Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மற்றவர்களுக்காக வெட்டிய குழிகளில் வீழ்ந்து கொண்டிருக்கும் மகிந்த அழுத்தங்களுக்கு அடி பணிந்தாரா?

Featured Replies

Mahi%20sad_CI.jpg

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கட்சியின் முக்கிய பதவிகளை துறப்பதற்கு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை துறப்பதற்கு இணங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களின் அழுத்தம் காரணமாக இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த தீர்மானம் எடுத்துள்ளதாக கட்சி உள்வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக கட்சித்தலைமைப் பதவியை விட்டுக் கொடுக்க மஹிந்த ராஜபக்ஸ இணங்கவில்லை.

எனினும் நாளுக்கு நாள் மைத்திரிபால சிறிசேனவிற்கு திரண்டு வரும் ஆதரவு காரணமாக, பதவியை துறக்க ஜனாதிபதி நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, சுதந்திரக் கட்சியின் தலைவராக மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க உள்ளார்.

அதற்கு முன்னதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்சவையும் புதிய ஜனாதிபதி சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைமைப் பதவியையும் மஹிந்த ராஜபக்ஸ துறக்கத் தீர்மானித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவை சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து நீக்கி ஆலோசகராக நியமிப்பதற்காக அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பயன்படுத்திய தந்திரோபாயம் இன்று அவருக்கே வினையாக மாறியுள்ளமை விதியின் விளையாட்டாகவே கருதப்படுகின்றது.

சுதந்திரக் கட்சி யாப்பின் 12.2 சரத்தின் அடிப்படையில் கட்சியின் உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதியாக பதவி வகித்தால் அவரே தலைவராக பதவி வகிக்க வேண்டுமென மஹிந்த ராஜபக்ஸ யாப்பினை திருத்தம் செய்திருந்தார்.

அந்த யாப்பின் அடிப்படையில் இன்று மஹிந்த ராஜபக்ஸ தனது பதவியை எதிர்பாராத விதமாக இழக்க நேரிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/115557/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்மைக் காலமாக இலங்கையில் பெரியதொரு அரசியல் சூதாட்டம் நடக்கின்றது. மகிந்தர் குடும்பத்தை அரசியல் நீரோட்டத்தில் இருந்து ஓரங்கட்டுவது அவ்வளவு எளிதான காரியமாக அமையப்போவது இல்லை.

கடந்த ஒரு தசாப்தகாலமாக சர்வதேசத்திற்கே தண்ணி காட்டிய சிங்கனுக்கு மைத்திரி, ரணில், சந்திரிகா கூட்டணி தொடர்ந்தும் சிம்ம சொற்பனமாய் விளங்கும் என்று சொல்லமுடியாது.

கடைசி நேரத்தில் காலை வாரிவிட்டதால் மகிந்தருக்கு ஆட்சியையும், அதிகாரத்தையும் தக்கவைக்க கால அவகாசம் போதவில்லை.

சிங்கன் கட்சி தலைமைப்பதவியை விட்டுக்கொடுத்து சமரசம் செவதற்கு முன் வருகின்றான் என்றால் இதன்பின்னால் நிச்சயம் ஒரு சூக்குமம் 'மாஸ்டர் பிளான்' இருக்கும்.

இனி மகிந்தர் ஜோசியரிடம் ஏமாறுவதற்கு ஒன்றும் இல்லை. மாறாக மைத்திரியின் கூட்டணி மகிந்தரின் திட்டத்தில் இன்னும் 100 நாட்களின் பின் மண் கவ்வுவதற்கு நிறையவே சாத்தியங்கள் உள்ளன. காரணம் இன்னும் மூன்று மாதங்களின் பின் மீண்டும் தேர்தல் வரும்போது யார் யாருடன் நிற்பார்கள், எங்கெங்கே குத்துக்கரணங்கள் அடிக்கப்படும் என்று எவருக்கும் தெரியாது.

ஆகமொத்தத்தில் மகிந்தர் மைத்திரியுடன் அன்யோன்யமாவது எதிர்க் கூட்டணியின் பலத்திற்கு சவாலானவிடயம்.

சுதந்திரக்கட்சி பலம் அடைவது ரணில், ஐக்கியதேசியக்கட்சி இதர இத்தியாதி கூட்டுக்களை அந்நியப்படுத்தும். ஏற்கனவே ரணிலுக்கு சிங்கள மக்களிடம் அதிகளவு வரவேற்பு இல்லை.

மகிந்தரின் தற்போதைய உடனடி செயற்திட்டம் மைத்திரி, ரணில், சந்திரிக்கா கூட்டணியை உடைப்பதாக இருக்கலாம்.

தற்போதுள்ள சமயத்தில் நிலமைகளை உன்னிப்பாக் அவதானிப்பது தவிர, மகிந்தர் குடும்பத்தின் அரசியல் எதிர்காலம் பற்றி எதுவித முடிவுகளிற்கும் வரமுடியாது.

யார் எவரின் பொறிகளில் சிக்கினார்கள் என்பதை அறிய இன்னும் பல மாதங்கள் பொறுத்திருக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.