதியாக ஆழமாகச் சிந்தித்து முடிவெடுக்குமாறு வேண்டுகிறோம்.

23 டிசம்பர் 2014 

ஒப்பம்

எழில் றஜன்

உத்தியோகபூர்வபேச்சாளர்,

தமிழ் சிவில் சமூகஅமையம்

தமிழ் சிவில் சமூகஅமையம் தொடர்பானமேலதிகவிபரங்களுக்கு:

hவவிள:ஃஃறறற.ளஉசiடின.உழஅஃனழஉஃ249264187ஃவுஊளுகு-Pழடiஉல-னுழஉரஅநவெ-வுயஅடை-குiயெட-pனக

hவவிள:ஃஃறறற.ளஉசiடின.உழஅஃனழஉஃ249264913ஃவுயஅடை-ஊiஎடை-ளுழஉநைவல-குழசரஅ-யுபுஆ-Pசநளள-சுநடநயளந-Pரடிடiஉ-ஏநசளழைn-pனக

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/114744/language/ta-IN/article.aspx

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.