Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சனாதிபதி தேர்தல் 2015 - தமிழ் மக்களின் தெரிவு - - யாதவன் நந்தகுமாரன்

Featured Replies

2015இலங்கை ஜனாதிபதி தேர்தல் குறித்து பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் தொடரும் இந்த வேளையில் இலங்கையில் இருந்து யாதவன் நந்தகுமாரன் இந்தப் பதிவை அனுப்பி வைத்துள்ளார்.... நீங்களும் இந்த விவாதத்தை முன்கொண்டு செல்ல முடியும்... ஆரோக்கியமான முன்னர் வெளியாகாத புதிய பதிவுகளை அனுப்பிவைத்தால் பிரசுரிக்கப்படும்...

ஆ.ர்

அன்புடையீர்

குளோபல் தமிழுக்காக எழுதப்பட்டது
பிரசுரித்து உதவுக
 
நன்றி.
யாதவன் நந்தகுமாரன்.
 

இலங்கையில் சனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ் அரசியற் பரப்பிலும் ஊடகப் பரப்பிலும் பல்வேறுபட்ட கருத்துக்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. தமிழ் அரசியற் பிரமுகர்கள் முதல் சிவில் சமூகத்தவர்கள் வரை இரு வேட்பாளர்களையும் ஒரே தராசினில் வைத்து இனவாத சிந்தனையில் தமிழர்களுக்கு எந்தவித அரசியல் உரிமைகளையும் இரு வேட்பாளர்களுமே தரமாட்டார்கள் என்று பேசியும் எழுதியும் வருகின்றனர். இது தமிழ் மக்களுக்குத் தெரியாத விடயமல்ல.

 

தற்போதைய சனாதிபதி மகிந்த ராசபக்ச தமிழர்களுக்கு என்ன தந்துள்ளார் என்பதை தமிழர்கள் கடந்த 10 வருடங்களில் கண்கூடாகக் கண்டுள்ளனர். சனாதிபதி மகிந்த தமிழர்களுக்கு மட்டுமல்ல சிங்களவர்களுக்கும் ஏன் முழுநாட்டுக்குமே என்ன செய்துள்ளார் என்பதை நாட்டு மக்கள் அனைவரும் அறிவர். இலங்கை‚ தமிழர்கள் வாழும் நாடு. ஒரு கொள்ளைக் கூட்டத்தால்‚ பாலியல் வன்புணர்வாளர்களால்‚ கொலைகாரக் கூட்டத்தால்‚ போதைவஸ்து கடத்தற்காரர்களால் சூறையாடப்பட்டு வருகிறது. நீதித்துறை‚ சட்டம் ஒழுங்கு‚ பேச்சு மற்றும் ஊடக சுதந்திரம் அனைத்துமே இராசபக்ச குடும்பத்தின் கால்களால் நசிக்கப்பட்டுள்ளது. மகிந்த சிந்தனை‚ தமிழர்களை உரிமைகளைப் பற்றியோ அல்லது 60 வருட அரசியல் மற்றும் ஆயுதப் போராட்டத்தைப் பற்றியோ சிந்திக்க முடியாதவர்களாக்கியுள்ளது.

 

விடுதலைப்புலிகளின் அழிவுடன் தமிழினம் ஒட்டுமொத்தமாக அடிமைப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு மனித இனமாக‚ ஒரு நாகரிகமுள்ள மனிதர்களாக வாழ்வதற்கு இன்று தமிழர்களுக்கு அரசியல் உரிமை எதுவுமே தேவையில்லை! ஏனெனில் தமிழினம் இன்று மீண்டடெழ முடியாத அடிமைநிலைக்குச் சென்றுள்ளது. தமிழர்களின் வாழ்நிலை அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கையில் 2009 முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் படிப்படியாக இனஅழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கையில் சமஃச்(ஷ்)டி பற்றி பேசுவது உரோம் எரியும் போது பிடில் வாசிப்பதற்குச் நிகரானது.

 

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தமிழர்களின் சமஃச்(ஷ்)டிக் கோரிக்கையை ஏற்கப்போவதில்லை என்பதை பகிரங்கமாக அறிவித்துள்ளதுடன் அவருடன் கைகோர்த்துள்ள யாதிக கெல உறுமய  தமிழர்களுக்கு எந்த உரிமையையும் தர அனுமதிக்கப் போவதில்லை என்பதும் தமிழர்களின் அபிப்பராயம்.

 

தமிழர்களுக்குத் தெரிவே இல்லை என்றும் இருவேட்பாளர்களும் தமிழர்களின் அரசியற் கோரிக்கையே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் தமிழர்கள் இத்தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று மூத்த ஊடகவியலாளர்கள் முதல் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் சாட்சியாக இருந்த அனுபவமுள்ள மூத்த பிரயைகள் வரை தமிழ்க் கூட்டமைப்புக்கு சிபார்சு செய்ய முயல்கின்றனர்.

 

இன்று 2009 மே கடந்து 5 ஆண்டுகளின் பின்னரும் தமிழ் மக்கள்தமது அரசியல் கோரிக்கையை நிறைவேற்றும்உறுதிமொழியை சிங்கள வேட்பாளர்களிடம் கேட்பதுசிறுபிள்ளைத் தனமானது.

 

தமிழ்மக்கள் இன்று எந்தவித அரசியல் கோரிக்கையையும்சனாதிபதி வேட்பாளரிடம் கூறத்தக்க அரசியல் பலமோ அன்றிஆயுத பலமோ இல்லாத நிலையிலேயே உள்ளனர்தமிழ்மக்களிடமோ அல்லது அவர்களது பிரதிநிதிகளான தமிழ்க் கூட்டமைப்பிடமோ அல்லது வேறு மூன்றாம்பாதுகாவலரிடமோ தமிழர்களின் அரசியல் அபிலாசையை”சிங்கள ஆட்சியாளரிடம் கோருவதற்கு அதற்காக நிபந்தனைவிதிப்பதற்கு உரிய பலமோ தந்திரோபாயச் செற்பாடுகளோ இல்லை.

 

தமிழ் மக்கள் தமக்கான உரிமையைக் கோரி ஒரு 1000 பேர்திரண்டு வெகுசனப் போராட்டத்தை முன்னெடுக்க முடியாதஅரசியற் பலத்தையே கொண்டிருக்கிறார்கள்!!!

 

சுன்னாகம் மின்சாரசபை வளாகத்திலிருந்து பரவிவரும் கழிவுஎண்ணெயும் நச்சுப் பதார்த்தங்களும்  தமது கிணற்று நீரில்கலந்து 3 வருடங்களாகியும் குறித்த நிறுவனம் கழிவெண்ணையை நிலத்தடி நீருள் செலுத்துவதை நிறுத்தக்கோரி பிரதேசசெயலகத்திற்கு முன்னால் ஒரு அடையாளஎதிர்ப்புப் போராட்டத்தை மக்கள் தாங்களாகவே செய்யமுடியாத அடிமை அச்சம் கலந்த சூழ்நிலையைிலேயேவாழ்கின்றனர்!!! மறுபுறம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட வலிதெற்குப் பிரதேசசபை கூட்மைப்பு உறுப்பினர்களும் தவிசாளரும் சனாதிபதி சபையைக் கலைத்து விடுவார்??? என்ற அச்சத்தில் நொதேண் பவர் நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யாது தங்களைத் தெரிவு செய்த மக்களை அழிவு அபாயத்துக்கு இட்டுச் சென்றுள்ளனர். இந்தமுகதாவில் தமிழ் மக்களின் அரசியில் அபிலாசை” குறித்துவேட்பாளர் எவரும் பேசவில்லையே என்று தமிழ்த்தேசிய அரசியல் வாதிகள் கூச்சலிடுவது கொடிதினும் கொடிது

 

2009 முள்ளிவாய்க்கால்  இனப்படுகொலையின் பின்னர் வடபகுதி மக்களும் கிழக்குத் தமிழர்களும் எதிர்கொள்ளும்சாவல்கள் எவை?

 

வடக்கே யாழ்ப்பாணம் மற்றும் வன்னி மாவட்டங்கள்முழுமையான இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளனவடக்கேதமிழர்களின் நிலம் தினமும் பறிக்கப்பட்டு வருகிறது.தமிழர்களின் கலாசார மையமான யாழ்ப்பணம் 2014 முதல் 9மாதங்களில் அதிகளவான மதுபானம் நுகர்ந்த மாவட்டமாகஉள்ளதுபோதைப் பொருள் விநியோகம் அரச ஆதரவுடன் நடைபெறுகிறது. 1990 முதல் இன்று வரை வலிவடக்குஉயர்பாதுகாப்பு வலயமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதுகீரிமலை‚காங்கேசன்துறை‚ தெல்லிப்பழை உள்ளிட்ட வலிவடக்கிலிருந்து 1996 முதல் சுண்ணக்கற்கள் அகழப்பட்டுதென்பகுதிக்கு எடுத்துச் செல்லப்படுகின்றதுஇப்பிரதேசம்பெரும் கடல் அரிப்பை எதிர்நோக்குகிறதுதெல்செவன முதல்வடக்கே பெரும் முதலீடுகள்  யாவும் மகிந்த குடும்பத்தினதும் குடும்ப விசுவாசிகளினதும் படையினரதும் கைகளிலேயே உள்ளது.

 

வன்னியின் பெரும் விவசாயப் பண்ணைகள்‚ பல்லாயிரம் ஏக்கர் நிலம் ஒரு குடும்பத்தினால் அபகரிக்கப்பட்டுள்ளது. வடக்குக் கிழக்கு மாகாணங்கள் முழுமையிலும் இராணுவமும் புலனாய்வுப் பிரிவும் நிலைகொண்டுள்ளன. தமிழ்மக்கள் மூச்சுவிடவே முடியாத நிலையில் உள்ளனர். வடகிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் அடிப்படைத் தேவையான வீடு‚ கிணறு‚ மலசல கூடம் இன்றி காட்டுவாசிகள் போல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

 

வடக்கில் மட்டுமல்ல நாடுமுழுவதுமே  பல்கலைக்கழகங்கள் முதலான உயர்கல்வி நிறுவனங்கள் முதல் அரச நிறுவனங்கள் வரை அனைத்துமே ஒரு குடும்பத்தின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் துஃச்(ஸ்)பிரயோகங்களுக்கு உள்ளாகியுள்ளது. உயர் கல்வி நிறுவனங்களில் தகுதியற்றவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். தமிழ்ப் பகுதிகளில் திட்டமிட்ட வகையில் கட்டாயக் கருத்தடை மேற்கொள்ளப்படுகிறது.

 

இந்தநிலையில் தற்போது அவசரமானதுசுவாசிப்பதற்கான ஒட்சிசன் அது எங்களுக்கு அல்ல தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும் ஏன் உங்களைப் போன்றஊடகவியியலாளர்களுக்கு கூட தேவையாகவேஇருக்கின்றது
இலங்கை முழுவதும் மிக மோசமான ஊடக அடக்குமுறைஇப்போது தொடர்கிறதுகுறிப்பாக வடக்கில் அது மிகமோசமான கட்டத்தில் உள்ளதுஇந்த நிலையில் ஒருகுடும்பத்திடம் இலங்கை சிக்கி சின்னாபின்னமாவதைஅனுமதிக்க முடியாதுஇப்போதைய அவசர தேவை இந்தக்குடும்ப ஆட்சியில் இருந்து நாட்டைமீட்பதாகும்.

என்று ரணில் விக்கிரமசிங்க வடகிழக்கு ஊடகவியலாளர்களுக்கு கூறியுள்ளமை யதார்த்தமானதாகும். இங்கு கூறியவரல்ல கூறப்பட்ட விடயமே முக்கியமானதாகும்.

 

தமிழ் மக்கள் கடந்த முறை சனாதிபதித் தேர்தலில் முள்ளிவாய்க்கால் போரை முன்னின்று நடத்திய போர்க் குற்றவாளியான முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கே வாக்களித்தனர். குறிப்பாக யாழ்ப்பாண மக்கள் பொன்சேகாவுக்கு அதிகளவான வாக்குகளை அளித்தனர். தேர்தலுக்கு முன்னர் சரத் பொன்சேகா வெளியூர் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் தமிழர்கள் சிங்களவர்களோடு இணைந்து வாழவேண்டும். அதிகமான உரிமைகள் எதையும் கோரக் கூடாது. உண்பதும் உறங்குவதும் தான் தமிழர்களுக்கு உரிமை என்ற கருத்துப்பட கூறியிருந்தார். இந்தநிலையில் எதற்காக வடகிழக்குத் தமிழர்கள் சரத் பொன்சேகாவிற்கு வாக்களித்தனர். தமிழரசுக் கட்சி இளைஞர் அணியைச் சேர்ந்த சிலர் யாழ்ப்பாணத் தமிழர்கள் சரத் பொன்சேகாவிற்கு வாக்களித்தமையை மலினப்படுத்திப் பேசினர். தமிழர்கள் மகிந்த ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பாகவே ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்ற இராணுவத் தளபதிக்கு வாக்களித்தனரே தவிர தமது இனத்தை அழித்த இனவாத சிந்தனையுள்ள பொன்சேகாவுக்காக வாக்களிக்க வில்லை.

ஒரு போர்க்குற்றவாளியான இராணுவத்தளபதிக்கு தந்திரோபாயமாக மகிந்த ஆட்சி மீதான எதிர்ப்பை காட்ட வாக்களிக்க முடியுமெனின் கறைபடியாத‚ இராணுவப் பின்னணியோ கட்சிப்பின்னணியோ இல்லாத பொதுவேட்பாளர் ஒருவருக்கு‚ எதிர்க்கட்சிகளால் முன்மொழியப்பட்ட மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிக்க தமிழர்கள் பின்னிற்க மாட்டார்கள். 2005 இல் வடக்கு‚கிழக்குத் தமிழர்கள் தேர்தலைப் புறக்கணித்தமை விடுதலைப்புலிகள் கூறியதற்காக மட்டும் அன்று. அப்போது தமிழர்களின் பலமாக விடுதலைப்புலிகள் இருந்தார்கள். விடுதலைப்புலிகள் 2005 இல் தேர்தலை புறக்கணித்ததில் நியாயம் இருந்தது. அதேபோல் 2010இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குழப்பத்துக்கு மத்தியில் வெளிச் சக்திகளுக்காக எடுத்த தீர்மானத்துக்காக தமிழ்மக்கள் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்கவில்லை. அவ்வாறு செய்ய தமிழ் மக்கள் அவ்வளவு முட்டாள்களும் அல்ல. மேற்குலக சக்திகளின் விருப்பும் நலனும் தமிழர்களின் தெரிவும் பொருந்தியமையே இங்கு நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விடயமாகும்.

தமிழினம் இன்றைய நிலையிலிருந்து மீள்வதற்கு நிலத்திலே வீழ்ந்திருக்கும் நிலையிலிருந்து எழுவதற்கு ஒரு ஊன்றுகோல் இல்லாமல் தவிக்கிறது. மகிந்த ஆட்சி தொடருமெனில் இன்னும் 10 ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தை விட்டு 2 இலட்சம் தமிழர்கள் வெளியேற்றப்படுவர். இதற்கான புறநிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. சுன்னாகம் மின்சாரசபைக்குச் சொந்தமான நிலத்தில் நொதேண் பவர் என்ற மின்னுற்பத்திக் கம்பனி நிலத்திலே துளையிட்டுச் செலுத்திய கழிவெண்ணையினால் மின்னிலையத்திலிருந்து 10 கி.மீ வரையான நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது. கழிவு எண்ணெயும் கிறீசும் கலந்துள்ள நீரினால் மாற்றமுடியாத ஆபத்தான நோய்களான சிறுநீரக நோய்‚ புற்றுநோய்‚ பிறப்புக் குறைபாடு‚ மலட்டுத் தன்மை என்பன ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த 3 வருடங்களாக தொடரும் இந்த பேரழிவு தரும் நொதேண்பவர் யாருக்குச் சொந்தமானது? இந்த ஆட்சி தொடருமெனில் தமிழர்கள் பேரழிவு அபாயத்தை எதிர்கொள்வர். அது முள்ளிவாய்க்காலைவிட மோசமானதாக இருக்கும் . ஏறத்தாழ 4 இலட்சம் மக்களின் உயிர்வாழ்க்கை அவர்களது வாழ்வாதாரம்‚ நிலம் அழிவை சந்திக்கும்.

இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு மகிந்த பதவியிழந்தால் மட்டுமே சருவதேச போர்க்குற்ற விசாரணையின் கீழ் மகிந்த சகோதரர்களைத் தண்டிக்க முடியும். தென்னமரிக்க‚ ஆபிரிக்க நாடுகளின் சர்வாதிகாரிகள் தண்டிக்கப்பட்டது ஆட்சியிழந்த பின்னரே என்பதை வரலாறு விட்டுச் சென்றுள்ளது. நீதியென்பது அதிகாரமிழந்த நிலையிலேயே செயற்படுகிறது என்பதையும் வரலாறு நிரூபித்துள்ளது. மகிந்த தண்டிக்கப்பட்டால் மட்டுமே இலங்கையின் இனவாதிகளுக்கு ஒரு பாடமாக அமையும். இலங்கையில் மகிந்த ஆட்சி தொடருமெனில் நாடு ஒரு இருண்ட யுகத்தினுள் செல்லும். சீனாவைப் போன்ற இரும்புத் திரைக்குள் இலங்கை மக்கள் தள்ளப்படுவர்.

 

தமிழுணர்வும் தமிழர்களும்

குமரிக் கண்டம் உண்மையே என்றும் கடல் கோளினால் அழிவுற்றது என்றும் புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் நிறுவியுள்ளனர். உலகில் முதல் தோன்றிய மொழி தமிழ். அது செவ்வியல் மொழிகள் ஆறில் ஒன்று. உலகின் முதல் மாந்தனினம் தமிழினம். முதல் நாகரிகம் சிந்து வெளி. அது தமிழர்களுடையது முதலான பெருமைகளுடைய தமிழினம் இன்று வீழ்ச்சியுற்றதுற்குப் பல காரணங்கள் உள்ளன. அதில் பிரதானமானது தமிழர்களிடம் தந்திரோயாயம் என்பது சிறிதும் இல்லாமை ஆகும். தமிழனிடம் வெறும் உணர்ச்சி மட்டுமே உள்ளதே தவிர தந்திரோயாயம் என்பது சிறிதும் இல்லை. உலகின் போக்குபற்றி அக்கறை துளியும் இல்லை. இன்று தமிழ் உணர்ச்சியை வெளிப்படுத்தும் தமிழ்நாட்டுத் தமிழர்களால் தமிழர்களுக்கு நன்மை செய்ய முடிந்ததா? தமிழனது உணர்ச்சி உலத்தின் போக்கையும் உலக சக்திகளையும் எடைபோட அவனை அனுமதிக்கவில்லை. பலமுள்ள உயிரனம் மட்டுமல்ல தந்திரம் மிக்க இனமும் எதிரியின் பலத்தை சரியாக எடைபோடும் இனமும் கிடைக்கின்ற சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் இனமும் உலகில் பிழைத்துக் கொள்ளும்.

பொது வேட்பாளரால் சனாதிபதி ஆட்சியை ஒழிக்க முடியாது போகலாம். ஆனால் 17 ஆவது 18 வது திருத்தங்கள் நீக்கப்படுதல் சாத்தியம். தமிழர்கள் தாம் வாழும் நாட்டில் அல்லது அயல் தேசத்தில் சனநாயகம் தளைக்கப் பங்களிப்புச் செய்ய ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. சுயாதீனமான நீதித்துறை‚ சுயாதீனமான பொதுச் சேவை ஆணைக்குழு‚ சுயாதீனமான பொலிஃச்(ஸ்) சேவை ஆணைக்குழு‚ சுயாதீனமான ஊடகத்துறை கொண்ட சனநாயகம் இலங்கையில் நிறுவப்படுவதற்கான ஒரு வாய்ப்பை வழங்க வடக்குக் கிழக்கு‚ மலையக தமிழ்‚ முஸ்லிம் மக்கள் வாக்களிக்க வேண்டும். ஆட்சி மாற்றத்தின் போதே தமிழ் மக்கள் தமது உரிமைகளைப் பற்றி சிந்திப்பதற்கும் பேசுவதற்குமான ஒரு வெளி ஏற்படும். பலகட்சிகளின் ஆதரவில் போட்டியிடும் மைத்திரிபாலவைத் தெரிவு செய்வதன் மூலமாக கொழும்பில் பலவீனமான ஒரு தலைமை உருவாக வழிவகுப்பது தமிழர்கள் தமது உரிமையைப் பெற்றுக் கொள்ளக் கூடிய புறச் சூழலை ஏற்படுத்தும்.

 

தமிழினம் அழிவிலிருந்து மீண்டெள வேண்டு மெனில் வரும் சனாதிபதி தேர்தலைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தேர்தலைப் புறக்கணிப்பது தமிழினத்தை அரசியல் அனாதைகள் ஆக்கிவிடும். மகிந்த மோசடிகள் செய்து தேர்தலைவென்று விடுவார். நாம் சும்மாய் இருப்போம். எமது வாக்குகள் தேர்தல் முடிவை மாற்றாது என்றெல்லாம் தப்புக் கணக்கிடுவது தமிழர்களைப் பலவீனமான சமூகமாக்கி விடும். “கடமையைச் செய் பலனை எதிர்பாராதே” என்பதை தமிழர்கள் இப்போது நினைவுபடுத்த வேண்டும்.

 

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/115056/language/ta-IN/article.aspx

வெற்றி பெறுவது என்பதனை தவிர்த்து இனிவருகின்ற காலங்களில் எம் தமிழ் மக்கள் சார்பாக ஜனாதிபதி தேர்தல்களில் எம் மக்கள் சார்பாக போட்டியிட முன்வந்தால் வரவேர்க்கவேண்டிய ஒன்றாக இருக்கும் என்று நினைக்கின்றேன் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.