Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிதி கிடைத்ததும் வன்னேரி, தேவன் குளங்கள் புனரமைக்கப்படும்: நீர்ப்பாசனப் பொறியியலாளர்

Featured Replies

Jaffna(10).jpg

 

வன்னேரிக்குளத்தையும் தேவன் குளத்தையும் தனித்தனியாக புனரமைப்பதற்கான திட்டங்கள் வரையப்பட்டுள்ளன. நிதி கிடைத்ததும் இவ்விரு குளங்களும் புனரமைக்கப்படும் என கிளிநொச்சி நீர்ப்பாசனப் பொறியியலாளர் எஸ்.விகிர்தன் சனிக்கிழமை (10) தெரிவித்தார். கிளிநொச்சி வன்னேரிக்குளத்தினையும் பூநகரியின் தேவன்குளத்தையும் இணைத்து நீர்த்தேக்கமொன்றினை உருவாக்கும்படி வன்னேரிக்குளம் மற்றும் ஜெயபுரம் கிராம மக்கள் கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.

 

1953ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட குடியேற்றத்திட்டத்தில் 1954ஆம் ஆண்டு வன்னேரிக்குளம் உருவாக்கப்பட்டது.  இக்குளத்தின் மூலம் 375 ஏக்கருக்கு மேலான நிலப்பரப்புக்கு தற்போது நீர்ப்பாசனம் செய்யப்படுகின்றது. பூநகரியின் தேவன்குளம் ஜெயபுரம் கிராம மக்கள் பயன்படுத்தக்கூடியவாறு உருவாக்கப்பட்டது. ஆனால் போர்ச்சூழல் காரணமாக இக்குளத்தின் கீழான 526 ஏக்கர் நீர்ப்பாசன வசதிகள் மேற்கொள்ளமுடியாத நிலை தற்போது காணப்படுகின்றது.

 

இந்நிலையில் வன்னேரிக்குளத்தையும் தேவன்குளத்தையும் இணைத்து பெரும் நீர்த்தேக்கத்தை உருவாக்குவதன் மூலம் 1,000 ஏக்கருக்கு மேலான நிலப்பரப்புக்கு நீர்ப்பாசனம் செய்யமுடியுமென்பதுடன், வயல் நிலத்திற்காக 1983ஆம் ஆண்டு தொடக்கம் காத்திருக்கும் ஜெயபுரம் கிராம மக்களுக்கும் வயல் நிலம் கிடைக்கும்.

 

மீள்குடியேற்றம் நடைபெற்ற காலங்களில் கிளிநொச்சியில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்கள், அரச செயலக கூட்டங்கள், பிரதேச செயலக கூட்டங்கள், வன்னேரிக்குளம் மற்றும் ஜெயபுரம் கிராமங்களினால் நடாத்தப்பட்ட கூட்டங்களில் வன்னேரிக்குளத்தையும் தேவன்குளத்தையும் இணையுங்கள் என்றும் நீர்த்தேக்கத்தினை உருவாக்கும்படி தொடர்ச்சியாக மக்கள்; கோரிக்கை விடுத்துவந்தனர்.

 

இந்நீர்த்தேக்கத்தினை உருவாக்குவதற்கு போர் காலத்தில் புதைக்கப்பட்ட மிதிவெடிகள் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இவ்விடயம் தொடர்பாக கிளிநொச்சி நீர்ப்பாசனப் பொறியியலாளர் எஸ்.விகிர்தனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் மேற்கூறியவாறு தெரிவித்தார். மேலும் இரு குளங்களையும் இணைப்பதென்பது மக்களின் கோரிக்கையாக இருந்தாலும் அது ஒரு பெரும் திட்டம் என்பதன் காரணமாக எதிர்காலத்தில்தான் இத்திட்டம் நிறைவேற்றப்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளதெனவும் அவர் தெரிவித்தார். -

 

www.tamilmirror.lk/137392#sthash.6hhZaq5k.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.