Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சி, முல்லைத்தீவில் தொடரும் கிரவல், மணல் அகழ்வு

Featured Replies

IMG0052.JPG

 

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் மணல் மற்றும் கிரவல் அகழ்வு காரணமாக பெருமளவு மரங்கள் அழிவடைந்து வருவதுடன் சூழலியல் பாதிப்புகளும் பெருமளவில் இடம்பெற்று வருகின்றன.   2009ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடக்கம் இந்த இரு மாவட்டங்களிலும் வீதிப்புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதையடுத்து, புனரமைப்புப் பணிகளுக்காக பெருமளவான கிரவல் மண் அகழ்ந்தெடுக்கப்பட்டன. கிளிநொச்சி மாவட்டத்தில் யூனியன்குளம், அக்கராயன், இராமநாதபுரம் ஆகிய கிராமங்களிலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காயின் அமதிபுரம், கோட்டைக்கட்டியகுளம், புத்துவெட்டுவான், பழைய முருகண்டி, ஐயன்கன்குளம், அம்பகாமம், மாந்தை கிழக்கு, கொக்குளாய், கொக்குத்தொடுவாய், ஒட்டுசுட்டான் ஆகிய பகுதிகளில் பெருமளவு மரங்கள் அழிக்கப்பட்டு கிரவல் மண் அகழ்ந்தெடுக்கப்பட்டன.   இரு மாவட்டங்களிலுமுள்ள ஆற்றுப்படுக்கைகளில் நாள்தோறும் பெருமளவு மணல் களவாகக் கொண்டு செல்லப்படுகின்றன.   கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டச் செயலகங்களின் அனுமதியில்லாமல் அனுராதபுரம் போன்ற மாவட்டங்களில் பெறப்படுகின்ற அனுமதிகளுடன் முல்லைத்தீவின் கொக்காவில் பகுதிகளிலும், கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் பின்பகுதிகளிலும் பெருமளவு மணல், கிரவல் அகழ்வுகள் நடைபெறுகின்றன.   இரு மாவட்டச் செயலகங்களிலும் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களிலும் மணல் மற்றும் கிரவல் அகழ்வு களவாக மரம் வெட்டுதல் போன்ற விடயங்கள் மக்களின் பிரதிநிதிகளினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள போதிலும், ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படாததன் காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் தற்போது சூழலியல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 

IMG0093.JPG

 

http://www.tamilmirror.lk/137177#sthash.jzBRxQHt.dpuf

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.